Saturday, December 20, 2008

எப்பொழுது ஒருவர் சிறை செல்லலாம் ?

.

. நண்டு : இந்தியாவில் கருத்துச்சுதந்திரம் எப்படி உள்ளது ?


.நொரண்டு: முதலில் தமிழகத்தைபற்றி கூறுகிறேன்: இன்று தமிழகத்தில் சிலர்
மக்களின் அறியாமையைப்பயன்படுத்தி (பெரும்பான்மையினர் கல்வியறிவு இல்லாத நிலையில்) அவர்களிடம் நச்சுவிதைகளை தூவி அதன்மூலம் கிடைக்கும் மலிவு விளம்பரங்களுக்காக ஏதேதோ பேசி கருத்துச்சுதந்திரம் என்னும் உயரிய கொள்கையை கேவலப்படுத்துகின்றனர்.தமிழர்களை
சிந்திக்கவிடாமல் அவர்களை ஆட்டுமந்தைகளாக்கி வருகின்றனர் . தமிழன் சிந்திக்காத வரை இவர்கள் தான் தமிழர்களைக்காக்கும் கைத்தடிகள். உண்மையில் தமிழுக்காக இவர்கள் எதுவும் செய்தது இல்லை.

தமிழ்,தமிழ் இனம் என பூச்சாண்டி காட்டிக்கொண்டு,எவ்வளவோ உயரத்திற்கு
சென்றிருக்கவேண்டிய தமிழை, தற்பொழுது கருத்துச்சுதந்திரம் எனும் போர்வையில் படுபாதாளத்திற்கு தள்ளிக்கொண்டிருக்கின்றனர்.

உள்ளூரில் நடக்கும் குடுமிப்பிடியையே தீர்க்க முடியாத இவர்கள் வெளியூரில் நடக்கும் சண்டை பற்றி உள்ளூரில் கொந்தளிப்பதை என்னவென்று செல்ல.

மற்றபடி இந்தியாவில் கருத்துச்சுதந்திரம் நன்றாகத்தான் உள்ளது.


. நண்டு : எப்பொழுது ஒருவர் சிறை செல்லலாம் ?

. நொரண்டு : 1 . ஜனநாயக நாட்டில் ஜனநாயக மரபிற்கு மாறாக ஜனநாயக அமைப்பை குலைக்கும் வகையில் அரசு செயல்படும் தருணங்களில் ஜனநாயகத்தை மீட்க போராடும் ஒருவர் ஜனநாயகத்தை காக்க சிறை செல்லாம் .

. 2 . ஜனநாயக நாட்டில் ஜனநாயகமாண்பைக்காக்க ஒருவர் சிறைசெல்லலாம்

. இதைத்தவிர்த்து பிறவற்றிற்காக சிறை செல்கின்றவர்கள்
உண்மையில் கடுமையாக தண்டிக்கப்படவேண்டியவர்களே.