Friday, April 30, 2010

குழந்தைகள் உலகம் ! ?

.

.

குழந்தைகளுக்கு விடுமுறை .
ஒரு மாதம் பெரிய தொந்தரவு.
லீவே விடக்கூடாது .
இப்படித்தான் அனேக பெற்றோர்கள் நினைக்கின்றோம் .

குழந்தைகளுக்கு விடுமுறைவிடுவது நமக்கெள்ளாம் பெரிய அவஸ்தையாகவே படுகிறது . ஆனால், குழந்தைகளுக்கு அது தான் ஜாலி .பள்ளிக்கூடம் ஒரு சிறைச்சாலையே, உண்மையில் அனைத்துக்குழந்தைகளும் அப்படித்தான் நினைக்கின்றனர் .அப்படி நினைக்காத குழந்தை ஏதோ ஒரு மனேநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கவேண்டும் .


குழந்தைகளை நன்றாக ஆராய்ந்ததில் பிறந்தது முதல் 2 வருடங்கள் குழந்தைகள் தங்களின் பார்வையையும், புரிதலையும்செலுமைப்படுத்திக்கொள்கின்றன
(இக்காலகட்டத்தில் தான் பெற்றோர்களின் பங்கு மற்றும் செயல் மிகவும் முக்கியமாக அதன்அறிவுத்தளத்தினை ஆக்கிரமிக்கிறது ).2- லிருந்து 5 வயது வரை குழந்தைகள்மேலும் பார்வையையும் ,புரிதலையும் செரிவுபடுத்துகின்றன ,
சூழலுடன் தொடர்பினை ஏற்படுத்தும் அளவிற்கு அதன் செயல்பாடு வளர்கிறது .

குழந்தைகள் 5 வயதிற்குப்பின் ,5 வயதிற்குள் தன்னுள் ஏற்றுக்கொண்ட விசயத்தில்பயணித்து 12 வது வயதில் அதனை முன்னிருத்தி கால் வைத்து ,தொடர்ந்து ,பிறகு16 வது வயதினின்று அதன்வழி சமூகத்திற்குள்நுழைகின்றனர்
அதுவரை அவர்கள் சுதந்திரமானவர்களாகவே உணர்கின்றனர்
இதுவே ,குழந்தைகள் தங்களின் வாழ்க்கை பயணத்தினை ஆரம்பிக்கும் பாதையாக உள்ளது .

எனவே ,
இக்காலகட்டத்தில் எப்போதும் குழந்தைகளிடம் பயம் காட்டாதீர்கள் . அவர்கள் அச்சப்பட்ட மனேநிலையில் வளரஆரம்பித்து விடுவார்கள் . குழந்தைகளிடம் வீரம் பற்றியும் பேசாதீர்கள், உன்னால் முடியும் போன்ற அவர்களால் முடியாது என்ற விசயங்களில் பொய் கூறாதீர்கள் .அது அவர்களிடத்தில் தாழ்வு
எண்ணத்தை ஏற்படுத்திவிடும் .குழந்தைகளிடம் உங்களின் சாகசங்களையோ குறைகளையோ கூறாதீர்கள் . அது அவர்களை தவறான பாதைக்கு இட்டுச்செல்லும் .குடும்ப விவகாரங்களையோ, கஷ்டநஷ்டங்களையோ அவர்களுக்கு தெரியுமாறு வைத்துக்கொள்ளாதீர்கள் .நமது கஷ்டம் குழந்தைகள் உணர்ந்தால் தான் நம்போல் ஆகாமல் சிறப்பானவராக வருவர் என்பது தப்பெண்ணம்.

குழந்தைகளுக்கொன்று ஒரு உலகம் உண்டு என்று எண்ணாதீர்கள் .அது அவர்களை பெரியவர்களுக்கொன்று ஒரு உலகம் உண்டு என்று எண்ணி இது பெரியவங்க சமாச்சாரம் என்ற அச்சத்துடன் வளரஆரம்பித்து விடுவார்கள் (நாமெல்லாம் அப்படி வளர்ந்தவர்கள் என்பதால் தான் செக்ஸ் விழிப்புணர்வு இல்லாமல் வளரஆரம்பித்து அச்சப்பட்டு, அவஸ்தைப்பட்டதை ஒவ்வொருவரின் கடந்த காலமும் கூறும்).அவர்களை எதார்த்தமாக வளர விடுங்கள் . அவர்களை அவர்கள் போக்கில் விடுங்கள் .அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மிகச்சரியான பதிலையே கூறுங்கள் .தெரியவில்லையெனில் நூலகத்திற்கு சென்று
தெரிந்துகொள்ளலாம் என்று கூறுங்கள். அரைகுறைபதிலை கூறாதீர்கள் .உங்களின் எதுவையும் (கருத்து, கொள்கை, இப்படி..) அவர்களுக்குப்புகுத்தாதீர்.

அவர்களின் கண்களில்படும் எல்லாம் அவர்களுக்கு புதிர்தான் .விடைகளை அவிழ்த்துவிடுவதுதான் நாம் செய்யவேண்டிய வேலை .கற்றுக்கொள்வது அவர்களின்இயல்பான செயல் .
கற்றுக்கொள்ளவேண்டும் என நாம் பரிதவிக்கக்கூடாது .வீண்.

ஒன்றைமட்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் .
குழந்தைகள்பிறக்கும்பொழுதோபலவிசயங்கள்அவர்களுக்குஆணையிடப்பட்டிருக்கின்றது .

அது
"சுவாசி உடல் இயங்கும் ".
"உண் உடல் வளரும் ".
"வளர உணவு தேவை ".
இதுபோன்று ...பல...

இதில் "வளர உணவு தேவை " என்பதுதான் தற்பொழுது நமது குழந்தைகளின் குறும்புகளுக்கும் ,சேட்டைகளுக்கும் காரணம் .மனிதன் ஆரம்பத்தில் உணவிற்காக அலைந்து, திரிந்து, ஓடி, கண்டுபிடித்து ,போராடி பொற்று, பின் உண்டு ,மகிழ்ந்து, அயர்ந்தான் .காலப்போக்கில் உணவினை சேமித்து வைத்து உண்பதால்-அலைந்து ,திரிந்து ,ஓடி, கண்டுபிடித்து,போராடி பொற்று, பின் உண்ணாமல் இருட்டடிப்பு செய்யப்பட்ட கட்டளைகளின் வெளிப்பாடுதான்
குழந்தைகள் செய்யும் அனைத்தும் .

அதனால் குழந்தைகள் குறும்பு செய்கின்றன என கோபம் கொள்ளாமல் அவர்களை அப்படியே அவர்களின் போக்கில் விட்டுவிடுங்கள்.அப்படிவிடும் பட்சத்தில் அவர்களுக்கு இடப்பட்ட கட்டளை தீர்க்கப்பட்டு அவர்களை அடுத்த
நிலைக்கு தானே உந்திச்செல்லும். இல்லாதுபோனால் நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் அன்னியப்பட்டேபோவீர்கள் .

குறும்பு செய்கின்றது என்பதற்காக டான்ஸ் கிளாஸ், மியூசிக் கிளாஸ், நீச்சல் என
உங்களிடமிருந்து அவர்களை பிரித்தீர்களெனில் அவர்கள் இருட்டடிப்பு செய்யப்பட்ட கட்டளைகளின் வெளிப்பாடினால் உங்களிடம் அந்நியமாக நடந்து கொள்வார்கள் .அதனால் பயனேதும் இல்லை .

ஆதலால் ,
குழந்தைகளிடம் மிகவும் கவனமாக இருங்கள் .
அவர்களின் வாழ்வை அவன்களே முடிவு செய்யட்டும் .
நீங்கள் மீறினால் ,அவர்களும் மீறுவார்கள் .ஜாக்கிரதை .
எனவே ,
குழந்தைகளை பாரமாக நினைக்காதீர்கள் .
அவர்களின் சேட்டைகளை அனுபவியுங்கள் .
அவர்களை உற்று கவனியுங்கள் .
அதிலுள்ள அறிவுப்பசியை கண்டுபிடியுங்கள் .
அதற்கு உதவுங்கள் .
''சுதந்திரமே அறிவு " -என முதலில் உணருங்கள் .
நாம்மில் அதிகப்பேர் இன்னும் குழந்தைகள் தான் . அப்படியிருக்க நம் குழந்தைகளை ஏன்
பெரியவர்களாக்க எண்ணுகின்றீர்கள் .

.


.


.


.

Tuesday, April 27, 2010

கோடை மழலை

.

.

பட்டுப்பூச்சியாய்
மணம் வீசும்
மலர்க்கூட்டங்களூடே
நறுமணத்தை நுகர்ந்த படி
காற்றைக்கிழித்து
வெண் பனி மலையில்
இதமாக பயணிக்கின்றேன்
எனக்கான உணவை
தயாரிக்க
எனது அம்மாய்
தனது இறகினை அசைத்தபடி
விடுமுறை முழுதும்
வீடு திரும்பும் வரை .

.


.

.

.

.

Monday, April 26, 2010

மா ம(னி)த யானைகள்

.


.


நெருப்பின் மடியில்
முது மலைக்காடு
மா ம(னி)த யானைகள்

.

.


#####

.


.


நிற்க மறுக்கின்றன
ஒற்றைக்காலில் கொக்குகள்
வறண்ட காவேரி .
.


.


.
#####
.


.


.
நொடிகளில் உதிர்ந்து
நொடியில் உதிரும்
வாழ்க்கை


.


.


.

.

Saturday, April 24, 2010

இவர் தான் ...

இன்னைக்கு எவ்வளவோ வசதியான வாகனங்கள் ,
சாலை வசதிகள் இன்னும் பிற.
ஆனால் ,அன்று அப்படியில்லாத காலகட்டத்திலேயே
மக்கள் விழிப்புணர்வு பெற இவர்
சுற்றுப்பயணம் மொத்த நாட்கள் 8600 - 23 வருடம் 6 மாதம் 25 நாள் .
சுற்றுப்பயணம் செய்த மொத்ததூரம் 13,12,000கிலோமீட்டர்கள் .
பூமிய எத்தனை தடவை சுற்றலாம் தெரியுமா?.
சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் 10,700 .
சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டு சொற்பொழிவு ஆற்றிய நேரம் 21,400 மணிகள் .
இதை ஒலிநாடாவில் பதிவுசெய்து ஒலி பரப்பினால் ஒலிக்கும் நாட்கள் 2வருடம் 5மாதம்
11நாட்கள்(இரவு பகலாக) .
அதை இவர் தான் வாழ்ந்த 34,433 நாட்களில் செய்துள்ளார் .
அவர் தான் இவர் .
இவர் தான் பெரியார் .

.

.

.

Saturday, April 17, 2010

ஓர் இனத்தின் தீர்வென்பது


.


.

.



அழித்தொழிக்கும்
எண்ணத்தை
அழித்தொழிக்கும்
பதரனைத்தும்
விதையாகும்
விதையில்லா
வீழ் நிலத்திலும்
நிறம் மாறி
ஒலி மாறி
இடம் மாறி
வேறுவேறாகிலும்
இனமானம்
மீதாகும்
வாழ்வாதாரம்
மொழியாட்ட
நிறவாட்ட
போராட்ட
போர் முனையாட்ட
வெற்றியுடன்
அனைத்தும்
அனைத்தும்
மனித நேயமாய்
ஓர் இனத்தின் தீர்வென்பது .

.



.



.

.

.

Thursday, April 15, 2010

பணத்தைச் சாப்பிட ...

.
.

.

.


.

"கடைசி மரமும் வெட்டுண்டு,

கடைசி நதியும் வரண்டு ,

கடைசி மீனும் மாண்டுவிடும்

அப்போதுதான்

பணத்தைச் சாப்பிட முடியாது என்று நமக்கு உறைக்கும் "

-ஒரு செவ்விந்தியப்பாடல் .

.


.


.

Wednesday, April 14, 2010

நீயும் மனிதன் ,நானும் மனிதன் .

.

மனிதனை மனிதனாக பார்ப்பதே கிடையாது மனிதன். மிகவும் கீழ்த்தரமாகவே தங்களுக்குள் நடந்துகொள்கின்றான்.மற்ற உயிரினங்கள் அனைத்தும், அதன்அதன் இனத்தினை அதன்அதன் இனமாகவே பார்க்கின்றது ; ஆடு ஆட்டை ஆடாக ,மாடு மாட்டை மாடாக ,சிங்கம் சிங்கத்தைசிங்கமாக இப்படி.இந்த முதன்மைப்பண்பு மனிதனுக்கு துளியும் கிடையாது .மனுசனை மனுசனா பார்க்கவேண்டும் . இதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்போ தனது எளிய
சொல்லால் மக்களுக்கும் ,மன்னர்களுக்கும் உணர்த்தியுள்ளார் வள்ளுவர்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். - என்ற குறளில் .

திருக்குறள் உரைநூல்கள்
பெருமை 972
பரிமேலழகர் உரை

எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் - எல்லா மக்களுயிர்க்கும் பொதுவாகிய பிறப்பியல்பு ஒக்குமே யெனினும்; சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான் - பெருமை சிறுமை எனப்பட்ட சிறப்பியல்புகள் ஒவ்வா அவை செய்யும் தொழில்களது வேறுபாட்டான். (வேறுபாடு - நல்லனவும்,
தீயனவும், இரண்டுமாயினவும், இரண்டுமல்லவாயினவுமாய அளவறிந்த பாகுபாடுகள். வினைவயத்தாற் பஞ்சபூத பரிணாமமாகிய யாக்கையைப் பொருந்தி நின்று அதன் பயன் அனுபவித்தல் எல்லா வருணத்தார்க்கும் ஒத்தலின் 'பிறப்பு ஒக்கும்' என்றும், பெருமை சிறுமைகட்குக் கட்டளைக்
கல்லாகிய தொழிற்பாகுபாடுகள் வருணந்தோறும் யாக்கைதோறும் வேறுபடுதலின், 'சிறப்பு ஒவ்வா' என்றும் கூறினார்.)

மணக்குடவர் உரை

எல்லா வுயிர்க்கும் பிறப்பால் ஒரு வேறுபாடில்லை. ஆயினும் தான்செய் தொழிலினது ஏற்றச் சுருக்கத்தினாலே பெருமை ஒவ்வாது.எனவே, இது பெருமையாவது குலத்தினால் அறியப்படா தென்பதூஉம் அதற்குக் காரணமும் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒரு தன்மையானதே; ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.

தமிழ் மரபுரை - ஞா. தேவநேயப் பாவாணர்

(இ-ரை.) எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் - மாந்தரெல்லார்க்கும் தாய்வயிற்றுப்
பிறத்தலாகிய பிறப்புமுறை ஒரு தன்மையதே; செய்தொழில் வேற்றுமையான் சிறப்பு ஒவ்வா - ஆயின், அவரவர் செய்யுந் தொழில்கள் வேறுபாட்டால் ஏற்படும் சிறப்பு நிலைமைகள் ஒரு நிகரானவல்ல.

தொழில் வேறுபாடுகள்; அதிகாரமுள்ளது, அதிகாரமில்லது ; வருமானம் மிக்கது; வருமானங் குறைந்தது; தற்சார்பானது, மற்சார்பானது; நிழலிற் செய்வது, வெயிலிற் செய்வது; மனவுழைப்புள்ளது; உடலுழைப்புள்ளது; துப்புரவானது,துப்புர வற்றது; ஒழுக்கக் கேட்டிற் கிடமுள்ளது, ஒழுக்கக் கேட்டிற் கிடமில்லது; இன்றியமையாதது. இன்றியமையாத தல்லாதது;
பிறரை இன்புறுத்துவது பிறரை இன்புறுத்தாதது; நல்லது தீயது என்பன. இவற்றுள் ஒவ்வோரிணைக்கும் இடைப்பட்ட நிலைமையுமுண்டு. தொழில்வேறுபாட்டால் ஏற்படும் சிறப்பு நிலைமைகள் உயர்வு, தாழ்வு, இடைநிகர்வு, மிகவுயர்வு, மிகத்தாழ்வு என்பன.

"வினைவயத்தாற் பஞ்சபூத பரிணாமமாகிய யாக்கையைப் பொருந்தி நின்று அதின் பயனனுபவித்தல் எல்லா வருணத்தார்க்கு மொத்தலிற் பிறப்பொக்கு மென்றும், பெருமை சிறுமைகட்குக் கட்டளைக் கல்லாகிய தொழிற் பாகுபாடுகள் வருணந்தோறும் யாக்கை தோறும் வேறுபடுதலிற் 'சிறப்பொவ்வா'
வென்றும் கூறினார். " என்பது பரிமேலழகரின் ஆரியச்சார்புத் சிறப்புரை.

.....

எனது கருத்துரை :

உலகில்,எல்லா உயிர்களின் பிறப்பும் போற்றக்கூடியதே.அப்படி போற்றக்கூடிய
பிறப்பில்,மனிதனாய் பிறந்து ,மனிதனை மனிதனாக பார்க்காமல் ,அவரவர் செய்யும் தொழிலை வைத்து, அது தான் பிறப்பொன்று கூறி,அதன் மூலம் வேற்றுமை பாராட்டுவது,மனிதனுக்கு சிறப்பானது அல்ல .முட்டாள் தனமானது .எல்லோரும் சக மனிதர்களே .மனிதர்களை மனிதர்களாக பார்க்கவேண்டும் .

.

.


.

Monday, April 5, 2010

கோழை வாழ்வு .

.

.


.

.

படிந்தவைகளை அகற்ற அகற்ற

மீண்டும்மீண்டும் படியும் தூசுகள்.

அறியாமை .


====

தூசும்

புயலாக துரத்தும் .

கோழை வாழ்வு .

=====


காந்தி ,மார்க்ஸ் ,பெரியார் , ...

பிழைக்க பின்பற்ற அல்ல .

மனிதன் மனிதராக .

====
.


.


.

.

Saturday, April 3, 2010

லாடம் தொலைத்த மனிதன்

.
.

.


அவ்வளவுதான் யோசிக்க முடிகிறது
ஒன்று அல்லது
இரண்டு


=====

.


.
ஏரில் பூட்டிய எருது
எதற்கென்று அறியாது
கலையத்தில் கஞ்சி

====
.

.

பாதை தவறுகள்
உடல்முழுவதும்
லாடம் தொலைத்த மனிதன்

.


.

====


.

.

.

Thursday, April 1, 2010

பழகிய ஏணி .

.

.

.


.

பழகிய ஏணி
வீட்டின் மூலையில் .
வயோதிகம்


= = = =


தளர் நடை
சிறு மழைத்தூறல்.
பால்ய நினைவு


= = = =


யாரும் விழிக்காத
மிக நீண்ட இரவு .
நானும் ,சுவர்க்கோழியும் .

= = = =

.


.

.


.


.