.
நொரண்டு :
LYCEUM ,
LYCEUM ம்னு
எங்கண்ணன் சொல்லிக்கிட்டிருந்துச்சு .
அப்படினா என்னாப்பா ?
நண்டு: எங்க ?
நொரண்டு : எங்கநாத்தான் சொல்லுவியா ?
நண்டு:
சரி ,
அதுவா ,
ஏதென்சில அரிஸ்டாடில் நிறுவிய கலைக்கழகம் .
நொரண்டு :அப்படினா ...
நண்டு: எப்படிச்சொல்ல ...ம்....ம்...
நொரண்டு :அதுக்கு ஏன் இந்த இழு இழுக்கர ?
நண்டு:
அதுவா ,
''வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. ''
என்ற குறள் ஞாபகத்திற்கு வந்தது .
அதான் .
நொரண்டு :
இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம் .
நீ சொல்ற குறலுக்கு
பரிமேலழகர் அவர்கள் :
''கடவுளடிகளைச் சேர்ந்தவர்களுக்குப்
பிறவித் துன்பங்கள் இல்லை'' எனவும் ,
மு.வ அவர்கள்:
''விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின்
திருவடிகளைப் பொருந்தி
நினைக்கின்றவர்க்கு
எப்பொழுதும்
எவ்விடத்திலும் துன்பம் இல்லை '' எனவும்,
ஆ.வே.ரா.அவர்கள்:
''விருப்பும் வெறுப்பும் இல்லாத
இறைவன் நெறியில் வாழ்பவர்க்கு
எப்பொழுதும் துன்பம் இல்லை '' எனவும் ,
....
நண்டு:
நிப்பாட்டு ...
ம் ...
பரவாயில்லையே ...
நீயும் பல உரைகள படிக்க ஆரம்பிச்சிட்ட போல .
நல்லது .
இதயெல்லா ஏன் படிச்ச ?
நொரண்டு :
நீ என்ன சொல்லுகின்றாய்
என தெரிந்துகொள்ளத்தான் .
நண்டு: ஓ ,அப்படியா ..
நொரண்டு :
அதவிடு ,
உன் கருத்துரைய இப்ப சொல்லு .
நண்டு:
''போதிப்பதில் ,
பாகுபாடு இல்லாத
ஆசிரியரை பெற்ற மாணவர்களுக்கு
என்றும் இடும்பை இல்லை ''
நொரண்டு :நல்லா சொல்லு .
நண்டு:
அதாகப்பட்டது ,
தனது மாணக்கர்களிடம்
இவன் உயர்ந்தவன் ,
இவன் தாழ்ந்தவன் ,
இவன் பணக்காரன் ,
இவன் ஏழை ,
இவன் படிக்கின்றான் ,
இவன் படிக்கவில்லை -
என்ற இது போன்ற
எந்த ஒரு பாகுபாடுகளையும் பார்க்காது
அனைவருக்கும்
ஒரே மாதிரியாக ,
சரிநிகர் சமமாக ,
கல்வி கற்றுத்தரும்
ஆசிரியரைப்பொற்றவர்கள்
இடும்பை என்னும் கேட்டிற்கு ஆளாகார் ..
நொரண்டு :
அட ,
இது நம்ம
''சமச்சீர் கல்வியில்லையா '' ?
நண்டு:
ஆம் ,
அதுவும் அடங்கும் .
நொரண்டு :
ஓ ,
வள்ளுவர் அப்பயே செல்லிருக்காரு பாத்தியா.
நண்டு:
ஆம் ,
அது மட்டுமல்ல
அரிஸ்டாடிலும்
அத்தகைய ஒரு கலைக்கழகம் நிறுவி
மக்களுக்கு நல்லறிவு படைத்திருக்கின்றார் .
நொரண்டு : அது ...
நண்டு: அது தான் LYCEUM ம்
நொரண்டு :
ஓ......
நண்டு:
இடும்பை என்பதில்
இவனெல்லாம் ?,
யார்ரா சொல்லிக்கொடுத்தா ?,
நீயெல்லாம் படிச்சவன்? ,
யாரா உனக்கு வாத்தியார் ?,
எங்க படிச்ச ?,
படிச்சவனா இருந்தா இப்படி செய்வானா ?,
வெளிய சொல்லாத படிப்புக்கே கோவலம்? .
ஏய்யா படிப்ப கோவலப்படுத்திரிங்க ?,
உங்கள மாதிரி படிச்சவனால தான்
உலகமே கெட்டுப்போச்சு ? ,
என்பதுவும் இன்ன பிறவும் அடங்கும் .
நொரண்டு :
ஓ......ஓ....ஓ ....
.....
வள்ளுவர்
அறியப்படவேண்டியஉண்மைகள் -6.
தொடரும் ...
.
.
.
.
.
.
.