.
ஆரம்பத்தில் நோய் என்பது கடவுளின் சாபம் அல்லது தண்டனை அல்லது கோபம் என்றே எண்ணப்பட்டது .
சிலர் நோயிற்கு காரணம் பிசாசுகள் என்றும் மாந்தீரிகர்கள் நோயை போக்குவார்கள் என்றும் நம்பினர் ரோமானியர்கள் மருத்துவத்தை விட மாந்தீரிகத்தை அதிகம் நம்பினர்.
மேலை நாடுகளில் "பண்டோரா" எனும் பெட்டியை திறந்ததிலிருந்து தான் உலகில் நோய்கள் ஏற்பட்டதாக மேலைநாட்டுப் புராணங்கள் கூறின .அந்த பெட்டியை திறப்பதற்கு முன் உலகில் நோய்களே கிடையாதாம் .
பிளேக்நோய் இங்குபஸ் ,சுக்குபஸ் என்ற வேதாளங்களின் செயலாலே ஏற்படுவதாக பிரானஸ் நாட்டினர் கருதினர் .
இராஜ தரிசனம் நோயைத்தீர்க்கும் என்றும் நம்பினர். அதற்காக மக்கள் பல காததுரம் கடந்து பல மணிநேரம் காத்திருந்து இராஜ தரிசனம் பெற்று சென்றுள்ளனர் .இதன் வளர்ச்சியாக சாமி தரிசனம் ,பின் சாமியை தரிசித்த இடத்திலிருந்து சாமியார் தரிசனம் என உருமாறி இன்று இதில் மக்கள் அதிகம் நிலைத்துவிட்டனர் .ஆனால் அறிவியல்பூர்வமான உண்மை என்னவென்றால், எந்த ஒரு சாமியாராலும் மற்றும் அவர் கற்றுத்தரும் எந்த ஒன்றாலும் , வேறு எதிலாலும் எந்த ஒரு நோய் கிருமியின் எந்த ஒரு அணுவையும் ஒரு துளிகூட அசைக்கமுடியாது என்பதுவே.
இப்ப வெயில் சீசன் ஆரம்பித்துவிட்டது.கடந்த ஆண்டைவிட இந்த வருடம் வெயில் அதிகம் .வெய்யில் காலத்திற்கு சில வியாதிகள் வருவது இயற்கை .
அதைத் தவிர்க்க வெயிலில் அலைவதை முதலில் தவிர்க்கவும் .நீர்ச்சத்துள்ள பழவகைகளை அதிகம் சாப்பிடவும் .தண்ணீர் அதிகம் அருந்தவும் .இந்த சீசனில் விளையும் பழங்களை அதிகம் உண்ணவும் .தினமும் 2 தடவை குளிக்கவும் .
ஆனால், இதைவிடுத்து நம் நாட்டில் ஒருவர் மீது மாரியம்மன் கோபம் கொண்டுவிட்டால் ஆத்தா உடம்பில் ஏறிவிடும் என்றும் அதனால் இது போன்ற நோய்கள் வருகின்றது என்றும் நம்புகின்றனர் .
இவ்வாறு நோய்கள் பற்றிய நம்மவர்கள் நம்பிக்கைகள் பல.அனைத்தும் மூட நம்பிக்கைகளே
.எனவே,உண்மையை அறிவீர் .உடல் சுகத்துடன் வாழ்வீர் .
.
.
.
.
.