Tuesday, December 9, 2008

'' தமிழகத்து ஒபாமா" ' பராக்.... பராக்.... "

.
. நண்டு : வழக்கமான டீக்கடையில் டீ குடிச்சிக்கிட்டு இருந்தேன் நேத்து. அப்போ அங்கிருத்த ஒரு வயசானவரும் ஒரு எலந்தாரி பையனும் பேசிக்கொண்டதை சொல்லரேன்.

எலந்தாரி : ஏ பெரிசு டீ சாப்டியா ?

பெரிசு : ஏ...என்ன பெரிசுங்கிற....பெரிசுன ....யார் தெரியுமா.... 'புரட்சித்தலைவரை" தான் பெரிசுனு சொல்லனும்...(அவர் முகத்தில் ஒரு பொழிவு)...அந்த மனுசன் இருந்தப்ப எந்த குறையும் இல்ல ...நிம்மதியா வாழ்ந்தோம். ஏழையாய் இருப்பதே சந்தோசமாய் இருந்துச்சு...ஏழைக மேல் அவ்ள பாசம் வச்சிருந்தாரு மனுசன். போனாரு நாமெல்லாம் அனாதைகளாய்டோம். இப்போ ஏழைக வாழ்றதே
ரொம்ப கஸ்டம இருக்கு...அவர் இருந்தா இப்ப எப்படிஇருக்கும்தெரியுமா....அமெரிக்கவுல கூட ஏழைகளுக்கு நல்லகலாம் வந்திருச்சாம்...நமக்கு....?..(பெருமூச்சுடன்)..

எலந்தாரி. : ஏன் ... பெரிசு பொலம்பற ...'எங்க தலைவர்"- 'கருப்பு எம்.ஜி.ஆர்"- 'தமிழகத்து ஒபாமா"- 'புரட்சிக்கலைஞர் " இல்லே ... கொஞ்ச நாள் பொறு உன் கனவெல்லாம் நனவாகும். கமல் உலக நாயகனாத்தான் நடிச்சார் ஆனா 'புரட்சித்தலைவர்" இடத்தில் 'தமிழகத்து ஒபாமாவா" ' புரட்சிக்கலைஞர் " ஒக்காற போறார் ... ஏழைகளே இல்லாம ஆக்குவார் ....கவலைய விடு ...ஓட்ட போடு...ஒரு டீ சாப்பிடு.........(அவர்கள் பேச்சு தொடர்ந்தது)....

. .........எனக்குள் ஆயிரம் யோசனைகளுடன் நகர்ந்தேன்..........


. நொரண்டு : 1. உண்மையில் இன்றுவரை
ஏழைகளின் ரட்சகராக எப்.ஜி.ஆர் மக்களின் மனதில் இருந்து வருகின்றார்-எனக்கு அப்படித்தான்
தோன்றுகிறது.
............. 2.- 'தமிழகத்து ஒபாமாவே வருக வருக"- என சுவரொட்டிகளில் இனிகாணலாம் .
............. 3. உண்மையில் மக்கள்ஏழைகளாகஆக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்என்பதும் மாற்றத்தை விரும்புகின்றனர்என்பதும் தெரிகிறது.
. .............. ....... உஷார் .......உஷார்
. ........ ' தமிழகத்து ஒபாமா" .... 'பராக்".... 'பராக்".....