Saturday, May 22, 2010

வசதிகள்

.


.


மொழியில்லா மொழி பேசி
மோதிச்செல்லும் மௌனங்கள்
ஒன்றிலிருந்து ஒன்றிற்கு தாவி
ஒன்றும் நிலைக்காது
கற்பனையாய் ஓடிச்செல்லும்
கலைந்து திரியும் பிம்பங்கள்
சிதறிக்கிடக்கும் முகங்கள்
திணறிச்செல்லும் மூச்சுகள்
ஏற்றத்தாழ்வுகள் தோன்றி தோன்றி
ஏற்றம் பெற்று நிற்கும் தாழ்வுகள்
ஏங்கித்தவிக்கும் மனதிற்கு
ஏராளமான வசதிகள்
எதைப்பற்றியும் சிந்திக்க


.

.


.

Wednesday, May 19, 2010

அவளின் இதயத்தில்...

.


.

நான் கடந்ததொலைவை
எவனோ எடுத்து
எனக்கிட்ட கட்டளை
யாருக்கோ சென்று
எனக்காக அளந்தஅளவில்
எவனோ உடைதைத்து
எனக்கான மீன்
யார் வலையிலோ
சிக்கி இருந்தாலும்
எனக்குப்பிடித்த ரோஜா
அவளின் இதயத்தில்


.

.


.

Sunday, May 16, 2010

மறைந்து போனவர்களின் மரணவாக்குமூலங்கள்.

கைகளில் உணவுப்பாத்திரத்துடன் தாத்தா... கடல் சூழ்ந்த அத்தீவின் மத்தியிலுள்ள ஒரு பாழடைந்த குடிலுக்கு வெளியே தட்டுத்தடுமாறிக்கொண்டு .முற்றத்தில் காத்திருக்கின்றன இரைக்காக சேவல்கள் தாத்தாவை பார்த்தபடி .வெட்டவெளியில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் தாத்தாவைப் பார்த்து ஓடிவந்து அவரின் கைகளை பிறாண்டுகின்றனர். ஊமைகளின் பாஷையை
ஊமையாகிப்போன தாத்தா உணர்ந்து வீட்டினுள் நகர்கின்றார் .

காலம் தாத்தாவாகி.காலம் என்னை தாத்தாவாக்கி ...

திடும்...திடுமென மறைந்து போனவர்களின் மரண ஓலங்கள் தீவு முழுவதும் .இவர்கள் ஒரு குற்றமும் செய்யவில்லை இருந்தாலும் ஏன் ..... ?..?..?..? என்ற கேள்வியுடன் பயணிக்கின்றேன் . ஓலங்கள் ...ஓலங்கள் ...ஓலங்கள்... தாங்க முடியாத படி ... காதை கிழிக்கின்றன. எங்களின் ஒவ்வொருவரின் கல்லறையிலும் எழுதுங்கள் ...எழுதுங்கள்... எங்களின் இறப்பிற்குக்காரணம்....என ஒவ்வொரு இறப்பும் ஓலமிட்டபடி கையில் ஏதோ குறிப்பு சுற்றப்பட்டு ஆயிரக்கணக்கில்... கண்டபடி .என்னுள் ஓலங்களை அடக்க காதுகளை அறுத்தெறிந்து ஒவ்வொரு திறந்த வாயையும் வேகவேகமாக மூடிக்கொண்டே செல்கின்றன என் கைகள். ஒன்று,இரண்டு ,...முப்பதாயிரம்...நாப்பதாயிரம் ...நீண்டு கொண்டே செல்கின்றன வாய்கள்... திடுமென ஒரு குழியில் நான் வீழும் வரை .இது குழி அல்ல இரத்தக்குளம் என உப்புக்கரிப்பை உணர்த்திய வாய் கூறியது.விடுபட கைகளை அசைத்தபொழுது ஆமி களின் துப்பாக்கிச்சப்தம் திடுமென மூளையை அழுத்தியது.சப்தத்தின் திசை நோக்கி தலையை திருப்ப பீரங்கிகளின் பெருநெருப்பில் வாய்மூடிய உடல்கள் சிதறல் சிதறலாக சிதற ,சில சிதறல்கள் என் முகம் முழுதும் . துடைத்து தப்ப இரத்தத்தில் மூழ்கினேன் . தாகம் ,தாகம் ,தாகம்... கண்கள் இருண்டன .உடல் கனக்க ஆரம்பித்தது . தீர்க்கப்பட்டது தாகம் .இனிய குளிர்ந்த நன்னீர் இப்பொழுது என்னைச்சுற்றி .கைகளை அசைத்துபடி வானத்தில் பறந்தபடி .இறக்கைகள் வெப்பமுற ஓய்வெடுக்க முள் மலையில் இறங்கிய ,இரண்டு நிமிட ஒய்யாரத்திற்குள் ,கொல்... கொல்... சப்தம் கேட்டு எழ .ஆயிரம் ரவைகள் துரத்த ,வேகமாக பறக்க எண்ணி இறக்கைகளை விரித்து வேக வேகமாக அடித்துக்கொண்டே தரையில் ஓடிக்கொண்டிருக்கின்றன கால்கள்.


தொடரும் ....

.

.

.


.

Saturday, May 15, 2010

என் கவிதை

.

கொக்கலிடும் குறலில்
சுவர்க்கோழியின் உருவம்
தெரிந்தது போன்று
வெழக்கமாத்துக்குச்சியின்
அடர்வில்
பீய்த்துக்கொண்டோடும்
நீச்சி போல
ஏதோ ஓர் உரு
ஏதோ ஓர் கருவை
நச்சரித்து
செல்லறித்துப்போன
சொற்களினூடே
உப்பிப்பெருகி
இணைந்த காரணம்
யோசிக்கின்ற
பல வரிகளின் ஊடாக
செல்கிறது
என் கவிதை .

.

.

Friday, May 14, 2010

நத்தையின் நகர்

.


.


.

தூங்காத இரவுகள்
ஞாபகத்திற்கு வருகின்றன
அவர்களின் பிரிவு

.


.


.

======

.

.

.


நேற்றைய
பயணச்சீட்டு
அனுபவம்


.


.

.
=====


.


.

.

மெதுவாக ...மெதுவாக ...
வேகமாக கடக்க ஆசை
நத்தையின் நகர்

.


.

.

.


.

Tuesday, May 11, 2010

என் ரோஜாத் தோட்டம்

.


.

.


என் ரோஜாத் தோட்டம்
மலரும் மணக்கும்
நானில்லாவிட்டாலும்.

.


.


.======

.

.


.

கனவு ...
கதை எழுதுகிறேன் ...
எது நிஜம் ?.


.


.

.======

.


.
மங்கும் சூரியன்
விழிக்கும் கண்கள்
இறுதிக்கால மாலை.

.


.


.

Sunday, May 9, 2010

சிற்பங்களை என்ன செய்ய

.

.

.
என்ன செய்ய
என்
அன்பானவர்களே

அன்று
பாறைகளுடன்
வந்தீர்கள்
சிற்பங்களாக்கினேன்

இன்று
சிற்பங்களுடன்
அல்லவா
வருகின்றீர்கள்

வர்ணப்பூச்சில்
வாழப்பிழைக்காத
என்னிடம்

என்ன செய்ய
என்
அன்பானவர்களே

.


.

.
.

Friday, May 7, 2010

என் பிரியமானவர்களே

.

.


.


அடைகாக்கப்படயென
அடைகாக்கப்பட
வந்தவன் நான்.
அடைகாக்காமல்
என்னருகில்
ஏதேதோ வெளித்தள்ளி
உருமாற்றுகின்றீர்கள் .
எங்கனம்
அடைகாக்கப் போகின்றீர்கள் ?
சுவாசம் மட்டும் சுவாசமாய்
சுவாசிக்கும் பொருள் சூனியமாய்
உடலும் உயிரும்
மிதவை ஒலிஒளியாய்
குரல் தீனமாய்
ஓட்டிற்குள் அடையாய்
நான்.
அடைகாக்காவிட்டாலும் பரவாயில்லை
என் பிரியமானவர்களே
ஓட்டை உடைக்கும்
மந்திரம் மட்டும் சொல்லிக்கொடுங்கள்
முட்டையிட வைக்கும் வேலை
எனக்களிக்கப்பட்டுள்ளது .


.


.


.

.

Thursday, May 6, 2010

நடக்கும் நிழல்

.


.

.


காலண்டர் கிழிக்கும் கைகள்
ஞாபகமாய்
பூகம்ப நாட்கள்

.


.


.


======

.

.


.

நான்
நடக்க நடக்கும்
நிழல்.

.

.


.

=====

.


.

.


பார்த்து பரிகசித்தது
பல கோணல் முகங்களாய்
உடைந்த கண்ணாடி .


.


.


.

.

.

Tuesday, May 4, 2010

என் மீதி மிச்சம் .

.

.


கவிதை ரசிக்கும்
உள்ளத்திற்கே
காதல் தெரியும்
என்பான் எஸ்ரா .
கவிதை வாசித்தேன்
என்னுள் குவிந்து
விரித்துவிட்டாள்
மச்சக்காரி
என் மிச்சக்காதலுடன்.
காதல் தீர்ந்து நானும்
காணாத தூரத்தில் அவளும் .
சன்னலை மூடி
கவிதை யெழுதி
கண்டுகொள்கின்றேன்
மீண்டும்
என் மீதி மிச்சத்தை .


.

.


.

.

Monday, May 3, 2010

எனது எட்டர்பிளஸ் காதலியே .

.

.

.
நீ விழித்திருக்கும்
ஒவ்வோரு கணமும்
என் இமைகள்
உனக்காக
சாமரம் வீசும்.
நீ உறங்கும்
ஒவ்வோரு கணமும்
என் விழிகள்
உந்தன் கனவே நானாக
கனவு காணும்.
உறங்காமல் துடிக்கிறது
என் கண்கள்
என்ன செய்தாய்
வணக்கத்திற்குறிய
எனது எட்டர்பிளஸ்
காதலியே .


.


.

.

Sunday, May 2, 2010

வாழ்க்கை
.

.


உள்ளே வெளியே
உள்ளே வெளியே
வெளியே விழுந்தும்
உள்ளே எழும் நினைவில்
மீண்டும் மீண்டும்
உள்ளே வெளியே
உள்ளே வெளியே

.


.

.

Saturday, May 1, 2010

குருடர்களால் அறிய முடியாது

.

.

.

ஓ ! மே மாதம்
பூக்கும் பூக்கும்
மே மரம் பூக்கள்.
.

.

=====
.

.

.


அறிய முடியாது
குருடர்களால்
அழகிய மேமரப்பூக்கள்

.

.

=====


.

.

.

கைகளுக்குள்
ஒற்றை நட்சத்திரம் .
ஓ ! மின்மினி .

.

.


======
.


.


.


.