Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Wednesday, May 19, 2010

அவளின் இதயத்தில்...

.


.

நான் கடந்ததொலைவை
எவனோ எடுத்து
எனக்கிட்ட கட்டளை
யாருக்கோ சென்று
எனக்காக அளந்தஅளவில்
எவனோ உடைதைத்து
எனக்கான மீன்
யார் வலையிலோ
சிக்கி இருந்தாலும்
எனக்குப்பிடித்த ரோஜா
அவளின் இதயத்தில்


.

.


.

Saturday, May 15, 2010

என் கவிதை





.

கொக்கலிடும் குறலில்
சுவர்க்கோழியின் உருவம்
தெரிந்தது போன்று
வெழக்கமாத்துக்குச்சியின்
அடர்வில்
பீய்த்துக்கொண்டோடும்
நீச்சி போல
ஏதோ ஓர் உரு
ஏதோ ஓர் கருவை
நச்சரித்து
செல்லறித்துப்போன
சொற்களினூடே
உப்பிப்பெருகி
இணைந்த காரணம்
யோசிக்கின்ற
பல வரிகளின் ஊடாக
செல்கிறது
என் கவிதை .

.

.

Sunday, May 9, 2010

சிற்பங்களை என்ன செய்ய

.

.

.
என்ன செய்ய
என்
அன்பானவர்களே

அன்று
பாறைகளுடன்
வந்தீர்கள்
சிற்பங்களாக்கினேன்

இன்று
சிற்பங்களுடன்
அல்லவா
வருகின்றீர்கள்

வர்ணப்பூச்சில்
வாழப்பிழைக்காத
என்னிடம்

என்ன செய்ய
என்
அன்பானவர்களே

.


.

.
.

Friday, May 7, 2010

என் பிரியமானவர்களே

.

.


.


அடைகாக்கப்படயென
அடைகாக்கப்பட
வந்தவன் நான்.
அடைகாக்காமல்
என்னருகில்
ஏதேதோ வெளித்தள்ளி
உருமாற்றுகின்றீர்கள் .
எங்கனம்
அடைகாக்கப் போகின்றீர்கள் ?
சுவாசம் மட்டும் சுவாசமாய்
சுவாசிக்கும் பொருள் சூனியமாய்
உடலும் உயிரும்
மிதவை ஒலிஒளியாய்
குரல் தீனமாய்
ஓட்டிற்குள் அடையாய்
நான்.
அடைகாக்காவிட்டாலும் பரவாயில்லை
என் பிரியமானவர்களே
ஓட்டை உடைக்கும்
மந்திரம் மட்டும் சொல்லிக்கொடுங்கள்
முட்டையிட வைக்கும் வேலை
எனக்களிக்கப்பட்டுள்ளது .


.


.


.

.

Tuesday, May 4, 2010

என் மீதி மிச்சம் .

.

.


கவிதை ரசிக்கும்
உள்ளத்திற்கே
காதல் தெரியும்
என்பான் எஸ்ரா .
கவிதை வாசித்தேன்
என்னுள் குவிந்து
விரித்துவிட்டாள்
மச்சக்காரி
என் மிச்சக்காதலுடன்.
காதல் தீர்ந்து நானும்
காணாத தூரத்தில் அவளும் .
சன்னலை மூடி
கவிதை யெழுதி
கண்டுகொள்கின்றேன்
மீண்டும்
என் மீதி மிச்சத்தை .


.

.


.

.

Monday, May 3, 2010

எனது எட்டர்பிளஸ் காதலியே .

.

.

.
நீ விழித்திருக்கும்
ஒவ்வோரு கணமும்
என் இமைகள்
உனக்காக
சாமரம் வீசும்.
நீ உறங்கும்
ஒவ்வோரு கணமும்
என் விழிகள்
உந்தன் கனவே நானாக
கனவு காணும்.
உறங்காமல் துடிக்கிறது
என் கண்கள்
என்ன செய்தாய்
வணக்கத்திற்குறிய
எனது எட்டர்பிளஸ்
காதலியே .


.


.

.

Sunday, May 2, 2010

வாழ்க்கை




















.

.


உள்ளே வெளியே
உள்ளே வெளியே
வெளியே விழுந்தும்
உள்ளே எழும் நினைவில்
மீண்டும் மீண்டும்
உள்ளே வெளியே
உள்ளே வெளியே

.


.

.

Tuesday, April 27, 2010

கோடை மழலை

.

.

பட்டுப்பூச்சியாய்
மணம் வீசும்
மலர்க்கூட்டங்களூடே
நறுமணத்தை நுகர்ந்த படி
காற்றைக்கிழித்து
வெண் பனி மலையில்
இதமாக பயணிக்கின்றேன்
எனக்கான உணவை
தயாரிக்க
எனது அம்மாய்
தனது இறகினை அசைத்தபடி
விடுமுறை முழுதும்
வீடு திரும்பும் வரை .

.


.

.

.

.

Saturday, April 17, 2010

ஓர் இனத்தின் தீர்வென்பது


.


.

.



அழித்தொழிக்கும்
எண்ணத்தை
அழித்தொழிக்கும்
பதரனைத்தும்
விதையாகும்
விதையில்லா
வீழ் நிலத்திலும்
நிறம் மாறி
ஒலி மாறி
இடம் மாறி
வேறுவேறாகிலும்
இனமானம்
மீதாகும்
வாழ்வாதாரம்
மொழியாட்ட
நிறவாட்ட
போராட்ட
போர் முனையாட்ட
வெற்றியுடன்
அனைத்தும்
அனைத்தும்
மனித நேயமாய்
ஓர் இனத்தின் தீர்வென்பது .

.



.



.

.

.

Friday, March 26, 2010

புலிகளாவோம் .



.



புழுக்கை புல்லுயிரியாய்
நூற்றாண்டு நூற்றாண்டாய்
நாமனைவரும்
சாதியால்
மதத்தால்
மந்தை மந்தையாய்
புல்லுருவி
ஏய்ப்பான்களின்
மேய்ப்பு ஆடுகளாய்.
புலிகள்
பசித்தாலும்
புல்லைத்தின்னாதாம்
புற்களை மட்டு்ம்
புசித்து வந்ததால்
புரியவில்லை
இதுவரை.
புல்லைத் தவிர்ப்போம்
புலிகளாவோம்
இனி
மந்தை மந்தையாய்
புழுக்கை ஆடுகளாய்
அல்ல
பகுத்தறிவுபுலிகளாக
ஒன்று சேர்வோம்.


.




.



.

.

Tuesday, March 9, 2010

நகரிய பயணம்

.


.

சத்திர உக்கிரத்தில் நட்சத்திர நாட்டியம்

சிறுசும் பெரிசுமாய் எதிர்மறையாய்

தெரித்தும் தெரியாமலும் தெரிய வைத்தும்

கூடவரும் முன் பின் கை நடுக்கத்தில்

உரசுமுன் மின்னல் மூளையில்

மழை முகத்தில் உடல் சிலிர்ப்பு.

பாடும் பொருள் தெரியாத பாம்பு

ஆட்டியின் காலசைவை நோக்கி

ஹெலிகாப்டருக்கு கை காட்டும்

எண்ணம் விரலில் சிக்கி.

நிற்பது பிரோ லெட்சுமி .. இரு கதவிடுக்கில்

திறந்து மூடப்பட்ட மூச்சுத் திணறல்

நேர்ந்துவிட்ட நிகழ்வுகள் சில இதையத்தில்

தடக் தடக் தடைகளின் மத்தியில்

அழுத்தி அழுத்தி உயிர் கொடுக்கும் மனம்

எரிமலை சிதறலூடே தகிக்கும் கண்கள்

கத்தும் பேய் கூவும் மனம்

கடிக்கப்பட்டு தடித்து குறையும் குரல்

ஆண்டனா பிம்பங்கள் ஏரியல்

அரட்டல்கள் அங்குமிங்கும் ஓடும்

கருவின் வளர்ச்சி பல ஓட்டத்தில் .

தொங்க, தொங்கி கொண்டிருக்கும்

மனித உறுப்புகள் கழற்றி வைக்கப்பட்ட

பிரிக்கப்பட்ட மூல , சேர்ம தொகுப்புகள்.

தெரிந்த முகங்கண்டு தெரிக்கும் புன்னகை.

கண் பார்த்து கை அசைக்கும் ஜாடைமொழி.

ஊடே ஏகும் கரிமச் சேர்க்கையின் பயணம் .

சூரிய முகத்தில் மஞ்சளுக்குள் கருப்பு

காக்கியின் கவனத்தில் கதவை தொடும்வரை

முன்னே பார்த்து பின்னே விடும்

கரிமச் சேர்மத்துடன் என் பயணம்.


.

.


.



Friday, March 5, 2010

மலர் படுக்கை

விரிந்த காரணத்திற்காக
எங்கும் சிதைக்கப்படும்
வதைபடும் வாழ்க்கையிலும்
எப்படி முடிகிறது
இவற்றால்
அழகாக
மணமாக .
இருப்பிடம்
மறந்த பிரஞ்ஞையில்
சிரித்தபடி
மலர் படுக்கை
மண்மீது .


.


.
.

Tuesday, March 2, 2010

நான் ஏன் கவிதை எழுதுகின்றேன் ?

.



.


நான் ஏன்
கவிதை எழுதுகின்றேன் ?
நான் ஏன்
கவிதை எழுதுகின்றேன் ?

குருதியில் துடிக்கும்
இனமானத்திற்கு
தோள் கொடுக்க

வீழ்த்த துடிக்கும்
வீணர்களின்
வாயடைக்க

ஊருசெய்யும்
மரப்பதரை
உணர்ச்சியுட்ட

காயம்பட்ட
கண்ணிமைகளுக்கு
களிம்பாக

உதிர்ந்த
உயர் வித்துகளுக்கு
உரமாக

வீழா இனம்
மீளாத்துயர்
துடைத்தெறிய.


நான் ஏன்
கவிதை எழுதுகின்றேன் ?
நான் ஏன்
கவிதை எழுதுகின்றேன் ?

இது நமக்கான
எழுத்தன்று
நம் எழுத்து

இது நமக்கான
கண்ணீரன்று
நம் கண்ணீர்

இது நமக்கான
மொழியன்று
நம் மொழி

இது நமக்கான
இனமன்று
நம் இனம்...

என
எழுற்சியூட்ட .

நான் ஏன்
கவிதை எழுதுகின்றேன் ?
நான் ஏன்
கவிதை எழுதுகின்றேன் ?

...

.


.

இக்கவிதை ஞாயிறு 4 ஜனவரி 2009 ல் எழுதப்பட்டது .
.

.


.


.


.

Monday, March 1, 2010

எனக்கொரு இசைக்கருவி கண்டுபிடித்து தாருங்கள்



.

ஓவியன் நான்
வரையமுடியா
வேதனைகள் அவை.


கவிஞன் நான்
எழுதமுடியா
வலிகள் அவை.


பாடகன் நான்
பாடமுடியா
கண்ணீர்நதிகள் அவை.


எனக்கொரு இசைக்கருவி
கண்டுபிடித்து தாருங்கள்
மீட்பு குறிப்புடன்
பாணனாகி நான்
என் இன அவலம் அழ.

.

.


.

Saturday, February 20, 2010

தவளைகள் உறங்கா மாரிக்காலம்



.

.


.

எதையோ வெளித்தள்ள

வெளித்தள்ளி வெடிக்கும்

ஏக்கப்பெருமுச்சு

ஊர்ந்து செல்லும் தூரம் கடந்த

நீர்மப்பெருக்கம்

எழுப்பிவிடும் மரணபீதி

எல்லை நீண்டு வரம்புதெரியா

நாக்குசுருதி

எக்களிக்கும்

மாரிக்கால

வதனசுடு

பிய்த்துக்கொண்டோடும்

சொட்டுச்சொட்டாய்

சூத்திரம்

தவிர்த்த

இயக்கமாய்

நெளிநெளியாய் சுருள்சுருளாய்

நீட்டமாய்

கோணலாய்

திடீர் திடீரென மாறிச்செல்லும்

ஒளியினுடே

சுற்றித்திரியும்

தவளைகள் உறங்கா மாரிக்காலம்.

.


.


.

.

Friday, February 19, 2010

தண்டவாளம் கடக்கும் கண்கள்



.

தினம் தினம்
வருகி்றது
தினம் தினம்
செல்கி்றது
யாரும் யாரையும்
தவறுவதில்லை
ஒருவரை ஒருவர்
கடக்க .
தெரிந்தோ
தெரியாமலோ
கையில் ஃப்ரஷுடன்
படியில் அமர்ந்து
பேப்பர் படித்து
எதையோ தேடி
சன்னல் பார்த்து
கையத்து
சிரித்து
கைகளை நீட்டிய
முகங்கள்
முகங்களாக
அப்பிக்கொள்கிறது
மனக்குகையில்
கடந்து போகையில்.
ஏனே
இரயிலில் போக
முடியவில்லை
இன்றுவரை
என்றாவது ஒருநாள்
என்ற நினைவுடன்
அனுதினம்
தண்டவாளம்
கடக்கும் கண்கள் .

.

(இரயில், தண்டவாளம் -ஒரு குறியிடு மட்டுமே)

.

..


.

Thursday, February 18, 2010

ஈழக்கவிதை -1 .புகைப்பட மழலை


.

.

அம்மா அரவணைப்பில்

அப்பா அன்பில்

அம்மாயி செல்லத்தில்

உடையில்லா

துள்ளிய மனத்தில்

கைகால்களை ஆட்டி

ஆர்பாரித்த

ஆர்ப்பாட்டத்தில்

புகைப்படமான

மழலை

எங்கோ தொலைந்து விட்டது

எங்கு தேடியும் கிடைக்கவில்லை

வீடு மாற்றியபொழுது

மழலைப்புகைப்படம்

ஒன்று.


( அம்மாயி = அம்மாவின் அம்மா ,
வீடு =குடியிருப்பு )

.


.


.
.

Wednesday, February 17, 2010

தேவகுமாரனை நோக்கி

.


.


முன்னோர்களின்

வடு உடல்

நிறமாய்

நீங்காத பாவமாய்

கண்கள் முழுதும்

காட்சி கலக்கமாய்

பளிங்கு செவியாய்

மடையனாய்

மூடனாய்

முட்டாளாய்

சமுதாயத்தில்

சமூகத்தில்

சாதியால்

எப்பொழுதும் எப்பொழுதும்

உடல் வெம்பி

நாக்கு உள் இழுத்து

மொழிபேசா வாய்

வெளிச்சொல்லா

பயத்தில்

தடிமனாய்

அச்சத்தில்

போதை மிதந்து

பிதற்றி

ஓலை சுவற்றுக்குள்

பெண் மீதேறி

நித்தம் நித்தம்

தவம் தவம்

தேவகுமாரனை நோக்கி.

.


.


.

Tuesday, February 16, 2010

எதிர்மறை எண்ணங்கள்

.

.


எண்ணிய எண்ணங்கள்
எதிர்மறையாய் வரும்பொழுது
எதிர்மறையில் சில எண்ணங்கள்
எழாமல் இருப்பதில்லை.

வளைந்து வளைந்து
பாதை சென்றாலும்
பாதை பாதையினின்று
வளைந்து சென்றதில்லை

வளமான பாதையில்
சுழல நினைத்தாலும்
சுழலும் பாதையில் சுகம்கண்டதால்
வளமான வாழ்விற்கு வக்கில்லை

எப்பொழுதும் எல்லோர்க்கும்
எப்பொழுதும் எளிதில் வாய்ப்பதில்லை
எப்பொழுதென்பது என்றாலும்
எப்பொழுதும் எப்போதும் இங்கில்லை

சோக ரேகை
மனதினில் தோன்ற
சோம்பல் ரேகை
முகத்தில் தொலைவதில்லை

மறக்கும் எண்ணம்
நினைவினில் தோன்ற
நினைக்கும் எண்ணம்
மறப்பதை தொலைப்பதில்லை

எதற்காகவோ வாழ்வு என்றாலும்
எதற்காக வென்பதே
நமக்காகும் போது
நமக்கா வென்பது ஏதும் இங்கில்லை

இல்லை யென்பது
இங்கில்லை யென்றாலும்
இல்லை இல்லாமல்
இங்கொன்றும் இல்லை

எண்ணிய எண்ணங்கள்
எதிர்மறை யென்றாலும்
எதிர்மறை எண்ணங்கள்
எண்ணாமல் முடிவதில்லை.

.

.

.

.

Monday, February 15, 2010

இடைவெளிப்பயணம்

.


ஒன்றிலிருந்து

ஒன்றிற்குத்தாவும்

நிதர்சனமான நேரங்களில்

கடக்குமுன்

ஒளிந்திருந்த

மவுனங்களின் தூரத்தில்

திசைமாறிப்போகும்

வெளிப்பாடு

எங்கு என்று தெரியாமல்

தட்டுத்தடுமாறி

மீண்டும் மீண்டும்

தோன்றும்

இடைவெளிப்பயணம்

நிலைமாற்றத்தில்

ஒன்றும் தெரியாமல்

தெரிந்ததிலும் ஒன்றுமில்லாமல்

வடிவம் மாறி உருவம் மாறி

சமன்பாட்டிற் கடங்கா

முடிவும் முதலும்

முடிவிலியாய்

.


.


.


.