Thursday, May 21, 2009

வருந்தத்தக்க இந்த முடிவு இப்படித்தான் கிடைத்தது இவர்களுக்கு .

.

( இந்த கட்டுரை நடுநிலைமையாகவே எழுதப்பட்டது. யாரையும் ஆதாரித்தோ, எதிர்த்தோ அல்ல.
ஆகவே விருப்பு வெறுப்பற்று படிக்கவும். )


அரசியல் அறிவு பெறாதவன் மூடன் -
என நான் எவ்வளவு கூறினாலும்
தங்களுக்கு உள்ள செல்வாக்கு எதனால்
என்ற அறிவு சிறிதுகூட இல்லாமல்
கண்மூடித் தனமாக
தாங்கள் என்ன செய்தாலும்
தொடர்ந்து மக்கள் ஆதரிப்பர்
என்ற ஒரு தவறான கணிப்பில் செயல்படும்
சில, பல காரணங்களினால்
அரசியல் கட்சிகள் என்ற அங்கீகாரத்தில்,
அரசியல் கட்சிகளின் பதவிகளில்
அமர்ந்து அலங்கரித்துக்கொண்டுள்ள
இந்தியாவிலுள்ள
அரசியல் கட்சித் தலைவர்கள்
தவறாக செயல்பட்டாதால் தான்
அவர்கள் அனைவரும் மண்ணைக் கவ்வியதோடு மட்டுமல்லாமல்
அவர்களின் கட்சிகளும் மிகப்பெரிய சரிவை
ஏன்?
வீழ்ச்சியை கொடுத்துள்ளனர்.

நமக்கு ஏன் மக்கள் வாக்களிக்கின்றனர்
என்ற அறிவு சிறிது கூட இல்லாமல் தேர்தலில் ஜெயித்து விடுவோம் என்ற நப்பாசையுடன் மட்டும்
இந்தியாவிலுள்ள ஒவ்வொரு கட்சியும் போட்டியிட்டதால்தான் இவ்வளவு பெரிய சரிவை பெற்றனர்.


என்னைக் கேட்டால்
ஒரு சில தலைவர்களைத் தவிர இந்தியாவிலுள்ள பெரும்பான்மையான
ஏன் அனேகமான அனைத்து கட்சித்தலைவர்களுக்கும்
அரசியல் அறிவே கிடையாது
என்று தான் சொல்வேன்.
அதுதான் சரி என்று இந்தத் தேர்தல் உறுதிபடுத்துகிறது.

மக்களுக்கு நல்லது செய்கிறார்களோ, இல்லையோ, தங்களுக்கு வாக்களித்த மக்கள் எதற்காக
வாக்களித்தார்கள்
என்று உறுதியாக
எந்த தலைவராவது கூறினால் அவருக்கு நான்
வாழ்த்துக்கள் கூறத் தயாராக உள்ளேன்.
அப்படிப்பட்டவர்களை
நான் பாராட்டுவேன்.
எனது பாராட்டும், வாழ்த்தும் அவர்களுக்கு தேவையில்லைதான், ஏனெனில் அவர்களுக்கு வாக்களித்த
மக்களே அவர்களுக்கு தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளவர்கள் எப்படி என்னிடம் பாராட்டும்
வாழ்த்தும் பெற விரும்புவர்.

ஒவ்வொரு தேர்தலிலும்
அலை வீசுகிறது, மழை வீசுகிறது என்று மக்களை திசை திருப்ப நினைத்து தேர்தலில் நிற்கும்
யுக்தியை முதலில் கைவிட்டால் தான் அவர்களால் முழுமையாக மக்களுக்கு சேவை செய்ய முடியும்
என்று அழுத்தம் திருத்தமாக கூறிக்கொள்கிறேன்.
எந்த கட்சித் தலைவருக்குமே தொலைநோக்கு சிந்தனை இல்லையே என்ற வருத்தம் தான் எனக்கு
ஏற்படுகிறது.
தேர்தலை ஷேர் மார்க்கெட் ஆக்கிக் கொண்டு வருகின்றனர்.
ஆபத்தான பாதை.


தேர்தலில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் எதை முன்னிருத்தி ஓட்டுக் கேட்க வேண்டும்
என்ற படிப்பினையை இந்தத் தேர்தல் ஓரளவு உணர்த்தியுள்ளது.(சம்மந்தப்பட்டவர்கள் உணல்நுதார்களா
என்றால் இல்லைதான் ,
தோல்வியுற்ற கட்சிகள் கம்யூனிஸ்டுகள் உட்பட பணம் வென்றது, ஓட்டு மிசின் மோசடி எனக் கூறி
மக்களை மடையர்களாக நினைத்து பேசுவது எனக்கு ஒன்றும் புரியவில்லை.
நான் ஓட்டுப்போட்டேன்.
கேலி செய்கின்றனர் இவர்கள். இவர்கள் யாருக்கு ஓட்டுப்போட்டனர். எவ்வளவு வாங்கிக்
கொண்டு போட்டனார் என மக்கள் முணுமுணுப்பிற்கு ஆளாகி, ஓட்டுப்போட பணம் வாங்கு எனத்
தூண்டும் விதத்தில் அமையும் பேச்சுக்கள்.சரியல்ல .

ஜெ. போட்ட ஓட்டு மட்டும் இலைக்கு விழும்.
நான் இலைக்கு போட்ட ஓட்டு சூரியனுக்கு விழும் என்றால் நான் ஏன் நேரடியாகவே சூரியனுக்கு
போடக் கூடாது அடுத்த முறை என அடுத்த முறை
குறைந்த பட்ச மக்களாவது முயற்சி செய்வார்கள்
அல்லது
சூரியனுக்கு போடும் ஓட்டு இலைக்கு விழும் என்ற கணிப்பில் சூரியனுக்குப் போடப்போகிறார்கள்.
உஷார்)
அதில் அவர்அவர்கள் செய்த மிகப்பெரிய தவறுக்கு தரப்பட்ட மதிப்பெண்கள்தான் இந்த தேர்தல்
முடிவுகள்.

இங்குள்ள பெரும்பான்மையான கட்சிகள் கொள்கை கோட்பாடுகள் இல்லாமல் இருந்ததும் ,
கொள்கை கோட்பாடுகளை வைத்து வளர்ந்த கட்சிகள் அவற்றை தவறவிட்டபடியாலும்,
கூலுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்ற விதத்தில் செயல்பட்டுக் கொண்டு
ஒரு சில வசயங்களில் ஆதரவு மற்ற விசயங்களில் எதிர்ப்பு
என்ற ரீதியில
கூட்டணியோ அல்லது
ஆதரவோ தெரிவித்து தங்களின் கட்சியின் அஸ்திவாரமான நிலைப்பாட்டை காற்றில் பறக்கவிட்டதும்
தான் ஒவ்வொருவரும்
சரிவை
இல்லையில்லை
தோல்வியை சந்தித்தனர்.

என்னால் தெள்ளத்தெளிவாகவே, இந்தத் தேர்தலில்
காங்கிரஸ்
ஒரு ஸ்திரமான கட்சியாக
15வது நாடாளுமன்றத்தில் விளங்கும் எனவும் ,
பா.ஜ.க. மற்றும் இடது சாரிகள் எவ்வளவு M.P. களைப் பெறுவார்கள் என்றும்
சரியாகவே ஆணித்தரமாக கணிக்கும்படி இருந்தது .

காங்கிரஸ் + 300க்கு மேலும்
பா.ஜ.க.+ 180க்கு கீழும்
கம்யூனிஸ்ட்கள் 60க்கு கீழும் பெறுவார்கள் என மிகக் கச்சிதமாக கணிக்க முடிந்தது.

இந்த முடிவை என்னால் எப்படி எட்ட முடிந்தது.
என்னையே எடுத்துக் கொள்வோம்.
நான் இந்தத் தேர்தலில்
எனது கொள்கை கோட்பாட்டிற்கு மிக சமீபத்தில் வரும் கட்சி எது எனப்பார்த்தும்,
எங்களின் தொகுதியில் நிற்கும் நபர் அப்படி எனது கருத்துக்கும்,
எனது கொள்கை கோட்பாட்டிற்கும் அருகில் வரக்கூடிய நபரா
என்று பார்த்தும் ,
சென்ற தேர்தலில் நான் ஆதரவளித்தவர் என்ன செய்தார் நான் ஆதரித்த கட்சி என்ன நிலைப்பாட்டில்
இருந்தது
எப்படி செயல்படடது எனப்பார்த்தும் நிலையான ஆட்சி யாரால் அமைக்கமுடியும்
யார் அமைப்பதாக உறுதியாக கூறுகின்றனர்.
அவர்களின் கூற்றில் உண்மையுள்ளதா?
மக்களுக்கு நல்லது செய்வதாக யார் இருக்கின்றார்
அல்லது
செய்யவாவது முயல்பவர்கள் யார் என்றெல்லாம் பார்த்து
பின்
எனது கொள்கை கோட்பாடான பகுத்தறிவுக்கு ஆதரவு தராவிட்டலும் மதச்சார்பற்ற தன்மையுடன்
விளங்கும் கட்சிக்கே எனது வாக்கு என தீர்மானித்து
இரண்டு கட்சிகளும் மதச்சார்பற்ற தன்மையுடன் இருந்தபடியால் அவற்றில் யாருக்கு வாக்களித்தால்
மத்தியில் நிலையான ஆட்சியை ஏற்படுத்துவார்கள்
மாறாத தன்மையுடன் இருப்பார்கள் என சிந்தித்து
என் ஓட்டு வாங்கிய கட்சி,
நபர்.
தங்களின் கட்சியின் மேலிடத்து முடிவு எனக் கூறி தனது ஓட்டின் மூலம் பிறரை ஆதாரித்து
எனது கொள்கைக்கும் கோட்பாட்டிற்கும்,
நான் வாக்களித்த கருத்திற்கும் எதிராக நான் யார் கட்டாயம் வரக்கூடாது என்ற
உறுதிப்பாட்டோடு இவருக்கு வாக்களித்தேனோ அவருக்கு ஆதரவாக
டெல்லி சென்று
எமக்கு எதிராக நான் யாரை பதவிக்கு வரக்கூடாது என நினைத்தேனோ அவருக்கு ஆதரவாக
வாக்களித்து எம்மை ஏமாற்றும் நபராக இல்லாமல்,
மதவாத சக்திகளை நசுக்கும் கரமாக
,கட்சியாக
பார்த்து வாக்களித்தேன்.
நான் வாக்களிக்கும் வேட்பாளர்கள் தோற்றுப்போவார் என 100 % உறுதியாக தெரிந்தும்
வாக்களித்தேன்.


இதே போன்ற செயல்களைத்தான் இந்தியாவிலுள்ள அதிகப் பெரும்பான்மையான வாக்காளர்கள்
செய்வார்கள் என்ற அடிப்படையில் நான் ஒரு கணக்கு போட்டுப்பார்த்ததில் மேற்படி முடிவு
மிகவும் எளிதாக கிட்டியது .

அந்த கணக்கீட்டிற்கு எப்படி வந்தேன் என்ற
விஷயத்திற்கு வருகின்றேன்.
கேரளாவிற்கு இரண்டாண்டுகளுக்கு முன் டூர் சென்ற போது அங்கிருந்த காம்ரேட்
நண்பர்களிடம் நான் கேட்ட கேள்விக்கு அவர்கள் பதில் சொல்லாமல் டெல்லி மேலிடம் முடிவு
,டெல்லி மேலிடம் முடிவு என்று மட்டுமே கூறினார்கள். ஆனால் அங்குள்ள ஒவ்வொருவருக்கும்
அந்த எண்ணம் ஓடிக்கொண்டுதான் இருந்திருப்பது கேரளா மற்றும் மேற்கு வங்காள தோர்தல்
முடிவுவில் வெளிப்பட்டுள்ளது.

நான் கேட்டேன்.
இங்கு சட்டசபைத் தேர்தலாகட்டும், பாராளுமன்றத்தேர்தலாகட்டும், காங்கிரசும் கம்யூனிஸ்ட்டும்
எதிரும் புதிருமாக நின்று ஒருவரை ஒருவர் போட்டியிட்டு வெற்றி பெறுகின்றீர்கள்.
பின்
டெல்லியில்
காங்கிரஸ் ஆட்சி அமைக்க
நீங்கள் ஆதரவு தந்தால் நீங்கள் எதற்கு ஆதரவளிக்கவில்லையோ அதனை மறைமுகமாக உங்கள் கட்சி
ஆதாரிப்பது தானே உண்மை என்றேன்.
அதற்கு மதச் சார்பின்மைக்காக ஒன்றிணைந்துள்ளது மேலிடம் என்றனர்.
சட்டசபையில் என்றேன்
பதில் இல்லை.

மேலும் நீங்கள் எப்படியும் மத்தியில் ஆட்சியை இப்போது பிடிக்கப்போவது இல்லை.
அப்படியிருக்க நீங்கள் உங்கள் கட்சிக்கு ஓட்டுப்போட்டாலும் அவர்கள் மதச்சார்பின்மைக்கு ஆதரவாக
காங்கிரசுக்கு ஆதரவு தரத்தான்போகின்றனர்.
எப்படியும் காங்கிரசே மத்தியில் ஆட்சியில் அமரும் அப்படியிருக்க நீங்கள் ஏன் சுற்றி
வளைத்து உங்களை ஆள்பவர்களை தேர்ந்தெடுக்கின்றீர்கள்.
நேரடியாகவே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டியதுதானே.
நான் தேர்ந்தெடுத்த கட்சி மத்தியில் ஆள்கிறது என்று தாங்கள் சொல்லிக்கொல்லலாமே என்றேன்.
நீண்ட விவாதத்திற்கு எனது கருத்து மறுக்கப்படாமல் ஆமோதிக்கப்பட்டது.

நான் அப்போதே நினைத்தேன் இதன் பின் விளைவை கட்டாயம் ஒரு கட்டத்தில் கம்யூனிஸ்ட்
சந்திக்கும் என்று.
இந்த தேர்தலிலே அது நடந்து முடிந்து விட்டது.

இவ்வாறுதான் ஒவ்வொரு ஆதரவாளர்களும் நினைத்திருப்பார்கள்.

கேரளாவிலும்,
மேற்கு வங்காளத்திலும் கம்யூனிஸம் பின்னடைவு ஆகவில்லை.
ஆனால்
கம்யூனிஸ்ட் தலைகள் மேற்கொண்ட தவறான அணுகுமுறை தோல்வியை தந்துள்ளது.

ஒன்றை மட்டும் கட்டாயம் இங்கு கூறவேண்டும்.
ஒரு கட்சியின் உண்மையான உறுப்பினர்கள் எப்பொழுதும் உறுப்பினர்களே.
அவர்கள் ஒரு தேர்தலில் வாக்காளர்கள் என்று கூறுவதை விட வேட்பாளர்கள் போன்றவர்கள் என்று
கூறுவதே சரியானது.
ஆனால் ஆதரவாளர்களும் நடுநிலையாளர்களும் அப்படிப்பட்டவர்கள் அல்ல.
தன் கை மையில் வாக்கு வாங்குபவர்களே தங்களை ஆளவேண்டும் என்று விரும்வுகின்றவர்கள்.
மேலும் ஒரு தேர்தலில் ஒரு கட்சி பெறும் வாக்குகள் அந்த தேர்தலின் போது அவர்களுக்கு
கொடுத்த ஆதரவு மட்டுமே.
அதையே ஓட்டு வங்கியாக கணக்கிட்டுக் கொண்டிருந்தால் சரிவையே தரும்.

அப்படி இல்லை என்று கூறும் கட்சிகள்
ஏதாவது ஒரு தேர்தலில் போட்டியிடாமல்
தனது ஆதரவாளர்களையும், தொண்டர்களையும் 49 (O) விற்கு வாக்களிக்க
அறைகூவல் விடட்டும்.
அப்போது விழும் ஓட்டுக்கள் அக்கட்சிக்கு மட்டுமான ஓட்டுவங்கியாக நான் ஏற்றுக் கொள்வேன்.
அதுதானே உண்மை.
கூறிப்பாருங்கள்
உண்மை புரியும்.
உங்கள் ஓட்டு வங்கியும் தெரியும்.


பொதுவாக நடுநிலையாளர்கள் மற்றும் ஆதரவாளர்களின் பெரும்பான்மையான விருப்பம் என்னவாக
இருக்கிறதெனில் தாங்களே ஆள்பவர்கள் தாங்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்வேண்டும் என்பதுவே.
கடந்த தேர்தலில் கம்யூனிஸ்ட்டுகள் என்ன சொல்லி கேரளாவிலும், மேற்கு வங்காளத்திலும் ஓட்டு
கேட்டனர் காங்கிரசை எதிர்த்து தானே.
வெற்றி பெற்றபின் எதிர்க்கட்சியாக அமர்வது தானே முறை. அதைத்தவிர்த்து குறைந்தபட்ச
செயல்திட்டம் என்ற பெயரில் வாக்களித்தவர்களின் குரலை அலட்சியம் செய்தது.
மக்களவை சபாநாயகர் கூட கட்சியின் கொள்கைக் கோட்பாட்டை நிலைப்பாட்டை உடைந்தெரிந்தார்.
மேலும் 4 ½ ஆண்டுகள் கைகோர்த்து பின் சரியில்லை எனக்கூறி பின் மதச்சார்பற்ற கட்சிகளுக்கு
ஆதரவளிப்பதாக கூறி இப்பொழுது தேர்தலை சந்தித்தால்,
கம்யூனிஸ்டு நடுநிலையாளர்களையும், கம்யூனிஸ்டு ஆதரவாளர்களையும், மறைமுக தலைவர்களை
நேரடியாக தேர்ந்தெடுக்கும் நிலைக்கு ஆளாக்கிவிட்டார்கள்.

அங்கு வெற்றி
காங்கிரசுக்கா
கம்யூனிஸ்டுக்காக என்று இல்லை.
நேரடித் தலைவர் தேர்ந்தெடுத்தலுக்கா மறைமுகத் தலைவர் தேர்ந்தெடுத்தலுக்கா என்பதே.
இதில் நேரடித் தேர்ந்தெடுக்கும் முறையே வெற்றி பெற்றுள்ளது.


இதே நிலை தான் U.P. பீகார், A.P. மற்றும் அனைத்து மாநிலங்களிலும்

. ஏன்?

தமிழ்நாட்டில் கூட இதே தான்.
பா.ம.க. விற்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் ஓட்டு போட்டாலும் அவர்கள் வெற்றி பெற்ற பின்
காங்கிரசுக்கே தேர்தலுக்குப்பின் ஆதரவு கொடுக்கப் போகிறார்கள்.
சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மரியாதையும் மதிப்பும்
என நினைத்து மக்கள் செயல்பட்டதுதான் காரணம்.


ம.தி.மு.க. வும் அ.தி.மு.க. வும் பா.ஜ.க.விற்கே ஆதரவு கொடுக்கப் போகின்றனர்.
பா.ஜ.க. மத வாத சக்தி ,
எந்த ஒரு செயல்திட்டமும் இல்லாத நிலையற்ற போக்கு கொண்ட அதைப்பார்த்த மக்கள்
ஆதரவளிக்கவில்லை.


காங்கரசின் வெற்றிக்கு காரணமாக இருந்தது

1. பா.ஜ.க. தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளும் தேர்தலுக்குப் பின் காங்கிரசையே
ஆதாரிக்கும் என்ற பார்வையை உட்கிடையாகவோ வெளிப்படையாகவோ வெளிப்படுத்தியது.
2. மதச்சார்பற்ற தன்மையில் மற்ற கட்சிகளை விட அழுத்தம் திருத்தமாக இன்று இருக்கும் என்ற
மக்களிடையே ஏற்பட்ட நிலையான நம்பிக்கை.
3. நிலையான
நீடித்த அரசைத் தருகின்றோம் என்ற உத்திரவாதம்.
4. பிரதமர் யார் என்ற கேள்விக்கே இடமில்லாமல்
மன்மோகனை முன்னிருத்தியது.
5. மக்களின் நலனை அதிகம் கவரும்படியான செயல்பாடுகளை கொண்ட அரசாக இருந்தது.
6. காங்கிரஸ் தனது சாதனைகளை பட்டியலிட்டு பிரச்சாரம் செய்தது.
7. சோனியாவின் பதவியின் மீது ஆசையில்லாத தன்மை.
8. கடைசியாக தேசப்பாதுகாப்பிற்கு உத்தரவாதம்.


கம்யூனிஸ்டுகள் தோல்விக்கு காரணம்.
1.கொள்கை, கோட்பாடுகளை எறிந்து விட்டு மக்கள் அளித்த வாக்குகளை அவர்களுக்கு எதிராகவே
கூட்டணி தர்மம் என்ற பெயாரில் விட்டுக் கொடுத்ததுவே.
2.நீங்கள் தேர்ந்தெடுக்க இருக்கும் M.P. க்கள் தலைவரை நாங்களே தேர்ந்தெடுக்கின்றோம் என மக்கள்
நினைத்ததுவே.


பா.ம.க. வின் நிலையும் இதுதான்.


இது தவிர பதவி ஆசை ,
சலசலப்பு அரசியல்
ஆகியவற்றால்
லாலு, முலாயம், மாயாவதி போன்றவர்கள் வீழ்ந்தனர்.

இதை மறுக்கும் யாவரும்
அரசியல் அறிவு பெறாதவர்களே. மறுக்கும் கட்சிகள்
அழிவைத் தேடிக்கொள்ளும் கட்சிகளே.


முடிவாக ஒரு சில காரணங்களை மட்டுமே முன்வைத்து கூட்டணி ஏற்படுத்தியோ
அல்லது
வெளியிலிருந்தோ
ஒரு கட்சி ஆட்சியமைக்க அனுமதிக்கும்
எந்த கட்சிகளும் நாளடைவில் பலவீனப்பட்டு
ஆதரவில்லாமல்
தேய்ந்து மறைந்து போவதுடன். தங்களின் கட்சியின் கொள்கை கோட்பாடுகளை
அசிங்கப்படுத்தி
அழிந்து போகும்.
மக்கள் எதற்காக வாக்களித்தனரோ அதற்காக முழுமையாக காலத்திற்கேற்ப செயல்படும் கட்சிகளே
வளர்ச்சி பெறும். மலர்ந்து செழிக்கும்.

கம்யூனிஸ்டு தலைவர்கள் நிலைப்பாடு தான் தோற்றதே தவிர்த்து
கம்யூனிஸம் தோற்கவில்லை. கம்யூனிஸ்டுகளும் தோற்கவில்லை.


கட்சித்தலைமையின் நிலைப்பாட்டினால் கட்சிஆதவாளர்களின் மனோநிலையில் மாறுதல் ஏற்பட்டு
இவர்களுக்கு இந்த முடிவு கிடைத்தது.
இதை மறுப்பவர்களுக்கு இறுதி முடிவு கிடைக்கும்.

.