Wednesday, June 3, 2009

பதவிப்பிரமாணம் எனும் ஜனநாயகப்படுகொலை

.

நொரண்டு : ஐயா , நண்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்களவை உறுப்பினர்களாக
பதவி ஏற்றுக்கொண்டனர் பார்த்தீரா ...

நண்டு: ம் ...இனி அவர்கள் அவர்களின் சபாநாயகரையும் பின் பிரதமரையும்
தேர்ந்தெடுப்பார்கள் இல்லையா....

நொரண்டு : என்ன உளருகின்றீர் ,
அது தான் பிரதமர்
ஏற்கனவே தேர்வாகி ,பதவிப்பிரமாணமும் ஜனாதிபதி மாளிகையில்
எடுத்துக்கொண்டாரே தெரியாதா ?

நண்டு: ஐயா , முறையான நல்ல ஜனநாயக நாட்டில் எப்படி ஒரு அரசை அமைக்க வேண்டுமோ
அதன் அடிப்படையை கூறினேன் .

நொரண்டு : புரியவில்லை ?

நண்டு: தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் ,மக்களவைக்கு
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமே .
அவர்கள் மக்களவை உறுப்பினர்களாவது மக்களவையில் பதவி ஏற்றுக்கொண்ட பின்னரே. அதற்கு
பி்றகுதான் M.P. என்ற அந்தஸ்தைப்பெறுகின்றனர் .
அதுவரை அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களே .
அப்படி M.P. பதவியை தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஏற்றுக்கொண்ட பிறகு மக்களவையாக
அவர்கள் கூடி அதன் தலைவரை தேர்ந்தெடுக்கவேண்டும் .
அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் தன்னையும் , தனக்கு விருப்பப்பட்டவர்களையும்
தன்னை பிரதமராகவும், தனக்கு விருப்பப்பட்டவர்களை மந்திரிகளாகவும் பணியாற்ற அனுமதிக்க
ஜனாதிபதியிடம் உரிமை கோரவேண்டும் .
அவர் அதனை பரிசீலித்து அரசியலமைப்புச்சட்டத்திற்கு உட்பட்டிருக்கும் பட்சத்தில் அதனை
ஏற்று பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும் .
இதுதான் உரிய சட்டநடைமுறை .
இப்படித்தான் அரசியலமைப்புச்சட்டமும் கூறுகிறது .

இதைத்தவிர்த்து முதலில் பிரதமரும் மற்ற மந்திரிகளும் பதவி ஏற்றுக்கொண்ட பின்னர்
மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவி ஏற்பது ஜனநாயகத்தை
கேலிசெய்வதாகும் .

என்னைக்கேட்டால்
இது மிகப்பெரிய
ஜனநாயகப்படுகொலை என்றே செல்லுவேன் .

இதை எப்படி அனுமதிக்கின்றார்கள் என்று எனக்குத்தெரியவில்லை .

தவறான நடவடிக்கை .

நொரண்டு : அதற்கு என்ன செய்யவேண்டும் ?

நண்டு: இதற்கு காரணமானவர்கள் இனி வரும் காலங்களில் இதுபோன்று நடக்காமல்
பார்த்துக்கொள்ள வேண்டும் .

நொரண்டு : யார் இதற்கு காரணமானவர்கள் ?

நண்டு: அரசியலமைப்பில் மிக உயர்ந்த பதவியில் உள்ள அனைவரும் .


கடைசியாக ,
இந்தியா ஜனநாயகத்தின் தொட்டில் .

மிகச்சிறந்த ஜனநாயக நாடாக ,
அனைவருக்கும் நல்ல முன்னுதாரணமாக விளங்கவேண்டும் .

இல்லாதுபோனால் சரித்திரம் நம்மை கேலி செய்யும் .

.