Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Friday, April 30, 2010

குழந்தைகள் உலகம் ! ?

.

.

குழந்தைகளுக்கு விடுமுறை .
ஒரு மாதம் பெரிய தொந்தரவு.
லீவே விடக்கூடாது .
இப்படித்தான் அனேக பெற்றோர்கள் நினைக்கின்றோம் .

குழந்தைகளுக்கு விடுமுறைவிடுவது நமக்கெள்ளாம் பெரிய அவஸ்தையாகவே படுகிறது . ஆனால், குழந்தைகளுக்கு அது தான் ஜாலி .பள்ளிக்கூடம் ஒரு சிறைச்சாலையே, உண்மையில் அனைத்துக்குழந்தைகளும் அப்படித்தான் நினைக்கின்றனர் .அப்படி நினைக்காத குழந்தை ஏதோ ஒரு மனேநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கவேண்டும் .


குழந்தைகளை நன்றாக ஆராய்ந்ததில் பிறந்தது முதல் 2 வருடங்கள் குழந்தைகள் தங்களின் பார்வையையும், புரிதலையும்செலுமைப்படுத்திக்கொள்கின்றன
(இக்காலகட்டத்தில் தான் பெற்றோர்களின் பங்கு மற்றும் செயல் மிகவும் முக்கியமாக அதன்அறிவுத்தளத்தினை ஆக்கிரமிக்கிறது ).2- லிருந்து 5 வயது வரை குழந்தைகள்மேலும் பார்வையையும் ,புரிதலையும் செரிவுபடுத்துகின்றன ,
சூழலுடன் தொடர்பினை ஏற்படுத்தும் அளவிற்கு அதன் செயல்பாடு வளர்கிறது .

குழந்தைகள் 5 வயதிற்குப்பின் ,5 வயதிற்குள் தன்னுள் ஏற்றுக்கொண்ட விசயத்தில்பயணித்து 12 வது வயதில் அதனை முன்னிருத்தி கால் வைத்து ,தொடர்ந்து ,பிறகு16 வது வயதினின்று அதன்வழி சமூகத்திற்குள்நுழைகின்றனர்
அதுவரை அவர்கள் சுதந்திரமானவர்களாகவே உணர்கின்றனர்
இதுவே ,குழந்தைகள் தங்களின் வாழ்க்கை பயணத்தினை ஆரம்பிக்கும் பாதையாக உள்ளது .

எனவே ,
இக்காலகட்டத்தில் எப்போதும் குழந்தைகளிடம் பயம் காட்டாதீர்கள் . அவர்கள் அச்சப்பட்ட மனேநிலையில் வளரஆரம்பித்து விடுவார்கள் . குழந்தைகளிடம் வீரம் பற்றியும் பேசாதீர்கள், உன்னால் முடியும் போன்ற அவர்களால் முடியாது என்ற விசயங்களில் பொய் கூறாதீர்கள் .அது அவர்களிடத்தில் தாழ்வு
எண்ணத்தை ஏற்படுத்திவிடும் .குழந்தைகளிடம் உங்களின் சாகசங்களையோ குறைகளையோ கூறாதீர்கள் . அது அவர்களை தவறான பாதைக்கு இட்டுச்செல்லும் .குடும்ப விவகாரங்களையோ, கஷ்டநஷ்டங்களையோ அவர்களுக்கு தெரியுமாறு வைத்துக்கொள்ளாதீர்கள் .நமது கஷ்டம் குழந்தைகள் உணர்ந்தால் தான் நம்போல் ஆகாமல் சிறப்பானவராக வருவர் என்பது தப்பெண்ணம்.

குழந்தைகளுக்கொன்று ஒரு உலகம் உண்டு என்று எண்ணாதீர்கள் .அது அவர்களை பெரியவர்களுக்கொன்று ஒரு உலகம் உண்டு என்று எண்ணி இது பெரியவங்க சமாச்சாரம் என்ற அச்சத்துடன் வளரஆரம்பித்து விடுவார்கள் (நாமெல்லாம் அப்படி வளர்ந்தவர்கள் என்பதால் தான் செக்ஸ் விழிப்புணர்வு இல்லாமல் வளரஆரம்பித்து அச்சப்பட்டு, அவஸ்தைப்பட்டதை ஒவ்வொருவரின் கடந்த காலமும் கூறும்).அவர்களை எதார்த்தமாக வளர விடுங்கள் . அவர்களை அவர்கள் போக்கில் விடுங்கள் .அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மிகச்சரியான பதிலையே கூறுங்கள் .தெரியவில்லையெனில் நூலகத்திற்கு சென்று
தெரிந்துகொள்ளலாம் என்று கூறுங்கள். அரைகுறைபதிலை கூறாதீர்கள் .உங்களின் எதுவையும் (கருத்து, கொள்கை, இப்படி..) அவர்களுக்குப்புகுத்தாதீர்.

அவர்களின் கண்களில்படும் எல்லாம் அவர்களுக்கு புதிர்தான் .விடைகளை அவிழ்த்துவிடுவதுதான் நாம் செய்யவேண்டிய வேலை .கற்றுக்கொள்வது அவர்களின்இயல்பான செயல் .
கற்றுக்கொள்ளவேண்டும் என நாம் பரிதவிக்கக்கூடாது .வீண்.

ஒன்றைமட்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் .
குழந்தைகள்பிறக்கும்பொழுதோபலவிசயங்கள்அவர்களுக்குஆணையிடப்பட்டிருக்கின்றது .

அது
"சுவாசி உடல் இயங்கும் ".
"உண் உடல் வளரும் ".
"வளர உணவு தேவை ".
இதுபோன்று ...பல...

இதில் "வளர உணவு தேவை " என்பதுதான் தற்பொழுது நமது குழந்தைகளின் குறும்புகளுக்கும் ,சேட்டைகளுக்கும் காரணம் .மனிதன் ஆரம்பத்தில் உணவிற்காக அலைந்து, திரிந்து, ஓடி, கண்டுபிடித்து ,போராடி பொற்று, பின் உண்டு ,மகிழ்ந்து, அயர்ந்தான் .காலப்போக்கில் உணவினை சேமித்து வைத்து உண்பதால்-அலைந்து ,திரிந்து ,ஓடி, கண்டுபிடித்து,போராடி பொற்று, பின் உண்ணாமல் இருட்டடிப்பு செய்யப்பட்ட கட்டளைகளின் வெளிப்பாடுதான்
குழந்தைகள் செய்யும் அனைத்தும் .

அதனால் குழந்தைகள் குறும்பு செய்கின்றன என கோபம் கொள்ளாமல் அவர்களை அப்படியே அவர்களின் போக்கில் விட்டுவிடுங்கள்.அப்படிவிடும் பட்சத்தில் அவர்களுக்கு இடப்பட்ட கட்டளை தீர்க்கப்பட்டு அவர்களை அடுத்த
நிலைக்கு தானே உந்திச்செல்லும். இல்லாதுபோனால் நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் அன்னியப்பட்டேபோவீர்கள் .

குறும்பு செய்கின்றது என்பதற்காக டான்ஸ் கிளாஸ், மியூசிக் கிளாஸ், நீச்சல் என
உங்களிடமிருந்து அவர்களை பிரித்தீர்களெனில் அவர்கள் இருட்டடிப்பு செய்யப்பட்ட கட்டளைகளின் வெளிப்பாடினால் உங்களிடம் அந்நியமாக நடந்து கொள்வார்கள் .அதனால் பயனேதும் இல்லை .

ஆதலால் ,
குழந்தைகளிடம் மிகவும் கவனமாக இருங்கள் .
அவர்களின் வாழ்வை அவன்களே முடிவு செய்யட்டும் .
நீங்கள் மீறினால் ,அவர்களும் மீறுவார்கள் .ஜாக்கிரதை .
எனவே ,
குழந்தைகளை பாரமாக நினைக்காதீர்கள் .
அவர்களின் சேட்டைகளை அனுபவியுங்கள் .
அவர்களை உற்று கவனியுங்கள் .
அதிலுள்ள அறிவுப்பசியை கண்டுபிடியுங்கள் .
அதற்கு உதவுங்கள் .
''சுதந்திரமே அறிவு " -என முதலில் உணருங்கள் .
நாம்மில் அதிகப்பேர் இன்னும் குழந்தைகள் தான் . அப்படியிருக்க நம் குழந்தைகளை ஏன்
பெரியவர்களாக்க எண்ணுகின்றீர்கள் .

.


.


.


.

Saturday, April 24, 2010

இவர் தான் ...

இன்னைக்கு எவ்வளவோ வசதியான வாகனங்கள் ,
சாலை வசதிகள் இன்னும் பிற.
ஆனால் ,அன்று அப்படியில்லாத காலகட்டத்திலேயே
மக்கள் விழிப்புணர்வு பெற இவர்
சுற்றுப்பயணம் மொத்த நாட்கள் 8600 - 23 வருடம் 6 மாதம் 25 நாள் .
சுற்றுப்பயணம் செய்த மொத்ததூரம் 13,12,000கிலோமீட்டர்கள் .
பூமிய எத்தனை தடவை சுற்றலாம் தெரியுமா?.
சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் 10,700 .
சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டு சொற்பொழிவு ஆற்றிய நேரம் 21,400 மணிகள் .
இதை ஒலிநாடாவில் பதிவுசெய்து ஒலி பரப்பினால் ஒலிக்கும் நாட்கள் 2வருடம் 5மாதம்
11நாட்கள்(இரவு பகலாக) .
அதை இவர் தான் வாழ்ந்த 34,433 நாட்களில் செய்துள்ளார் .
அவர் தான் இவர் .
இவர் தான் பெரியார் .

.

.

.

Thursday, March 18, 2010

சாவுக்கு அஞ்சாத சிறுவர்கள்

.

''ஏனைய பலரையும் போல அவரும் சாவதற்காக இடுகாட்டுக்குப் போய்விட்டார் என்றா நினைக்கிறாய் ? சறுக்கூர்தியில் நாம் அவர் உடலை இழுத்துச் செல்ல வேண்டி வருமென தாமே புறப்பட்டு அங்கே சென்றுவிட்டார் என்கின்றாய் ? ..இல்லை, அம்மா,அதெல்லாம் இல்லை ! ''
''அதைப் பற்றிப் பேச வேண்டாம் .''
''திரும்பி வருவதாக வாக்களித்துச் சென்றிருக்கிறார் ...எனக்கு வெதுவெதுப்பாக இருக்கட்டுமென்று மேல் கோட்டை என் மேல் போர்த்துவிட்டுச் சென்றார்.
மெய்யாகவே நீ அப்படியா நினைக்கிறாய் ? ...இல்லை ,அம்மா,என்னை அவர் ஏமாற்ற மாட்டார் ! ''
''ஏமாற்ற மாட்டார் ,நீ பயப்படாதே .....அவருக்காக நாம் காத்திருப்போம் .நாம் உயிருடன் இருந்தாக வேண்டும் ,தெம்பு இழக்கக் கூடாது .நாம் சாகாமல் இருந்தாக வேண்டும் .அல்யோஷா,நாம் உயிரோடு இருக்கவேண்டுமென்று எத்தனையோ பேர் உயிரை விட்டிருக்கிறார்கள் ....உயிரோடு இருந்து பகைவனை முறியடித்தாக வேண்டும் .இது நமது கடமை .''

மாஸ்கோ ,முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்ட ''சாவுக்கு அஞ்சாத சிறுவர்கள் '' என்ற வீரச் சிறுவர்கள் கதைகள் அடங்கிய புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது மேற்கண்ட வரிகள் -பக்கம் 102.
இந்தப்புத்தகம் தான் என்வாழ்வில் நான்வாங்கிய முதல் புத்தகம்(காசு போட்டு) .பசுமையான அந்த நிகழ்வு என்னால் மறக்கமுடியாதது .மதுரை மாவட்டம் (இப்பொழுது தேனி மாவட்டம்) வத்திலக்குண்டிற்கும் பெரியகுளத்திற்கும் இடையில் அமைந்துள்ள தேவதானப்பட்டியில் இருக்கும் அரசினர் மேனிலைப்பள்ளியில் அப்பொழுது நான் 8 வகுப்பு படித்துக்கொண்டிருக்கின்றேன் 1980ல்.எங்கள் பள்ளியிலேயே ஏற்பாடு செய்திருந்த புத்தகக்கண்காட்சியில் மலர்ந்திருந்து என்னை இந்த புத்தகம் வரவேற்றது .4 ருபாய் 50 பைசா புத்தகம் 4 ருபாய் .கையில 2 ருபாய் தான் இருந்துச்சு ,புத்தகத்தை விட்டுவர மனசில்லை .அப்ப எங்கண்ணன் அதே ஸ்கூலில் தான் +1 படிச்சிட்டு இருந்திச்சு .2 ருபா வீட்டுக்கு வந்து தரேனு செல்லி கடன் வாங்கி வாங்கினேன் .ரொம்ப சந்தோசமா இருந்துச்சு அதிலிருந்த கதைகள் ,படங்கள் அப்பப்பா.

எங்கம்மாய் வீடு கோவை மாவட்டம் (இப்பொழுது ஈரொடு மாவட்டம்) ஈரொடு டூ மேட்டூர் ரோட்டில் உள்ள அம்மாபோட்டையிலிருந்து அந்தியூருக்கு செல்லும் வழியில் ,5வது கிலோமீட்டரில் உள்ள ஊஞ்சப்பாளையத்திலிருக்கும் மேற்காலத்தோட்டம் .அங்கு கோடை முழுவதும் நாங்க , எங்க பெரியம்மா மற்றும் சித்தி வீட்ல இருத்து எல்லோரும் வருடாவருடம் டெண்டு அடிப்பது வழக்கம்.எங்கப்பா தேவதானப்பட்டியிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மஞ்சளார் அணையில் வேலைபார்த்துவந்தார் .அங்கு தான் நாங்க ,நான் 10 வருப்பு படிக்கும் வரை குடியிருந்து வந்தோம் .வருசாவருசம் எங்க அப்பிச்சி பழனிக்கு வந்த முருகனுக்கு மொட்டையடுச்சுட்டு மஞ்சளார் டேம் வந்து எங்களை லீவிற்கு மேற்காலத்தோட்டத்துக்கு கூட்டீட்டுப் போகும்.அங்கு நாங்கள் ஆட்டம் பாட்டத்தினுடே இரவு உறக்கத்திற்கு முன் பல மணிநேரம் எங்க அப்பிச்சி ,மாமாக்களுடன் நாங்க படிச்சதை விவாதிப்போம் .அதோடு புதுப்புத்தகம் வாங்கிட்டுப்போய் .அங்கு படித்து பகிர்ந்துகொள்வோம்.இந்தப்புத்தகம் வாங்கிய வருடம் எங்க அப்பிச்சியின் வரவை எதிர்பார்த்து ஆவலாய் இருந்த கணங்கள் அப்பப்பா.

பதின்ம நினைவுகள் பற்றி தொடர் பதிவிட நண்பர் Starjan ( ஸ்டார்ஜன் ) அழைத்த பொழுது நான் முதலில் வாங்கிய இந்த புத்தகம் தான் ஞாபகத்திற்கு வந்தது .30 ஆண்டுகள் தாண்டிவிட்டதை அதைப்பார்த்த பிறகு தான் தெரிந்துகொண்டேன் .அதைப்பார்த்ததும் மீண்டும் ஒரு முறை படிப்பதேன்.எனக்கு பல விசயங்களை அது மீண்டும் புதிதாக கூறியது .இப்போதைய...சுழலில் அதில் உள்ள சில வரிகள் என்னை ஏதோ பிரண்டியது ...அப்படிப்பிரண்டியதில் தலையான வரி தான் மேலே உள்ள வரிகள் .
இது போன்று நாம்... நாம்... நமக்காக ...நமது மொழியில் ...எழுத வேண்டாமா ? ... என்று ?...என்று ?...
என்ற ஏக்கத்தினையும் விதைத்தது இது .


பதின்மப் பதிவு தொடரும் ...

தொடர் பதிவிட அழைத்த நண்பர் Starjan ( ஸ்டார்ஜன் ) அவர்களுக்கு மிக்க நன்றி .


.



.


.

இந்த 3 நாட்களும் ...நாம் ஒதுக்குவோம் ...

.
.

நம் வீட்டு வாசலில் ,ஜன்னல் கம்பியில்
பள்ளி மரக்கிளையில் கிரிச்சிட்டுப் பறந்த
சிட்டுக் குருவிகள் இப்போது எங்கே ?
நம் வீட்டு நாய் போல் நன்றியுடன்
நம் வளர்ப்புப் பூனை போல் பாசத்துடன்
நம் தோட்டத்துப் பசு போல அன்புடன்
நம் வாசலில் குதித்துக் குதித்துப் பறந்த
அந்தக் குண்டு அழகிகள் எங்கே?


நம் வீட்டுக் கூரையில் குடியிருந்த சிட்டுகள்
காங்கிரீட் காடுகளில் கூடுகட்ட இடமின்றி ...
நாம் வயல்களில் கொட்டிய நச்சு ரசாயனத்தில்
மண் புழுக்கள் சாக -இரையின்றி...
நம் கார் புகையின் மீதைல் நைட்ரைட்
பூச்சிகளைக் கொல்ல பட்டினி கிடந்து ...
செல்போன் டவரின் நுண்ணலையால்
முட்டைகள் மலடாக...இனக் கொலையாகி ...
காணாமல் போனதற்குக் கவலைப்பட்டோமா?


ஆறுமுகத் தாத்தா போல் அரிசி போட ஆளில்லை .
அவசர உலகத்தில் அன்புக்கு இடமில்லை ...

வீட்டுக் குருவியில் துவங்கட்டும் அன்பின் பாடம் .
பாரதி போல் தானியம் இரைத்து மகிழ்வோம் .
மரக்கிளையில் சட்டி கட்டி வாழ்விடம் தருவோம் .
மாடியில் தட்டில் நீர் வைத்து தாகம் தீர்ப்போம்.
நம் கண்ணாடி முன் மீண்டும் குருவிகள் பாட்ட்டும் .
குருவிகள் தினம் காலை வணக்கம் சொல்ல வரட்டும் .
குருவிகள் வாழ்த்த ...வாழ்வோம் ...மகிழ்வோம் .

விட்டு விடுதலையாகிப் பறப்போம்
அந்த சிட்டுக் குரிவியைப்போல ...


============

உலக சிட்டுக்குருவிகள் தினம் -மார்ச் 20

WORLD HOUSE SPARROWS DAY -MARCH 20


=========

உலக வன நாள் - மார்ச் 21


==========

உலக நீர் நாள் - மார்ச் 22

==========


இந்த மூன்று நாட்களும் ... நாம் ஒதுக்குவோம் ... இயற்கைக்காக


இந்த நாள் தொட்டு .....
நாம் ஒவ்வொருவரும் நம் வீட்டு சன்னலோரத்தில் அனுதினம் ஒரு பிடி தானியம்
பாசப்பறவைகளுக்காக வைப்போம் . அவைகளை உண்டு பறவைகள் பசியாரும்
மற்ற உயிரினங்களும் மகிழ்ந்து உண்ணும் .

அது போலவே ஒரு குடிநீர் தட்டு நம் வீட்டு மொட்டை மாடியிலும் ,நம் வீட்டு ஓரத்திலும்
வைப்போம் .இவைகளை பறவைகளும் ,தெருவில் இருக்கும் மற்ற உயிரினங்களும் வெயில் கால
வெப்பத்தைத் தனிக்க குடித்து மகிழட்டும் .
வெயில் காலங்களிலும் மற்ற பொழுதுகளிலும் இவைகள் உணவையும் ,நீரையும் தேடித்தேடி தங்களை
கொன்றுகொள்கின்றன .

அதலால் நாம் இந்த நாள் தொட்டு இவற்றை மேற்கொள்வோம் .
இந்த மூன்று நாட்களும் இதற்காக நாம் ஒதுக்குவோம் .

=========

இயற்கையை காக்க ,
காடு வாழ நாடு வாழும் எனும் நற்செய்தியுடன்.
'காவிரியைக் காசுக்காகக் களங்கப்படுத்தாதே '
என நன்னீர் காக்கும் விழிப்புணர்வுக்கோஷத்துடன் மார்ச்21 ஊட்டியிலிருந்து ஈரோட்டிற்கு
சைக்கிள் பயணம் மேற்கொள்ளும்

'உதகை லிம்கா பிரசாத்தை'

வாழ்த்தும்

=போதி இயற்கைக் குழு ,
=சித்தார்த்தாப் பள்ளி ,ஈரோடு ,
=கேர்&லவ் வெல்பர் டிரஸ்ட் ,ஈரோடு,
=சுடர் -சத்தியமங்கலம் ,
=NILGIRI WILDLIFE & ENVIRONMENT ASSOCIATION
=டாக்டர் ஜீவானந்தம் ,ஈரோடு
இவர்களுடன் இணைந்து
எஸ் .இராஐ சேகரன் (நண்டு@நொரண்டு),வழக்கறிஞர் ,ஈரோடு.


=====


.

.

.

.

Saturday, March 13, 2010

தனது தாயக பூமியை .......

.


.

நாங்கள் இந்த அழகான பூமியை ஒருபோதும் மறப்பதில்லை

எங்களுக்கு பூமியே தாய் .
நாங்கள் பூமியின் ஒரு பகுதி .
பூமி எங்களின் ஒரு பகுதி .
வாசனைப்பூக்கள் எங்களின் சகோதரிகள் .
மானும்,குதிரையும் ,பருந்தும் எங்களின் சகோதரர்கள்

பாறைச்சிகரங்களும் ,புல்வெளிகளில்
ஊற்றெடுக்கும் சுனைகளும்,குதிரையின்உடல்வெப்பமும்,மனிதனும் -எல்லாம் ஒரே குடும்பம் .
நதிகள் எங்களின் சகோதரர்கள் .
எங்களுக்கு காற்று விலைமதிப்பில்லாதது .
விலங்குகள் இல்லாமல் என்ன மனிதன் ?
விலங்குகளுக்கு நேர்வது யாவும் தாமதமின்றி மனிதனுக்கும் நேரிடும் .
பூமிக்கு எது நேர்ந்தாலும் அது பூமியின் பிள்ளைகளுக்கும் நேரிடும் .
நிலத்தின் மீது துப்பும் போது மனிதன் தனது உடம்பின் மீதே துப்பிக்கொள்கிறான் .....


-1854 ல் தனது தாயகபூமியை விற்க மறுத்த செவ்விந்தியத்தலைவர் சியாட்டில் அமெரிக்க
குடியரசுத்தலைவருக்கு எழுதிய கடிதத்தி்லிருந்து .......

.

.

.


.

Friday, March 12, 2010

சாமியார்களும் நம்பிக்கைகளும் .

.

.

ஆரம்பத்தில் நோய் என்பது கடவுளின் சாபம் அல்லது தண்டனை அல்லது கோபம் என்றே எண்ணப்பட்டது .

சிலர் நோயிற்கு காரணம் பிசாசுகள் என்றும் மாந்தீரிகர்கள் நோயை போக்குவார்கள் என்றும் நம்பினர் ரோமானியர்கள் மருத்துவத்தை விட மாந்தீரிகத்தை அதிகம் நம்பினர்.

மேலை நாடுகளில் "பண்டோரா" எனும் பெட்டியை திறந்ததிலிருந்து தான் உலகில் நோய்கள் ஏற்பட்டதாக மேலைநாட்டுப் புராணங்கள் கூறின .அந்த பெட்டியை திறப்பதற்கு முன் உலகில் நோய்களே கிடையாதாம் .

பிளேக்நோய் இங்குபஸ் ,சுக்குபஸ் என்ற வேதாளங்களின் செயலாலே ஏற்படுவதாக பிரானஸ் நாட்டினர் கருதினர் .

இராஜ தரிசனம் நோயைத்தீர்க்கும் என்றும் நம்பினர். அதற்காக மக்கள் பல காததுரம் கடந்து பல மணிநேரம் காத்திருந்து இராஜ தரிசனம் பெற்று சென்றுள்ளனர் .இதன் வளர்ச்சியாக சாமி தரிசனம் ,பின் சாமியை தரிசித்த இடத்திலிருந்து சாமியார் தரிசனம் என உருமாறி இன்று இதில் மக்கள் அதிகம் நிலைத்துவிட்டனர் .ஆனால் அறிவியல்பூர்வமான உண்மை என்னவென்றால், எந்த ஒரு சாமியாராலும் மற்றும் அவர் கற்றுத்தரும் எந்த ஒன்றாலும் , வேறு எதிலாலும் எந்த ஒரு நோய் கிருமியின் எந்த ஒரு அணுவையும் ஒரு துளிகூட அசைக்கமுடியாது என்பதுவே.

இப்ப வெயில் சீசன் ஆரம்பித்துவிட்டது.கடந்த ஆண்டைவிட இந்த வருடம் வெயில் அதிகம் .வெய்யில் காலத்திற்கு சில வியாதிகள் வருவது இயற்கை .
அதைத் தவிர்க்க வெயிலில் அலைவதை முதலில் தவிர்க்கவும் .நீர்ச்சத்துள்ள பழவகைகளை அதிகம் சாப்பிடவும் .தண்ணீர் அதிகம் அருந்தவும் .இந்த சீசனில் விளையும் பழங்களை அதிகம் உண்ணவும் .தினமும் 2 தடவை குளிக்கவும் .
ஆனால், இதைவிடுத்து நம் நாட்டில் ஒருவர் மீது மாரியம்மன் கோபம் கொண்டுவிட்டால் ஆத்தா உடம்பில் ஏறிவிடும் என்றும் அதனால் இது போன்ற நோய்கள் வருகின்றது என்றும் நம்புகின்றனர் .

இவ்வாறு நோய்கள் பற்றிய நம்மவர்கள் நம்பிக்கைகள் பல.அனைத்தும் மூட நம்பிக்கைகளே
.எனவே,உண்மையை அறிவீர் .உடல் சுகத்துடன் வாழ்வீர் .

.


.


.

.


.

Thursday, March 11, 2010

மரணம் என்றிலிருந்து...
















.


பொதுவாக ஆரோக்கியமான மனிதன் 100 ஆண்டுகள் மற்றும் அதற்கும் சற்றும் அதிகமான ஆண்டுகள் வாழ சாத்தியக்கூறுகள் இருந்தாலும் மரணம் என்பது மனிதன் தனது 20 வயதை தொடும்பொழுதோ ஆரம்பித்துவிடுகிறது என்பதுவே உண்மை.
20 வயதிலிருந்தே நமது தோலுக்கு வயதாகத் தொடங்கி விடுகிறது .மூளையும் 20 வயதை தொடும்பொழுதோ செல்களை இழக்கத் தொடங்கிவிடுகிறது. தசை இழப்பு 30-லிருந்தே ஆரம்பிக்கிறது . கல்லிரலும் அப்படியே 30ல் இருந்து எடையை இழக்கிறது. 40ல் இருந்து கண்களில் தொய்வும்,இதயப்பலகினமும் ,50ல் இருந்து எலும்புச்சிதைவையும் ,60ல் இருந்து தண்டுவட செல்கள் வீழ்ச்சி,சுவையறியும் மற்றும் நுகரும் திறன்கள் குன்றல் , கேட்புத்தின் குன்றல் ஆகியவையும் படிப்படியாக ஏற்படுகிறது.
எனவே மரணம் என்பது சூழ்லைப்பொறுத்து சராசரியாக 20ல் இருந்து ஆரம்பித்து பிறகு சூழ்லைப்பொறுத்து முடிந்துவிடுகிறது .
அதனை உணர்ந்து நாம் வாழப்பழகுவதே நல்லது .





.


.



.


Thursday, March 4, 2010

ஒத்துக்கொள்ளுங்கள் ...மாற்றம் வரும் ...

.

.

.

தெரிந்துகொள்ளும் ஆவலுடன் மட்டுமே இருந்துகொண்டும் மேலும் எதையும் தெரிந்துகொள்ளாமலும் , அப்படியே தெரிந்துகொண்டாலும் தெரிந்துகொண்டதிலும் தெளிவில்லாமல்தெரிந்துகொண்டதினாலும் ஏற்பட்ட மிகப்பெரிய பிழை ,தெரியாததிலும் தெரிந்ததுபோல் செயல்படவைக்கிறது.
அதனால் மிக எளிமையாக பிறரின் பேச்சு வலையிலும் ,எழுத்து வலையிலும்,பிரபலம்என்றகவர்ச்சியிலும்கபடவேசத்திலும்வீழ்ந்து
அவலப்படுகின்றோம்.இதனைப்போக்க நாம் நமக்கு இது தெரியும்,இதுதெரியாது என்பதனை முதலில்ஒத்துக்கொள்ளவேண்டும். இதற்கு நாம் நமக்கு என்ன தெரியும்,நமக்கு என்ன தெரியாது என்ற அறிவினை ளர்த்திக்கொள்ளவேண்டும்.

நோயாளிகளில் பெரும்பான்மையினர் தங்களுக்கு உள்ள நோயை உடனே ஒத்துக்கொள்ளாததால் தான் டாக்டர்களால் நோயை உடனே போக்க முடியாமல் போய்விடுகிறது என்பது பெரும்பான்மையானடாக்டர்களின் கூற்றாக உள்ளது . உதாரணமாக 10 மாத்திரைகள் எழுதிக்கொடுத்தால் 3 மாத்திரைகள் மட்டும் சாப்பிட்டு மீண்டும் அவஸ்தைப்படும் நபர்களே அதிகம் . தங்களின் உடல் நலத்திலேயே இத்தகைய போக்குடையவர்களாக இருக்கும்பொழுது எப்படி அறிவு சார்ந்த விசயத்தில் அவர்கள் முற்போக்கு தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள் ?மிகப்பெரிய சர்வே எடுத்தோமானால்100 க்கு 95சதவிதம் பேர் இப்படிப்பட்ட ஆசாமிகளாக தான் .

உடல் உபாதையை விடஅறிவு எந்த உபாதையை கொடுக்கப்போகிறது ?.
மாற்றம் வேண்டும் என்ற ஆர்வமோ,ஆசையோ அல்லது உண்மையான எண்ணமோ எதுவாக இருந்தாலும் முதலில் எதார்த்தத்தை ஒத்துக்கொள்ளவேண்டும்.அப்பொழுதுதான் மாற்றம் முடியும் .மாற்றத்தின் முதல்படி இதுதான்.

இல்லையோல் ...இதனை முதலில் இருந்து வாசிக்கவும் .


.

.

.

Tuesday, February 23, 2010

திராவிட நூலென்பதால் ... ...

.
திருக்குறளின் பேரால் திராவிட மக்களின் பெருமையை,திராவிடரல்லாத மக்களுக்கு உணரச்செய்ய
முடிகிறது ...
எவ்வளவோ ஆபாசமான நூல்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பெருமையில் 100ல் 1 பங்கு பெருமைகூட
நமது திருக்குறளுக்குக் கொடுப்பதில்லை ...
திருக்குறளுக்கு அத்தகைய பெருமையில்லாமல் போனதற்குக் காரணம் .இது ஓர் திராவிட நூல்
என்பது தான் ...
இன்ன காரியங்களால் இன்ன வாஸ்துக்கு இன்ன குணம் ஏற்படும் என்று கூறுவதுதான் விஞ்ஞானம்
.விஞ்ஞானத்திற்கு ஏற்ற கருத்து தான் பிரத்யக்ஷ அனுபவத்திற்கும் பின்விளைவுக்கும் ஏற்றதாக
அமையக்கூடியது .தத்துவார்த்தம் கூறத்தேவையில்லாத கருத்துத்தான் விஞ்ஞானத்திற்கேற்ற
கருத்தாகும் .தத்துவார்த்தம் பேசுவதெல்லாம் பெரிதும் தம்முடைய
சாமர்த்தியத்தைக்காட்டிக்கொள்ளச் சிலர் செய்யும் பித்தலாட்டம் என்றுதான் நான்
கூறுவேன்.திருக்குறளில் அத்தகைய த்த்துவார்த்தப் பித்தலாட்டத்திற்கு இடமேயில்லை...
அதில் கூறப்பட்டுள்ள கொள்கைகளை நாம் பொது நெறியாகக் கொள்வது அவசியம் ...
நமக்கு வேண்டிய முழு அறிவையும் கொடுக்கக்கூடியதாக ஒரு நூல் வேண்டுமானால் அது
திருக்குறள் தான் என்பதை நீங்கள் தெளிவாக உணருங்கள் .உணர்வது மட்டும்மல்ல,நன்றாக மனத்தில்
பதிய வையுங்கள் ...
திருக்குறள் நூல் ஒன்றே போதும் இந்நாட்டு மக்களுக்கெல்லாம் அறிவை உண்டாக்க ...
100 ரூபாய்க்கும் ,200 ரூபாய்க்கும் 'டெக்ஸ்ட்' புத்தகங்கள் வாங்கிப் படித்து
மடையர்களாவதைவிட 3 அணாவுக்கு திருக்குறள் வாங்கிப் படித்து அறிவாளியாவது மேல்
என்றுதான் கூறுவேன் .திருக்குறள் ஒன்றே போதும் .உனக்கு அறிவு உண்டாக்க ;ஒழுக்கத்தைக்
கற்பித்துக் கொடுக்க;உலகஞானம் மேற்பட.அப்படிப்பட்ட குறளைத்தான் நாம் இதுவரை
அலட்சியப்படுத்தி வந்திருக்கின்றோம்...
அனைவரும் திருக்குறளைப்படித்து அறிவுள்ள மக்களாகி இன்புற்று வாழவேண்டும் என்பது தான்
எனது ஆசை.
..........
சென்னை மயிலாப்பூரில் திருவள்ளுவர் கழகம் சார்பில் 14.3.48-ல் நடைபெற்ற 3வது
திருவள்ளுவர் மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அருமைவாய்ந்த சொற்பொழிவிலிருந்து
... சில துளிகள் ... அவ்வளவே.



.



.


.

Monday, February 22, 2010

ப்ளாக்கர் உலகமும் -பழகா நட்பும் .

ஜெகநாதன் has left a new comment on your post "நம்மில் நாம் பிறப்போம் ,வாழ்வை வசந்தமாக்குவோம்.":

நண்டு@நொரண்டுதான், நான் தேடிக்​கொண்டிருந்த​டோமி என்று தெரியாமல் போயிற்று.
3 வரிகள் மட்டும் எழுதும் ​டோமியிடமிருந்து இப்படி வித்யாசமான ​செறிவான ​சிந்தனைகளைப் படிக்க சுவாரஸியமா இருக்கு!

தொடர்ந்து நடப்போம்!



Posted by ஜெகநாதன் to நண்டு @ நொரண்டு at February 22, 2010 6:56 AM


இதைப்படித்ததும் எனக்கு கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் கொண்ட உணர்ச்சி ஒத்த நட்பு தான் கண்முன் காட்சியானது .

பாண்டிய நாட்டில் பண்டைக்காலத்தில் பிசிராந்தையார் என்ற அருந்தமிழ்ப்புலவர் வாழ்ந்துவந்தார் .அப்புலவர் சான்றாண்மைப் பண்புகள் ஒருங்கமைந்த ஆன்றோராக விளங்கினார் .பிசிராந்தையார் பாண்டிய நாட்டில் வாழ்ந்த காலத்தே சோழவள நாட்டை கோப்பெருஞ்சோழன் என்பவர் ஆண்டு வந்தார் .அவர் தமிழில் பெரும் புலமையுடையவர் .'புல மிக்கவரை புலமை தெரிதல் புலம் மிக்கவர்க்கே புலனாம்' என்பது பழமொழி .சோழனுடைய தமிழ்ப்பற்றினால் புலவர் பெருமக்கள் அவர் அன்பிற்குறிய நண்பர்களாய் அல்லும் பகலும் அவரை விட்டகலாது அவர் உடன் உறைந்தனர் . பாண்டிய நாட்டுப் பைந்தமிழ் புலவர்களின் வாயிலாக பிசிராந்தையாரின் பெருமையை அறிந்தார் கோப்பெருஞ்சோழன் .அவரைக்கண்டு அளாவளாவ்வேண்டும் என்ற வேட்கை சோழனுக்கு உண்டாயிற்று .அது பின்னர் சோழனின் உள்ளத்தில் பெருநட்பாய் மலர்ந்து மணம் வீசலாயிற்று .

கோப்பெருஞ்சோழன் வாழ்வில் ஏற்பட்ட ஒரு துன்ப நிகழ்ச்சியால் ஏற்பட்டவிருந்த பெரிய மானக்குறையை தவிர்க்க ,மானம் இழந்து உயிர் வாழ விரும்பாத சோழன் தனது ஆட்சிப்பொறுப்பைத் துறந்து இழிவைப்போக்கிக்கொள்ள வடக்கிருந்து உயிர் விடத் துணிந்தார் .காவிரியாற்றங்கரையில் வடக்கிருக்க இடங்கள் வகுக்கப்பட்டன.அப்போது சோழன்,'பிசிராந்தையார் என் ஆருயிர் நண்பர் .அவரும் என்னுடன் வடக்கிருக்க வருவார் .அவருக்கு எனக்குப் பக்கத்தில் இடம் ஒதுக்கி வைக்கவும் ' என ஆணையிட்டான் .அதுகேட்ட ஏனைய புலவர்கள் வியப்புற்று ,'அரசே! பாண்டி நாடு தொலைவில் உள்ளதே .பிசிராந்தையாரை தாங்கள் ஒருமுறைகூடக் கண்டதும் இல்லை;பழகியதும் இல்லையே! நீங்கள் இருவரும் கேள்வியளவிலேயே நட்புக்கொண்டீர் .அவ்வாறு இருக்க எவ்வாறு வருவார்?' என ஐயமுற்று உரைத்தனர் .அதுகேட்ட சோழன் 'புலவர் பெருமக்களே ! ஐயம் வேண்டாம் .நாங்கள் கேள்வியளவிலேயே நட்புக்கொண்டாலும் எங்கள் நட்பு மிகவும் உறுதியானது.நிச்சயமாக வருவார்.ஆதலால் அவருக்கு ஓர் இடம் ஏற்படுத்துங்கள்,'என்று கூறிக்கொண்டிருக்கும் போதே பிசிராந்தையார் அவர்கள் முன் வந்து நின்றார் .அது கண்டு அனைவரும் திகைத்து நின்றனர் .மன்னர் உரைத்த உரை பழுதாகாமல் அங்கு சேர்ந்தபிசிராந்தையாரின் உணர்ச்சி ஒத்த நட்பின் திறத்தினை பலவாறு பாராட்டினர் .

இதனை கண்ணகனார் என்னும் புலவர்

' பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்
இடைபடச் சேய ஆயினும் தொடைபுணர்ந்து
அருவிலை நன்கலம் அமைக்கும் காலை
ஒருவழித் தோன்றியாங் கென்றும் சான்றோர்
சான்றோர் பாலர் ஆப
சாலார் சாலார் பாலர் ஆகுபவே ' -

என்ற அழகிய செந்தமிழ்ப்பாடலைப் பாடி அவர்கள் நட்பின் பெருமையை பாராட்டினார் .

கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் கொண்ட உணர்ச்சி ஒத்த நட்புரிமையே தமிழகத்தில் நட்புக்கு இலக்கியமாக போற்றப்பட்டு வருகின்றது .

இதனை நான் கல்லுரி்களில் பயின்ற காலத்தே இப்படியெல்லாம் இருந்திருக்கமுடியுமா என ஐயுற்றேன் .புலவர்களின் பொய்யுரைகளில் இதுவும் ஒன்று என நகைத்ததும் உண்டு .ஆனால் ,அதற்கு மாறாக புலவர்கள் உரை என்றும் பழுதாகாது என்பதனை நான் ப்ளாக் ஆரம்பித்த பிறகு காலம் உணர்த்தியது .

அப்படி எனக்கு உணர்த்திய ஒன்றைத்தான் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் படித்தது .

நான் 'அட்டக்கத்தி 'என்ற எனது மற்றொரு ப்ளாக்கில் 'டோமி 'என்ற பெயரில் 'கவிதைபாடும் நேரம் 'என்று சிற்பாக்கள் வடித்துவந்தேன் .அதில் அவருக்கும் எனக்கும் நட்பு ஏற்பட்டது .
சிற்பா என்றால் ,இது தமிழ்க்கவிதை வடிவில் ஒரு வகை
- எளிமையான கவிதை நடை
- மூவடி
- "தத்துவம்",'உணர்ச்சி", சார்ந்தது
- இலக்கணம் தவிர்த்தது
- இயல்பானது
- இயற்கை யானது.

உதாரணத்திற்கு

'அறிய முடியாது
குருடர்களால்
அழகிய மே மரப்பூக்கள் '

இதற்கு பல அர்த்தங்கள் .
அப்படித்தான் வடிவமைக்கடுவது சிற்பா .
ஒரு சில .
முதலாவதாக நேரடியான பொருள் நேரடியாகவே உள்ளது .
2வதாக ப்ராய்டு, 'குருடர்களால் சிவப்பு நிறத்தை அறிய முடியாது ' என்பார் .அது இதில் உணர்த்தப்பட்டுள்ளது .
3வதாக மே பூக்கள் சிவப்பு நிறத்தது எனில் கம்யூனிம் அதன் குறியிடாக , அறிவற்ற மனிதர்களால் கம்யூனிசத்தைப்பார்க்க முடியாது .அவர்கள் குருடர்களே ....
இப்படி அடுக்கிக்கொட்டே போகலாம் அவரவர் ....
இப்படியாக நான் சிற்பாக்கள் வடித்துவந்தபொழுதுகளில்
ஜெகநாதன் ,முனியப்பன் பக்கங்கள் ,மற்றும் பேராசிரியர் குணசேகரன் ஆகியோர் நண்பர்களானவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் .
அட்டக்கத்தியில் இவர்கள் என்றால்
நண்டு@நொரண்டில் vimalavidya ,பழமைபேசி,
பேராசிரியர் எம்.ஏ.சுசீலா அம்மா அவர்கள் goma,cheena (சீனா) ,
Starjan ( ஸ்டார்ஜன் ) ,அண்ணாமலையான்,நேசமித்ரன்,துபாய் ராஜா ,
Maximum India ,Prince Ennares Periyar,செல்வ ராயன் ,veeraa,லோகு ,
நட்புடன் ஜமால் ,தேவன் மாயம் ,பேநா மூடி,பிரியமுடன்...வசந்த் ,
கட்டபொம்மன் ,க.பாலாசி ,வித்யாசாகர் ,அகல்விளக்கு ,
பிரியமுடன் பிரபு ,V.A.S.SANGAR மற்றும் benzaloy ஆகியோர் நண்பர்களானவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் .
இவர்கள் அனைவரும் எனது பழகா நண்பர்கள் . இவர்களுடனான எனது நட்பு பிசிராந்தையாரும் கோப்பெருஞ்சோழனும் கொண்ட உணர்ச்சி ஒத்த பழகா நட்புக்கு இணையானது .இவர்கள் அனைவரும் எனக்கு கோப்பெருஞ்சோழன் ஆவார்கள் .




.


.


.

.

Sunday, February 21, 2010

நம்மில் நாம் பிறப்போம் ,வாழ்வை வசந்தமாக்குவோம்.

.


.
.

இன்றைக்கு அவசர உலகத்தில் நாம் அனைவரும் இருக்கின்றேம்.மிகவும் பிசியா இருக்கின்ற இந்த காலகட்டத்தில் நாம் நமது வாழ்க்கையில் தவறவிட்ட இழந்துவிட்ட விசயங்கள் பல.அவை எவைஎவை என்பதைக்கூட நம்மால் யோசிக்க நேரமில்லாமல் எதைப்பற்றியும் கண்டுகொள்ளாமல் ஓடிக்கொண்டிருக்கின்றோம்.இப்படி ஓடிக்கொண்டிருக்கின்ற நாம் தவறவிட்டதில் முதன்மையான ஒன்றுநமது உடல்நலம் .மற்ற எதைத்தவறவிட்டாலும் காலத்தில் நம் தவற்றை நாம் சரிசெய்துகொள்ளமுடியும் .ஆனால் உடல் அப்படியானது இல்லை .அவைகள் அவைகளுக்கு என்று
காலத்தை வகுத்துக்கொண்டு இயங்குவன .அவைகளுக்கு உண்டானதை நாம் அவைகளுக்கு உண்டான போது செய்யவில்லை என்றால் அவைகளும் நமக்குண்டானதை உண்டான போது செய்யாது .அப்பொழுது தான் நாம்
நம்மைப்பார்க்கின்ற சூழல் ஏற்படுகின்றது அப்பொழுது நோயாளியாக நாம் .அப்பொழுது நாம் நம்மை நொத்துகொள்வதுடன் நம்முள்ளே நாம் எதிரியாகின்றோம் .அது சில சமயங்களில் பலரை குற்றவாளிகளாகக்கூட மாற்றிவிடுகிறது .(ஒரு உதாரணம்: தற்கொலை ).சரி இதனின்று
தற்காத்துக்கொள்ள ஏதாவது வழியுண்டா எனில் ,உண்டு ,அதிலும் மிக எளிமையான செலவேயில்லாத ஒரு வழி உண்டென்றால் அது நடைபயிற்சி என்றால் மிகையாகாது .

நடைபயிற்சி என்றால் எல்லா நடையும் நடைப்பயிற்சியாகா.குறிப்பாக உடல் நலம்காக்கும் நடைப்பயிற்சி எனில் அதிலும் நோயைத் துரத்த தினமும் காலையில்,அதுவும் அதிகாலையில் பொழுது புலருவதற்கு முன் ஒரு ஜில்லுனு காத்து அடிக்கும் (எங்க ஊரில்-ஈரோட்டில் 4.30-யிலிருந்து 5.30 மணி வரைக்கும அடிக்குது) அப்பொழுது நல்ல காலணி (ஷூவே சரியானது , சைஸ்சும் சரியானதாக இருக்கவேண்டும்) அணிந்து மாசற்ற சுத்தமான சுற்றுப்புறச்சுழலில் எந்த சுமையும் இல்லாமல் தொடர்ந்து தினம் நடை மேற்கொள்ளவேண்டும் .
இவ்வாறு நடையில் ஈடுபட்டவுடன் ,நடக்க ஆரம்பித்த விநாடியில் இருந்து எங்கும், எதற்காகவும் நிற்காமலும்,யாருடன் எந்த பேச்சும் பேசாமலும்,யாரைப் பார்த்து எந்தவித சைகையும் செய்யாமலும், கைகளை நன்றாக சௌகரியமாக அசைத்து,கால்களை அது எவ்வளவு சௌகரியமான தொலைவு எடுத்து வைக்க
முடியுமோ, அவ்வளவு மென்மையாக எடுத்து வைத்து, நெஞ்சை நிமிர்த்தி மூச்சுக்காற்றை மிகவும் சுதந்திரமாக எவ்வளவு முடியுமோ, அவ்வளவு ஆழ்ந்த சுவாசத்துடன் உள்வாங்கி ,அதிக நெளிவுகளற்ற நேரான பாதையில் கால்களை, காலையில் எடுத்து வைத்தால்,அந்த நாளை நமக்குள் நாம் எடுத்து வைத்துக் கொண்டவராவோம்.மேலும்,நடை பயிற்சி முடிந்த பிறகு ஒரு 10 நிமிடம்
மிகவும் ரிலாக்ஸாக அமர்ந்து ஓய்வு எடுத்துவிட்டு பிறகு மற்ற வேலையைப் பார்க்கவேண்டும்.

தினமும் குறைந்தது 30 நிமிடம் நாம் நடைபயிற்சிக்காக நேரத்தை ஒதுக்கினாலே போதும். டிரிட்டபிள் டிசீஸ்கள் எதுவும் நம்மை அண்டாது.பரம்பரை வியாதிகள் எட்டிப் பார்க்கவே பார்க்காது.மன அழுத்தம்,மன இருக்கம்,இரத்த அழுத்தம்,மாரடைப்பு,சர்க்கரை நோய்,சிறுநீரக நோய்,தசைப்பிடிப்பு,கை கால் வலி,அலர்ஜி சம்பந்தமான நோய்கள், மூச்சு சம்பந்தமான அனைத்து
நோய்கள்,அசதி,சோம்பல்,எரிச்சல்,சளி,தோல் நோய்கள் இப்படி பல நோய்களை எந்தவித மருந்து,மாத்திரைகளும் இல்லாமல்,அதற்கான எந்தவித பத்தியமும் இல்லாமல் நடையைக்கட்ட வைக்கமுடியும் நமது நடையினால்.மேலும் முகம் பொழிவு பெறும்,உடல் தோற்றம் வடிவமாகும், தொப்பை வராது,இருந்தாலும் குறையும்,மேனி மினுமினுக்கும்,உடலில் உள்ள அழுக்குகள் நீங்கி
உடல் தூய்மையாகும்.அதைவிட நமது உடலும், முளையும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு அன்றைய நாளை நமதாக்கும் .

நடைபயிற்சியினை தினமும் நாம் மேற்கொண்டால் நம்மில் நாம் பிறப்பதை தினமும் உணரலாம்.எனவே,எனவே,நடைப்பயிற்சி மேற்கொள்ளுவோம்.

நம்மில் நாம் பிறப்போம் ,வாழ்வை வசந்தமாக்குவோம்.


.


.

.


.

Tuesday, February 2, 2010

புத்திசாலி தமிழனுக்கு அனுபவம் அவசியம் தேவை .

இது எனது 150வது பதிவு .
ஆதரித்த நல்ல உள்ளங்களுக்கு
நன்றி கலந்த
வணக்கத்தை இத்தருணத்தில்கூறிக்கொள்கின்றேன் .




.


அனுபவம்
அனைவருக்கும்
அவசியம் தேவை
ஏனெனில்
அது வாழ்க்கைக்கு அத்தியாவசியமான ஒன்று ;
அது வாழ்க்கை அர்த்தத்தை புரியவைக்கும்;
நிபுணர் ஆக்கும் ;
பயத்தை போக்கும்;
பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் ;
முக்கியமாக
பிரமிக்கத்தக்க வகையில்
உபயோகமாகி
புத்திசாலி என பிரபலப்படுத்தும் .
சரித்திரத்தில்
நல்ல அனுபவசாலிகள்
தங்களின் லட்சியங்களை
சிரமம் இல்லாமல்
முழுதிருப்தியுடன்
நினைத்தபடி அடைந்துள்ளனர்
இதில் சந்தேகமேயில்லை .
அதனால் தான்
புத்திசாலி தமிழனுக்கு
அனுபவம் அவசியம் தேவை
எனவே ,
அனைத்துத்தமிழர்களும் கரம் சேர்த்து சபதம் ஏற்ப்போம் ;
அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவேம்
நிச்சயம் உயர்வோம் புத்திசாலிகளாக .




நொரண்டு : எப்படி எனது பீடிகை ?

நண்டு : நன்றாக உள்ளது .இருந்தாலும் .....

நொரண்டு : என்ன இருந்தாலும் ...

நண்டு :இப்ப புத்திசாலிகளாகத்தான் நாம் அனைவரும் இருக்கின்றோம் .
தமிழர்களாகவும் ,தமிழ் உணர்வாளர்களாகவும் இருக்கின்றோம்
இதில் என்த வித மாற்றுக்கருத்துமில்லை . ஆனால் ,
தமிழைத்தான் செம்மைப்படுத்தாமல்
ஏதே சுயநலத்திற்காக நமது விருப்பம்போல் பயன்படுத்திவருகின்றோம் .

நொரண்டு :என்ன ... ?...

நண்டு :ஆம் ,மிகவும் கவலையாக உள்ளது .

நொரண்டு : என்ன கவலை ...

நண்டு :
அடுத்தவர்களை சொல்கின்றேன் .தமிழை தமிழாக பயன்படுத்து என்று . ஆனால்,நான் என்ன செய்கின்றேன் . அம்மா என்பதைக்கூட AMMA என்று தட்டச்சு செய்து ... எமது எண்ணங்களை ,ஆக்கங்களை வெளிப்படுத்த பிற மொழியினின்று தமிழை பிறப்பிக்கவைப்பதாகவே நினைக்கின்றேன் . அதுவும் ஒரு வழியில் சீரழிவாகவே ...

நொரண்டு : அப்படி ஏன் நினைக்கின்றாய் . அதை ஒரு கருவியாக பயன்படுத்துவதில் என்ன தவறு .

நண்டு : ஆம் ,மொழியை கருவியாகத்தான் பயன்படுத்துகின்றோம் . தமிழ் நமக்கு ஒரு கருவி தான் மொழியன்று என்ற நினைப்பில் வாழ்வதால் தான் இத்தகைய இடர் .

நொரண்டு : ஓ...

நண்டு :நீ இந்த உரையாடலுக்கு முன் பீடிகை என்று ஒன்றை சொல்லியுள்ளாயல்லவா அதுவே மெய்ப்பிக்கும் தற்பொழுதைய தமிழின் நிலையை .

நொரண்டு :என்ன சொல்ற ..

நண்டு :
உனது ''பீடிகை'' யில்
அனுபவம் ,
அவசியம் ,
அத்தியாவசியமான,
அர்த்தத்தை ,
நிபுணர் ,
பயத்தை ,
பிரச்சினை,
பிரமிக்கத்தக்க ,
உபயோகமாகி ,
புத்திசாலி,
பிரபலப்படுத்தும் ,
சரித்திரத்தில் ,
அனுபவசாலிகள் ,
லட்சியங்களை ,
சிரமம் ,
முழுதிருப்தியுடன் ,
சந்தேகமேயில்லை ,
கரம் ,
சபதம் ,
நிச்சயம் ,
பீடிகை,
...
இவைகள் எல்லாம் வட சொற்கள் இவைகளை நீக்கிப்பார்
தமிழால் தமிழர்களுக்கு நீ சொல்லவந்ததை ...
.
நொரண்டு :
இவைகள் தமிழ் இல்லையா ? ...என்ன சொல்ர

நண்டு :
அப்படி நான் சொல்லவில்லை .
தமிழ் இலக்கணம் , வரலாறு கூறுகின்றது .

நொரண்டு : என்னப்பா ஒன்னுமே புரியவில்லை .இப்படியே பாத்தா எப்படிப்பா ...


நண்டு :சில குழப்பங்கள் உள்ளன .

நொரண்டு : ஆமாம் ,ஆமாம் ... அனுப்புனர் ,பெருநர் ,மடப்புரம் , பழனி,நடத்துனர்,இப்படி ற,ர,ன,,ஞ,ந,ல,ள,ழ,ண- க்கள் பயன்படுத்தும் போது ....

நண்டு : அட கருவியாக பயன்படுத்துகின்றாய் .இதில் என்ன பிழைகள் காணும் பிழைப்பு ,புத்திசாலி தமிழன் தான் நீ .

நொரண்டு : அட போப்பா ....:

நண்டு : இருந்தாலும் தமிழை சரளமாக பயன்படுத்துவதில் சில இடர்கள் ...

நொரண்டு : ''ஸரல்'' என்ற சமஸ்கிருத சொல்லிலிருந்து வந்ததுதேனே சரளமாக ...

நண்டு :
நீ சென்ன ''ஸரல்'' என்பது சமஸ்கிருத சொல் ,''சரளமாக ''என்பது
தமிழ் சொல் .

நொரண்டு :என்ன ?

நண்டு :
வட சொல் வேறு , சமஸ்கிருத சொல் என்பது வேறு .

நொரண்டு : எப்படி ?...

நண்டு :தொல்காப்பியர்
'' இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல்லென்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே .'' -என்றும் ,
''வடசொற் கிளவி ,வடவெழுத்து ஒரிஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே
சிதைந்தன வரியினும் இயைந்தன வரையர் '' -என்றும் ,
மிக அழகாக கூறியுள்ளார் .
சமஸ்கிருதம் இங்கு வந்ததிலிருந்து இன்றுவரை செழுமையாகத்தான் உள்ளது .அப்படியிருக்க தொல்காப்பியர் ''சிதைந்தன வரியினும் இயைந்தன வரையர் '' என்கின்றார் .

நொரண்டு : ஓ....அப்படியா ?

நண்டு : காமம் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம் .

நொரண்டு : ஆமாம் ,காமம் .

நண்டு : அது தமிழ் சொல் .

நொரண்டு : ஓ ... சரி அதவிடு .
கடந்த 30 ம் தேதி சின்னாளப்பட்டி கடந்த பொழுது உன் ஞாபகம் வந்தது .

நண்டு : ஏன் ?

நொரண்டு : இல்ல ,நமக்காக பல சிரமங்கள் பட்டு நமது தேசத்துக்கு சுதந்திரம் வாங்கித்தந்த மகாத்மா அவர்களின் பெயரால் இயங்கிவரும் பல்கலை சின்னாளப்பட்டியில் உள்ளது .

நண்டு : அது காந்தியாரின் கட்டளையல்ல ..

நொரண்டு : என்ன ?

நண்டு : காந்தியத்தை ஊட்டாமல் ,காந்தியை உணவாக மட்டுமே ஊட்டும் எதிலும் காந்தி இருக்கப்போவதில்லை .

நொரண்டு : என்ன உளருகின்றாய் ?

நண்டு : உண்மை உடனே புரியாது .

நொரண்டு : எது ....

நண்டு : அனைத்து கல்வி நிலையங்களும் வியாபார நோக்கத்தில் செயல்படுகிறது . அதில் கற்றுத்தரும் கல்வியும் உணவுக்கான கல்வியாக உள்ளது .எங்கும் அப்படியே .

நொரண்டு : அப்படித்தானே இருக்க முடியும் .'' தாயும் சேயுமே யானாலும் வாயும் வயிறும் வேறு வேறு தானே ''இந்த பழமொழி தெரியும் தானே .

நண்டு : ஆம், தாயால் பேசும் மொழியும் பயிலும் மொழியும் புத்திசாலி தமிழனுக்கு வேறு வேறு தான் .






.



.



.

.

Saturday, January 16, 2010

தமிழை நான் தான் கண்டுபிடித்தேன் காயப்படுத்தாதீர்கள்.

.

தமிழ் அனைவருக்கும் உயிர்.
தமிழுக்கு வளம் சேரப்பது நம் அனைவருக்கும் கடன் .
அதைவிடுத்து
இதில் போட்டி மனப்பான்மையுடன் நடந்துகொள்வது வீணே .
என்னுடன் போட்டி போட நீனைப்பவருக்கு ...
நேரம் தான் வீணாகுமே தவிர
அவரால் ஒருபயனும் தமிழுக்கு விளையாது .
அவர் யாராக இருந்தாலும்
என்னிடம் இவ்விசயத்தில் தோல்வியோ கிடைக்கும்.
காரணம் தமிழுடன் நான் இருக்கின்றேன் என பொருமையுடன் சொல்லிக்கோள்கின்றேன் .
அனைவரும் தான் இருக்கின்றோம் எனக்கூறலாம்
ஆனால்
நான் ஆதித்தமிழ்தொட்டு இருக்கின்றேன் .

சரி விசயத்திற்கு வருகின்றேன் .
எனது வலைப்பூவில்...
திருக்குறளுக்கு உரை எழுதி வருகின்றேன் .
மிக நீண்ட விளக்கத்துடன் எழுதினாலும்
வலைக்கு படிக்க வசதியாக அதில் ஒரு
குறிப்பிட்ட பகுதியை மட்டுமே,
வலையுலகினரும் எனதுரையை
வலையில் படிக்க
வெளியிட்டுக்கொண்டு வருகின்றேன் .
அதில் ஒரு சிக்கலுமில்லை ,
ஆனால் ,
அதனைப்படித்த சிலர்
அதுவும் தமிழ் கற்றறிந்த அன்பர்கள்
அதிலும் குறிப்பாக
நான் வள்ளுவரின் மழை பற்றி எழுதிய
குறள் 11 க்கான விளக்கத்தை படித்துப்பார்த்துவிட்டு
தாங்கள் அதற்கு உரிமைகொண்டாட முனைந்துள்ளதாக அறிந்தேன் .
அதற்கு விளக்கம் கொடுக்கும் முகமாக இதனை வெளியிடுகின்றேன் .

முதலில் இதனை ஆரம்பித்த பொழுதே நண்பர்கள் சென்னார்கள் நிறையா பிரச்சனைகள் வரும்
என்று குறிப்பாக மதவாதிகளிடமிருந்து .
நான் வழக்கறிஞர் என்பதால் அதப்பத்தி கவலைப்படவில்லை .
மேலும் புத்தாகமாக வெளியிட திட்டம் இருப்பதாலும் ,
எழுதி வருவதில் சிலவற்றை மட்டுமே வெளியிடுவதாலும்
பெரிதாக என் எழுத்திலுள்ள முழுமையை
யாரும் வலைப்பூவில் படித்து தெரிந்துகொள்ளவே முடியாது
என்பதாலும் நான் அதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை .
ஆனால் எனக்கு பிரச்சனை வந்ததோ மதவாதிகளிடமிருந்து அல்ல ,
தமிழ் வாத்திகளிடமிருந்து .

எனது வலைப்பூவில் கடந்த 15.1.2009 அன்று
தமிழ் வள்ளுவரின் மழையில் .
<http://nandunorandu.blogspot.com/2010/01/blog-post_15.html>
என்ற தலைப்பில் 11 ம் திருக்குறளுக்கு உரை எழுதியிருந்தேன் .

அதில்
''உலகத்து வாழும் உயிர்களுக்கு தமிழ் மழை போன்றது .
தமிழ் என்பதைஇக்குறளில் வள்ளுவர் பயன்படுத்தியதை காண்க .
இக்குறளின் சிறப்பே இது தான் .
இதனை
உலகிற்கு
முதல் முதலில்
கண்டுபிடித்து
அறிவிக்கின்றவன்
நான் தான் என்பதில் பெருமிதம் அடைகிறேன் ''- என எழுதியிருந்தேன் .
இது உண்மையிலும் உண்மை .
இதில் எனக்கு பொருமையே .
ஏனெனில் ,
இது வரை ,
ஏன் இந்தக்கணம் வரைக்கும் கூட
யாரும் இக்குறளுக்கு இவ்வாறு பொருள் கொண்டதில்லை .
மேலும்
எனக்கு முன் திருக்குறளுக்கு உரையொழுதிய யாரும்
எந்த உரையாசிரியரும்
இந்தக்கணம் வரைக்கும் இவ்வாறு பொருளும் கொண்டதில்லை .
உரையும் கொண்டதில்லை .
இதுவே உண்மை.
இதுவே வரலாறு .
வள்ளுவர் தமிழை நான் தான் கண்டுபிடித்தேன் .
அதைவிடுத்து
சிலர் இதற்கு தாங்கள் உரிமைகோர முயற்சிப்பதாக அறிந்தேன் .
மனம் மகிழ்ந்தேன் .இப்படியாவது வள்ளுவத்தை படிக்க ஆரம்பித்துவிட்டனரே என .
ஆனால் அவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கின்றேன் .
திருக்குறளில் புதையுண்டுள்ள உண்மைகள் அதிகம் .
அவசரப்படவேண்டாம் .
இன்னும் நிறையா செல்லுகின்றேன் .
அதில் இது 1000ல் ஒன்று தான்.
ஆதலால்
இது ஒன்றிற்கு மட்டும் உரிமைகோரி உங்களை தாழ்த்திக்கொள்ளாதீர்கள் .
இதற்கு ஆதரவாக இருந்து திருக்குறளை ஆழப்படுத்துங்கள் இதுவரை அகலப்படுத்தியது போதும் .
தமிழனாக இருந்து காயப்படுத்தாதீர்கள் .
அவ்வாறு நீங்கள் செய்தால் நான் எனது ஆக்கத்தை மறுபரிசிலனை செய்யவேண்டிவரும் . இதனால்
திருக்குறளுக்கு நீங்கள் மிகப்பெரிய தீங்கு செய்வதுடன் .
தமிழ் சமுதாயத்திற்கே
வரலாற்று ரீதியிலும் ,வாழ்வியல் ரீதியிலும் துரோகம் செய்தவராவீர் .

நிறுத்திக்கொள்ளுங்கள்
இத்துடன் .

நன்றி.


வாழ்க தமிழ் .

வாழ்க தமிழன் .

வாழ்க தமிழினம் .

வாழ்க வள்ளுவம் .

வீழ்ந்தது போதும் இனி வாழ்வோம் .

நன்றி.


வணக்கம் .


கடைசியாக :
இத்துடன் வலையில்
தினமும் வெளிவந்த
''வள்ளுவர் அறியப்படவேண்டிய உண்மைகள் ''
இனி மாதம் ஒருமுறை
வெளிவரும் என்பதனை
இது வரை ஆதரித்து வந்த
நல்லுள்ளங்களுக்கு தெரியப்படுத்துகின்றேன் .
இத்தனை நாள் ஆதரவு தந்த
நல்லுள்ளங்களுக்கு மிக்க நன்றி .

வணக்கம் .


.

.

.

Wednesday, January 13, 2010

யூத்ஃபுல் விகடனுக்கு நன்றி கலந்த எனதினிய நன்னாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

எமது ப்ளாக்கை

குட் ப்ளாக்ஸில்

அமர்த்தியமைக்கு

யூத்ஃபுல் விகடனுக்கு

மிக்க நன்றி .

பார்க்க :
போங்கடா...நீங்களும்....
http://youthful.vikatan.com/youth/Nyouth/index.asp


விகடன் வாசகர்கள் அனைவருக்கும்

மற்றும்

விகடன் குழுமத்தினருக்கும்

எனதினிய நன்னாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

நன்றி .

என

அன்புடன்

நண்டு @நொரண்டு .


.

.


.

Saturday, January 9, 2010

முடி வெட்டினா மூளை வளருமா ,தமிழ பாத்துக்கறதுக்கு நாங்க இருக்கோம் .

.


நொரண்டு : தமிழ் எழுத்துச்சீர்திருத்தும் பற்றி என்ன நினைக்கற ? .

நண்டு : முடி வெட்டினா மூளை வளருமா?.

நொரண்டு : அப்ப ஏன் மொட்டை அடிக்கராங்க ?

நண்டு : மூடத்தனமுனு நீயே ஒத்துக்கர .

நொரண்டு :முட்டாள் தனமுனுஞ் சொல்லு .

நண்டு :

மொழினா என்னானு தெரிஞ்சுக்காம
தவறா புரிஞ்சுக்கிட்ட
சில முட்டாள்களின்
மூட நம்பிக்கையுனு ...

நொரண்டு :பெரியாரின் சிர்திருத்தம் ?

நண்டு :
அறிவுப்பூர்வமானது .
உன் முட்டாள்தனத்து ஏன் அய்யாவை இழுக்காத .

நொரண்டு :

இல்ல ,
இருந்தாலும்
மாற்றந்தேவை தானே,
அயல் நாடுகளில் வாழும் ...


நண்டு :

மொழிய காப்பாத்தனுமுனா
என்ன செய்யனும் தெரியுமா ?

அப்படி சொல்றவங்ககிட்ட
நான்
ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கின்றேன் .
அதுக்கு பதில் யார் சரியா செல்றாங்களே
அவங்க எழுத்துச்சீர்திருத்தம் செய்யலாமுனு சொன்னா செய்யலாம்.

நொரண்டு : கேள் .


நண்டு :

இப்பொழுது

''புதிதாக ஒரு மொழி உருவாக சாத்தியக்கூறு உண்டா ?''

நொரண்டு : ம் ...

நண்டு : பதில் சொல்லட்டும் .
அதற்கு பிறகு
நான் மொழிக்கான இலக்கணம் கூறுகின்றேன் .
அதுவரை .


நொரண்டு :அதுவரை ?.

நண்டு : இருப்பதை வளர்த்தப்பாருங்க .

நொரண்டு :இல்லைனா?

நண்டு : இல்லைனா சும்மாகிடங்க ,
ஏன்னா
நீங்க
முடிய வெட்டுனா மூளை வளரும்னு நினைக்கறீங்க .

நொரண்டு : என்ன சொல்லற

நண்டு : முடிய வெட்டுனா எங்காவது முளை வளருமா? .அப்படித்தான் இருக்கு நீங்க
சொல்லறது அதச்சொன்னேன் .

நொரண்டு : அப்ப தமிழ் ?

நண்டு :

தமிழ பாத்துக்கறதுக்கு நாங்க இருக்கோம் .

இருந்தாலும் தமிழின் மேல் கொண்டுள்ள உமது பாசத்திற்கு
உம்மை வாழ்த்துகின்றேன் .

நொரண்டு : இதுக்கும் வள்ளுவரிடம் பதில் இருக்குனு சொல்லூவியே ?

நண்டு :

சரியா சொன்ன

இருக்கு ...


.

.


.

Sunday, January 3, 2010

வள்ளுவர் சமணர் என்னும் மாபெரும் மடத்தனம் .

.

நொரண்டு : வள்ளுவர் சமணரா ?

நண்டு:
வள்ளுவர் சமணர் என்பது
மாபெரும் மடத்தனம் .
இதனை மக்களிடையே
இன்னும் மக்கள்
மடையர்களாகவே நினைத்துக்கொண்டு
வரலாற்றுபார்வை மற்றும் அறிவு சிறிதும் இல்லாமல்
எப்படித்தான் எழுதிவருகின்றனரே தெரியவில்லை .

சரி குறள்களை படிச்சியா ?

நொரண்டு : நான் தான் சொன்னேன்ல ,
நீ பாட்டுக்க குறளைப்படினு நம்பரக்கொடுத்தினா .
ஒன்னு புருஞ்சுக்க .
நாங்க எல்லாம்
பழத்தை உருச்சில்ல
ஜிரணிச்சு கொடுக்க சொல்றவுங்க .

நண்டு:
அப்புறம் எதற்கு கேள்வி கேக்கற ?

நொரண்டு :சும்மாதான் ,
திருவள்ளுவர் திருவள்ளுவர் னு பேசராங்க ,
பெரிய சிலையல்லாம் வச்சிருக்காங்க அதான் .
அத விடு
வள்ளுவர் சமணரா ?
பதில் சரியில்லையே .

நண்டு: அதுக்குத்தான் குறள்களை படினு சென்னேன் .

நொரண்டு :அந்த 3 மட்டும் போதுமா .

நண்டு: அட அறிவுஜிவி , திருக்குறளை
விமர்சிக்கவோ ,
பயன்படுத்தவோ ,
கேள்விகேட்கவோ விரும்பினால் முதலில்
நீ அதனை முழுமையாக ,
1330 குறளையும் படிக்கவேண்டும் .

நொரண்டு : அவனவனுக்கு வேளையில்லையா .
ஒரு குறளை பயன்படுத்தக்கூட எல்லாத்தையும் படிக்கச்சொல்லுவபோல .

நண்டு: ஆம் .

நொரண்டு : அதான பாத்தேன் ,
எங்கடா சொல்லலனு .

நண்டு: அது தான் உண்மை .

நொரண்டு :
அப்படி இல்லாது ,
எதையும் படிக்காம ஒரு குறளை விமரிசித்தால் ,பயன்படுத்தினால் ?


நண்டு: 4 குருடர்களும் யானையும் கதைதான் .

நொரண்டு : அப்ப ,இப்போ எல்லாம் அப்படித்தான் பயன்படுத்தராங்கனு சொல்லவர ,
அது தானே?

நண்டு: உன் கருத்திலும்
உண்மை உண்டு .

நொரண்டு : சரி ,
நீ சொல்ற மாதிரியே படிக்கலாமுனு இருக்கோன் .
அதுக்கு உரை நிறையாப்பேர் எழுதியிருக்காங்களாம் .
யாரை படிக்க .

நண்டு: யாரைவேணாலும் படி . ஆனால் குறைந்தது 3 உரைகளையாவது படித்தல் நலம் .

நொரண்டு : வா..வா..
ஒரு குறலே படிக்கமுடியல ..
3 உரையா ...
என்ன ஆராய்ச்சி பண்ணி
விருதா வாங்கப்போரேன் .
இல்ல எனக்கு வேலைவெட்டித்தான் இல்லையா ,
எங்குடும்பத்தையார் பாப்பா...
இதனால் எனக்கென்ன ஆகப்போது . இனி கேள்வியே
இவன் கேக்கக்கூடாதுனு
ப்ளான் பண்ணிட்டயா ?.
இப்படி வெளியில சொல்லாத , திருக்குறளை
எவனும் படிக்கவும் வரமாட்டான் ,
உன்னையும் ஒரு மாதிரி பாப்பாங்க .

நண்டு: அதப்பத்தி எனக்கு கவலையில்லை .
ஆனால் ,
முழுமையாக படித்தவரால் மட்டுமே திருக்குறளினையும்,
திருவள்ளுவரையும்
ஓரளவிற்காவது
தெரிந்துகொள்ள முடியும் .

நொரண்டு :அப்படினா
திருக்குறளினை
முழுமையாக படித்தவர்களெல்லாம் முழுமைவாதிகளா ?


.......

வள்ளுவர் -அறியப்படவேண்டிய உண்மைகள் -2 ...தொடரும் .


.


.


.

.

.

Friday, January 1, 2010

வள்ளுவர் -அறியப்படவேண்டிய உண்மைகள் .

.

நொரண்டு :வள்ளுவர் என ஒருத்தர் இருந்தாரா ?

நண்டு: பெயரில் என்ன இருக்கின்றது .

நொரண்டு :திருக்குறள் என்ற பெயரில் தான் எழுதினாரா ?

நண்டு: பெயரில் என்ன இருக்கின்றது .

நொரண்டு :1330 குறள் தான் எழுதினாரா ?

நண்டு:கூடவும் இருக்கலாம், குறைவாகவும் இருக்கலாம் .

நொரண்டு :அப்படினா ...

நண்டு:இடைச்செருகல்கள் பல ...

நொரண்டு :புரியவில்லை .

நண்டு:பாரதியில் கூட இருப்பதாக குற்றச்சாட்டு இருக்கு தெரியுமா ?

நொரண்டு :பாரதியவிடு ...வள்ளுவருக்கு வா .

நண்டு:நிறைய இடைச்செருகல்கள் ..

நொரண்டு :எதனால் ?

நண்டு: வள்ளுவர் தனது அருமையான கருத்துக்களை எளிமையாக கூறிய மிகச்சிறந்த ஒரு
சிந்தனையாளர் .

மேலும்

'உலகின் முதல் சிந்தனையாளரும் '

இவரே.


நொரண்டு :ஓ.!!!!

நண்டு: அவரின் கருத்துக்கள்
அவரின் காலத்திலும் ,
பின்னிட்டும்
சமுதாய ஏற்றத்திற்கு
ஆதாரமாக இருப்பதாலும் , எக்காலத்திலும் எவருக்கும் ஏற்புடையதாக இருப்பதாலும் ,
குறைவில்லாத
தெளிந்த சிந்தனையுடன்
காலத்தால்
அனைத்தையும் விஞ்சி இருப்பதாலும். மூத்த குடியின்
தரமான
தரணிபோற்றும்
கருத்தாக இருந்ததாலும் .
தமிழில் இருந்ததாலும் .

நொரண்டு :இடைச்செருகல் செய்தது யார் ?

நண்டு: முதலாம் வேற்றரசுக்காலத்தினரும் ,தமிழரசு எழுச்சிககாலத்தினரும் மற்றும் அதற்குப்
பிந்தையோரும் .

நொரண்டு :சரியாகச்சொல்லவும்.

நண்டு:கி.பி.250 லிருந்து .

நொரண்டு :அப்படியெனில் வள்ளுவர் காலம் .

நண்டு:தொல்காப்பியத்திற்கும்
முந்தியது .

நொரண்டு : ஓ...ஓ.....

நண்டு:திருக்குறளை அதன் மூலத்தினின்று ஆய்ந்தால் .
சிந்துவை காணலாம் .

நொரண்டு :எப்படி ?

நண்டு:அதிகாரம் 75 ஐ படிக்க

நொரண்டு :
கல்தோன்றா மண் தோன்றா முத்த குடி யாருக்கு தேவையோ அவர்கள் பாத்துக்கட்டும்.
நீ இடைச்செருகல் செய்தது யார் ? என கூறு .

நண்டு: சரி ,
வள்ளுவரை மதவாதியாக ஆக்க மதவாதிகள் .

நொரண்டு : ஏன்
இவரே எதாவது ஒரு மத அடிப்படைவாதியாக இருந்திருக்கலாம் இல்லையா .

நண்டு:சரியான பார்வைதான் ,
ஆனால்
எந்த மதத்தை அவர் பின்பற்றியிருப்பார் என்பதற்காகத்தான்
இடைச்செருகல் செய்தது .

நொரண்டு :அவர்
எதை பின்பற்றியிருப்பார் என
நீ நினைக்கின்றாய் ?.

நண்டு:சிந்துவிற்கு முந்தைய
தமிழன் பின்பற்றிய வாழ்க்கைமுறையை .

நொரண்டு :நீ சிந்துவிற்கு போகாதே . இடைச்செருகல் செய்தது யார் ? .

நண்டு: தொகுத்தவர்கள் ...

நொரண்டு :தொகுத்தவர்களா , மதவாதியாக ஆக்க மதவாதிகளா ? குழப்பாதே .

நண்டு: தொகுத்த மதவாதிகள் .

நொரண்டு : யார் ?

நண்டு: யார் ?

நொரண்டு : அது தான் யார் ?

நண்டு: பல மதத்தவரின் இடைச்செருகல்கள்
இருந்தாலும் .
கடைசியாக
நம் கையில் கிடைத்திருப்பது
இந்து மதத்தினரின்
இடைச்செருகல்கள்
அதிகம் கொண்ட
திருக்குறள் .

நொரண்டு :எப்படி சொல்கின்றாய் ?

நண்டு:தமிழ் இலக்கிய வர்ரலாற்றை படி

நொரண்டு :சுருக்கமா சொல்லுப்பா . எங்களுக்கு அதப்பத்தியெல்லாம் தெரியவேண்டியது
அவசியமில்லை

நண்டு: அப்படினா இது புரியாது .

நொரண்டு : அதெல்லாம் முடியாது .
நீ சொல் .

நண்டு: சரி .
சமய வெறியாட்டங்கள நேரங்கிடச்சா தெரிஞ்சுக்க .
இப்ப
குறள் 543 ,
குறள் 556 மற்றும் குறள் 560
ஆகிய 3 மட்டும் படி .
அவைகள் இடைச்செருகல்கள் .

.... மேலும் இடைச்செருகல்கள் தொடரும் ...


.


.

.

Thursday, December 24, 2009

ஆட்டுக்குட்டிகளும் ,ஆறாவது அறிவும் -நானும் ,டோமிப்பயலும் .

.


என் நண்பனின் ஊருக்கு
விடுமுறையைக்கழிக்க
சென்றிருந்த பொழுது
நடந்த
ஒரு நிகழ்வு .
இது நடந்து 30 வருடம் ஆகுது .

அப்பல்லாம்
கிராமத்துப்பக்கம்
காலைக்கடனை முடிக்க
வெளிக்காட்டுக்கு
போரது தான் வழக்கம் .

அவங்க ஊருல
ரயில்வே பாதை போகுது .
அத ஒட்டி இருத்தது
வெளிக்காடு.

ரயிலு வர நோரத்துல
எனக்கு
அவசரம் என்றதால்
மட்ட மதியம்
போனேம் .

நாங்க போன சமயம்
ஆடுக
மேஞ்சுக்கிட்டிருந்த்து .

சற்றோ தயக்கத்துடன் நான் .
மேய்ப்பனை பார்த்து .

ஆடுகள் ஏனே
இயல்பில்
தண்டவாளங்களை
கடக்க ஆரம்பித்தன .

சற்று ஆறுதல் மனத்தில்
அந்தப்பக்கம் போய்விடுவார் என.
அந்தப்பக்கம் போய்விட்டால்
எங்களைப்பார்க்க முடியாது என்பதால் .

இரயில் வரும் சப்தம் .

மேய்ப்பவர் ஆடுகளை வேகப்படுத்த

வந்துவிட்டது இரயில் .

ஆடுகள்
அந்தப்பக்கம் போனவைகள்
பார்த்து
இரயிலை
பொறுட்படுத்தாமல்
கடக்க ....

இறக்கும் தனது
சக ஜீவன்களைக்கண்டும்
சென்று கொண்டிருத்தன .


மேய்ப்பவர் கடக்க இருந்த
மீத ஆடுகளை
முடிந்த வரை
கூச்சலிட்டு தடுக்க .

5 ஆடுகள் பலியாயின .


எனக்கு ஒன்றும் ஓடவில்லை .

ஆடிவிட்டது ஆடி .

அவரிடம் சென்றேம் .

மேய்பவரும் சிறுது வருத்தப்பட்டார் .

விபத்தில் தப்பிய
ஆடுகளை
மனம் பதைக்க பதைக்க
கட்டிப்பிடித்தேன் .

அவைகள் இயல்பாக இருந்ததை உணர்ந்தேன் .

எனக்கு வியப்பாக இருந்தது .

நண்பனிடம் கேட்டேன் .

அவன் சொன்னால்

இந்த மந்தை ஆடுகள் இப்படித்தான் .

தனக்கு முன் செல்வதைப்பார்த்து
ஏன் ,எதுக்குனே
தெரியாம பின்தொடரும் .

அதுக்குனு அறிவு வளத்தாது .

முன்னாடி போரதுக்கும் அது கிடையாது .
ஏதே வாழுதுக .

தான் செத்தாலும் கவலைப்படாது ,
கூட இருக்கரதப்பத்தி கவலையும் படாது .


இன்னைக்கு செத்ததுக குறஞ்ச விலைக்கு போகும் .
மத்தது அதிக விலைக்கு இன்னும் கொஞ்ச நா
கழிச்சு போகும்
அவ்வளவு தான் .

குறஞ்ச விலைக்கு போகுதேங்கர
கவலையத்தவுத்து வேற கவலை
மேக்கரவுனுக்குக்கூட கிடையாது என்றான் .

.......


பகுத்தறிவு - 6வது அறிவு .

மனுசந்தான் 6 அறிவு படைத்தவனாம் .
மத்ததெல்லாம் குறைவாம் .

எனக்குத் தெரிந்த
அனைவரிடமும்
நான் கேட்ட ஒரே கேள்வி .

6வது அறிவு பகுத்தறிவு
எனில்
மிதமுள்ள 5 அறிவுகள் என்ன என்ன ?

99% நபர்களால் சரியாக
கூறமுடியவில்லை .

4 தோறுது அவ்வளவே .

நீங்களும் கூறிப்பார்க்களாமே .

பெரும்பான்மையினருக்கு
தெரியவில்லை
என்பதால்
5 அறிவுதானு இனி ஏத்துக்களாமுனு
ஒத்துக்களாமே .


.....


எங்க குட்டி செல்லப்பயல் (பையன் இல்லை)
டோமிப்பயல் .
அவனுக்குனு ஒரு பாட்டு பாடுவேன் .
அது ..
குண்டு ..குண்டு டோமி டா..
குட்டி .. குட்டி டோமி டா..
குட் ..குட் டோமி டா..
குடு குடுனு வருவான்டா ..

இப்படி பாடுனதும்
எங்க குட்டிமா
குடுகுடுனு ஓடிவந்து மடியில
படுத்துக்குவான் .

ரொம்ப செல்லம் ...

அவனுக்கு நிறைய அறிவு .

நல்லா எதையும் புருஞ்சுக்குவான் .


ஏதாவது தப்பு செஞ்சானா
உடனை
காலைத்துக்கி
மன்னிப்பு கேப்பான் .
மேல படத்தில பாருங்க தெரியுதா .

காவலுக்கு கெட்டிக்காரன் .

சுறுசுறுப்பானவன் .

கொஞ்சுனா ....
எப்படி ரசிப்பான் தெரியுமா .

காலடியிலே கிடப்பான் .

அவனுக்கு வேண்டியது

வயித்துக்கு ..... அவ்வளவே ...

அதற்கு அவன் கொடுப்பது

எஜமான விசுவாசம் ...

எஜமான விசுவாசம் ...

எஜமான விசுவாசம் ...

அவனில்லாவிட்டால்
எமக்கு
உண்மையில்
உலகே இருமைதான் .
அவன் தான்
எனக்கு
சகலமும் .


...


இப்ப நாமெல்லாம்
இப்படித்தான்
வளர்ந்துகொண்டு வரேமுனு நினைக்கிறேன் .

அய்யா பகுத்தறிவுப்பகலவரே

6 அறிவுகள்
என்னானு சொல்லாம

6 வது அறிவை பயன்படுத்தச்சொன்னா

நாங்க என்ன செய்ய ...

5 லேயே நிககுரோம் ...


.


.

.

Monday, December 21, 2009

அரிசி தமிழனின் உணவா ?

.

நண்டு: வணக்கம் நொரண்டு


நொரண்டு :ஏன் நண்டு


நண்டு: எனக்கு ஒரு சந்தேகம் ?


நொரண்டு : என்ன ?


நண்டு: அரிசி தமிழரின் உணவா ?


நொரண்டு :புரியவில்லை


நண்டு: அட ,
நமது உணவுகள் பதார்த்தங்கள் அனைத்தும்
தற்பொழுது
அரிசியினால் செய்யப்படுபவைகளே.
அரிசியில்லாமல் நமது உணவு வகைகளே இல்லை என்று கூறலாம் .
அப்படிப்பட்ட அரிசியை நாம் ஆரம்பம் தொட்டே பயன்படுத்தி வருகின்றோமா?

நொரண்டு :RICE என்ற சொல்லே அரிசி என்ற சொல்லில் இருந்து தான் வந்தது என்பதினின்று
நாம் அதற்கு உரிமைகோரலாமே ..

நண்டு: இது தவறான பார்வை .

நொரண்டு : என்ன செல்லவர்ர

நண்டு: அட ,சங்க நுற்களில் அரிசியைப்பற்றி ஒரு குறிப்பு இல்லை .
திணை போன்றவைகள் தான் குறிப்பிடப்பட்டுள்ளது .

நொரண்டு :அப்படியயேனில்
அரிசியை என்றிலிருந்து பயன்படுத்தி வந்தான் ?.

நண்டு: அது குறித்தான ஆய்வுகள் கட்டாயம் தேவையாக உள்ளது .


நொரண்டு :சரி தான் ,உனக்கு என்ன ஆச்சு ?

நண்டு: ஒன்னுமில்லை , இப்போவேல்லாம்
கம்மஞ்சோறு ,
கேப்பக்கழி ,
ராகி கூலு
எல்லாம்
இல்லாமல் போனதோடு
மட்டுமல்லாது ,
அதப்பத்தி பேசரதோ ,
சாப்டதா சொல்ரதோ கூட
கோவலமா நினைக்கப்படுவது என்பது என்னமோ
நாம் எதையோ இழந்த விட்ட மாதிரி இருந்துச்சு அதனால் தான் .

நொரண்டு :அதனால்

நண்டு: நாம் இது போன்று எத்தனை அடையாளங்களை இழந்திருக்கின்றோம்
என நினைக்கும் பொழுது
மனது கனக்கிறது .

நொரண்டு :.....

நண்டு: .......

நொரண்டு :......

.


.


.

Wednesday, December 2, 2009

கட்டாய திருமணப்பதிவு -அரசுக்கு ஒரு வேண்டுகோள்


.













நண்டு: வணக்கம் நொரண்டு ஏதாவது சிறப்புச் செய்திகள் ...

நொரண்டு: நண்டு திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்னூ அரசு
அறிவித்துள்ளது தெரியுமா ?

நண்டு: தெரியும் ,நல்ல விசயம் தானே ....

நொரண்டு: கட்டாயம் என கூறிய பின் ,அதற்கு எளிய வழியை கடைப்பிடிக்காமல் ...

நண்டு: புரியவில்லை

நொரண்டு: இதற்கு முன் நடந்த 99 % திருமணங்கள் பதிவு செய்யப்பட்டதாகவே
வரலாறு இல்லை ,காரணம் தெரியுமா ?

நண்டு: நீயே சொல்லூ ..

நொரண்டு: பதிவு செய்வதிலுள்ள சிக்கல்....
முதலில் ,அதாவது அரசன் அரசிகள் கலத்துல சொத்துருக்கரவர்கள் மட்டுமே மனுசங்க,அவங்க மட்டுமே அரசில் அங்கம் .
நம்ம நாட்டுலையும் சுதந்திரத்திற்கு
முன் அப்படி இருந்தது,
அதனால சொத்திருக்கவங்களின் திருமணம் மட்டுமே திருமணமாக அங்கிகரிக்கப்பட்டது .
அதனால் சொத்து எங்கு பதிவு செய்யப்படுகிறதோ இங்கு திருமணமும் பதிவு செய்யப்பட்டது .
அப்பத்தானே சொத்துருக்கரவர்கள் மட்டுமே குடிமகனாக அங்கிகரிக்க முடியும் ....

நண்டு: சரி பழைய கதை இருக்கட்டும் ...

நொரண்டு: சுதந்திரத்திற்குப்பின் அப்படியே பலவிசங்கள் தொடர்ந்தது போல் இதிலும் தொடந்தது ...

நண்டு: பழைய கதையவிடு ...இப்ப என்ன சொல்லவர ...

நொரண்டு: அட , மக்களாட்ச்சியில் சட்டத்தின் நன்மைகள் எளிமையாக மக்களை சென்றடைய
வேண்டும் ...

நண்டு: அதற்கு இப்ப என்ன ?

நொரண்டு: இந்த சட்டத்தின் நன்மைகள் எளிமையாக மக்களை சென்றடைய வேண்டும் என்பதுவே
எனது கோரிக்கை .

நண்டு: எப்படி ..

நொரண்டு: பிறப்பு ,இறப்பை எப்படி உள்ளாட்சி அமைப்புகளில் பதிவு செய்கின்றேமே
அதுபோலவே திருமணமும் உள்ளாட்சி அமைப்புகளிலேயே பதிவு செய்ய அனுமதிக்கலாமே .
மேலும் ,எதற்கொள்ளாமோ இலவசம் இருக்கும் பொழுது இதற்கு மட்டும் 100 எதற்கு . மனமொத்து
காதல் திருமணம் செய்பவர்களிடம்
சட்டம்''4(C)-ல் திருமண அழைப்பிதழ் அல்லது திருமணம் நடைபெறும் இடத்தை குறிப்பிடும்
ஏனைய ஆதாரம் ''
என கேட்டால் எங்கிருத்து வரும் , மேலும் , இது தான் திருமணத்தை உறுதி
செய்கின்றதா .

இப்படித்தான் பழைய பதிவு முறையில் இருந்த வரம்பிற்கு மீறிய அரசர் காலத்து
கட்டுப்பாடுகளால் யாரும் அந்தப்பக்கமே போனதில்லை . திரும்பவும் சற்று சிறிய
மாற்றத்துடன் தொடர்வது . அதற்கு தண்டனை எனக்கூறுவது ஜனநாயகமன்று .

நண்டு: அதற்கு என்ன செய்யச்சொல்ற ...

நொரண்டு: உள்ளாட்சி அமைப்பிடம் பதிவிற்கான அதிகாரத்தை கொடுத்து ,இலவசமாக
பதிவுச்சான்றிதழ் வழங்குவதே சாலச்சிறத்தாக இருக்கும் .
அதை அரசு செய்தால் நலமாக இருக்கும் .

நண்டு: மிக நல்ல யோசனை தான் .
அரசுக்கு ஒரு வேண்டுகோளாக நான் இதனை வைக்கின்றேன் .
இதைப்படிப்பவர்களும் வைப்பார்கள் என நம்புகின்றேன் .
அரசும் இதனை பரிசீலிக்கும் என
நம்புகின்றேன் .


நொரண்டு: எனவே,
. இதன்முலம் ஒரு வேண்டுகோள் ::
. தமிழக முதல்வர் அவர்களே ,
. மிக நல்ல பலனை மக்கள் அடைய ...
. உள்ளாட்சி அமைப்பிடம் திருமண பதிவிற்கான
அதிகாரத்தை கொடுத்து ,
இலவசமாக பதிவுச்சான்றிதழ்
வழங்க வேண்டுமாய்
மக்களின் சார்பாக வேண்டுகிறேன் .
தாங்கள் செய்வீர்கள்
என
நம்புகின்றேன் .





.



.


.