Tuesday, March 9, 2010

நகரிய பயணம்

.


.

சத்திர உக்கிரத்தில் நட்சத்திர நாட்டியம்

சிறுசும் பெரிசுமாய் எதிர்மறையாய்

தெரித்தும் தெரியாமலும் தெரிய வைத்தும்

கூடவரும் முன் பின் கை நடுக்கத்தில்

உரசுமுன் மின்னல் மூளையில்

மழை முகத்தில் உடல் சிலிர்ப்பு.

பாடும் பொருள் தெரியாத பாம்பு

ஆட்டியின் காலசைவை நோக்கி

ஹெலிகாப்டருக்கு கை காட்டும்

எண்ணம் விரலில் சிக்கி.

நிற்பது பிரோ லெட்சுமி .. இரு கதவிடுக்கில்

திறந்து மூடப்பட்ட மூச்சுத் திணறல்

நேர்ந்துவிட்ட நிகழ்வுகள் சில இதையத்தில்

தடக் தடக் தடைகளின் மத்தியில்

அழுத்தி அழுத்தி உயிர் கொடுக்கும் மனம்

எரிமலை சிதறலூடே தகிக்கும் கண்கள்

கத்தும் பேய் கூவும் மனம்

கடிக்கப்பட்டு தடித்து குறையும் குரல்

ஆண்டனா பிம்பங்கள் ஏரியல்

அரட்டல்கள் அங்குமிங்கும் ஓடும்

கருவின் வளர்ச்சி பல ஓட்டத்தில் .

தொங்க, தொங்கி கொண்டிருக்கும்

மனித உறுப்புகள் கழற்றி வைக்கப்பட்ட

பிரிக்கப்பட்ட மூல , சேர்ம தொகுப்புகள்.

தெரிந்த முகங்கண்டு தெரிக்கும் புன்னகை.

கண் பார்த்து கை அசைக்கும் ஜாடைமொழி.

ஊடே ஏகும் கரிமச் சேர்க்கையின் பயணம் .

சூரிய முகத்தில் மஞ்சளுக்குள் கருப்பு

காக்கியின் கவனத்தில் கதவை தொடும்வரை

முன்னே பார்த்து பின்னே விடும்

கரிமச் சேர்மத்துடன் என் பயணம்.


.

.


.