Monday, March 30, 2009

இந்தியாவைப் பொறுத்தவரை எந்த எந்த கட்சிகள் அழிந்து போகும் கட்சிகள்?

.

"அரசியலை சாக்கடையாக்கி விட்டார்களே ஒழிய அரசியல் சாக்கடை அன்று"

நண்டு :

இந்தியாவைப் பொறுத்தவரை....


நொரண்டு :

இந்தியா என்பது மத, இன, ஜாதி, மொழி சார்பற்ற ஒரு அற்புதமான நாடு.
அந்தப் பாதையில் அது சுதந்திரமாக பயணம் செய்து ஒன்றுபட்ட மாந்தரினத்தை உருவாக்க
அது மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு நாமனைவரும் அதற்கு உறுதுணையாக, விழிப்புணர்வுடன்
இருந்து நம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் அதற்கு செய்ய வேண்டும்.
இந்தியா என்பது ஆங்கிலேயன் நமக்கு கொடுத்த பெயரல்ல.
நாம் உருவாக்கிய தேசத்திற்கு நாம் வைத்த பெயர்.
நமது பெயர்.
நாம் வாழ்ந்து வரும் காலத்திற்கு சற்று
முன் நமது தந்தையர், தாத்தாக்களின் போராட்டத்தில் சுதந்திரம் பெற்று நம்மிடம் கொடுத்துச்
சென்றுள்ள தேசம்.
நம்மிடம் விட்டுச் சென்றுள்ள மழலை.
நமது அறிவாற்றலால் அதனை முன்னிறுத்தி வளப்படுத்தவேண்டும் என்றஎண்ணத்துடன் நாட்டை வழிநடத்த
எத்தணிக்கும் தொண்டர்களை உருவாக்கும் எந்தக் கட்சியும் தேசியக் கட்சியாக பரிணாமிக்கும்.
வெற்றியும் பெறும்.

இது நமது தேசம்.
நமது காலத்தில் நமக்காக கொடுத்த சுதந்திர பூமி. அகிம்சை வழியில் நமக்கு அளிக்கப்பட்ட
மகத்தான தேசம்.
நமக்காக நாம் உருவாக்கிய அனைத்து அம்சங்களைக் கொண்ட ஒரு அரசியலமைப்பின்பால் நமது கையில்
விடப்பட்ட ஒரு அழகிய பூந்தோட்டம்
என நினைக்கும் கட்சிதான்
இந்தியா முழுதும் பிரகாசிக்க முடியும்.
அப்படி நினைக்காத எதுவும் தேசியக் கட்சியாக பரிணமிப்பது மிகவும் கடினம்.

இந்தியா என்ற ஒன்றும் கிடையாது.
ஆங்கிலேயன் தனது நிர்வாக வசதிக்காக ஏற்படுத்திய பெயர் .
பின் அவற்றை நாம் பின்பற்றி வருகின்றோம்.
இந்தியா என்பது ஒரு மாயை என கூறிக்கொண்டு
( இதற்கு முன் இப்படி ஒரு தேசம் இருந்ததில்லை என்றால் உலகில் எத்தனை தேசங்களின் பெயர்கள்
கல் தோன்றி மண் தோன்றா காலத்திலிருந்து இருந்து வந்துள்ளது என காட்ட முடியுமா? -என
வாதங்கள் புரிவேரிடம் கேட்களாமே )
மொழிவாரியாக, இனம் வாரியாக பேசிக் கொண்டு, ஆங்காங்கு செல்வாக்கு பெற்று ,பெற முயன்று
வரும் கட்சிகள் மாநிலக் கட்சியாக இருந்து கொண்டு மத்தியில் ஆட்சியில் தங்களின்
பிரதிநிதித்துவத்திற்கேற்ப சில சமயம் செல்வாக்கு பெற முடியுமே தவிர தேசத்தைப்
பொறுத்து அவைகளின் செல்வாக்கு தவிர்க்கக்கூடிய அளவிலே, பூஜியமகவே இருக்கும் .

இந்தியாவைப் பொறுத்தவரை
காந்தியம்
முதலிடம்
வகிக்கின்றது.

காந்தியக் கொள்கைகள்
உள்கட்டமைப்பில் விரிவடையும் தன்மை கொண்டன.

இந்த விசயத்தில்
காந்தியத்தை
இன்றைய காங்கிரஸ் கடைபிடிக்கின்றதோ, இல்லையோ,
அது காந்தியின் காலத்திலிருந்து
அவரின் கொள்கைகளை உள்வாங்கி
இயங்கிக் கொண்டு வந்ததால்
காந்தியத்தின் பாதையில் அது செல்வதாக அதன் அனுதாபிகள் எடுத்துக்கொள்வதால்
முதலிடம் அதற்கு தரலாம்.

மார்ச்சியம் .......
மார்ச்சியம் பின்பற்றும் கட்சிகளைப் பொறுத்தவரை இன்னும் அழுத்தம் திருத்தமான செயல்பாடுகள்
தேவை.
அவர்களின் செயல்பாடுகள் மந்தமாக இருப்பதால் முதலிடத்தில் இருக்கவேண்டிய
இவர்களுக்கு
இரண்டாமிடம் தான்.


அது தவிர்த்து மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால், மொழியின் பெயரால், தோன்றி
அதற்குள்ளே காலம் தள்ள நினைக்கும் கட்சிகள் தேசியக் கட்சிகள் போன்று தெரிந்தாலும்,
உருவானாலும், ஓட்டு வங்கிகளை வைத்திருந்தாலும் காலத்தால் நிலைத்து நிற்குமா என்பது
கேள்விக்குறியே.

அவைகள் சி்று கட்சிகளாக, மாநிலக் கட்சிகள் அந்தஸ்திலேயே தங்களின் பயணத்தை தொடர்ந்து
முடிவைத் தேடிக்கொள்ளும். அத்தகைய கட்சிகளைப்பற்றி நான் எதுவும் கூறப்போவதில்லை.

பொதுவாகவே,
எத்தகைய உயர்ந்த கொள்கைகளையும் கோட்பாடுகளையும்,
அவைகளை கையில் எடுத்துக்கொண்டு பயணப்படும் எத்தகைய பெரிய ஓட்டு வங்கிகளைக் கொண்டபெரிய
கட்சியும் தொடர்ந்து தனது அனுபவத்தினால் அவைகளின் கொள்கை மற்றும் கோட்பாட்டினை
செலுமைப்படுத்தாமல் அப்படியே பயணப்பட்டது
எனில் அக்கட்சிகள் எத்தகைய உயர்ந்த கொள்கைகளையும் கோட்பாடுகளை பின்பற்றி இருந்தாலும்
உறைந்துவிடும்.
அலெக்சாண்டர் உலகப் பேரரசை நிறுவினான். அதற்கு காரணம்
சாக்ரடீஸ்....
அரசு விரியும் தத்துவம் அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது.
இவ்வாறுதான் கருத்து வளர்ச்சியில் விரிவடையும் தேசம்.
தேச நலன்.
அவ்வாறு விரிவடையா,
செலுமைப்படுத்தா கருத்துக்களைக் கொண்ட கட்சிகள்
சுருங்கி மறைந்துவிடும்.

எது எப்படியிருந்தாலும் மக்கள் விழிப்புணர்வு பெறப்பெற அதற்க்கேற்ப
மக்களாட்சித்தத்துவமும் விரிவடைந்து உயர்ந்த தன்மை கொண்ட கருத்துள்ள கட்சிகள் தவிர்த்து மற்ற
எல்லா கட்சிகளும்
அழிந்துவிடும்.
அதற்கான காலம்
அவைகள் கொள்கை கோட்பாட்டிலே அமையும்.

நண்டு :

சரி, இந்தியாவைப் பொறுத்தவரை, தமிழகத்தைப் பொறுத்தவரை எந்த எந்த கட்சிகள் அழிந்து
போகும் கட்சிகள்?


நொரண்டு :

இந்தப் பதிவைப் படிக்கும் நீங்கள் ஏதாவது ஒரு கட்சி சார்ந்தவராக இருந்தால் அதன் கருத்தை
அறிந்துகொண்டாலே, அதன் ஆயுட்காலம் தெரிந்துவிடும் .
நடுநிலையாளராக இருப்பீர்கள் எனில் எந்த கட்சியின் கருத்து விரிவடைவதாக இருக்கிறதே
அதற்கே ஆயுட்காலம் அதிகம்
(மூடராக இல்லாத பட்சத்தில் ).


இந்தியாவைப் பொறுத்தவரை,
தமிழகத்தைப் பொறுத்தவரை
ஏன்
உலகத்தைப் பொறுத்தவரை கூட
பகுத்தறிவு கருத்துக்களும் ,
பொதுவுடமை சித்தாந்தங்களும்
கொண்டு
அஹிம்சை வழியில்
நடந்து செல்லும
மக்கள் கட்சிகளுக்கு
ஆயுட்காலம் என்பது
வரையறுக்கமுடியாத
ஒன்றாக இருக்கும் .


அழிந்து போகும் அரசியல் கட்சிகள்… எவை? எவை? ...எப்படி? எப்படி? .... முற்றும்

"அரசியல் அறிவு பெற முயலாதவன் மூடன்"


.

Saturday, March 28, 2009

அழிந்து போகும் அரசியல் கட்சிகள்… எவை? எவை? ...எப்படி? எப்படி?

.


"அரசியல் அறிவு பெற முயலாதவன் சமுதாய விலங்காவான்"


நண்டு :


தேர்தல் கூட்டணிகள் தற்பொழுது சூடு பிடித்துள்ளவைபோல் தெரிகின்றது.

நொரண்டு :

மக்களின் கைமையில் ஆட்சியைப் பிடிக்க அனைத்து யுத்திகளையம் மேற்கொள்ள வேண்டும்தானே.
அப்பொழுதுதானே கட்சி அதன் ஸ்திரத் தன்மையை நிலைநிறுத்த முடியும். அது தானே ஒவ்வொரு
கட்சித்தலைவரும் விரும்புவர்.


நண்டு :


அப்போ, மக்களை ஏமாற்றும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வார்கள்

நொரண்டு :


மக்களை ஏமாற்றுவது என்பது வேறு, ஒரு கட்சி தனது ஸ்திரத் தன்மையை நிலை நாட்டுவது
என்பது வேறு. பொதுவாகவே ஜனநாயக நாட்டில் ஒரு கட்சி மக்களை ஏமாற்றி ஓடடுகளை
வாங்குகின்றனர் என்பது பழுத்த ஜனநாயக நாட்டில் நடக்க முடியாத ஒன்றாகும். ஆனால் மக்களை,
தங்களின் வாக்காளர்களாக தங்களின் கட்சியின் தொண்டர்களாக வைத்துக்கொள்ள அனைத்துக் கட்சிகளும்
ஒவ்வொரு யுத்தியை தன்னுள்ளே வைத்திருக்கும்.
ஏமாற்றுகின்றனர், ஏமாற்றிவிட்டனர் , ஏமாற்றப்படுவது என்பதெல்லாம் பொதுவாக ஒட்டுமொத்த
மக்களின் மீது குவியும் கருத்து. ஆனால் ஒவ்வொரு கட்சியும் தங்களின் தொண்டர்களை ஏமாற்ற
விரும்புவது கிடையாது. ஏமாற்றவும் செய்யாது. சூழல் சரியில்லாமல் போகலாம்.


நண்டு :


அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு தேர்தலுக்கு தேர்தல் மாறிக் கொண்டே வருகின்றதே.


நொரண்டு :


ஜனநாயகத்தின்படி நிலை வளர்ச்சியில் இது ஒரு அத்தியாயமாகும்.

மக்களாட்சித்துவம் இன்னும் சோதனை முயற்சியாலேயே இருக்கிறது.

சாக்ரடீஸூக்கு முந்திய கால கட்டத்தில் தான் அனைவரும் .

ஆட்சி அதிகாரத்தை
மட்டும் கைப்பற்ற நினைக்கும் அரசியல் கட்சிகள்
தங்களை ஸ்திரப்படுத்திக்கொள்ள, வழப்படுத்திக்கொள்ள, நிருவனமாகிப்போவதால்
தங்களின் நிலைப்பாட்டினை அடிக்கடி மாற்றிக்கொண்டே வருகின்றது.

இன்று தற்பொழுது உள்ள அரசியல் கட்சிகள் சிறந்த நிர்வாகிகளை நாடுகின்றன.
நிருவாகிகளாக இருக்க அக்கட்சியும், அரசியல் தளத்திலிருந்து நிருவாகத்தளத்திற்கு இடம்
பெயர்கின்றது.
இப்படி நிர்வாகிகளைக் கொண்ட அரசியல் கட்சிளாக இருக்கின்றது.
எனவே,சிறந்த நிர்வாகிகள் கொண்ட அமைப்பு சிறந்த அரசியல் கட்சியாக இருக்கிறது.
நிர்வாகிகள் மேல் மட்டத்திலிருந்து அடித்தட்டு தொண்டர்வரை பல தட்டுகளில் இருக்கின்றனர்.
நிர்வாகிகளில் சிறந்த நிர்வாகி சர்வதிகாரிக்கு ஒப்பான செயல்களையே கட்சிக்குள் மேற்கொள்வார்.
இது ஒரு
சர்வாதிகார கொடுங்கோல் அரசை வீழ்த்த ஏற்பட்ட
ஜனநாயகத்திற்கு
ஏற்பட்ட
முதல் அடியாகும்.
நல்ல நிர்வாகியால் நல்ல செயல்கள் நடப்பதுபோல் தோன்றினாலும் ஜனநாயகத்திற்கு சரியான
பின்னடைவே பின்னிட்டு ஏற்படும். காரணம் இப்படிப்பட்ட நிர்வாகிகள் மூலம்தான் கட்சிகள்
தங்களின் பலத்தை நிரூபித்துக் கொண்டு வருகின்றன.
இப்படிப்பட்ட நிர்வாகிகள்தான்
தங்களின் அதிகாரத்தை பிரயோகம் செய்து தங்களின் ஸ்தானத்தை நிலைப்படுத்திக்கொள்ள
எதுவேண்டுமானாலும் செய்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் மேற்கொள்ளும் செயல்கள் தான்
அட்டூழியங்களும்,
அட்டகாசங்களும்,
சாகசங்களும்,
வித்தைகளும்,
குரங்கு மாதிரி அந்தர் பல்டிகளும், அரசியல் கலத்தில்.
சிறந்த அரசியல் தலைவர்கள்தான் சிறந்த அரசியல் கட்சிகளை நிலைநிறுத்த முடியும்.
அப்படிப்பட்டவர்களால்தான் இத்தகைய செயல்களுக்கு ஒரு முடிவு கட்ட முடியும்.


நண்டு :


சிறந்த அரசியல் தலைவர்கள் மட்டும் அரசியல் கட்சிக்கு என்றால் ...


நொரண்டு :


அரசை,
அரசியல் கட்சியை தலைவராக இருந்து ஒருவர் வழி நடத்த வேண்டும். நிர்வாகியாக இருந்து
நிர்வகிக்கக்கூடாது.
நல்ல நிர்வாகிகள் மக்களைப் பார்க்க மாட்டார்கள்.
நல்ல நிர்வாகம் சார்புடையது.

தலைவர்களிடம் சர்வாதிகாரப் போக்கு காணப்படாது.
தலைவர்கள் மக்களை மட்டுமே பார்ப்பார்கள் .

மன்மோகன்சிங் சிறந்த நிர்வாகி.


நண்டு :


புதுப்புது அரசியல் கட்சிகள் தோன்றிக்கொண்டே உள்ளதே ......

நொரண்டு :


"அரசியல் என்பது வாழும் முறை" என்றாகிவிட்ட சமூகத்தில்
அரசியல் என்பது வாழ்வாகி விடுகின்றது.
நாம் அனைவரும ஒட்டுமொத்தமாக அரசியல் அடித்தளத்தில் இருக்கின்றோம்.
தனிமனிதன் தொட்டு அனைத்தையும் அரசியல் பதம் பார்த்துக் கொண்டுள்ள நிலையில் அது தவிர்த்த
ஒரு நிலையை மனிதன் சிந்தித்துப்பார்க்கக்கூட முடியாதபடி தன்னை ஜக்கியப்படுத்திக்
கொண்டுவிட்டான்.
இப்படிப்பட்ட சூழலில் அரசியல் என்னும் மையம் மெல்லமெல்ல பற்றியபொழுது மேலும் மனிதன்
தன்னுடைய மையத்தை அரசியலின் பால் நகர்த்தி முடித்த அளவு தன்னை முன்நிறுத்தி தனது
வாழ்வை வளப்படுத்தி, நலப்படுத்தி, சுகப்படுத்திக் கொண்டு பின் தனது வம்சத்தையும், அதன்
வழியிலே அமர்த்தி தனது வாழ்வையும், வம்சத்தையம் வடம்பிடிக்க ஆரம்பித்தான்.
தன்னை முன்நிருத்த அவனுக்கு ஏதாவது ஒன்று தேவைப்பட்டது, கிடைத்தது,
பயன்படுத்திக் கொள்கின்றான்.
தான் முன்நிருத்த ஏதுவாக தனக்கு பின் பல கைகள் தேவை என்பதனையும் அவைகள்
அசையாக்கைகளாக இருக்க தன்னிடம் நிலையாக ஏதாவது ஒன்று இருக்க வேண்டும் என்பதையும்
உணர்ந்த அவன், அதனை தனது பயணத்தில் தொடர்ந்து பெற்றுக்கொண்டே வந்த அனுபவத்தின் மூலம் பெற்ற
அறிவின் துணையுடன் கண்டுகொண்டு, அதன்மூலம் ஒரு முடிச்சைப் போடுகிறான்.
அந்த முடிச்சுதான்
அவனைத் தலைவனாக்குகிறது. மற்றவர்களை அவனின் தொண்டர்களாக்குகிறது.
அந்த முடிச்சுதான் அவனின் உயிர்மூச்சாகின்றது, பேச்சாகின்றது. அவனின் கொள்கையாகிறது
அந்த கொள்கைகள் முந்நிருத்த அவனால் கட்சி ஆரம்பிக்கப்படுகிறது.
அப்படிப்பட்ட முடிச்சு யாராலும் அவிழாத்படி இருக்கும்படியும், தொடர்ந்து நீடித்துக்கொண்டே
இருக்கும்படியும், விடைகாணா தேடுதல் வேட்டையிலேயே போடும் கேள்விகளிலே திக்குமுக்காட
வைத்து தொண்டர்களை தூங்க வைத்து வேட்டையாடி வித்தைகள் பல கற்றுக் கொள்கின்றான்.
வசீகரத்திலே (அது பேச்சாக இருக்கலாம், தோற்றமாகவும் இருக்கலாம், கருத்தாகவும்
இருக்கலாம்). மயக்கி, மயங்கி விழுந்த மனிதன் தொண்டராகவே தொடரும் அவலம் தொடர தலைவன்
மட்டும் வடத்தை தனது பகுதிக்குள் இழுத்துக்கொண்டே விடை காணா முடிச்சுடன் பல மட்டங்கள்
குட்டி, குட்டி தலைவர்களை உருவாக்கிக்கொண்டே சுழல்கின்றான்.
அவன் தான்தலைவாகவும்,
மற்றவர்கள் தொண்டனாகவும் சிம்மாசன போட்டியை அடைகிறான்.
இப்படிப்பட்ட
சிம்மானச போட்டியில்தான் முடிச்சுகளின் ஆழங்கள் பார்க்கப்படுகிறது.
அப்பொழுது ஏற்படும் கருத்து மோதலின்போது வெடித்து சிதறுவதுதான் அவன் போட்ட முடிச்சு .
முடிச்சு அவிழ்ந்தால் கட்சி என்னவாகும்.
தொண்டர்கள் அவிழ்ந்து போவார்கள். அப்படியெனில் முடிச்சு எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும்.
எவ்வளவுக்களவு சிக்கல் நிறைந்ததாக இருக்கமுடியுமோ, அவ்வளவுக்கவ்வளவு சிக்கல் நிறைந்ததாக
இருக்கவேண்டும்.
எவ்வளவுக்களவு சிக்கல் நிறைந்ததாக இருக்கமுடியுமோ, அவ்வளவுக்கவ்வளவு ஆதாயம் அதிகம்.
ஆனால் தொண்டர்கள் கொள்கை கொள்கைக்காகவே வாழ வேண்டும். ஆனால் கொள்கைப் பற்றி முழு அறிவும்
பெற்றுவிடக்கூடாது.
பெற்றுவிட்டால் தலைவன் தலைவனாக இருக்கமாட்டான்.
அந்த அளவு கொள்கை இருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட நெருக்கடியில் வாழும் மனிதன் அரசியல் வாழ்வாகிவிட்ட சமுதாயத்தில் தானும்
ஏதாவது ஒரு கட்சியை அவனது சுயநலத்திற்காக பின்பற்றுவது ,அல்லது பின்பற்றுவது மாதிரி
தொடர்கின்றான்.
அவன் தொண்டனானால் தொண்டன் என்பவன் முடிச்சுக்குள் வரவேண்டும். முடிச்சே உயிர் மூச்சாக
நினைக்க வேண்டும்.
ஆனால் உயிடன் இருந்து என்ன பயன் என்ற கேள்வியை மட்டும் கேட்கக்கூடாது.
இப்படியாகத்தான் சமுதாயத்தில் அரசியல் கட்சி உருவாகிக்கொண்டே இருக்கிறது.


நண்டு :

இப்படி உருவாகும் கட்சியின் ஆயுட்காலம் எதைப்பற்றி அமையும்

நொரண்டு :


முடிச்சுக்கு ஆதாராமான கருத்தில் உள்ளது அதன் ஆயுட்காலம்.
அந்த கருத்து தொடர்ந்து அக்கட்சியை வழிநடத்தி செல்லும் .
அவையே அக்கட்சியின் ஆணிவேர் ஒரு கட்சி தொடர்ந்து, அதன் வேராகிய கருத்தை தழுவியே செல்ல
வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு கருத்து ஆழமாகவும், அகலமாகவும் இருக்கிறதே , கருத்தை
பின்பற்றுகிறதே ,அவ்வளவுக்கவ்வளவு அக்கட்சியும் வேறுன்றி பரவி செழிக்கும்.

ஆழமான ,அழுத்தமான,
மனித நேயம் கொண்ட சிறந்த கொள்கை ,கோட்பாடுகளை உள்ளடக்கி ஏற்படுத்தப்பட்ட இயக்கங்களின்
கருத்திலிருந்து தோன்றும் அரசியல் கட்சிகள்தான் நிலைத்து நிற்கும்.

சமுதாயம் என்பதில் அரசு என்ற கட்டமைப்பில் அதன் கொள்கைகளும் கோட்பாடுகளும்
சமுதாயத்தையும், அரசையும் தாண்டி இருக்கும்பட்சத்தில் அக்கட்சி அந்த சமுதாயத்தில், அரசியல்
நிலையான இடத்தினை தக்கவைத்துக் கொள்ள முடியும்.
அது தொடர்ந்து தனது ஆளுகையை செலுத்திக் கொண்டே இருக்கும்.
அதன் செயல்பாடுகள் அந்த அமைப்பைத் தாண்டி பயனளிக்கக்கூடியதாகவும் இருக்கும்.
இது விரிவடையும் விதியாகும். இவ்வாறு விரிவடையும் தன்மையுடையவைகள் காலத்தால்
தொடர்ந்து மக்களுக்கு பயனடையும் அமைப்பாக இருக்கும்.

உலகளவில் மார்க்ஸ்க்கு முதலிடம் .


நண்டு :

தமிழகத்தைப் பொறுத்தவரை


நொரண்டு :


தமிழர்கள் ஆழந்த தமிழ் உணர்வாளர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும் ஒருங்கே பெற்றவர்கள். தமிழ்
இனம் எங்கு பாதிக்கப்பட்டாலும் அவர்களால் ஒரு பொழுதும் தாங்கிக் கொள்ள முடியாது.
அடிபட்டு, அடிபட்டு, மிதிபட்டு, மிதிபட்டு சொல்லவொண்ணா துயரங்களைக் கடந்து வந்துள்ள
இனத்தினர், இனி ஒருபோதும் அத்தகைய சுழலுக்கு இடமளிக்காமல் செல்வார்கள் அல்லது செல்ல
வைக்கப்படுவார்கள்.

மேலும்,
தமிழகத்தைப் பொறுத்தவரை
தந்தைப்பெரியாரின் அடிச்சுவட்டிலிருந்து
தான் விடியலும் ,வெளிச்சமும்.
அவரின் சிந்தனைகளை பின்பற்றி
தனது பயணத்தை எந்தக்கட்சியும் தொடர்ந்தால் மிகவும் பிரகாசமான
எதிர்காலத்தை அடையும் .

இங்கு மண் பேசும் மருந்து தந்தைப்பெரியார்

............ தொடரும்

.

Tuesday, March 24, 2009

கைதிகள் சார்பாக தேர்தல் ஆணையத்திற்கு ஒரு வேண்டுகோள்.

.

எனக்குத் தெரிந்து
சிறையில்அடைக்கப்பட்டுள்ளவர்கள் எந்தத்தேர்தலிலும்
ஓட்டுப்போட்டதாகத்தெரியவில்லை. தேர்தலில்
நிற்கஅனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால்
அவர்களின்
ஜனநாயக உரிமையான ஓட்டுப்போடும் உரிமையானது இன்றுவரை கிடைக்கப்பெறவில்லை.
ஏன் இந்த பாரபட்சம் என்று தெரியவில்லை.
ஒரு வாக்கிற்காக
ஒரு வாக்குச் சாவடி அமைத்துள்ளதாக பெருமைப்பட்டுக்கொள்ளும் தேர்தல் ஆணையம்
லட்சக் கணக்கான நபர்களுக்கு ஏன் அந்த வாய்ப்பினை கொடுப்பதில்லை?
அவர்களும் பிரஜைகள் தானே. மற்றவர்களைப் போல் அவர்களுக்கும்
ஓட்டுப்போட உரிமையுள்ளதுதானே. அப்படியிருக்க
ஏன் அந்த வாய்ப்பினை
தேர்தல் ஆணையம் தருவதில்லை?

ஒவ்வொரு பிரஜையும் கட்டாயம் ஓட்டுப்போட வேண்டும். ஓட்டுப் போடாதவர்கள் மீது நடவடிக்கை
எடுக்க கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றெல்லாம் கூறும்
தேர்தல் ஆணையம்
ஓட்டுப்போடதயாராகஇருக்கும்அவர்களை ஏன் கண்டுகொள்ளவில்லை.

அனைத்து பிரஜைகளையும் வாக்காளர்களாகச்சேர்க்க
கடும் நடவடிக்கை எடுத்து வரும் தேர்தல் ஆணையம்,
எத்தனை கைதிகளை இன்றுவரை வாக்காளர்களாகச் சேர்த்துள்ளது. அதற்கு என்ன முயற்சி எடுத்துள்ளது.
அனைத்து பிரஜைகளுக்கும்
வாக்கு உத்தரவாதம்
தருவது
தேர்தல் ஆணையத்தின்
தலையான கடமையல்லவா?

வெளிநாட்டில் உள்ளவர்கள்கூட ஓட்டுப்போடும்போது,
உள் நாட்டில் இருந்து கொண்டு வேடிக்கை பார்க்க வைப்பது சரியான ஜனநாயக நெறிமுறையா?

எனவே,
இப்பதிவின் மூலம்
தேர்தல் ஆணையத்திடம்
நான் வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால்,
இந்த தேர்தலாவது
சிறையில்அடைக்கப்பட்டவர்களுக்கு, அவர்களுக்கும் உரிமை உண்டு என்பதனை கருத்தில் கொண்டு,
அவர்களுக்கும்
ஓட்டுப்போட வாய்ப்பினை ஏற்படுத்தி,
அவர்களையும்
தேர்தலில் பங்குபெற
வழி வகைகள் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

-இப்படிக்கு நண்டு.

ஒரு ஜனநாயக நாட்டில்
தேர்தல் என்பது
அனைத்து தரப்பினரின் எண்ணங்களின்
பிரதிபலிப்பாகவே
இருக்கவேண்டும்.

இம்மண்ணில்
பிறந்த
எந்த குடிமகனுக்கும்
அவனின்
ஜனநாயக உரிமைகள்
எச்சூழலிலும்,
எப்பொழுதும்,
எங்கேனும்,
எவராலும்
பாதிக்கப்பட்டாலும், மறுக்கப்பட்டாலும், சுரண்டப்பட்டாலும்,
அதற்காக
ஜனநாயக வாதிகள் ஒருமித்து குரல் கொடுப்பர்
என்பது திண்ணம்.

எனவே,
இப்பதிவினைப் படிக்கும் ஒவ்வொருவரும்
தங்களின்
ஜனநாயக குரலினை
தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிப்பீர்கள்
என்ற உறுதியில்
நண்டு.

.

Tuesday, March 17, 2009

குற்றவாளிகள் தேர்தலில் நிற்பது சரியா ?

.


ஏன் நிற்கக்கூடாது .
அரசியலமைப்பில்
கொடுக்கப்பட்ட உரிமைகள்
எதற்காகவும் ,எப்பொழுதும் ,
யாருக்கும் ,யாரும் தடுக்கக்கூடாது .
இதில் கவனிக்கப்படவேண்டியது அரசியலமைப்பை சிதைக்கும் அளவிற்கு
அவர்களின் குற்றங்கள் இருக்கிறதா என்பதுவே .
அது அரசியலமைப்பை சிதைக்கும் அளவிற்கு இருக்கக்கூடாது.
அதுதவிர்த்து
மற்ற சமுக குற்றங்களை காரணம் காட்டக்கூடாது .
ஆனால் ,
அவர் குற்றம் செய்தவர் .
சமுகத்திற்கு இவர் அச்சத்தை ஏற்படுத்தக்கூடியவர் ,
தேவையில்லாதவர் .
எனவே ,
இவரை தேர்ந்தெடுக்கக்கூடாது என்ற விழிப்புணர்வை மக்களிடையே
தேர்தல் ஆணையம் தான் ஏற்படுத்தவேண்டும் .
அது அவர்களின் கடமை.
அதைத்தவிர்த்து
குற்றப்பிண்ணனியை காரணம் காட்டி மக்களுக்கு செய்யவேண்டிய கடமையினின்று தேர்தல் ஆணையம்
தப்பித்துக்கொள்ள பார்க்கிறது.
யார்,யார் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று கூறும் தேர்தல் ஆணையம் யார்,யாருக்கு
ஓட்டுப்போடக்கூடாது என்றும் மக்களுக்கு போதிக்கவேண்டும் ,
கூற வேண்டும்.
இவர் இத்தகைய குற்றப்பிண்ணனி உடையவர் என்பதனை
வாக்குச்சீட்டிலும் ,வாக்குச்சாவடியிலும் தெரியும்படி ஏற்பாடு செய்தல் வேண்டும் .
மேலும் ஏன் ஓட்டுப்போடக்கூடாது என்றும் தெளிவாகவே தெரிவித்தால்
எந்தக்கட்சியும்
குற்றப்பிண்ணனியுள்ளவர்களை
தேர்தலில் நிறுத்தாது
தவிர்க்கும் .
இது தவிர்த்து குற்றப்பிண்ணனியுள்ளவர்களுடைய தேர்தலில் நிற்கும் ஜனநாயக உரிமையை தேர்தல்
ஆணையம் தனது கடமையினின்று தவறி ,
தடுக்கக்கூடாது .

அவர்கள் நிற்பது சரிதான் ,
அவர்களை தேர்ந்தெடுப்பதுதான்
தவறு .
தேர்ந்தெடுக்க வைப்பது தான்தவறு .


.

Friday, March 13, 2009

விஞ்ஞானிகளுக்கு தெரிந்த கடவுள்கள்

.


என்னிடம் ,
கடவுளைப்பற்றி விஞ்ஞானிகள் ஒவ்வொருவரும் என்ன என்ன கூறினார்கள் என்று விளக்கி,
நண்டு புலகாங்கிதம் கொண்டபொழுது நான் அதிர்ந்துபோனோன் .


விஞ்ஞானிகளும் ,
இந்த நச்சு சமுதாயத்தில்தானே வளர்ந்து,வாழ்ந்து வந்திருகின்றனர் .
இந்த கல்வி கட்டமைப்பிலிருந்து தானே கல்வி கற்று.
அப்படியிருக்க அவர்களிடம் எதைப்பற்றி என்ன கேள்வி கேட்டாலும் என்ன பதில் வரும் இந்த
கட்டமைப்பை தாண்டி .
அவர்களுக்கு என்று சிறப்பாக வேறு ஒன்றும் இல்லையே .


பொதுவாக விஞ்ஞானிகள் தங்களின் வாழ்க்கைப்பாதையில், இளமையிலேயே அறிவியலின்பால் அதிக
ஆர்வம்கொண்டு,
தங்களை அர்ப்பணித்ததன் காரணமாக, உலகிற்கு உன்னத கண்டுபிடிப்புகளை அளித்து ,மனிதகுலம்
வளமாகவும், நலமாகவும், ,நிறைவாகவும் வாழ தங்களால் ஆன பங்களிப்பு செய்யப்படுகிறது.
அவர்களின் குறிக்கோள் ,முழுவதும் தங்கள் எடுத்துக்கொண்ட விசயத்தை அடைவதாகவே இருக்கும் .
மற்றபடி அவர்களுக்கும் சமுதாயத்தில் புதைந்துகிடக்கும் பழக்கவழக்கங்களுக்கும் எந்தவித
தொடர்பும் இல்லை .
அது மூடத்தனம் என்றோ , புரிந்துகொள்ளமுடியாது என்றோ அவர்களால் பிரித்துணர நேரம்,
அவசியம் அவர்களுக்கு இல்லை .
நமது கல்விமுறை கற்றுக்கொடுத்த சமுதாயம் பற்றிய படிமம் அவர்களிடம் அதிகமாகவே
விரவியிருக்கிறது .
மேலும் , அவர்களிடம் கடவுளைப்பற்றி கேட்பது
எனக்கு சரியாகப்படவில்லை.


விஞ்ஞானம் என்பது
அனைவருக்கும் பொது .
அதனால் விஞ்ஞானிகள் பகுத்தறிவாதிகளுடன் ஒதுக்கப்படுகிறார்கள் ஆத்திகர்களால் பயத்துடன் .


பிரபஞ்ச ஆய்வில் ஈடுபடுபவர்கள் கூட பிரமிப்பில் தான் உள்ளனர். அவர்களுக்கு
மனிதனைப்பற்றியும் ,அவனின் அறிவின் ஆகப்பெரிய தன்மை பற்றியும் எதுவும் தெரிவதில்லை.
எளிமையாகக்கூறவேண்டுமேன்றால் சூரியனுக்கு கோடிகோடி ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள
ஒன்றைப்பற்றி கூறும் ஒரு அறிஞருக்கு கழிவுநீரால் ஏற்படும் கேடு பற்றி தெரிவதில்லை.
இதயநோய் ஆராய்ச்சியாளருக்கு பல் நோய் பற்றிய அறிவு போல் .
இது போன்றுதான் அனைத்தும்.

இங்குதான்,
சிந்தனையாளர்கள் அனைவரையும் கடந்து நிற்கின்றனர் .
இங்குதான் ,
மனித சமுதாயம் சிறக்கவும், மனிதநேயம்
பெருகவும் ,அனைவருக்கும் பொதுவான ஒரு பார்வையை வைக்கிறது
பகுத்தறிவு .
விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கின்றனர்.
பகுத்தறிவாளர்கள் பகிர்ந்தளிக்கின்றனர்.


எந்த ஒரு விஞ்ஞானப்படைப்பிலும் அந்த படைப்பினை மட்டுமே பார்க்கவேண்டும் .
அதைப்படைத்தவன் அதற்குத்தரும் விளக்கத்தை அதைப்பொருத்து அதுசம்பந்தமாக மட்டுமே
காணபெறவேண்டும் .
(அப்பொழுதுதான் அப்படைப்பை அடுத்துவரும் தலைமுறையினர் மேலும் செலுமைப்படுத்துவர்).

அது தவிர்த்து மற்றவற்றில் அவர்களின் பார்வை மங்களாகவே இருக்கும் .
பதிலும் மலுப்பலாகவே வரும். கடவுளும் அப்படித்தான் தெரிவர் .


-நொரண்டு .
...................


''கார்ல் மார்க்ஸ் கடவுளைப்பார்க்கவில்லை ,
கஷ்டப்படும் மக்களைப்பார்த்தார் ,
அவர்கள் சுரண்டப்படுவதைப்பார்த்தார் ,
மனிதகுலமேன்மைக்கு
சுரண்டலை ஒழிப்பதே சரியென தீர்மானித்தார் ....''


மார்ச் 14 - கார்ல் மார்க்ஸ் நினைவை முன்னிட்டு ....

நொரண்டு .


.