
கைகளில் உணவுப்பாத்திரத்துடன் தாத்தா... கடல் சூழ்ந்த அத்தீவின் மத்தியிலுள்ள ஒரு பாழடைந்த குடிலுக்கு வெளியே தட்டுத்தடுமாறிக்கொண்டு .முற்றத்தில் காத்திருக்கின்றன இரைக்காக சேவல்கள் தாத்தாவை பார்த்தபடி .வெட்டவெளியில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் தாத்தாவைப் பார்த்து ஓடிவந்து அவரின் கைகளை பிறாண்டுகின்றனர். ஊமைகளின் பாஷையை
ஊமையாகிப்போன தாத்தா உணர்ந்து வீட்டினுள் நகர்கின்றார் .
காலம் தாத்தாவாகி.காலம் என்னை தாத்தாவாக்கி ...
திடும்...திடுமென மறைந்து போனவர்களின் மரண ஓலங்கள் தீவு முழுவதும் .இவர்கள் ஒரு குற்றமும் செய்யவில்லை இருந்தாலும் ஏன் ..... ?..?..?..? என்ற கேள்வியுடன் பயணிக்கின்றேன் . ஓலங்கள் ...ஓலங்கள் ...ஓலங்கள்... தாங்க முடியாத படி ... காதை கிழிக்கின்றன. எங்களின் ஒவ்வொருவரின் கல்லறையிலும் எழுதுங்கள் ...எழுதுங்கள்... எங்களின் இறப்பிற்குக்காரணம்....என ஒவ்வொரு இறப்பும் ஓலமிட்டபடி கையில் ஏதோ குறிப்பு சுற்றப்பட்டு ஆயிரக்கணக்கில்... கண்டபடி .என்னுள் ஓலங்களை அடக்க காதுகளை அறுத்தெறிந்து ஒவ்வொரு திறந்த வாயையும் வேகவேகமாக மூடிக்கொண்டே செல்கின்றன என் கைகள். ஒன்று,இரண்டு ,...முப்பதாயிரம்...நாப்பதாயிரம் ...நீண்டு கொண்டே செல்கின்றன வாய்கள்... திடுமென ஒரு குழியில் நான் வீழும் வரை .இது குழி அல்ல இரத்தக்குளம் என உப்புக்கரிப்பை உணர்த்திய வாய் கூறியது.விடுபட கைகளை அசைத்தபொழுது ஆமி களின் துப்பாக்கிச்சப்தம் திடுமென மூளையை அழுத்தியது.சப்தத்தின் திசை நோக்கி தலையை திருப்ப பீரங்கிகளின் பெருநெருப்பில் வாய்மூடிய உடல்கள் சிதறல் சிதறலாக சிதற ,சில சிதறல்கள் என் முகம் முழுதும் . துடைத்து தப்ப இரத்தத்தில் மூழ்கினேன் . தாகம் ,தாகம் ,தாகம்... கண்கள் இருண்டன .உடல் கனக்க ஆரம்பித்தது . தீர்க்கப்பட்டது தாகம் .இனிய குளிர்ந்த நன்னீர் இப்பொழுது என்னைச்சுற்றி .கைகளை அசைத்துபடி வானத்தில் பறந்தபடி .இறக்கைகள் வெப்பமுற ஓய்வெடுக்க முள் மலையில் இறங்கிய ,இரண்டு நிமிட ஒய்யாரத்திற்குள் ,கொல்... கொல்... சப்தம் கேட்டு எழ .ஆயிரம் ரவைகள் துரத்த ,வேகமாக பறக்க எண்ணி இறக்கைகளை விரித்து வேக வேகமாக அடித்துக்கொண்டே தரையில் ஓடிக்கொண்டிருக்கின்றன கால்கள்.
தொடரும் ....
.
.
.
.