Showing posts with label திருக்குறள் உரை. Show all posts
Showing posts with label திருக்குறள் உரை. Show all posts

Wednesday, April 14, 2010

நீயும் மனிதன் ,நானும் மனிதன் .

.

மனிதனை மனிதனாக பார்ப்பதே கிடையாது மனிதன். மிகவும் கீழ்த்தரமாகவே தங்களுக்குள் நடந்துகொள்கின்றான்.மற்ற உயிரினங்கள் அனைத்தும், அதன்அதன் இனத்தினை அதன்அதன் இனமாகவே பார்க்கின்றது ; ஆடு ஆட்டை ஆடாக ,மாடு மாட்டை மாடாக ,சிங்கம் சிங்கத்தைசிங்கமாக இப்படி.இந்த முதன்மைப்பண்பு மனிதனுக்கு துளியும் கிடையாது .மனுசனை மனுசனா பார்க்கவேண்டும் . இதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்போ தனது எளிய
சொல்லால் மக்களுக்கும் ,மன்னர்களுக்கும் உணர்த்தியுள்ளார் வள்ளுவர்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். - என்ற குறளில் .

திருக்குறள் உரைநூல்கள்
பெருமை 972
பரிமேலழகர் உரை

எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் - எல்லா மக்களுயிர்க்கும் பொதுவாகிய பிறப்பியல்பு ஒக்குமே யெனினும்; சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான் - பெருமை சிறுமை எனப்பட்ட சிறப்பியல்புகள் ஒவ்வா அவை செய்யும் தொழில்களது வேறுபாட்டான். (வேறுபாடு - நல்லனவும்,
தீயனவும், இரண்டுமாயினவும், இரண்டுமல்லவாயினவுமாய அளவறிந்த பாகுபாடுகள். வினைவயத்தாற் பஞ்சபூத பரிணாமமாகிய யாக்கையைப் பொருந்தி நின்று அதன் பயன் அனுபவித்தல் எல்லா வருணத்தார்க்கும் ஒத்தலின் 'பிறப்பு ஒக்கும்' என்றும், பெருமை சிறுமைகட்குக் கட்டளைக்
கல்லாகிய தொழிற்பாகுபாடுகள் வருணந்தோறும் யாக்கைதோறும் வேறுபடுதலின், 'சிறப்பு ஒவ்வா' என்றும் கூறினார்.)

மணக்குடவர் உரை

எல்லா வுயிர்க்கும் பிறப்பால் ஒரு வேறுபாடில்லை. ஆயினும் தான்செய் தொழிலினது ஏற்றச் சுருக்கத்தினாலே பெருமை ஒவ்வாது.எனவே, இது பெருமையாவது குலத்தினால் அறியப்படா தென்பதூஉம் அதற்குக் காரணமும் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒரு தன்மையானதே; ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.

தமிழ் மரபுரை - ஞா. தேவநேயப் பாவாணர்

(இ-ரை.) எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் - மாந்தரெல்லார்க்கும் தாய்வயிற்றுப்
பிறத்தலாகிய பிறப்புமுறை ஒரு தன்மையதே; செய்தொழில் வேற்றுமையான் சிறப்பு ஒவ்வா - ஆயின், அவரவர் செய்யுந் தொழில்கள் வேறுபாட்டால் ஏற்படும் சிறப்பு நிலைமைகள் ஒரு நிகரானவல்ல.

தொழில் வேறுபாடுகள்; அதிகாரமுள்ளது, அதிகாரமில்லது ; வருமானம் மிக்கது; வருமானங் குறைந்தது; தற்சார்பானது, மற்சார்பானது; நிழலிற் செய்வது, வெயிலிற் செய்வது; மனவுழைப்புள்ளது; உடலுழைப்புள்ளது; துப்புரவானது,துப்புர வற்றது; ஒழுக்கக் கேட்டிற் கிடமுள்ளது, ஒழுக்கக் கேட்டிற் கிடமில்லது; இன்றியமையாதது. இன்றியமையாத தல்லாதது;
பிறரை இன்புறுத்துவது பிறரை இன்புறுத்தாதது; நல்லது தீயது என்பன. இவற்றுள் ஒவ்வோரிணைக்கும் இடைப்பட்ட நிலைமையுமுண்டு. தொழில்வேறுபாட்டால் ஏற்படும் சிறப்பு நிலைமைகள் உயர்வு, தாழ்வு, இடைநிகர்வு, மிகவுயர்வு, மிகத்தாழ்வு என்பன.

"வினைவயத்தாற் பஞ்சபூத பரிணாமமாகிய யாக்கையைப் பொருந்தி நின்று அதின் பயனனுபவித்தல் எல்லா வருணத்தார்க்கு மொத்தலிற் பிறப்பொக்கு மென்றும், பெருமை சிறுமைகட்குக் கட்டளைக் கல்லாகிய தொழிற் பாகுபாடுகள் வருணந்தோறும் யாக்கை தோறும் வேறுபடுதலிற் 'சிறப்பொவ்வா'
வென்றும் கூறினார். " என்பது பரிமேலழகரின் ஆரியச்சார்புத் சிறப்புரை.

.....

எனது கருத்துரை :

உலகில்,எல்லா உயிர்களின் பிறப்பும் போற்றக்கூடியதே.அப்படி போற்றக்கூடிய
பிறப்பில்,மனிதனாய் பிறந்து ,மனிதனை மனிதனாக பார்க்காமல் ,அவரவர் செய்யும் தொழிலை வைத்து, அது தான் பிறப்பொன்று கூறி,அதன் மூலம் வேற்றுமை பாராட்டுவது,மனிதனுக்கு சிறப்பானது அல்ல .முட்டாள் தனமானது .எல்லோரும் சக மனிதர்களே .மனிதர்களை மனிதர்களாக பார்க்கவேண்டும் .

.

.


.

Monday, March 15, 2010

நவீன பாசிஸ்டுக்கள் ... உஷார் ...

.

.


இன்னும் மனிதர்களிடையே விழிப்புணர்ச்சி மலரவேயில்லை ஏற்படுத்திக்கொள்ளும் ஒரு சிறு முயற்சியைக்கூட எந்த ஒருவரும் தனக்கே கூட செய்துகொள்வதில்லை .அதற்குக் காரணம் தங்களை மனித நேயர்களாகவோ,நாத்திகர்களாகவோ காட்டிக்கொண்டாலே போதும்
அனைத்தும் பொற்றுவிட்டவர்களாக,எல்லா விசயமும் தெரிந்தவர்கள் போல் வலம் வரும் ஒரு சூழலை அரசியலில் இருந்து அடித்தட்டு மக்கள் வரை விதைத்து விட்டனர் .இந்த விதையில் முளைத்தவர்கள் மாறத நச்சுக்கள்.உண்மையில் பெரியாரோ ,மார்க்ஸொ இன்ன பிற அறிஞர்களே அதனை அறியும் நிலையில் இருந்தால் வெட்கித் தலைகுனிவர் .ஏனெனில் இவ்வாறு உருவாகிய நபர்களிடம் எந்த ஒரு அறிவும் ,அதன் பயனான வளர்ச்சியையும் பார்க்கமுடியாது. இப்படிப்பட்டவர்கள் தங்களை
எதுவாகவும்வடிவமைத்துக்கொள்வர்.இவர்கள்சினிமா,டீ.வி,சாட்டிங்,மொக்கை,அரசியல்,இலக்கியம்,
இன்னிசை,கேலி ,கிண்டல்,கடி என குழல் இனிது ,யாழ் இனிது என பொழுது போக்கு அம்சங்களில் தங்களை அமிழ்த்தி மற்றவர்களுக்கு வழிகாட்டாத தங்களின் மடத்தனத்தை மறைக்க கண்டதுபோல் கண்டதைப்பேசி காலம் கடத்துவர் .கவிஞராக, எழுத்தாளராக,நாத்திக சிகரமாக,மனிதகுல
மாமணியாக, மாமேதமையாளராக மேலும் பிரபலமாக, முடிந்தவர்கள் தலைவர்களாக. இவர்களிடம் பாசிச கொள்ளை வேறுன்றி இருக்கும் .அவர்களின் பேச்சும், எழுத்தும், நடவடிக்கைகளும், செயல்களும் ஆழ்ந்து வாசிக்க ,நோக்க அது பளிச்சிடும் .ஆனால்,அவர்கள் எப்பொழுதும் தங்களை ,மக்களின் மீது சிறுதுரும்பு பட்டாலும் பதறி ஒடி உதவும் பண்பாளர்களாகவே வேடமிடுவர் .இவர்கள் நவீன பாசிஸ்டுக்கள்.

நவீன பாசிஸ்டுகளிடமிருந்து துளிகூட இன உணர்வோ, வெளிப்படையானதன்மையோ இருக்காது. இவர்கள் பணத்தின் மிதே தங்களின் பார்வையையும்,பயணத்தையும் வைத்திருப்பர் .இவர்களுக்கு யாரைப்பற்றியும் கவலையில்லை. இனத்தைப்பற்றியோ,இழிநிலைபற்றியோ அழிவைப்பற்றியோ ஒரு வார்த்தையும் பேசவோ, எழுதவோ மாட்டார்கள் தான் .அப்படியே எழுதினாலும் ஊருடன் ஒத்து ஊதுவார்கள் . சரி,அதிருக்கட்டும் விலைவாசி விசம்போல் ஆகிவிட்டதென்றால் ஒரு கண்டனம் கூட காட்டாமல் பேருந்து ஓட்டுநர் பெயரில்லாமல் வண்டி ஓட்டுகின்றார் என்ன கொடுமையடா கோபாலா
என கோபத்துடன் வெளிப்பட்டு ருத்ரதாண்டவனாகி சமுதாயம் காப்பார் .சரி,அது
போகட்டும்,கோவில் கோவிலாக கோடிகோடி மக்கள் சென்றாலும் அதற்கான காரணம் அறிந்து மக்களை நல்வழிப்படுத்துவதை விடுத்து .கடவுள் என்றும்,புசாரி என்றும் ,ஏமாற்றுக்கூட்டம் என்றும், சாமியார்கள் ஓழுக்கங்கொட்டுவிட்டார்கள் என்றும் ஏகத்துக்கு துக்கப்படுவர் .ஆனால்,
அப்படிச்சொல்பவர்கள் எல்லாம் என்ன ஒன்றும் அறிவில்லாதவர்களா?அல்லது பைத்தியங்களா ? .அப்படி ஒன்றும் இல்லையே, அப்படியிருந்தும் ஏன் செல்கின்றனர் ? .அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளும் ,அதிலுள்ள சங்கதிகளும் என்ன ? என்ன செய்தால் திருந்துவர்? என சிந்திக்காமல்.கீழ்தரமாக திட்டுவதாலோ,எழுதுவதாலோ அல்லது ஒதுக்குவதாலோ மேற்கொள்வது
மந்திரத்தால் மாங்காய் விழும் என்னும் முடத்தனத்தில் இருப்பவருடன் கைகோர்த்து நடப்பதற்கு ஒப்பாகும். உதாரணமாக எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை கருங்குறங்கு மருத்துவரிடம் லேகியம் வாங்கி சாப்பிட்டால் நோய் தீரும் என்னும் மூடநம்பிக்கையை எங்கனம்
தடுக்க.மருந்தைக்கொடு மூடநம்பிக்கை ஓடியே போகும் .அதை விடுத்து மூடத்தனம் ,மூட நம்பிக்கை என பேசியும்,எழுதியும் வருவதால் என்ன பயன்.

இவ்வாறு திரிபவர்களைக்கண்டுதான் ,

நவீன பாசிஸ்டுக்களிடமிருந்து நம்மை உஷார்படுத்த

வள்ளுவர் இவர்களை

'' குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். ''

என்கின்றார்.
இங்கு மக்கள் மழலைச்சொல் என்பது மக்களின் கஷ்டம் எனக்கொள்க.

.....

.


.


வாள்ளுவர் அறியப்பட வேண்டிய உண்மைகள் ...

தொடரும் ....

.

.


.


.

Tuesday, March 9, 2010

நாத்திக சொத்தைகளே கேளுங்கள் .

.

"இப்ப எல்லா நாத்திகமும் இப்படித்தான் இருக்கு''
........
"நாத்திகத்தனத்தினால் உயர்ந்து பிறகு நாத்திகம் பேசியே ஆத்திகக்கூட்டத்தில் ஆத்திகநாத்திகனாகி ஆதாயம் பார்த்து அளப்பறிய ஆளாகி"
........


.


ஊரிலிருந்து வந்த தாத்தா ,என்ன செய்யர? என படித்துக்கொண்டிருந்த என்னை கேக்க; தாத்தாதிருக்குறளுக்கு உரை எழுதறத்துக்காக படிச்சிக்கிட்டிருக்கேன்னு சொன்னேன் .அதுக்கு அவர் தம்பி ,நல்ல விசயம் தான் ;ஆனா,திருக்குறளை வள்ளுவர் எந்த சூழலில் எழுதினார் தெரியுமா.அதத்தெரிஞ்சுக்கோ முதல்ல .அதையும் அவர் குறளாக்கியுள்ளார் தெரியுமா ! என புதிர்போட்டார் . சொல்லுங்க என்றேன் .
செம்பான் ,செம்பானு ஒருத்தன் இருந்தான் அவன் வாழ்ந்த காலத்தே நாத்திகவாதம் தழைத்தெழ ஆரம்பித்திருந்தது. அவன் ஏதெச்சையாக அந்தக்கோஸ்டியில் சேர்ந்தான் .அது அவனுக்கு அனுகூலமான சில உபயங்களை அளித்தது .அவன் மெல்லமெல்ல பேமஸ் ஆனான் .பணமும் தாராளமாக கிடைத்தது. அதையோ பொழப்பாக்கிக்கொண்டான் . அதனால் ,அந்தக்கால கட்டத்தில், அரசனிடம் அவனுக்கு மரியாதை இருந்ததால் அரசனின் அபிமானத்தைப்பெற கடவுள் ஒருவன் உண்டு என புலம்ப ஆரம்பித்தான் .நாளாக ,நாளாக அரசனனுக்கு அனுக்கமாகி அவரவருக்கு ஒவ்வொரு கடவுள்கள் என்றான் .ஒரு நிலையில் தன்னை திரும்பிப்பார்த்தான் .எப்படி நம்மால் இவ்வளவு உயரமுடிந்தது ? என பகுத்தறிவேட சிந்தித்தான் .ஏதோ ஒன்று தான் இதற்குக்காரணமாக இருக்கமுடியும் என முடிவு செய்தான் .பின் கடவுளுக்கும் எமக்கும் பிரச்சினையில்லை என சற்று இழுத்தான்.இப்படி நாத்திகத்தனத்தினால் உயர்ந்து பிறகு நாத்திகம் பேசியே ஆத்திகக்கூட்டத்தில் ஆத்திகநாத்திகனாகி ஆதாயம் பார்த்து அளப்பறிய ஆளாகிவிட்டான்.அவனை ஒரு நாள் திருவள்ளுவர்
சந்தித்தார்.அவனை தெரிந்துகொள்கின்றார் . உடனே அவனைப்பார்த்து அடே மடையா முதலில் பற்றற்றான் என்ற பற்றினை பற்றினாய் .உண்மையில் அப்பற்றினைப்பற்றுவது அதனை இது போல் விடுவதற்கு அன்று அது மடத்தனத்திற்கொல்லாம் தலையான மடத்தனம் என நகையாடி


''பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு''


என பாடினார் தெரிஞ்சுக்கோ என்றார் .நிலை உயரும்பொழுது ,தன் நிலை துறப்பவரை எவ்வாறு வள்ளுவர் சாடுகின்றார் பாத்தாயா .இப்ப எல்லா நாத்திகமும் இப்படித்தான் இருக்கு .திருவள்ளுவர் சொல்றத எவன் கோக்குரானுக .வாய் கிழிய திருவள்ளுவர் ,திருவள்ளுவருன் மட்டும் சொல்லுவானுங்க சொத்தப்பசங்க என்று குண்டைப்போட்டு பொக்கைவாயில் நமட்டுச் சிறிப்புடன் என்னைப்பார்த்தார் .
என்னையும் உண்மை சுட்டது .
பற்றற்றான் என்று பகுத்தறிவுப்பற்றை பற்றவேண்டும் ,அப் பகுத்தறிவுப்பற்றைப் பற்றுவது மட்டும் சிறப்பல்ல அதனை விடாமல், மற்றவர்கள் பற்றுவதற்கும் முன்னேடியாகும் படி ,பற்றவேண்டும் .


.


வள்ளுவர் அறியப்படவேண்டிய உண்மைகள் ....
தொடரும் ...
.

.

.
.

Sunday, February 7, 2010

தமிழ்த்தாயின் அன்பான வேண்டுகோள் ...

ததமிழ்த்தாய் : தம்பி என்மனம் நோக பேசிவிட்டான் எனது மகன்.
நண்டு : அம்மா ,நீங்க ?
தமிழ்த்தாய் : நான் நொரண்டுவின் அம்மா .
நண்டு : வாங்க அம்மா ,வாங்க ,வணங்குகின்றேன் .என்ன ...
நொரண்டுவின் தமிழ்த்தாய் : மகனே ,நொரண்டு என்னை என் மகன் மனம் நோக பேசிவிட்டான்.
நண்டு : ஓ,அப்படியா ,அவன் நொம்ப நல்லவனாச்சே .
நொரண்டுவின் தமிழ்த்தாய் : ஆமாம் ,இல்லையென்று சொல்லவில்லை ....ஆனால் ,ஆனால் ....
நண்டு : என்ன சொல்லவர்ரீங்க அம்மா ?
நொரண்டுவின் தமிழ்த்தாய் : என்மனம் நோக பேசிவிட்டான் ....
நண்டு : இருந்தாலும் அவன் உங்களின் மகனில்லையா ?
நொரண்டுவின் தமிழ்த்தாய் :இருந்தாலும் ... அவன் என் மகனே இல்லை .
நண்டு : அப்படி சொல்லாதீர்கள் .
நொரண்டுவின் தமிழ்த்தாய் : இல்லை இல்லை அப்படியில்லை . அவன் என்னை திட்டியதைப்பார்த்த
எனது மற்ற புதல்வர்கள் அவனின் உடமைகளை ஆதங்கத்தில் சேதப்படுத்திவிட்டார்கள் .அதற்காக
போலிஸில் கேசு போட்டிருக்காங்க .
நண்டு : ஓ அப்படியா ...
நொரண்டுவின் தமிழ்த்தாய் : ஆம் ,அதற்காக போலிஸில் அவர்களின் மிது நடவடிக்கை எடுத்துள்ளது .
நண்டு : அது தானே சட்டம் .அது தான் சரி.
நொரண்டுவின் தமிழ்த்தாய் : இருக்கலாம் .எனினும் இவன் செய்த குற்றத்திற்காக என்னிடம்
மன்னிப்பு கோட்டுவிட்ட காரணத்திற்காக நடவடிக்கை எடுக்கல . ஆனால்,என்னால் தான் எனது
சகோதரர்கள் ஆதங்கப்பட்டுவிட்டார்கள் அதனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவேண்டாம்
என்று கூறுவதுதானே ஒரு பொறுப்புள்ள சகோதரனின் உண்மையான சகோதர பாசமாகும் .அது
தவிர்த்து சட்டம் தனது கடமையைச்செய்யட்டும் என தான் மட்டும் தனது தவற்றிலிருந்து
தப்பித்துக்கொண்டால் போதுமா? தனது சொல்லால் பாதிக்கப்பட்ட தனது சகோதரர்களைப்பற்றி
எந்தக்கவலையும் படாமல் துயரங்களை அனுபவிக்கட்டும் என நினைக்கும் இவனை எப்படி எனது
மகனேன்று ஏற்றுக்கொள்வது .
நண்டு : ஓ ....ஓ....அம்மா வள்ளுவர் ..
நொரண்டுவின் தமிழ்த்தாய் : என்னப்பா செல்ரார் ...
நண்டு :
'பயனில் சொல் பராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல். '' என்கின்றார் .
நொரண்டுவின் தமிழ்த்தாய் : அப்பா எனக்கு ஒன்றும் தெரியாது .அதுக்கு என்னப்பா அர்தம்.
நண்டு : அம்மா ... பயனில்லாத சொற்களை பேசுபவனை ஒரு தாய் மகன் என்று கூறமாட்டால்
.தனக்குப்பிறந்த பதர் என்றே கூறுவாள் .
நொரண்டுவின் தமிழ்த்தாய் : ஆமாப்பா ,ஆமாம் .இவன் பதர் தான் .இவன் இப்படி பேசுவதற்கான
காரணம் அவன் சேந்துள்ள கூட்டம் . அவனது நண்பர்கள் சிலர் தொடர்ந்து என்னை இப்படி
அவமானப்படுத்திக்கொண்டே இருக்கின்றார்கள் .அதனால் தான் இவனும் என்னை திட்ரான் .இதை
யாருமே கண்டுக்க மாட்டேங்கராங்க . ஒரு வேண்டுகோள் வைக்கின்றேன் .இனி யாரும்
எம்மை திட்டாதீர்கள் . நானே நொத்து போயிருக்கேன் .
நண்டு : அம்மா ...நொரண்டுகிட்ட சொல்றேன் ... ஆவன செய்வான் என எதிர்பார்க்கின்றேன் .

.



.



.

..


வள்ளுவர் -அறியப்படவேண்டிய உண்மைகள் -தொடரும் ....

..


.

Friday, January 29, 2010

மரம் நட்டால் மழை வருமா ?

-மழைநீரை நிலம் சேமி்க்க
மனிதனுக்கு பயன்படும் .-


நொரண்டு : மரங்கள் நட்டால் மழை வருமா?

நண்டு :முதலில் நடப்படும் மரக்கன்றுகளில் எத்தனை மரங்களாகின்றன ? ஆயிரத்தில் ,லட்சத்தில்
...ஒன்று ....

நொரண்டு :இது வரை மரக்கன்றுகள் நடப்படுவது மட்டும் விளம்பரமாக இருப்பதால் அதைப்பற்றிய
யாருக்கும் கவலை இல்லை ....

நண்டு :அப்படியே அவைகள் வளர்ந்தாலும் உண்மையில் பயன் தராது .

நொரண்டு : எப்படி ?

நண்டு : அவைகளால் மழைச்சூழலை ஏற்படுத்த முடியாது .

நொரண்டு :ஓ....அப்படியா !!!

அப்போ... மழைநீர் சேகரிப்பு ....

நண்டு : மனிதனுக்கு நல்ல பயன்தரும் ,அவைகள் மழைக்கு உதவாது .


நொரண்டு : ஓ...!!!

நண்டு : வள்ளுவர்

''விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி. ''

என்ற குறளில் கூறுகின்றார் .

நொரண்டு : விளக்கம்

நண்டு :

மழைநீரை நிலம் சேமி்க்க
மனிதனுக்கு பயன்படும் .


நொரண்டு :சற்று விளக்கமாக

நண்டு :

மழை பொய்த்தாலும் ,
பெய்த மழை
கடலினால்
மழையினால்
நிலத்தின் கண் வீழ்ந்த வடிந்த நீரானாது
நிலத்தினுள் சென்று
நிலத்தின் கண் நின்று
நிலத்தடி நீராகி
உணவுக்கு நீராகி
பசியை ஆற்றும் .

நொரண்டு :ம்...மழை நீர் நிலத்தடி நீராகி மனிதனுக்கு பயன்படும் அப்படித்தானே .

நண்டு : அப்படியும் தான் ...மழையில்லா காலங்களில் ...

நொரண்டு :நிலத்தடி நீர் பற்றி வள்ளுவர்.

நண்டு : ஆம் ,வள்ளுவரே தான் ...


..


வள்ளுவர் -அறியப்படவேண்டிய உண்மைகள் -தொடரும் ....

..


.

.

Thursday, January 21, 2010

எங்கே போய் முன்தோன்றிய மூத்த குடியாவது தமிழன் ...


.


நொரண்டு : காந்தியடிகள் தமிழ் கற்றாரா ...

நண்டு : ....

நொரண்டு : திருக்குறளை கற்பதற்காக ....

நண்டு : .....

நொரண்டு : ஏன் அமைதியா இருக்க .???

நண்டு : ....

நொரண்டு : சரி அது இருக்கட்டும் .
திருக்குறளை
அதன் உண்மையை
தமிழ் கற்றால் தான் அறிந்துகொள்ள முடியுமா ? .
மொழி்பெயர்ப்பு அதனை வெளிப்படுத்தாதா ?

நண்டு :
ஆம் .
அதிக கலைச்சொற்களை பயிலுதல்
அதிக ஆழத்திற்கு இட்டுச்சொல்லும் .
மொழிபெயர்ப்பு ....

நொரண்டு : ஏன் ?

நண்டு :நான் மொழிபெயர்ப்பில் குறளை படித்ததில்லை .யாரவது தங்களின் மொழியில்
குறளைப்படித்து பின் தமிழ் கற்று குறள் படித்தவரிடம் கோட்கவேண்டிய கேள்வி .

நொரண்டு : ஓ ...

நண்டு : ஆனால் தமிழில் கற்பது பற்றி வள்ளுவர் என்ன கூறியுள்ளார் தெரியுமா?

நொரண்டு : கூறு .

நண்டு :

''அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.''

என்ற குறளில்
தமிழ் தான் முன்தோன்றிய மொழி என்று கூறுவதன் மூலம் அதனை கற்றபது தான் சிறப்பு என
கூறுகின்றார் .

நொரண்டு : ஓ...


நண்டு :மேலும் ,

''வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான் தமிழ்தம் என்றுணரற் பாற்று.''

என்ற குறளின் மூலம்
தமிழ் கற்பதனால் உண்டாகும் பயனை கூறுகின்றார் .

நொரண்டு : என்ன பயன் ?

நண்டு :
தமிழ் ,
கற்றவருக்கு மழைபோல்
அனைத்தையும் கொடுக்கும் என்கின்றார் .

நொரண்டு : ஓ... இப்படியும் கூறியுள்ளாரா !!!


நண்டு :
மேலும் ,

''தமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ். ''

என்ற குறளின் மூலம் ...

நொரண்டு : இதுக்கு



என்றும் ...


நண்டு :நீ சொல்வருவதை சொல் .

நொரண்டு : அது வந்து
நான் பாத்த புத்தகத்திலெல்லாம்
''அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்'' னு போட்டுருக்கு
நீ
''தமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்'' னு
எடுத்திருக்க...

நண்டு :
அவர்கள் பார்வையே தவறு .
அமிழ்து என்பது தமிழே கிடையாது .
அதுவும் திருவள்ளுவர் காலத்தில்
சுத்தத்தமிழ் பயன்படுத்திவந்த பொழுது .
அமிழ்து என்பது பின்னாள் சேர்த்துக்கொண்ட
ஒரு சொல் .
சுருங்கக்கூறின் திருவள்ளுவர் காலம்
தனித்தமிழ் காலம் .
தனித்தமிழன் காலம் .


நொரண்டு : ஓ ...அப்படியா ..

நண்டு :
பின்னாள் சேர்த்தவர்கள் .
அமிழ்து என்பது தமிழுக்கு முன்பு தோன்றியதுபோல் ஆக்கி . தமிழை பின்னுக்கு தள்ளினர் .
அந்த ஒரு வார்த்தையைக்கொண்டே தமிழை கேவலப்படுத்திவிட்டனர் தமிழை ,தமிழனை ,தமிழ்
பண்பாட்டை .
அமிழ்து ,அமிழ்து,அமிழ்து ...என்று சொல்லிக்கொண்டே வந்தால் தமிழ் என வருமென்றும் சொல்லி
ஏமாற்றியதோடு . தமிழ் இனத்தையே மடையர்களாக்குவதற்கு இலக்கியத்திலும் இதே கருத்தை
புகுத்தி விளையாடிவிட்டனர் . எங்கும் .
நீ அமிழ்தை ஏற்றுக்கொண்டால் தேவர்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் .
தேவர்களை ஏற்றுக்கொண்டால்
அவர்களின் அடிவருடிகளை உமக்கு முன்னவர்களாக ஏற்றுக்கொண்டுவிட்டாய் அவ்வளவே .
இவ்வாறு ஒவ்வொன்றாய் ஏற்றுக்கொண்டு...
எங்கேபோய்
முன் தோன்றிய மூத்த குடியாவது தமிழன்.
தெரிகின்றதா கபட நாடகம் .

நொரண்டு : அடப்பாரதேசிகளா ...

நண்டு :ஆனால் ,இடைச்செருகலுக்கு் குறள் மட்டும் மிகவும் கடினமாக இருந்ததால் மிகவும்
கடினப்பட்டே ஆனால் அமைப்பை உடைக்கும் திறனற்று .
அதனால் தான் இப்பொழுது நம்மால் எளிதில் அதனை அடையாளம் காணமுடிகிறது .
குறளின் சிறப்பே இது தான் .
இப்படியொல்லாம் நடக்கும் என நினைத்துத்தான் என்னவோ வள்ளுவர் குறள் வடிவத்தில் இயற்றினார்
போலும் .

நொரண்டு : சரி ஏன் இத்தனை பீடிகை...
குறளுக்கு விளக்கம் சொல் .

நண்டு :
தமிழ்தினும்
மிகவும் இனிமையான மகிழ்வைத்தரும்
தம் மக்கள்
இட்டும் ,தொட்டும் ,துழந்தும்
சிறு கையாள் அளாவப்பட்டு
குழைந்து எழு்தும் தமிழை பார்க்கும் பொழுது .

நொரண்டு : மழலை எழுத்தை கூழ் என்கின்றார் .

நண்டு :ஆம்

நொரண்டு : மழையை தமிழ் என்கின்றார்

நண்டு :ஆம்

நொரண்டு : ஆகா...ஆகா ...

.


.

.

.வள்ளுவர் அறியப்படவேண்டிய உண்மைகள் ...

தொடரும் ....

.

.


.

Friday, January 15, 2010

தமிழ் வள்ளுவரின் மழையில் .

.


நொரண்டு : இன்னைக்கு குழுச்சாச்சா ?

நண்டு : ம் ...

நொரண்டு : குட்டிப்பசங்க கும்மாலமெல்லாம் எப்படி ?

நண்டு : அட ஏன் கேக்கர ,ஒரே ஆட்டம் தான் .
அவங்களோட சேந்து .குளிக்க வைக்கரதுக்குள்ள
அட அட ..பிறகு சாப்பிடர செய்யரது ..ஏன் கேக்கிற
மிகவும் இனிமையான ஒன்று .


நொரண்டு :ம் ...

நண்டு :அவங்க எல்லாம் இயற்கையாகவே
இருக்க விரும்புகின்றனர் .அதனால்தான் தங்களின் இயற்கை விருப்பத்திற்கு மாறாக, தங்களின்
அறிவினை வளர்த்திக்கொள்ள விரும்பாத காரணத்தினால் , தங்களின் அனைத்தையும் அதற்கேற்றார்போல்
அமைத்துக்கொண்டன .

நொரண்டு : நாம அப்படியில்லையே ...

நண்டு : ஆனால் ஒன்று ,அவர்களிடம் பழகிப்பார்த்ததில் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வருகின்றன .

நொரண்டு :அதனால்தான் அரிஸ்டாடில் தனது கலாசாலைக்கு உலகொங்குமிருந்து உயிரினங்களை
வரவழைத்து ஆய்வு செய்தனர் போலும் .

நண்டு : உண்மையில் அவைகள் கற்றுத்தரும் ஒவ்வொன்றும் மிகவும் பயனுள்ளவைகளாகவே உள்ளன .


நொரண்டு : ஆமாம் ,

நண்டு : நமது தமிழ் மொழிக்கும் அவர்களின் மொழிக்கும் எவ்வளவு ஒத்துவருகின்றது என்பதை
அவர்களுடன் உரையாடிப்பார்த்த பொழுது மிகவும் ஆச்சரியப்படவைக்கும் பல விசயங்கள் ...

நொரண்டு :என்ன ?

நண்டு : தமிழ் எவ்வளவு தொன்மையானது ,அதோடு மட்டுமல்ல எவ்வளவு இயற்கை இயல்புடன்
இன்றுவரை இருந்து வருகின்றது என்பதற்கு தமிழ் மொழியையும் மற்ற பிற மொழியையும் விலங்கு
மற்றும் பிற உயிரினங்களின் மொழியுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் தெரிகிறது .தமிழ்
அனைவருக்குமான அதாகப்பட்டது அனைத்து உயிரினங்களுக்குமான மொழியமைவுடன் இருக்கிறது
என்பது .

நொரண்டு :ஓ ,அப்படியா ...

நண்டு :ஆனால் இன்று நாம் அதன் விரியும் தன்மையை மலுங்கடித்துக்கொண்டு வருகின்றோம் .

நொரண்டு :இப்பொது இருக்குற பொழப்போ ....நீ வேற ...

நண்டு : ஒங்கிட்ட சொல்லி ஒரு பயனும் இல்லைதான் .இருந்தாலும் ஒங்கிட்டயும் உண்மையை கொண்டு
செல்வது என் கடமை .

நொரண்டு :யார் கொத்த்து ...சரி ,சரி ,அருக்காத ...ஊருக்குப் போன கதையச்சொல்லு ...

நண்டு : குட்டிப்பசங்களை யெல்லாம் குஷிப்படுத்திட்டு நானும் குஷியாயிட்டு வந்துட்டேன் .

நொரண்டு :ஏன் உடனே வந்துட்டே ?

நண்டு : மழை வர்ர மாதிரி மேகம் கருத்ததா அதான் ...

நொரண்டு : இப்ப எந்த காலத்துல வந்திருக்கு .எனக்குத்தெரிஞ்சு ஞாபகமில்ல . ம்.... எனக்கு
ஒரு சந்தேகம் ...

நண்டு :என்ன?

நொரண்டு :
பெங்கல் பண்டிகைல மழையப்போற்றது தானே முக்கியம் .

இளங்கோ கூட

''மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற்கு அவனளிபோல்
மேநின்று தாஞ்சுரத்த லான்.'' -னு ....

அப்படி பெங்கல இல்லையே ....

நண்டு : ம் ....

நொரண்டு : என்ன ...ம் ....

நண்டு : வள்ளுவரும்

''வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான் தமிழ்தம் என்றுணரற் பாற்று.''

என்ற குறளில் ...

நொரண்டு : இதுக்கு
மு.வ :
மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால்,
மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு
அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும் .
என்றும் ....

நண்டு : பொதுவான கட்டொரும்பு உரை .

நொரண்டு : அப்படினா .

நண்டு : உரை எழுதனும் ஆனால் மூளைய பயன்படுத்தாம , முன்னெரும்பு பேன பாதையிலே ஆனால்
கொஞ்சம் நடைமாத்தி .

நொரண்டு : சரி உன் உரை கூறு .

நண்டு : மழை வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தமிழாக உணரும் பான்மையை உடைத்து .

நொரண்டு : இன்னும் ...

நண்டு : உலகத்து வாழும் உயிர்களுக்கு தமிழ் மழை போன்றது .

தமிழ் என்பதை

இக்குறளில் வள்ளுவர் பயன்படுத்தியதை காண்க .

இக்குறளின் சிறப்பே இது தான் .

இதனை
உலகிற்கு
முதல் முதலில்
கண்டுபிடித்து
அறிவிக்கின்றவன்
நான் தான் என்பதில் பெருமிதம் அடைகிறேன் .

.

வள்ளுவர் அறியப்படவேண்டிய உண்மைகள் .....
தொடரும் .....


.


.


.

.

Thursday, January 14, 2010

கரும்பைப்போல் சுவைக்க .


.


.

நொரண்டு : வணக்கம் , தமிழர்திருநாள் வாழ்த்துக்கள் .

நண்டு : வணக்கம் . நன்றி ,வாழ்த்துக்கள் .

நொரண்டு : பெங்கலெல்லாம் ஊருள படு ஜோரா ..

நண்டு : ஆம் ,இருந்தாலும் நாளைக்குத்தான் எனக்கு ரொப்பப்பிடிக்கும் .

நொரண்டு : ஓ ,ஒங்களுக்கொள்ளாம் நாளைக்குத்தானே
மறந்துட்டேன் .

நண்டு : நாளைக்குத்தான் நம்மளுக்கு உழச்ச குட்டிப்பசங்களை எல்லாம் குஷிப்படுத்தும் நாள்
.அவங்கெல்லாம் நாளைக்கு ஜிகு ஜிகு இருப்பானுக ...நாளைக்கு அவங்க அடிக்கற லூட்டி
இருக்கே ...அப்ப்பா ... நினைச்சாலே ...இந்த வருசம் குட்டிப்பையன் ஒருத்தன்
புதுசா சேந்திருக்கான் .இன்னைக்கே ஜிமுஜிமுனு ஓடிக்கிட்டு இருந்தான் .நாளைக்கு
நான்வந்தப்பறம் ரண்டு பேரும் குளிப்போமுனு அவன்கிட்ட செல்லிட்டு வந்திருக்றேன் .

நொரண்டு :சரி ,சரி அதோட சேந்தாவது குளிச்சா சந்தோசம் .
சரி வருசம் பூராம் கஷ்டப்படுத்திட்டு ஒரு நாள் மட்டும் இப்படி செய்தல்
சரியா ?

நண்டு : நீ வாழ்க்கைய சுமையா பாக்குற .

நொரண்டு :அப்படியில்லை தவறான புரிதல் .

நண்டு : இல்லை இல்லை ,
உனது புரிதல் தான் தவறு .
அதனால தான் நீ
தமிழனின் கொண்டாட்டத்தை ,
தமிழனின் பண்பாட்டை,நாகரிகத்தை
தவறா அப்படி பாக்குற .

நொரண்டு : ம் ...எல்லாத்துக்கும் பிறவி என்பது ...

நண்டு : பிறவி என்பது ?

நொரண்டு : அதாகப்பட்டது வாழ்க்கை எனும் பெரும் கடலை நீந்திக்கடத்தில் என்பது அவ்வளவு
எளிதானதா ?

நண்டு : இதுக்கு வள்ளுவர் என்ன சொல்றார்னு கேட்டுட்டு 21ம் நூற்றாண்டுல இருக்கிற நீ சிந்தி

நொரண்டு : சொல்லு ?

நண்டு :

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்."

நொரண்டு :

இதுக்கு


இப்படியும்

உரை எழுதியுள்ளனர் .


நண்டு : ஆம் .

நொரண்டு :நீ உன் கருத்தா சொல்லு .

நண்டு :

இறைவன் அடிசேராதார்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர்போல்

நீந்தார் .


நொரண்டு : புரியல

நண்டு :
பிறவியை
பெரும் கடல்
என்றும் ,
சுமைஎனறும்

வாழ்க்கையை நடத்தமாட்டான்
இறைவன் அடிசேராதவன் .
இறைவன் அடிசேர்ந்தவர்கள் தான்
பிறவியையே
பெரும் குற்றமாக நினைத்து
வருந்தி
வாடுகின்றனர் .

நொரண்டு :அப்போ ...

நண்டு : வாழ்க்கை என்னும் சுவையை கரும்பைப்போல் சுவைக்கவேண்டும் .

நொரண்டு : வள்ளுவர் கூறுவது

நண்டு :வாழ்க்கை சுமையன்று .

.


.

வள்ளுவர் அறியப்படவேண்டிய உண்மைகள் ...
தொடரும் ...







.





.



.

Wednesday, January 13, 2010

போங்கடா...நீங்களும்...

.

நொரண்டு : படத்த பாரு ?

நண்டு :என்ன
எங்கோ இருட்ல எடுத்து இருக்க...செல்போனிலையா ?

நொரண்டு :ஆமாம் ,
நேத்து நானும் என் மனைவியும் ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வந்துக்கிட்டு இருந்தேம் . திடிரென
என் மனைவி ஏங்க ஏங்க இங்க பாருங்க என்றாள் , பார்த்த எனக்கு ஒன்னும் புரியவில படத்துல
பாக்கர பையன் helmet போட்டுக்கிட்டு சைக்கிள ரோட்ட கிராஸ் செய்ய பாத்துக்குட்டு
இருந்தான் .நான் வண்டிய நிப்பாட்டி போட்டோ எடுத்தேன் . அவன் டிஸ்டப் ஆகல ,என்னாடா
வித்தியாசமா இருக்கானேனு அவங்கிட்டப்போய் ஏப்பா helmet போட்டுருக்கனேன்.அதுக்கு அவன்
நீங்க எதுக்கு போட்டுரிக்கீங்கனான்? தலைக்கு பாதுகாப்புக்கு என்றேன் .அவன் சொன்னான்
அதுக்குத்தான் நாங்களும் போட்டுருக்கு- னான்.இது எங்களமாதிரி வண்டிவச்சிருக்கிறவங்க
போடறது,சைக்கில் ஓட்டரவங்க போடறது வேறனு சொன்னேன் . போங்கடா...நீங்களும்...னு
செல்லிட்டு பரந்துட்டான் ..

நண்டு :அவன் கருத்தும் சரிதானே.

நொரண்டு :அதனால ...

நண்டு :நல்ல கருத்துக்களை அறிந்து ஏற்றுக்கொள்ளவேண்டும் .

நொரண்டு :இல்லைனா ?

நண்டு : வாழ்க்கையே விபத்துத்தான் .

நொரண்டு :என் இப்படி சொல்ற...

நண்டு : நான் சொல்லவில்லை ...

நொரண்டு : வள்ளுவரா ...

நண்டு :ஆம்.

நொரண்டு :என்னானு ...

நண்டு :

''கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. ''

நொரண்டு :சரி ,அர்த்தம் சொல்லு .

நண்டு :

செவிடு என்பது காது என்ற கருத்தின் தவறு அல்ல,
குருடு என்பது கண்என்ற கருத்தின் தவறு அல்ல,
ஊமை என்பது வாய்என்ற கருத்தின்தவறுஅல்ல, அதுபோலவே
எண்குணத்தான் தாளை வணங்கா என்பது தலை என்ற கருத்தின் தவறு அல்ல .


நொரண்டு : இன்னும் .

நண்டு : தாளை வணங்கவேண்டும் என்ற கருத்து தான் தவறானது .

நொரண்டு : ம் ...மேலும் ...

நண்டு :
எளிமையான மனிதனுக்குத்தேவையான உயர்ந்த குண நலன்களை பெற்றவர் தலை தாளை வணங்கா.

நொரண்டு : சுருக்கமாக

நண்டு :
நல்ல கருத்துக்களை
அறிந்து
ஏற்றுக்கொண்டு
தேவையான குண நலன்களை பெற்றவர்
எளிய உயர்ந்த குறையில்லா மனிதர் .

.


.

வள்ளுவர் அறியப்படவேண்டிய உண்மைகள் .....
தொடரும் .....
.


.


.

Tuesday, January 12, 2010

தமிழில் தமிழர்கள் கற்றது ...

.

நொரண்டு :
''எனக்குத்தெரிந்து தமிழில் ஒன்னும் இல்லை '' என என் நண்பன் சொன்னான் ...

நண்டு : எதுக்கு இதப்பேசினிங்க ...

நொரண்டு :ஏன்?

நண்டு : அப்பத்தான் அதுக்குத்தகுந்த விளக்கம் கொடுக்க முடியும் .


நொரண்டு : தமிழ் மொழியின் சிறப்பு பத்தி நான் சொன்னதுக்கு ...அறிவார்ந்த விசயங்கள்
தமிழில் இல்லை,அறிவை தமிழ் பிரதிபளிக்கவில்லை . தமிழில் அறிவியல் பார்வையில்லை ....

நண்டு : அப்படியில்லை ,
உண்மையும் அதுவல்ல .
அப்படி ஆக்கப்பட்டு விட்டது
பக்தி இயக்கங்களால் .
தமிழ் மொழியே பக்தி இயக்கமாக ஆக்கிவிடப்பட்டுவிட்டபடியால் .
அப்படி
ஒரு மொழி
பக்தி இயக்கமாகும் பொழுது
அந்த மொழியில்
பக்திப்பரவசம் மட்டுமே இருக்கும் .


நொரண்டு : அப்படியா ?

நண்டு : இதைத்தான் வள்ளுவர்

> அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
> பிறவாழி நீந்தல் அரிது.

என்றார் .


நொரண்டு :அப்படினா?


நண்டு :
''அறவாழி அந்தணன்
என்பவனால்
பிறவாழி நீந்தல் முடியாது
அவன்தாள் சேராவிடில் ''


நொரண்டு : புரியல ...

நண்டு : அறத்தை மட்டுமே போதிக்கும் அந்தணர்களால் அறக்கருத்துக்களைத்தவிர்த்து பிறவற்றை
போதிக்க முடியாது .


நொரண்டு : இதிலிருந்து அவர் கூறும் செய்தி .

நண்டு : பிறவற்றையும் கற்கவேண்டும் .


நொரண்டு : ஓ,
தமிழன் தமிழை இப்படித்தான் கற்றானா?. மற்றவற்றை கற்காமல் .


நண்டு :இப்படித்தான் கற்பிக்கப்பட்டு வந்துள்ளது .

நொரண்டு : இப்பத்தான் எல்லாத்தையும் கற்கின்றானோ? .


நண்டு : இருந்தாலும்
இது ஆங்கிலேயர்கள் தந்தது .

நொரண்டு : ஓ ,
அவ்வளவு அறிவுப்பசி தமிழர்களுக்கு... ஆங்கிலேயர்கள்
நமக்கு உருவாக்கிய கல்வி முறை குமாஸ்தாக்களை உருவாக்கும் கல்வி முறைனு சொல்றாங்களே ...

நண்டு :
இப்பவும்
அப்படித்தான்
கற்றுவருகின்றான்
தமிழன் தமிழை .
அதனால் தான் ஆங்கிலத்தின் மீது தமிழனுக்கு அவ்வளவு ஆர்வம் .

நொரண்டு : அதனால் ?

நண்டு :நாம் உருவாக்குவோம் அறிஞர்களை உருவாக்கும் தமிழ் கல்வி முறையை .

.


.

.

.

Monday, January 11, 2010

என்னை யாரும் இங்கு அசச்சுக்கமுடியாது என்று இருமாப்புடன் திரியரானுக...

.



நொரண்டு :

திருப்பதி கோயிலுக்கு போறவங்க பூராம்
பெரிய பெரிய ஆளுங்களா ,
பணக்காரங்களா
இருக்காங்கப்பா .
என்ன கூட்டங்கற ...


நண்டு : ஏன்கிட்ட ஏன் சொல்ற

நொரண்டு :

இல்ல,
அவன்அவன் ...
பெரும்புள்ளியாஇருக்கறவனேல்லாம்
அங்க க்யூவில 5 மணிநேரம் 6 மணிநேரம்னு ...


நண்டு : என்ன சொல்லவர்ர ...

நொரண்டு : ம்...

நண்டு : என்ன ம்....

நொரண்டு :


நான் தான் மிகப்பெரியவன் ,
எனக்கு பதிலா எவனாவது பொறந்து தான் வரனும் ,
தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இலர் ,
எமக்கு நிகர் யாரும் இல்லை ,
எனக்கு உவமையாக்க்கூட
இங்கு யாருக்கும் தகுதி இல்லை ,
என் பீல்டுல நான் தான் சூப்பர் ஸ்டார் ,
நா படிக்காத விசயமே கிடையாது ,
நான் பாக்காத பணமில்லை ,
நான் போகாத ஊரில்ல ,
நான் மிகப்பெரிய சதனையாளர்
யாராலையும் எட்ட முடியாது என்னை,
எல்லாம் எனக்கு தெரியும் ,
என்ன மீறி எதுவும் நடக்காது ,
என்னால் எதையும் சமாளிக்கமுடியும் ,
என்னை யாரும் இங்கு அசச்சுக்க முடியாது
என்று
இருமாப்புடன் திரியரானுகல சிலர் இவனுகளுக்கு ஏதாச்சும் எதிர்பாராமல் நடந்துச்சுனா என்ன செய்வானுக ?

நண்டு : என்ன செய்வார்கள் ?

நொரண்டு : பதில செல்லுப்பா ?

நண்டு :

யார் கர்வத்துடன் இருந்தாலும் முதலில அவன் மடையனாகத்தான் இருப்பான் ...

நொரண்டு :

ஏய் ,ஒரேயடியா என்ன விட்டா ஒவரா போற ,
நீ என்ன பெரிய இவனா? ,
மடையங்கர ,
என்ன நினைச்சுக்கிட்ட ,
நீயும் கர்வமாத்தானே பேசற ...


நண்டு :

நொரண்டு இப்படி நீ நினைப்பதுவும்
கர்வம் தான் ..
உன்னுள் உள்ள கர்வம் இது .
உன்னால் முடிந்த
வெளிப்படுத்த முடிந்த
கர்வம் .



நொரண்டு : எப்படி


நண்டு :

எதையும் சிந்திக்காமல் ,
சொல்லவந்ததையும் புரிந்துகொள்ளாமல் ,
மடையன் என்ற வார்த்தையை கேட்டவுடனே நம்மைத்தான் என்ற முன்முடிவுடன் இருக்கின்றாய் அல்லவா ?
அது தான் அகந்தை .


நொரண்டு :ஓ ...


நண்டு :

இப்படி ''தனக்குவமை இல்லாதான் '' என தனக்குள் நினைப்பவருக்கு வரும் மனக்கவலை பற்றி வள்ளுவர் என்ன சொல்றார்னு தெரியுமா?


நொரண்டு : சொல் .


நண்டு :

''தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. ''



நொரண்டு :

இதுக்கு பரிமேலழகர் கருத்துரை
''கடவுளுடைய திருவடிகளைச் சேராதவர்களுக்கு மனக்கவலை நீங்கு்தல் இல்லை ''


நண்டு : அடுத்து ..

நொரண்டு : நீ சொல்லு ...

நண்டு :

''தனக்குவமை இல்லாதான் என்பவனால்
அவனின் மனக்கவலை மாற்றல்முடியாது
தாள்சேராவிடில் .''


நொரண்டு : இன்னும் சொல்லு ...

நண்டு : இருமாப்புடன் திரியரானுகல சிலர் இவனுகளுக்கு ஏதாச்சும் எதிர்பாராமல் நடந்துச்சுனா என்ன செய்வாங்கனு கேட்டாயல்லவா அதற்கு பதில் அவர்கள் சாமி குப்பிடப்போவார்கள் .


நொரண்டு : இப்படி சுருக்கம சொன்னா எனக்கு புரியாது விரிவா சொல்லு .

நண்டு : இத தனியா புத்தகமா போடறேன் .அதுல விரிவா சொல்ரேன், அப்ப முழுசா தெரிஞ்சுக்கோ .

நொரண்டு : அதுவரைக்கும் ...

நண்டு : ப்ளாக்லேயே படி .

நொரண்டு : சரி இதுக்கு அர்த்தம் .

நண்டு : கர்வம் கூடாது .




.




.




வள்ளுவர் அறியப்படவேண்டிய உண்மைகள் .....
தொடரும் .....
.










.





.



.

Sunday, January 10, 2010

பொய் கூறாதீர்கள் மதவாதி்களே ...

.


நொரண்டு : மதவாதி்களின் சேட்டைகள் தாங்க முடியல வரவர .

நண்டு : ம்இம் ...

நொரண்டு : .இறைவனை நினைத்தலும், வாழ்த்துதலும் ,அவன் நெறி நின்றலும் செய்தார் வீடு
பெறுவர் எனகூறி
இன்று இளைய சமுதாயத்தை ஏமாற்றி அவர்களை மடையர்களாக்கி, மதவாதிகளாக்கி
கடைசியில் தீவிரவாதிகளாக்கி சமுதாயத்தை சீரழிக்கின்றனர் ....

நண்டு : இப்பொழுது மட்டுமல்ல எக்காலத்திலும் அவர்கள் அப்படித்தான் .

நொரண்டு :ஓ ..

நண்டு : அதற்குத்தான் வள்ளுவர்

'' பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். ''

என்ற குறளில் சூடு போடுகின்றார்

நொரண்டு :அப்படியா .

நண்டு : ஆம்


நொரண்டு : உன் கருத்துரை

நண்டு :


'' பொறிவாயில் ஐந்தவித்தான்
தான்
நீடுவாழ்வார்
என பொய் கூறாதீர்

ஒழுக்க நெறி நின்பவர்கள் தான் நீடுவாழ்வர் ''


நொரண்டு : பொருள் ..

நண்டு : நீ ஏற்கனவே மதவாதி்கள் கூற்றாக சொன்னதுதான் 'பொறிவாயில் ஐந்தவித்தான் '
என்பதற்கு விளக்கம்.

நொரண்டு :சுருக்க கூறு ..

நண்டு : ''கடவுள் வழியிலே நின்றவர்கள் நீடுவாழ்வார் என பொய் கூறாதீர் .''

நொரண்டு : அப்ப வள்ளுவர் ''பொய் கூறாதீர்கள் மதவாதி்களே '' என்கின்றார்

நண்டு : ஆம் . அதுமட்டுமல்லாமல் சமுதாயத்தை சீரழிக்காதீர்கள் என்றும் கூறுகின்றார் .


.

.

.

Saturday, January 9, 2010

ஆண்டவன் படைச்சான் எங்கிட்ட கொடுத்தான் ...



.


.



நொரண்டு :ஆண்டவன் படைச்சான் எங்கிட்ட கொடுத்தான் ...

நண்டு : என்ன , ரொம்ம குசியா இருக்க ...

நொரண்டு : ஆமாம்ப்பா ,ஆமாம் .கண்டகண்டத யோசிக்காம ஆண்டவன் கொடுத்ததை அனுபவிக்கலாமுனு பாட்டு பாடிக்கிட்டு ... பாட்டகேள் ,''ஆண்டவன் படைச்சான் எங்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜானு அனுப்பி வச்சான் ...என்ன அனுபவி ராஜானு அனுப்பி வச்சான் ...''
ஹக்...ஹக்...ஹா...

நண்டு : ம்...

நொரண்டு : இது 21ம் நூற்றாண்டு ,மனிதனை அனுபவிடானூ ஆண்டவன் அனைத்தையும் வாரி,வாரி அவவனுக்கு கொடுத்து அனுபவிக்கவே விட்டுவிட்ட யுகம் ....

நண்டு : ம்...ம்...

நொரண்டு :என்ன ,இதுக்கும் வள்ளுவர் ஏதாச்சும் சொல்லிருக்காரானு யோசிக்கிறையா ?

நண்டு : ம்...ம்...ம்...


நொரண்டு :என்ன சொல்ற ?

நண்டு :

'' இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. ''

இதுக்கு பொருள் தெரிஞ்சா நீ ...


நொரண்டு : இதுக்கு ...


நண்டு : யார் ,யாரு என்ன சொல்லிருக்காங்கனு ,அதான சொல்ல வர .

நொரண்டு :ம்..

நண்டு : பரிமேலழகர் உரையமட்டும் சொல்லு ?

நொரண்டு :

'' கடவுளுடைய கீர்த்தியை விரும்பினவரிடத்து நல்வினை தீவினை என்னும் இருவினைகளும் அடையா.''

நண்டு : மு.வ ....

நொரண்டு :இதா ,உனக்கு தெரியாதா , உன் கருத்துரைய கூறு.

நண்டு :


''இருள் சேரும் ,

இருவினையும் சேராது ,

இறைவன் கொடுத்த பொருளை சேர்த்தவன் என்ற புகழுடன் வாழ்பவரிடத்து .''


நொரண்டு : அப்படியா


நண்டு : இங்கு இறைவன் என்பது அரசையும் குறிக்கும் . சேர் என்பதில் அடைந்தவன் ,பெற்றவன் என்பதும் அடங்கும் .

நொரண்டு : ஜாலியா இருந்தேன் ....





.


வள்ளுவர் அறியப்படவேண்டிய உண்மைகள் -6




.


.



Friday, January 8, 2010

அரிஸ்டாடிலும் சமச்சீர் கல்வியும் வள்ளுவரும் .

.

.


நொரண்டு :

LYCEUM ,
LYCEUM ம்னு
எங்கண்ணன் சொல்லிக்கிட்டிருந்துச்சு .
அப்படினா என்னாப்பா ?


நண்டு: எங்க ?


நொரண்டு : எங்கநாத்தான் சொல்லுவியா ?


நண்டு:

சரி ,
அதுவா ,

ஏதென்சில அரிஸ்டாடில் நிறுவிய கலைக்கழகம் .


நொரண்டு :அப்படினா ...

நண்டு: எப்படிச்சொல்ல ...ம்....ம்...


நொரண்டு :அதுக்கு ஏன் இந்த இழு இழுக்கர ?


நண்டு:

அதுவா ,

''வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. ''

என்ற குறள் ஞாபகத்திற்கு வந்தது .
அதான் .


நொரண்டு :

இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம் .
நீ சொல்ற குறலுக்கு

பரிமேலழகர் அவர்கள் :

''கடவுளடிகளைச் சேர்ந்தவர்களுக்குப்
பிறவித் துன்பங்கள் இல்லை'' எனவும் ,

மு.வ அவர்கள்:

''விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின்
திருவடிகளைப் பொருந்தி
நினைக்கின்றவர்க்கு
எப்பொழுதும்
எவ்விடத்திலும் துன்பம் இல்லை '' எனவும்,

ஆ.வே.ரா.அவர்கள்:

''விருப்பும் வெறுப்பும் இல்லாத
இறைவன் நெறியில் வாழ்பவர்க்கு
எப்பொழுதும் துன்பம் இல்லை '' எனவும் ,
....

நண்டு:

நிப்பாட்டு ...
ம் ...
பரவாயில்லையே ...
நீயும் பல உரைகள படிக்க ஆரம்பிச்சிட்ட போல .
நல்லது .
இதயெல்லா ஏன் படிச்ச ?


நொரண்டு :

நீ என்ன சொல்லுகின்றாய்
என தெரிந்துகொள்ளத்தான் .


நண்டு: ஓ ,அப்படியா ..

நொரண்டு :

அதவிடு ,

உன் கருத்துரைய இப்ப சொல்லு .


நண்டு:

''போதிப்பதில் ,
பாகுபாடு இல்லாத
ஆசிரியரை பெற்ற மாணவர்களுக்கு
என்றும் இடும்பை இல்லை ''

நொரண்டு :நல்லா சொல்லு .

நண்டு:

அதாகப்பட்டது ,

தனது மாணக்கர்களிடம்
இவன் உயர்ந்தவன் ,
இவன் தாழ்ந்தவன் ,
இவன் பணக்காரன் ,
இவன் ஏழை ,
இவன் படிக்கின்றான் ,
இவன் படிக்கவில்லை -
என்ற இது போன்ற
எந்த ஒரு பாகுபாடுகளையும் பார்க்காது

அனைவருக்கும்
ஒரே மாதிரியாக ,
சரிநிகர் சமமாக ,
கல்வி கற்றுத்தரும்
ஆசிரியரைப்பொற்றவர்கள்

இடும்பை என்னும் கேட்டிற்கு ஆளாகார் ..

நொரண்டு :

அட ,
இது நம்ம

''சமச்சீர் கல்வியில்லையா '' ?

நண்டு:

ஆம் ,
அதுவும் அடங்கும் .


நொரண்டு :

ஓ ,
வள்ளுவர் அப்பயே செல்லிருக்காரு பாத்தியா.


நண்டு:

ஆம் ,
அது மட்டுமல்ல
அரிஸ்டாடிலும்
அத்தகைய ஒரு கலைக்கழகம் நிறுவி
மக்களுக்கு நல்லறிவு படைத்திருக்கின்றார் .

நொரண்டு : அது ...


நண்டு: அது தான் LYCEUM ம்


நொரண்டு :

ஓ......

நண்டு:


இடும்பை என்பதில்
இவனெல்லாம் ?,
யார்ரா சொல்லிக்கொடுத்தா ?,
நீயெல்லாம் படிச்சவன்? ,
யாரா உனக்கு வாத்தியார் ?,
எங்க படிச்ச ?,
படிச்சவனா இருந்தா இப்படி செய்வானா ?,
வெளிய சொல்லாத படிப்புக்கே கோவலம்? .
ஏய்யா படிப்ப கோவலப்படுத்திரிங்க ?,
உங்கள மாதிரி படிச்சவனால தான்
உலகமே கெட்டுப்போச்சு ? ,
என்பதுவும் இன்ன பிறவும் அடங்கும் .


நொரண்டு :

ஓ......ஓ....ஓ ....


.....

வள்ளுவர்
அறியப்படவேண்டியஉண்மைகள் -6.

தொடரும் ...


.


.

.

.

.

.


.

Thursday, January 7, 2010

கஞ்சன் பெரியாரும் 1000 பொற்காசுகளும்

.


நொரண்டு :

கஞ்சன் பெரியார்
உன் குறலுக்கு 1000 பொற்காசுகளும்...


நண்டு: என்ன உளர


நொரண்டு :

சொல்லவர்ரத சொல்லவிடு முதல

நண்டு: சரி சொல்லு .


நொரண்டு :

அட ,
தந்தைப்பெரியார்
இப்போ இருந்தார்னா
உன் குறலுரைகள்
பகுத்தறிவை
வளமைசெய்யுதுனு ...


நண்டு: வளமைசெய்யுதுனு ...


நொரண்டு :

அதான்
சொல்லறேன்ல
சொல்லவந்ததை
சொல்லவிடு முதல


நண்டு: சரி


நொரண்டு :

உனது
ஒவ்வொரு குறலுரைக்கும
1000 பொற்காசு்கள்
அறிவித்திருப்பார் .


நண்டு:

அது என்ன
கஞ்சன் பெரியார்


நொரண்டு :

அவரை அப்படித்தான்
அவரின் சீடர்கள் சிலர்
சொல்றாங்க .


நண்டு:

அப்படிப்பட்ட கஞ்சன்
எப்படி
1000 பொற்காசு்கள்
தருவாருனு சொல்ர


நொரண்டு :

மனிதனை
மனிதனாக்கும் பகுத்தறிவை ,
பகுத்தறிவுடன்
பரப்பும்
ஒவ்வொரு முயற்சிக்கும்
பெரியார்
தனது செல்வம் அனைத்தையும்
தாராளமகக் கொடுக்கக்கூடியவர் .
அதுமட்டுமல்ல
அவர் இருந்திருந்தால்
உனது உரையை தானே
தனது செலவில் பதித்து ,
தானே ஊர் ஊராக ,
வீதி வீதியாக
எடுத்துச்சென்று
இலவசமாக தந்திருப்பார் .
அப்படி
மனிதன்
பகுத்தறிவு பெறவேண்டும்
என்பதில்
அவ்வளவு
அளவுகடந்த அவா .


நண்டு:

எனக்கு சரியா செல்லு .


நொரண்டு :

பெரியார் புரிந்து கொள்ளப்படவேண்டிய
புதிர் .

நண்டு:

திருவள்ளுவர் மாதிரினு
சொல்லவர்ர


நொரண்டு :

ஆம் .

நண்டு:

நான் ஒன்னும்
பகுத்தறிவுக்கருத்துக்களை
பரப்பவில்லையே ,
திருவள்ளுவர்
என்ன எழுதினாரோ
அதத்தானே சொல்லரேன்

நொரண்டு :

அட ,நண்டு
திருக்குறளுக்கு
மாநாடு
நடத்தியவர் பெரியார் .
உன்னைப்பார்த்தா
என்ன சொல்லுவார்
தெரியுமா ?


நண்டு: என்ன சொல்லுவார் ?


நொரண்டு :

வாங்க நண்டு ,வாங்க ,
ரொம்ப நல்லது செஞ்ச ,
இத்தனை நாளா
இருந்த வெங்காயங்க
திருவள்ளுவரை
தப்பாவே சொல்லிப்புட்டானுங்க ,
திருவள்ளுவர் என்ன செய்வார் ,
நீ எழுது ,
நான் உன்
ஒவ்வொரு குறளுரைக்கும்
1000 பொற்காசு்க தரேன் .
தமிழனின் அடையாளத்தை
மறைக்கறதே
அவனுகளுக்கு வேலையாபோச்சு .
என்ன அநியாயம் ,
என்னாமா போட்டு
மறச்சுட்டானுக ....
இத நானே வெளியிட்டு
இலவசமா கொடுக்கலாமுனு
இருக்கேன் ...

அப்படினி சொல்லுவார்

நண்டு:

ஓ ,
மலர்மிசை ஏகினான் போல்

நொரண்டு :

அது என்ன
மலர்மிசை ஏகினான்

நண்டு:

''மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.''


நொரண்டு : கருத்து


நண்டு:

நல்ல ஆசிரியரை பொற்றவர்கள்
உலகம் போற்ற
நீடுவாழ்வர் .

நொரண்டு : புரியல

நண்டு:

உனக்கு எப்பத்தான் ,
எதுதான்
புரிஞ்சிருக்கு .


நொரண்டு :

சரி ,
புரியும் படி சொல்லு.


நண்டு:

மலர்கள் தங்களின் மணத்தினை
எவ்வாறு மிச்சம் மீதி வைக்காமல்,
அதில் ஒளிவு எதுவும் இல்லாமல் ,
அப்படியே பரப்புகின்றதே
அதைப்போல
தான் கற்றது அனைத்தையும்
கற்றுத்தருபவனை .
அந்த நல்ல ஆசிரியனை
''மலர்மிசை ஏகினான் ''என்றார் .
ன்- குணத்தினால் வந்தது.
.

''மாணடி சேர்ந்தார்''
அப்படிப்பட்ட
மாண்புமிகு நல்ல ஆசிரியரிடம்
மாணவராக சேர்ந்தவர் எனக்கொள்க .
ர்- கற்பதனால் வந்தது.

அடி-ஆசிரியர் .

''நிலமிசை ''
உலகம் முழுதும் புகழ் பரவி .

இப்ப புரிந்ததா ..


நொரண்டு :ஓ

நண்டு:

பெரியார்
ஒழிவு மறைவு அற்றவர் ''மலர்மிசை ஏகினான் ''

நொரண்டு :

சரிதான் ,
உண்மையில்
அவரிருந்தால்
1000 என்ன ...


நண்டு:

இதா
இந்த பில்டப்பு எதுக்கு .


நொரண்டு :

நான் எதுக்கு பில்டப்பு கொடுக்கனும் .

நண்டு:

பெரியாரை விட்டா
ஆளே யில்லையா?

நொரண்டு :

ஏன் ஆள் சேத்தர ,
நீ என்ன போருக்கா போர ...


.....

வள்ளுவர்
அறியப்படவேண்டியஉண்மைகள் -5.

தொடரும் ...


.


.

.

Wednesday, January 6, 2010

யார் சிறந்த சிந்தனையாளர் -பெரியாரா ? திருவள்ளுவரா ?

.

நொரண்டு :

யார்
சிறந்த சிந்தனையாளர் -
பெரியாரா ?
திருவள்ளுவரா ?

நண்டு: ஏன் கேட்கின்றாய் ?

நொரண்டு :
என் பிரண்டு கேக்கச்சென்னான் .

நண்டு:
அப்போ
உனக்குத் தேவையில்லாத பதிலுக்கான கேள்வியை கேட்கிற .

நொரண்டு : ம் ....

நண்டு:
இப்படி
தேவையில்லாதகேள்விகள்,
அதற்கு தேவையில்லாத பதில்கள் .
இதைவைத்தே ஓட்டும் கூட்டத்தில் இருப்பதில் உனக்கு மகிழ்ச்சி .
இப்படிப்பட்ட நிலைகளை
இன்று எங்கும் காண முடிகிறது. இது ஒரு வகையான மூடப்பழக்கமே .

நொரண்டு :
பதிலச்செல்லத்தெரியாதவனின் மேடை கோணலாக எடுத்துக்களாமா .

நண்டு:
அதப்பத்தி எனக்கு கவலையில்லை .

நொரண்டு :
சரி ,
நான் கேக்கரேன் , சிந்தனையாளர்னா
வரைமுறை எது ,என்ன ?

நண்டு:
அப்படி வரைமுறைப்படுத்த முடியாது .
இருந்தாலும் தோராயமாகச்சொல்ல்லாம் , ஒருவருடைய கருத்து
மக்களை நல்லவழியில்
கொண்டு சென்றதானால்
அவர் சிந்தனையாளர் .

நொரண்டு :
சரி ,
நான் கேக்கரேன் ,
உன் கருத்துப்படியே இப்ப சொல் யார்
சிறந்த சிந்தனையாளர்-
பெரியாரா ? திருவள்ளுவரா ?

நண்டு:
திருவள்ளுவர் எழுதிய குறள் ஒன்றை சொல்ரேன் கேள் .

நொரண்டு :ம் ...

நண்டு:
''கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். ''

நொரண்டு : சரி ,கருத்துரை

நண்டு:
கல்வி கற்றதனால் ஆகக்கூடிய பயன் எதுவாக இருக்குமெனில் .
அரசன் ,
ஆண்டவன் என தொழாமல் இருப்பதுவே .

நொரண்டு :
இன்னும் சரியாக சொல் .

நண்டு:
கல்வி சுயமரியாதையுடன் வாழ வழிவகுக்கும் படியாக இருக்கவேண்டும். இல்லையெனில்
கற்றதனால் பயன் எதுவும் இல்லை என்பது .

நொரண்டு :
இத திருவள்ளுவர் கி.பி.2500க்கு முன்னே செல்லிச்சென்றுள்ளார் .

நண்டு:
ஆம் ,
அதுவும்
இது 2வதா தொகுத்துள்ளனர் .

முதல் குறள்
எழுத்தையும் ,
இரண்டாவது குறள்
எழுத்தினால் வளரும் கல்வியையும் பற்றி கூறியதிலிருந்து
என்ன ஒரு அழகான திட்டமி்டல். என்னோ திருவள்ளுவரின் சமூக அக்கரை .

நொரண்டு :மதிக்கக்கூடியதே .

நண்டு:
இப்படிப்பட்ட குறளை
எனக்கு கொடுத்தவர்
தந்தை பெரியார் .


நொரண்டு :ஓ...

நண்டு:
இப்பொழுது
நீ சொல்
யார் சிறந்த சிந்தனையாளர்- பெரியாரா? திருவள்ளுவரா? .

நொரண்டு :ம் ....

நண்டு:
ஆனால் ஒன்று .
நான் இதனை
பயின்ற இடம் வேறு .

நொரண்டு :
குழப்பாத
பெரியார் பாசறையில் இல்லையா.
அங்க
இத சொல்லித்தரதில்லையா,
அப்புரம் எங்க கத்துக்கிட்ட .


.......

வள்ளுவர் -
அறியப்படவேண்டிய உண்மைகள்-4

...தொடரும் .


.

.


.


.


.

.

Tuesday, January 5, 2010

திருவள்ளுவர் சிந்தனையாளரெனில் ...

.


நோரண்டு :

திருவள்ளுவர் சிந்தனையாளரெனில்...

நண்டு :

என்ன எனில்
உலகில் தோன்றிய
முதல் சிந்தனையாளர்னு சொல் .

நோரண்டு :

சரி ,
உலகில் தோன்றிய
முதல் சிந்தனையாளரெனில் ...
திருக்குறளில் எனக்குள்ள சந்தேகம் என்னானா ?

நண்டு : என்ன ?

நோரண்டு : என்னானா ?

நண்டு : என்ன ?


நோரண்டு :

சரி ,

''அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. ''

கருத்தென்ன சொல் பாப்போம் ?


நண்டு :

ஆதி பகவனுக்கு
முன் தோன்றியது
அகரத்தை முதலாகக்கொண்ட
தமிழ் எழுத்துக்கள்.


நோரண்டு : புரியல ...

நண்டு :

இதிலிருந்து கடவுளுக்கு முன் எழுத்துக்கள் தோன்றியது என்கின்றார் .

நோரண்டு : புரியல ...


நண்டு :

மனிதன் தோன்றும் பொழுது கடவுள் தோன்றவில்லை . எழுத்துக்கள் தோன்றியபொழுதும் கடவுள்
தோன்றவில்லையடா மனிதா என்கின்றார் .


நோரண்டு :

இது யாருடைய உரை?.
உன் உரையா ?
நீ சொன்னப்புறம்
நான் படித்த
உரைகளில்
எதிலும் இப்படியில்லையோ .


நண்டு :

ஆம் ,எனது உரை தான் .

நீ என்னடானா ,
யாரோ எழுதிய உரையை வைத்து
ஒரு சிந்தனையாளனை ,
கவிஞனை
புரிந்துகொண்டேன் ,
எனக்கூறுவது
உனக்கே முட்டாதனமாக
தெரியவில்லையா.
உனக்குனு அறிவில்லையா ?.
நீ சிந்திக்கவே மாட்டாயா ?.
.

நோரண்டு:

அப்படியாக்கிவிட்டார்கள் எங்களை.

நண்டு :

யாரைக்குறை செல்கின்றாய் .
இப்பொழுது
உன்னால்
சிந்திக்க முடிகின்றது தானே .
ஏன் சிந்திக்க மாட்டேங்கர .

நோரண்டு :

நீ மட்டும் சொன்ன ..


நண்டு :

நான் என்ன சொன்னேன்...

நோரண்டு :

அதுக்கொல்லாம் காரணம் சிலருனூ ...

.......

வள்ளுவர் -அறியப்படவேண்டிய உண்மைகள் -3 ...தொடரும் .


.


.


.

.

.