Sunday, July 5, 2009

ஈரோடு, Mhow -ல் சுப்ரீம் கோர்ட் கிளை -அரசிடம் கோரிக்கை

முன்பு
நான் ஈரோடு சென்று
மதுரை திரும்பும்பொழுதெல்லாம்
எனது நண்பரும் ,'
'நவின ஊடகம் '' ஆசிரியரும் ,
வழக்கறிஞருமான எஸ் .இளங்கோவன் ,
என்ன இந்த முறையாவது '' பெரியார் இல்ல''த்தை கண்டுவந்தீரா? என்பார் .
இல்லை என்ற பதிலே எப்பொழுதும் .

பொதுவாகவே, ஒருவரின் பிறந்த இடத்தையோ,வாழ்ந்த இடத்தையோ,மறைந்த இடத்தையோ பார்ப்பதால்
என்ன பயன் ?
ஒன்றும் இல்லை என்ற கருத்து எனதாக இருந்தது .

ஒரு வழக்கு விசயமாக ஈரோடு காவல்நிலையத்திற்கு சென்ற பொழுது ஆய்வாளர் வெளியே
சென்றிருந்த படியால் சற்று காலாற நடந்து வரலாம் என நண்பர் கூற ,நடக்க அங்கே
''பெரியார் நினைவில்ல''த்தைக் கண்டு உள்ளே சென்றோம் .
பெரியார் பற்றிய ஒரு நல்ல புரிதல் மேலும் .
பகுத்தறிவினால் மனித குலத்தின் உயர்விற்கு உழைத்த அவரின் தொண்டு நேரடியான
பாதிப்பை ஏற்படுத்துயது .
ஓரு ஆகச்சிறந்த இலக்கிய படைப்பு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துமே அத்தகைய பாதிப்பை
ஏற்படுத்தியது .
அதற்கெல்லாம் காரணம் எனது நண்பர் தான் .
இலக்கியச் சந்திப்புகள் ,பகுத்தறிவுக்கூட்டங்கள் ஆகியவற்றில் ஆர்வத்துடன் கலந்துகொள்ளும்
அவர் ,நிறைய புத்தகங்களை இரவல் வாங்கிச்செல்வார்.
பின் நீண்ட கேட்பிற்குப்பின் திருப்பித்தருவார் .
நானும் நினைத்துக்கொள்வேன் ,படிப்பதற்கு வேண்டி காலம் தாழ்த்துகின்றார் என .
இருந்தலும் அவர் செறிவேறிய தன்மையில்லாமலே இருந்தார் .
குடும்பச்சூழல் என நினைத்துக்கொண்டேன் .
'' பெரியார் இல்ல''த்தை விட்டு வெளியே வந்த அவர் ,காவல்நிலையத்தின் பணிமுடிந்து
வெளியே வரும் வரை எதுவும் பேசவில்லை .
சரி ,கிளம்புகின்றேன் என்றேன் .
''பெரியார் மன்றம் '' இதற்கு பின்புறம்தான் இருக்கு சென்று வரலாம் என்றார் .
ஏன் என்றேன்.
நூலகத்தில் புத்தகம் எடுக்கலாம்னு ...என்றார் .
என்ன புத்தகம் வேண்டும் என்றேன்.
எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்றார் .
என் கையில் '' பெரியார் -ஆகஸ்டு 15'' மட்டும் தான் உள்ளது என்றேன் .
சரி கொடுங்கள் என்றார் .
இதை ஏற்கனவே தாங்கள் படித்தது தானே என்றேன் . மிகப்பெரிய தயக்கத்துடன் ,மன்னிக்கவும் ,
நீங்கள் கொடுக்கும் அனைத்துப்புத்தகங்களையும் வாங்கிச்சென்று அன்றே படிக்க நினைப்பேன் .
ஆனால் ,ஒரிரு பக்கங்கள் மட்டுமே படிப்பேன் அவ்வளவே .
ஆனால் ,
இன்று 'பெரியார் நினைவில்ல''த்திற்குச்சென்று பார்த்த பிறகு எனக்குள் ஒரு பொறி ஏற்பட்டது
போன்று உணர்கிறேன் .
எவ்வளவு பெரிய மனிதர் ''பெரியார் '' .
நம் காலத்தில் வாழ்ந்த அவரை தெரிந்துகொள்ளாமல் இருப்பது மூடத்தனமல்லவா ? என்ற எண்ணம்
ஏற்பட்டது என்றார் .
எனக்கு அப்பொழுது தான் ஒரு பொறி .
நாம் அப்படி இருக்கலாம் .
ஆனால்,சமுதாயத்தில் பலர் அப்படியில்லை .
அப்படிப்பட்டவர்களுக்கு ...???
அப்படிப்பட்டவர்களுக்காகவே ,
உயர்ந்த மனிதர்கள் தோன்றிய இடங்களில் அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கக்கூடிய
விதத்தில் மிகப்பெரிய அமைப்புகள் ஏற்படுத்துவதன் மூலம் அந்த அமைப்பிற்கு வருகை
தருபவர்கள் கட்டாயம் அந்த உயர்ந்த மனிதர்களைப்பற்றியும் ,அவராது கொள்கை கோட்பாடுகளையும்
அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கும் . மேலும் ,ஏன் இந்த அமைப்பு இங்கு வந்தது ? என்ற
கேள்விக்கு ,பகுத்தறிவும் ,மனித நேயமும் என்ற பதில் அந்த அமைப்பில்
பணிபுரிபவர்களிடமும் ,அந்த அமைப்பிற்கு வருகை தருபவர்களிடமும் , அந்த அமைப்பை
அலங்கரிப்பவர்கள் மத்தியிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் .மேலும் , அந்த அமைப்பின்
பயன்பாடு மக்களை அந்த உயர்ந்த மனிதர்களை நினைத்துப்பார்க்க ஒரு சந்தர்ப்பத்தை
ஏற்படுத்தும் என்பது திண்ணம் என்ற எண்ணம் ஏற்பட்டது .

பொதுவாக ,ஒரு ஊரில் மிகப்பெரிய அமைப்புகளில் பணியாற்ற வருபவர்கள் அந்த ஊரின்
சிறப்பை அறிந்துகொள்வதும் ,சிறிதளவாவது அதனில் செயல்பட நினைப்பதும் ,மேலும்
,அவ்வவ்வூரில் அவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் அவ்வூரின் சிறப்பை பேசும் போதெல்லாம்
மனதில் அதன் தாக்கம் ஏற்பட்டு இயங்குவதும் இயல்பாகும் -இது உளவியல் .

இத்தருணத்தில் தான்
சுப்ரீம் கோர்ட் கிளைகளை
நாட்டின் முக்கிய நகரங்களில் அமைக்க
சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளதை படித்தேன் .
பிற நகரங்களில் சுப்ரீம் கோர்ட் கிளைகளை அமைப்பதற்கு பதிலாக
பெரியார் பிறந்த ஈரோட்டிலும் ,
அம்பேத்கார் பிறந்த *Mhow* விலும்
அந்த மனித நேய தலைவர்களுக்கு
நீதித்துறையின் மூலமாக கொடுக்கும்
சரியான மரியாதையாக இருக்கும் .
இதன் மூலம் அவர்களை பலதரப்பட்ட மக்கள் மேலும் அறிந்து கொள்வர் என்பது உண்மை .

ஆகவே ,
ஈரோடு
மற்றும்
Mhow -ல்
சுப்ரீம் கோர்ட் கிளைகளை
அமைக்க அரசிடம்
கோரிக்கை வைக்கிறேன் .
தாங்களும்
கோரிக்கைகள் வைக்க வேண்டுகிறேன் .


எனவே ,
பகுத்தறிவுப் பகலவன் பெரியார் பிறந்த மண்ணை , சட்டமேதை அம்பேத்கார் பிறந்த மண்ணை
மதிக்கவேண்டும் ,
அவர்களின் புகழினை பரப்ப வேண்டும் ,
அவர்களின் கொள்கை கோட்பாடுகளை வளர்க்கவேண்டும்
என்ற எண்ணமுள்ள
ஒவ்வொரு மனிதரும்
அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுகிறேன் .


காந்திக்கும் அப்படியே ...



என
நண்டு .


.


.


.