Monday, March 30, 2009

இந்தியாவைப் பொறுத்தவரை எந்த எந்த கட்சிகள் அழிந்து போகும் கட்சிகள்?

.

"அரசியலை சாக்கடையாக்கி விட்டார்களே ஒழிய அரசியல் சாக்கடை அன்று"

நண்டு :

இந்தியாவைப் பொறுத்தவரை....


நொரண்டு :

இந்தியா என்பது மத, இன, ஜாதி, மொழி சார்பற்ற ஒரு அற்புதமான நாடு.
அந்தப் பாதையில் அது சுதந்திரமாக பயணம் செய்து ஒன்றுபட்ட மாந்தரினத்தை உருவாக்க
அது மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு நாமனைவரும் அதற்கு உறுதுணையாக, விழிப்புணர்வுடன்
இருந்து நம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் அதற்கு செய்ய வேண்டும்.
இந்தியா என்பது ஆங்கிலேயன் நமக்கு கொடுத்த பெயரல்ல.
நாம் உருவாக்கிய தேசத்திற்கு நாம் வைத்த பெயர்.
நமது பெயர்.
நாம் வாழ்ந்து வரும் காலத்திற்கு சற்று
முன் நமது தந்தையர், தாத்தாக்களின் போராட்டத்தில் சுதந்திரம் பெற்று நம்மிடம் கொடுத்துச்
சென்றுள்ள தேசம்.
நம்மிடம் விட்டுச் சென்றுள்ள மழலை.
நமது அறிவாற்றலால் அதனை முன்னிறுத்தி வளப்படுத்தவேண்டும் என்றஎண்ணத்துடன் நாட்டை வழிநடத்த
எத்தணிக்கும் தொண்டர்களை உருவாக்கும் எந்தக் கட்சியும் தேசியக் கட்சியாக பரிணாமிக்கும்.
வெற்றியும் பெறும்.

இது நமது தேசம்.
நமது காலத்தில் நமக்காக கொடுத்த சுதந்திர பூமி. அகிம்சை வழியில் நமக்கு அளிக்கப்பட்ட
மகத்தான தேசம்.
நமக்காக நாம் உருவாக்கிய அனைத்து அம்சங்களைக் கொண்ட ஒரு அரசியலமைப்பின்பால் நமது கையில்
விடப்பட்ட ஒரு அழகிய பூந்தோட்டம்
என நினைக்கும் கட்சிதான்
இந்தியா முழுதும் பிரகாசிக்க முடியும்.
அப்படி நினைக்காத எதுவும் தேசியக் கட்சியாக பரிணமிப்பது மிகவும் கடினம்.

இந்தியா என்ற ஒன்றும் கிடையாது.
ஆங்கிலேயன் தனது நிர்வாக வசதிக்காக ஏற்படுத்திய பெயர் .
பின் அவற்றை நாம் பின்பற்றி வருகின்றோம்.
இந்தியா என்பது ஒரு மாயை என கூறிக்கொண்டு
( இதற்கு முன் இப்படி ஒரு தேசம் இருந்ததில்லை என்றால் உலகில் எத்தனை தேசங்களின் பெயர்கள்
கல் தோன்றி மண் தோன்றா காலத்திலிருந்து இருந்து வந்துள்ளது என காட்ட முடியுமா? -என
வாதங்கள் புரிவேரிடம் கேட்களாமே )
மொழிவாரியாக, இனம் வாரியாக பேசிக் கொண்டு, ஆங்காங்கு செல்வாக்கு பெற்று ,பெற முயன்று
வரும் கட்சிகள் மாநிலக் கட்சியாக இருந்து கொண்டு மத்தியில் ஆட்சியில் தங்களின்
பிரதிநிதித்துவத்திற்கேற்ப சில சமயம் செல்வாக்கு பெற முடியுமே தவிர தேசத்தைப்
பொறுத்து அவைகளின் செல்வாக்கு தவிர்க்கக்கூடிய அளவிலே, பூஜியமகவே இருக்கும் .

இந்தியாவைப் பொறுத்தவரை
காந்தியம்
முதலிடம்
வகிக்கின்றது.

காந்தியக் கொள்கைகள்
உள்கட்டமைப்பில் விரிவடையும் தன்மை கொண்டன.

இந்த விசயத்தில்
காந்தியத்தை
இன்றைய காங்கிரஸ் கடைபிடிக்கின்றதோ, இல்லையோ,
அது காந்தியின் காலத்திலிருந்து
அவரின் கொள்கைகளை உள்வாங்கி
இயங்கிக் கொண்டு வந்ததால்
காந்தியத்தின் பாதையில் அது செல்வதாக அதன் அனுதாபிகள் எடுத்துக்கொள்வதால்
முதலிடம் அதற்கு தரலாம்.

மார்ச்சியம் .......
மார்ச்சியம் பின்பற்றும் கட்சிகளைப் பொறுத்தவரை இன்னும் அழுத்தம் திருத்தமான செயல்பாடுகள்
தேவை.
அவர்களின் செயல்பாடுகள் மந்தமாக இருப்பதால் முதலிடத்தில் இருக்கவேண்டிய
இவர்களுக்கு
இரண்டாமிடம் தான்.


அது தவிர்த்து மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால், மொழியின் பெயரால், தோன்றி
அதற்குள்ளே காலம் தள்ள நினைக்கும் கட்சிகள் தேசியக் கட்சிகள் போன்று தெரிந்தாலும்,
உருவானாலும், ஓட்டு வங்கிகளை வைத்திருந்தாலும் காலத்தால் நிலைத்து நிற்குமா என்பது
கேள்விக்குறியே.

அவைகள் சி்று கட்சிகளாக, மாநிலக் கட்சிகள் அந்தஸ்திலேயே தங்களின் பயணத்தை தொடர்ந்து
முடிவைத் தேடிக்கொள்ளும். அத்தகைய கட்சிகளைப்பற்றி நான் எதுவும் கூறப்போவதில்லை.

பொதுவாகவே,
எத்தகைய உயர்ந்த கொள்கைகளையும் கோட்பாடுகளையும்,
அவைகளை கையில் எடுத்துக்கொண்டு பயணப்படும் எத்தகைய பெரிய ஓட்டு வங்கிகளைக் கொண்டபெரிய
கட்சியும் தொடர்ந்து தனது அனுபவத்தினால் அவைகளின் கொள்கை மற்றும் கோட்பாட்டினை
செலுமைப்படுத்தாமல் அப்படியே பயணப்பட்டது
எனில் அக்கட்சிகள் எத்தகைய உயர்ந்த கொள்கைகளையும் கோட்பாடுகளை பின்பற்றி இருந்தாலும்
உறைந்துவிடும்.
அலெக்சாண்டர் உலகப் பேரரசை நிறுவினான். அதற்கு காரணம்
சாக்ரடீஸ்....
அரசு விரியும் தத்துவம் அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது.
இவ்வாறுதான் கருத்து வளர்ச்சியில் விரிவடையும் தேசம்.
தேச நலன்.
அவ்வாறு விரிவடையா,
செலுமைப்படுத்தா கருத்துக்களைக் கொண்ட கட்சிகள்
சுருங்கி மறைந்துவிடும்.

எது எப்படியிருந்தாலும் மக்கள் விழிப்புணர்வு பெறப்பெற அதற்க்கேற்ப
மக்களாட்சித்தத்துவமும் விரிவடைந்து உயர்ந்த தன்மை கொண்ட கருத்துள்ள கட்சிகள் தவிர்த்து மற்ற
எல்லா கட்சிகளும்
அழிந்துவிடும்.
அதற்கான காலம்
அவைகள் கொள்கை கோட்பாட்டிலே அமையும்.

நண்டு :

சரி, இந்தியாவைப் பொறுத்தவரை, தமிழகத்தைப் பொறுத்தவரை எந்த எந்த கட்சிகள் அழிந்து
போகும் கட்சிகள்?


நொரண்டு :

இந்தப் பதிவைப் படிக்கும் நீங்கள் ஏதாவது ஒரு கட்சி சார்ந்தவராக இருந்தால் அதன் கருத்தை
அறிந்துகொண்டாலே, அதன் ஆயுட்காலம் தெரிந்துவிடும் .
நடுநிலையாளராக இருப்பீர்கள் எனில் எந்த கட்சியின் கருத்து விரிவடைவதாக இருக்கிறதே
அதற்கே ஆயுட்காலம் அதிகம்
(மூடராக இல்லாத பட்சத்தில் ).


இந்தியாவைப் பொறுத்தவரை,
தமிழகத்தைப் பொறுத்தவரை
ஏன்
உலகத்தைப் பொறுத்தவரை கூட
பகுத்தறிவு கருத்துக்களும் ,
பொதுவுடமை சித்தாந்தங்களும்
கொண்டு
அஹிம்சை வழியில்
நடந்து செல்லும
மக்கள் கட்சிகளுக்கு
ஆயுட்காலம் என்பது
வரையறுக்கமுடியாத
ஒன்றாக இருக்கும் .


அழிந்து போகும் அரசியல் கட்சிகள்… எவை? எவை? ...எப்படி? எப்படி? .... முற்றும்

"அரசியல் அறிவு பெற முயலாதவன் மூடன்"


.