Thursday, December 24, 2009

ஆட்டுக்குட்டிகளும் ,ஆறாவது அறிவும் -நானும் ,டோமிப்பயலும் .

.


என் நண்பனின் ஊருக்கு
விடுமுறையைக்கழிக்க
சென்றிருந்த பொழுது
நடந்த
ஒரு நிகழ்வு .
இது நடந்து 30 வருடம் ஆகுது .

அப்பல்லாம்
கிராமத்துப்பக்கம்
காலைக்கடனை முடிக்க
வெளிக்காட்டுக்கு
போரது தான் வழக்கம் .

அவங்க ஊருல
ரயில்வே பாதை போகுது .
அத ஒட்டி இருத்தது
வெளிக்காடு.

ரயிலு வர நோரத்துல
எனக்கு
அவசரம் என்றதால்
மட்ட மதியம்
போனேம் .

நாங்க போன சமயம்
ஆடுக
மேஞ்சுக்கிட்டிருந்த்து .

சற்றோ தயக்கத்துடன் நான் .
மேய்ப்பனை பார்த்து .

ஆடுகள் ஏனே
இயல்பில்
தண்டவாளங்களை
கடக்க ஆரம்பித்தன .

சற்று ஆறுதல் மனத்தில்
அந்தப்பக்கம் போய்விடுவார் என.
அந்தப்பக்கம் போய்விட்டால்
எங்களைப்பார்க்க முடியாது என்பதால் .

இரயில் வரும் சப்தம் .

மேய்ப்பவர் ஆடுகளை வேகப்படுத்த

வந்துவிட்டது இரயில் .

ஆடுகள்
அந்தப்பக்கம் போனவைகள்
பார்த்து
இரயிலை
பொறுட்படுத்தாமல்
கடக்க ....

இறக்கும் தனது
சக ஜீவன்களைக்கண்டும்
சென்று கொண்டிருத்தன .


மேய்ப்பவர் கடக்க இருந்த
மீத ஆடுகளை
முடிந்த வரை
கூச்சலிட்டு தடுக்க .

5 ஆடுகள் பலியாயின .


எனக்கு ஒன்றும் ஓடவில்லை .

ஆடிவிட்டது ஆடி .

அவரிடம் சென்றேம் .

மேய்பவரும் சிறுது வருத்தப்பட்டார் .

விபத்தில் தப்பிய
ஆடுகளை
மனம் பதைக்க பதைக்க
கட்டிப்பிடித்தேன் .

அவைகள் இயல்பாக இருந்ததை உணர்ந்தேன் .

எனக்கு வியப்பாக இருந்தது .

நண்பனிடம் கேட்டேன் .

அவன் சொன்னால்

இந்த மந்தை ஆடுகள் இப்படித்தான் .

தனக்கு முன் செல்வதைப்பார்த்து
ஏன் ,எதுக்குனே
தெரியாம பின்தொடரும் .

அதுக்குனு அறிவு வளத்தாது .

முன்னாடி போரதுக்கும் அது கிடையாது .
ஏதே வாழுதுக .

தான் செத்தாலும் கவலைப்படாது ,
கூட இருக்கரதப்பத்தி கவலையும் படாது .


இன்னைக்கு செத்ததுக குறஞ்ச விலைக்கு போகும் .
மத்தது அதிக விலைக்கு இன்னும் கொஞ்ச நா
கழிச்சு போகும்
அவ்வளவு தான் .

குறஞ்ச விலைக்கு போகுதேங்கர
கவலையத்தவுத்து வேற கவலை
மேக்கரவுனுக்குக்கூட கிடையாது என்றான் .

.......


பகுத்தறிவு - 6வது அறிவு .

மனுசந்தான் 6 அறிவு படைத்தவனாம் .
மத்ததெல்லாம் குறைவாம் .

எனக்குத் தெரிந்த
அனைவரிடமும்
நான் கேட்ட ஒரே கேள்வி .

6வது அறிவு பகுத்தறிவு
எனில்
மிதமுள்ள 5 அறிவுகள் என்ன என்ன ?

99% நபர்களால் சரியாக
கூறமுடியவில்லை .

4 தோறுது அவ்வளவே .

நீங்களும் கூறிப்பார்க்களாமே .

பெரும்பான்மையினருக்கு
தெரியவில்லை
என்பதால்
5 அறிவுதானு இனி ஏத்துக்களாமுனு
ஒத்துக்களாமே .


.....


எங்க குட்டி செல்லப்பயல் (பையன் இல்லை)
டோமிப்பயல் .
அவனுக்குனு ஒரு பாட்டு பாடுவேன் .
அது ..
குண்டு ..குண்டு டோமி டா..
குட்டி .. குட்டி டோமி டா..
குட் ..குட் டோமி டா..
குடு குடுனு வருவான்டா ..

இப்படி பாடுனதும்
எங்க குட்டிமா
குடுகுடுனு ஓடிவந்து மடியில
படுத்துக்குவான் .

ரொம்ப செல்லம் ...

அவனுக்கு நிறைய அறிவு .

நல்லா எதையும் புருஞ்சுக்குவான் .


ஏதாவது தப்பு செஞ்சானா
உடனை
காலைத்துக்கி
மன்னிப்பு கேப்பான் .
மேல படத்தில பாருங்க தெரியுதா .

காவலுக்கு கெட்டிக்காரன் .

சுறுசுறுப்பானவன் .

கொஞ்சுனா ....
எப்படி ரசிப்பான் தெரியுமா .

காலடியிலே கிடப்பான் .

அவனுக்கு வேண்டியது

வயித்துக்கு ..... அவ்வளவே ...

அதற்கு அவன் கொடுப்பது

எஜமான விசுவாசம் ...

எஜமான விசுவாசம் ...

எஜமான விசுவாசம் ...

அவனில்லாவிட்டால்
எமக்கு
உண்மையில்
உலகே இருமைதான் .
அவன் தான்
எனக்கு
சகலமும் .


...


இப்ப நாமெல்லாம்
இப்படித்தான்
வளர்ந்துகொண்டு வரேமுனு நினைக்கிறேன் .

அய்யா பகுத்தறிவுப்பகலவரே

6 அறிவுகள்
என்னானு சொல்லாம

6 வது அறிவை பயன்படுத்தச்சொன்னா

நாங்க என்ன செய்ய ...

5 லேயே நிககுரோம் ...


.


.

.

Monday, December 21, 2009

அரிசி தமிழனின் உணவா ?

.

நண்டு: வணக்கம் நொரண்டு


நொரண்டு :ஏன் நண்டு


நண்டு: எனக்கு ஒரு சந்தேகம் ?


நொரண்டு : என்ன ?


நண்டு: அரிசி தமிழரின் உணவா ?


நொரண்டு :புரியவில்லை


நண்டு: அட ,
நமது உணவுகள் பதார்த்தங்கள் அனைத்தும்
தற்பொழுது
அரிசியினால் செய்யப்படுபவைகளே.
அரிசியில்லாமல் நமது உணவு வகைகளே இல்லை என்று கூறலாம் .
அப்படிப்பட்ட அரிசியை நாம் ஆரம்பம் தொட்டே பயன்படுத்தி வருகின்றோமா?

நொரண்டு :RICE என்ற சொல்லே அரிசி என்ற சொல்லில் இருந்து தான் வந்தது என்பதினின்று
நாம் அதற்கு உரிமைகோரலாமே ..

நண்டு: இது தவறான பார்வை .

நொரண்டு : என்ன செல்லவர்ர

நண்டு: அட ,சங்க நுற்களில் அரிசியைப்பற்றி ஒரு குறிப்பு இல்லை .
திணை போன்றவைகள் தான் குறிப்பிடப்பட்டுள்ளது .

நொரண்டு :அப்படியயேனில்
அரிசியை என்றிலிருந்து பயன்படுத்தி வந்தான் ?.

நண்டு: அது குறித்தான ஆய்வுகள் கட்டாயம் தேவையாக உள்ளது .


நொரண்டு :சரி தான் ,உனக்கு என்ன ஆச்சு ?

நண்டு: ஒன்னுமில்லை , இப்போவேல்லாம்
கம்மஞ்சோறு ,
கேப்பக்கழி ,
ராகி கூலு
எல்லாம்
இல்லாமல் போனதோடு
மட்டுமல்லாது ,
அதப்பத்தி பேசரதோ ,
சாப்டதா சொல்ரதோ கூட
கோவலமா நினைக்கப்படுவது என்பது என்னமோ
நாம் எதையோ இழந்த விட்ட மாதிரி இருந்துச்சு அதனால் தான் .

நொரண்டு :அதனால்

நண்டு: நாம் இது போன்று எத்தனை அடையாளங்களை இழந்திருக்கின்றோம்
என நினைக்கும் பொழுது
மனது கனக்கிறது .

நொரண்டு :.....

நண்டு: .......

நொரண்டு :......

.


.


.

Wednesday, December 2, 2009

கட்டாய திருமணப்பதிவு -அரசுக்கு ஒரு வேண்டுகோள்


.













நண்டு: வணக்கம் நொரண்டு ஏதாவது சிறப்புச் செய்திகள் ...

நொரண்டு: நண்டு திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்னூ அரசு
அறிவித்துள்ளது தெரியுமா ?

நண்டு: தெரியும் ,நல்ல விசயம் தானே ....

நொரண்டு: கட்டாயம் என கூறிய பின் ,அதற்கு எளிய வழியை கடைப்பிடிக்காமல் ...

நண்டு: புரியவில்லை

நொரண்டு: இதற்கு முன் நடந்த 99 % திருமணங்கள் பதிவு செய்யப்பட்டதாகவே
வரலாறு இல்லை ,காரணம் தெரியுமா ?

நண்டு: நீயே சொல்லூ ..

நொரண்டு: பதிவு செய்வதிலுள்ள சிக்கல்....
முதலில் ,அதாவது அரசன் அரசிகள் கலத்துல சொத்துருக்கரவர்கள் மட்டுமே மனுசங்க,அவங்க மட்டுமே அரசில் அங்கம் .
நம்ம நாட்டுலையும் சுதந்திரத்திற்கு
முன் அப்படி இருந்தது,
அதனால சொத்திருக்கவங்களின் திருமணம் மட்டுமே திருமணமாக அங்கிகரிக்கப்பட்டது .
அதனால் சொத்து எங்கு பதிவு செய்யப்படுகிறதோ இங்கு திருமணமும் பதிவு செய்யப்பட்டது .
அப்பத்தானே சொத்துருக்கரவர்கள் மட்டுமே குடிமகனாக அங்கிகரிக்க முடியும் ....

நண்டு: சரி பழைய கதை இருக்கட்டும் ...

நொரண்டு: சுதந்திரத்திற்குப்பின் அப்படியே பலவிசங்கள் தொடர்ந்தது போல் இதிலும் தொடந்தது ...

நண்டு: பழைய கதையவிடு ...இப்ப என்ன சொல்லவர ...

நொரண்டு: அட , மக்களாட்ச்சியில் சட்டத்தின் நன்மைகள் எளிமையாக மக்களை சென்றடைய
வேண்டும் ...

நண்டு: அதற்கு இப்ப என்ன ?

நொரண்டு: இந்த சட்டத்தின் நன்மைகள் எளிமையாக மக்களை சென்றடைய வேண்டும் என்பதுவே
எனது கோரிக்கை .

நண்டு: எப்படி ..

நொரண்டு: பிறப்பு ,இறப்பை எப்படி உள்ளாட்சி அமைப்புகளில் பதிவு செய்கின்றேமே
அதுபோலவே திருமணமும் உள்ளாட்சி அமைப்புகளிலேயே பதிவு செய்ய அனுமதிக்கலாமே .
மேலும் ,எதற்கொள்ளாமோ இலவசம் இருக்கும் பொழுது இதற்கு மட்டும் 100 எதற்கு . மனமொத்து
காதல் திருமணம் செய்பவர்களிடம்
சட்டம்''4(C)-ல் திருமண அழைப்பிதழ் அல்லது திருமணம் நடைபெறும் இடத்தை குறிப்பிடும்
ஏனைய ஆதாரம் ''
என கேட்டால் எங்கிருத்து வரும் , மேலும் , இது தான் திருமணத்தை உறுதி
செய்கின்றதா .

இப்படித்தான் பழைய பதிவு முறையில் இருந்த வரம்பிற்கு மீறிய அரசர் காலத்து
கட்டுப்பாடுகளால் யாரும் அந்தப்பக்கமே போனதில்லை . திரும்பவும் சற்று சிறிய
மாற்றத்துடன் தொடர்வது . அதற்கு தண்டனை எனக்கூறுவது ஜனநாயகமன்று .

நண்டு: அதற்கு என்ன செய்யச்சொல்ற ...

நொரண்டு: உள்ளாட்சி அமைப்பிடம் பதிவிற்கான அதிகாரத்தை கொடுத்து ,இலவசமாக
பதிவுச்சான்றிதழ் வழங்குவதே சாலச்சிறத்தாக இருக்கும் .
அதை அரசு செய்தால் நலமாக இருக்கும் .

நண்டு: மிக நல்ல யோசனை தான் .
அரசுக்கு ஒரு வேண்டுகோளாக நான் இதனை வைக்கின்றேன் .
இதைப்படிப்பவர்களும் வைப்பார்கள் என நம்புகின்றேன் .
அரசும் இதனை பரிசீலிக்கும் என
நம்புகின்றேன் .


நொரண்டு: எனவே,
. இதன்முலம் ஒரு வேண்டுகோள் ::
. தமிழக முதல்வர் அவர்களே ,
. மிக நல்ல பலனை மக்கள் அடைய ...
. உள்ளாட்சி அமைப்பிடம் திருமண பதிவிற்கான
அதிகாரத்தை கொடுத்து ,
இலவசமாக பதிவுச்சான்றிதழ்
வழங்க வேண்டுமாய்
மக்களின் சார்பாக வேண்டுகிறேன் .
தாங்கள் செய்வீர்கள்
என
நம்புகின்றேன் .





.



.


.

Monday, August 17, 2009

நீதித்துறையில் மறைக்கப்படும் ஜனநாயகத்தத்துவம் .

.


.
நண்டு : டெல்லியில்
நேற்று (16.8.09)நடந்த முதல்-மந்திரிகள்
மற்றும்
ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகள் மாநாட்டில்
பிரதமர் பேசியதை படித்தாயா ? .


நொரண்டு : உண்மையில் ஆச்சரியப்பட்டுவிட்டேன் .
அழகான ,
அர்த்தம் பொதிந்த பேச்சு. எதிர்பார்க்கவில்லை
இப்படி ஒரு அற்புதமான பேச்சை அவரிடமிருந்து .
வாழ்த்துக்கள் பிரதமர் வாழ்த்துக்கள் .


நண்டு : என்ன ஆச்சரியமா இருக்கு ,
நீ வாழ்த்துவது என்றால் ?
என்ன காரணம் ?


நொரண்டு : கோர்ட்டின் மீது மக்கள் நம்பிக்கை
வைக்கும் அளவிற்கு நீதித்துறை
செயல்படவேண்டும் ,விரைவு நீதிமன்றங்கள்
விரைவாக தீர்ப்பு வழங்கவேண்டும் ,
தண்டனைக்காலத்தைவிட ஜெயிலில்
பெருமளவினர் அதிக காலம் தண்டனை
அனுபவித்து வருகின்றனர் .
வருத்தம் அளிக்கின்றது - என கூறியுள்ளாரே
அதனால்தான் .

நண்டு : இது எல்லாத்துக்கும் தெரிந்ததுதானே .


நொரண்டு : ஆம் ,
ஆனால் ,இதைக்கூட கூறத் தயங்கினவர்களைத்தான்
அல்லது
இவ்விசயத்தில் தலையிடாதவர்களைத்தான்
பார்த்திருக்கின்றேன் .


நண்டு : எப்படி ?


நொரண்டு : 'கோர்ட்டின் மீது மக்கள்
நம்பிக்கை வைக்கும் அளவிற்கு
நீதித்துறை செயல்படவேண்டும் '
என்ற அவரின் பேச்சிற்கு
நீ என்ன அர்த்தம் புரிந்துகொண்டாய் சொல் .


நண்டு :'கோர்ட்டின் மீது மக்கள்
நம்பிக்கை வைக்கும் அளவிற்கு
நீதித்துறை செயல்படவேண்டும் ' அவ்வளவே .


நொரண்டு : அட நண்டு
வெளிப்படையான பாமரப்பார்வை அது .
அதற்கு அர்த்தம் -நீதித்துறை
மக்கள் நம்பிக்கை வைக்கும் அளவிற்கு
செயல்படவில்லை,
நீதித்துறையின் மீது
மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் .
மக்கள்
நம்பிக்கை வைக்கும் அளவிற்கு
செயல்படாத நீதித்துறை
நமது ஜனநாயக நாட்டில் உள்ளது .
இனி அப்படி செயல்படக்கூடாது
'கோர்ட்டின் மீது மக்கள்
நம்பிக்கை வைக்கும் அளவிற்கு
நீதித்துறை செயல்படவேண்டும் ' என்பதுவே .


நண்டு : அப்படியா ...?
உண்மையில் அப்படித்தான் உள்ளதா ..


நொரண்டு : நான் ,நீ
பேசிக்கொண்ட பேச்சுல்ல இது ,
முதல்-மந்திரிகள்
மற்றும்
ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகள்
முன்னிலையில்
பிரதமர் பேசியது .
ஆதாரங்கள் இல்லாமல்
பிரதமர் அவ்வாறு பேசியிருக்க மாட்டார் .


நண்டு : நீதித்துறையின் மீது
மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் எனில் ?


நொரண்டு : ஜனநாயகம்
குழிதோண்டி புதைக்கப்பட்டு வருகின்றது
என அர்த்தம் .


நண்டு : நீ என்ன சொல்ற ?


நொரண்டு :பிரதமரே பேசியிருக்கும் பொழுது
நான் என்ன சொல்ல .
அவர் கூற்றில் உண்மை இல்லாமல இருக்கும் .
அரசு தான் உரிய நடவடிக்கை
துரிதமாக மேற்கொள்ள வேண்டும் .
எடுக்கும் என நம்புகின்றேன் .

நண்டு : எப்படிப்பட்ட நடவடிக்கைகள்
இருந்தால் நலமாக இருக்கும் என எண்ணுகின்றாய் .


நொரண்டு : நண்டு ,
மன்னராட்சியில் ,
அரசர் கேள்விக்கு அப்பாற்பட்டவர் .
அரசர் தவறே செய்யாதவர் ,
அரசர் செய்யும் தவறுகள் எதுவும் தவறுகள் அல்ல,
அரசன் என்ன நினைக்கின்றனே
அதை
அப்படியே
நீதிமன்றம் பிரதிபலிக்கவேண்டும் ...
இப்படியான கோட்பாடுகளினால்
நீதித்துறை முழுக்கமுழுக்க கட்டமைக்கப்பட்டது .
மிகவும் மிகவும் கவனமாக.
அரசனிடமிருந்து ,
அரசரின் பிரதிநிதிகளுக்கு ,
நீதி - நீதித்துறையாக மாற்றப்பட்டபொழுது .
அதனால்,
மன்னராட்சியில்
நீதிபதிகளும்
எக்கேள்வி்க்கும் அப்பார்ப்பட்டவர்கள் .
அதனால் , அவர்களிடம் நான்
என்ற எண்ணம் அழுத்தம் திருத்தமாக இருந்தது .
அவ்வாறு
இருக்கும் படியே திட்டமிட்டு
அமைக்கப்பட்டிருந்தது .
ஆனால் , ...


தொடரும் ...

.
.

.

Saturday, August 15, 2009

தமிழனால் அரை நிர்வாணப்பக்கிரியான காந்திஜி

.


நண்டு : இன்று 63வது சுதந்திர தினம் .


நொரண்டு : ஆம் ,
மிகச்சிறந்த ஜனநாயக நாடான இந்தியா, உலகிலே மிகச்சிறந்த
மக்காளாட்சிக்கு
எடுத்துக்காட்டாய் ,
மணி மகுடமாய் திகழ நாமெல்லாம் உறுதுணையாக இருக்க வேண்டும் .


நண்டு : எப்படி எவ்வாறு ?


நொரண்டு : நாம் நமது தலைவர்களின் எண்ணங்களை நிறைவு செய்யவேண்டும் .


நண்டு : புரியவில்லை உதாரணத்திற்கு எதாவது ....?


நொரண்டு : ஐயா ,நண்டு நான் எதச்சென்னாலும் நீ ஏத்துக்கப்போறதில்லை .
நான் ஒருவரைப்பத்தி ஒன்றைச்சொல்ல அவரைப்பத்தி ஏதோ எங்கொங்கோ அவ்வப்போது படித்ததைவைத்து
. அய்யகோ அவர் அப்படிச்சொல்லவில்லை , அதற்காக அவர்அப்படிச்செய்யவில்லை .
அவர்அப்படிப்பட்டவரும் இல்லை . எனக்கு நல்லா தெரியும் . ஏன்னா எனது அறிவுக்கு
இன்றுவரை நீங்கள் கூறும் விசயம் எட்டாமலே இருக்குது . அது எப்படி எனக்கே தோன்ற நல்ல
சிந்தனைகள் வரமுடியும். அப்படியே வந்தாலும் அதை எப்படி ஏத்துக்கறது என
உம்மைப்போன்றவர்கள் திரிகின்றீர் .உங்க புத்தி ஏந்தான் இப்படி ஆகிவிட்டதோ தெரியவில்லை .


நொரண்டு : உன் வேலை என்ன , அதச்செய்யப்பா ,அதவிட்டுட்டு என்னைப்போன்றவர்களை
சுயநலவாதிகள்னு ஏன் பேசிக்கிட்டு இருக்கே . சரி சொல்லுப்பா கேக்கிறேன் .


நண்டு : காந்தியடிகளை ''அரைநிர்வாணப்பக்கிரி '' னு யார் கீண்டல் செய்தார்கள்
தெரியுமா ?


நொரண்டு : சர்ச்சில் தானே . ஆ..ம்...மையா ..


நண்டு : நான்
எதச்சொல்லவர்றேன் ,நீங்க எத நெனச்சுக்கரீங்க ,மெத சொல்லவந்ததை கேளுங்க .


நொரண்டு : எதையும் புரியிர மாதிரி சொல்லு ...


நண்டு : தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் மனிதன் மனிதனை அடிமைப்படுத்தும்
நிலையினை , மனிதனை மனிதனாக பார்க்காத தன்மையை , அதனின்று மனிதனாக விடுதலை பெற
துடித்துக்கொண்டிருந்த தமிழக ஒப்பந்தக்கூலிகளைக்கண்டார் . மற்றவர்களைப்போல் அல்லாது
அவர்கள் கொள்கைப்பிடிப்புடனும் , அதே நேரத்தில் அகிம்சை வழிப்போரட்டத்தில் ஆழ்ந்த
நம்பிக்கையும் வைத்து இயங்கிவந்தனர் .மேலும்,
அவர்கள் மனிதனை மனிதனாகப்பார்க்கும் மக்களாகவும் இருந்தனர் . அவர்களின் தியாகம் ,உண்மை
,உறுதி,விடுதலை உணர்வு ஆகியவற்றைக்கண்டு ஆச்சரியப்பட்டார் . இது அவரை மிகவும்
கவர்ந்தது . அவர்களின்பால் மிகுந்த அன்பும் ,பாசமும் கொண்டார் . அகிம்சைப்போராட்டம் இங்கு
தான் இப்படித்தான் ஆரம்பமானது .
தென்னாப்பிரிக்காவிலிருந்த தமிழர்களின் ஆதரவு எப்பொழுதும் காந்திக்கும் ,அவரின்
போராட்டத்திற்கும் உந்து சக்தியாக இருந்ததோடு மட்டுமல்லாமல் கடைசி வரை உறுதுணையாகவும்
இருந்தது . இது தான் காந்தியை இந்திய விடுதலைப்போராட்டத்திற்கே உந்திச்செல்லும்
சக்தியாகவும் ஆனது .


இந்திய சுதந்திரப்போராட்டத்திற்கு தன்னை முழுவதும் ஈடுபடுததிக்கொள்ள காந்தியடிகள்
இந்தியா முழுவதும் பயணம் செய்கின்றார் .
அவர் தென்னாப்பிரிக்காவில் கண்ட தமிழர்கள் எப்படிப்பட்டவர்கள் ? .
மனிதன் மனிதனை அடிமைப்படுத்தாத , மனிதனை மனிதனாக பார்க்கும் தன்மையுடையவர்களை .
தென்னாப்பிரிக்காவிலேயே அவர்கள் அப்படியெனில் தமிழகத்தில் , அவர்களின் தாயகத்தில்
சிறப்புடன் இருப்பர் என்றே எண்ணி இருந்தார் .

தனது போராட்டத்திற்கு தென்னாப்பிரிக்காவில் எப்படி தமிழர்கள் உந்து சக்தியாக
இருந்தார்களே .இங்கும் தமிழர்கள் தனக்கு மிகவும் உறுதுணையாக இருப்பார்கள் என்ற எண்ண
ஓட்டத்தில் இருந்த காந்தி தனது பயணப்படி தமிழகம் வருகின்றார் .


ஒரு எளிய கிராம வாசியை பார்க்கின்றார் .

அவர் பார்த்த தமிழனின் நிலை அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது .

மிகப்பெரிய மனித நேயம் கொண்ட இவர்களின் நிலை இதுவா என மிகவும் மன வேதனை
அடைந்தார் .தங்களின் பண்பாடு ,கலாச்சாரம் இன்ன பிற அடையாளங்களை தொலைத்துவிட்டு
இருக்கின்றனறே இப்படி என மனமொடிந்தார் .

சிந்து சமவெளிப்பரப்பில் பிறந்த காந்திக்கு தமிழனின் பண்பாடும் ,நாகரிகமும்
இரத்தத்தில் கலந்த ஒன்றாகத்தானே இருக்க முடியும் .

தங்களின் அடையாளங்களை என்று இந்த மனித நேயர்கள் முழுமையாகப் பொறுகின்றார்களே ,அது
வரை அவர்களைப்போல தானும் ஆடை உடுத்துவேண்டும் என்று உறுதி பூண்டார் .கத்தியவார்
ஆடைகளான (KATHIAWARI DRESS) வேட்டி, நீண்ட குர்த்தா,தலைப்பாகை ஆகியவற்றைத் துறந்து
அரை வேட்டிக்கும் மேல் துண்டுக்கும் மாறினார் தமிழனால் மனித நேயத்திற்காக .
கதராடைக்கு முக்கியத்துவம் கொடுத்தார் .கையில் ராட்டையுடன் கடைசி வரை தனது
எண்ணத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தார் .

இதனாலேயே ''அரை நிர்வாணப்பக்கிரி '' என்ற ஏச்சுக்கும் ஆளானார் .


நொரண்டு : அப்ப ,தமிழனால்தான் அரை நிர்வாணப்பக்கிரியானார்னு சொல்ற


நண்டு : நான் சொல்லவில்லை இது உண்மை ,வரலாறு .

முடிவுக :

தமிழன் தனமானத்துடன் ,தனித்துவத்துடன் தனது நிலையில் உயர்ந்து விளங்கும் காலம் வரை
காந்தி ''அரை நிர்வாணப்பக்கிரி '' யாகவே அறியப்படுவார் என்பதுவே உண்மை .


.

Sunday, July 5, 2009

ஈரோடு, Mhow -ல் சுப்ரீம் கோர்ட் கிளை -அரசிடம் கோரிக்கை

முன்பு
நான் ஈரோடு சென்று
மதுரை திரும்பும்பொழுதெல்லாம்
எனது நண்பரும் ,'
'நவின ஊடகம் '' ஆசிரியரும் ,
வழக்கறிஞருமான எஸ் .இளங்கோவன் ,
என்ன இந்த முறையாவது '' பெரியார் இல்ல''த்தை கண்டுவந்தீரா? என்பார் .
இல்லை என்ற பதிலே எப்பொழுதும் .

பொதுவாகவே, ஒருவரின் பிறந்த இடத்தையோ,வாழ்ந்த இடத்தையோ,மறைந்த இடத்தையோ பார்ப்பதால்
என்ன பயன் ?
ஒன்றும் இல்லை என்ற கருத்து எனதாக இருந்தது .

ஒரு வழக்கு விசயமாக ஈரோடு காவல்நிலையத்திற்கு சென்ற பொழுது ஆய்வாளர் வெளியே
சென்றிருந்த படியால் சற்று காலாற நடந்து வரலாம் என நண்பர் கூற ,நடக்க அங்கே
''பெரியார் நினைவில்ல''த்தைக் கண்டு உள்ளே சென்றோம் .
பெரியார் பற்றிய ஒரு நல்ல புரிதல் மேலும் .
பகுத்தறிவினால் மனித குலத்தின் உயர்விற்கு உழைத்த அவரின் தொண்டு நேரடியான
பாதிப்பை ஏற்படுத்துயது .
ஓரு ஆகச்சிறந்த இலக்கிய படைப்பு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துமே அத்தகைய பாதிப்பை
ஏற்படுத்தியது .
அதற்கெல்லாம் காரணம் எனது நண்பர் தான் .
இலக்கியச் சந்திப்புகள் ,பகுத்தறிவுக்கூட்டங்கள் ஆகியவற்றில் ஆர்வத்துடன் கலந்துகொள்ளும்
அவர் ,நிறைய புத்தகங்களை இரவல் வாங்கிச்செல்வார்.
பின் நீண்ட கேட்பிற்குப்பின் திருப்பித்தருவார் .
நானும் நினைத்துக்கொள்வேன் ,படிப்பதற்கு வேண்டி காலம் தாழ்த்துகின்றார் என .
இருந்தலும் அவர் செறிவேறிய தன்மையில்லாமலே இருந்தார் .
குடும்பச்சூழல் என நினைத்துக்கொண்டேன் .
'' பெரியார் இல்ல''த்தை விட்டு வெளியே வந்த அவர் ,காவல்நிலையத்தின் பணிமுடிந்து
வெளியே வரும் வரை எதுவும் பேசவில்லை .
சரி ,கிளம்புகின்றேன் என்றேன் .
''பெரியார் மன்றம் '' இதற்கு பின்புறம்தான் இருக்கு சென்று வரலாம் என்றார் .
ஏன் என்றேன்.
நூலகத்தில் புத்தகம் எடுக்கலாம்னு ...என்றார் .
என்ன புத்தகம் வேண்டும் என்றேன்.
எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்றார் .
என் கையில் '' பெரியார் -ஆகஸ்டு 15'' மட்டும் தான் உள்ளது என்றேன் .
சரி கொடுங்கள் என்றார் .
இதை ஏற்கனவே தாங்கள் படித்தது தானே என்றேன் . மிகப்பெரிய தயக்கத்துடன் ,மன்னிக்கவும் ,
நீங்கள் கொடுக்கும் அனைத்துப்புத்தகங்களையும் வாங்கிச்சென்று அன்றே படிக்க நினைப்பேன் .
ஆனால் ,ஒரிரு பக்கங்கள் மட்டுமே படிப்பேன் அவ்வளவே .
ஆனால் ,
இன்று 'பெரியார் நினைவில்ல''த்திற்குச்சென்று பார்த்த பிறகு எனக்குள் ஒரு பொறி ஏற்பட்டது
போன்று உணர்கிறேன் .
எவ்வளவு பெரிய மனிதர் ''பெரியார் '' .
நம் காலத்தில் வாழ்ந்த அவரை தெரிந்துகொள்ளாமல் இருப்பது மூடத்தனமல்லவா ? என்ற எண்ணம்
ஏற்பட்டது என்றார் .
எனக்கு அப்பொழுது தான் ஒரு பொறி .
நாம் அப்படி இருக்கலாம் .
ஆனால்,சமுதாயத்தில் பலர் அப்படியில்லை .
அப்படிப்பட்டவர்களுக்கு ...???
அப்படிப்பட்டவர்களுக்காகவே ,
உயர்ந்த மனிதர்கள் தோன்றிய இடங்களில் அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கக்கூடிய
விதத்தில் மிகப்பெரிய அமைப்புகள் ஏற்படுத்துவதன் மூலம் அந்த அமைப்பிற்கு வருகை
தருபவர்கள் கட்டாயம் அந்த உயர்ந்த மனிதர்களைப்பற்றியும் ,அவராது கொள்கை கோட்பாடுகளையும்
அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கும் . மேலும் ,ஏன் இந்த அமைப்பு இங்கு வந்தது ? என்ற
கேள்விக்கு ,பகுத்தறிவும் ,மனித நேயமும் என்ற பதில் அந்த அமைப்பில்
பணிபுரிபவர்களிடமும் ,அந்த அமைப்பிற்கு வருகை தருபவர்களிடமும் , அந்த அமைப்பை
அலங்கரிப்பவர்கள் மத்தியிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் .மேலும் , அந்த அமைப்பின்
பயன்பாடு மக்களை அந்த உயர்ந்த மனிதர்களை நினைத்துப்பார்க்க ஒரு சந்தர்ப்பத்தை
ஏற்படுத்தும் என்பது திண்ணம் என்ற எண்ணம் ஏற்பட்டது .

பொதுவாக ,ஒரு ஊரில் மிகப்பெரிய அமைப்புகளில் பணியாற்ற வருபவர்கள் அந்த ஊரின்
சிறப்பை அறிந்துகொள்வதும் ,சிறிதளவாவது அதனில் செயல்பட நினைப்பதும் ,மேலும்
,அவ்வவ்வூரில் அவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் அவ்வூரின் சிறப்பை பேசும் போதெல்லாம்
மனதில் அதன் தாக்கம் ஏற்பட்டு இயங்குவதும் இயல்பாகும் -இது உளவியல் .

இத்தருணத்தில் தான்
சுப்ரீம் கோர்ட் கிளைகளை
நாட்டின் முக்கிய நகரங்களில் அமைக்க
சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளதை படித்தேன் .
பிற நகரங்களில் சுப்ரீம் கோர்ட் கிளைகளை அமைப்பதற்கு பதிலாக
பெரியார் பிறந்த ஈரோட்டிலும் ,
அம்பேத்கார் பிறந்த *Mhow* விலும்
அந்த மனித நேய தலைவர்களுக்கு
நீதித்துறையின் மூலமாக கொடுக்கும்
சரியான மரியாதையாக இருக்கும் .
இதன் மூலம் அவர்களை பலதரப்பட்ட மக்கள் மேலும் அறிந்து கொள்வர் என்பது உண்மை .

ஆகவே ,
ஈரோடு
மற்றும்
Mhow -ல்
சுப்ரீம் கோர்ட் கிளைகளை
அமைக்க அரசிடம்
கோரிக்கை வைக்கிறேன் .
தாங்களும்
கோரிக்கைகள் வைக்க வேண்டுகிறேன் .


எனவே ,
பகுத்தறிவுப் பகலவன் பெரியார் பிறந்த மண்ணை , சட்டமேதை அம்பேத்கார் பிறந்த மண்ணை
மதிக்கவேண்டும் ,
அவர்களின் புகழினை பரப்ப வேண்டும் ,
அவர்களின் கொள்கை கோட்பாடுகளை வளர்க்கவேண்டும்
என்ற எண்ணமுள்ள
ஒவ்வொரு மனிதரும்
அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுகிறேன் .


காந்திக்கும் அப்படியே ...



என
நண்டு .


.


.


.

Wednesday, June 3, 2009

பதவிப்பிரமாணம் எனும் ஜனநாயகப்படுகொலை

.

நொரண்டு : ஐயா , நண்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்களவை உறுப்பினர்களாக
பதவி ஏற்றுக்கொண்டனர் பார்த்தீரா ...

நண்டு: ம் ...இனி அவர்கள் அவர்களின் சபாநாயகரையும் பின் பிரதமரையும்
தேர்ந்தெடுப்பார்கள் இல்லையா....

நொரண்டு : என்ன உளருகின்றீர் ,
அது தான் பிரதமர்
ஏற்கனவே தேர்வாகி ,பதவிப்பிரமாணமும் ஜனாதிபதி மாளிகையில்
எடுத்துக்கொண்டாரே தெரியாதா ?

நண்டு: ஐயா , முறையான நல்ல ஜனநாயக நாட்டில் எப்படி ஒரு அரசை அமைக்க வேண்டுமோ
அதன் அடிப்படையை கூறினேன் .

நொரண்டு : புரியவில்லை ?

நண்டு: தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் ,மக்களவைக்கு
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமே .
அவர்கள் மக்களவை உறுப்பினர்களாவது மக்களவையில் பதவி ஏற்றுக்கொண்ட பின்னரே. அதற்கு
பி்றகுதான் M.P. என்ற அந்தஸ்தைப்பெறுகின்றனர் .
அதுவரை அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களே .
அப்படி M.P. பதவியை தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஏற்றுக்கொண்ட பிறகு மக்களவையாக
அவர்கள் கூடி அதன் தலைவரை தேர்ந்தெடுக்கவேண்டும் .
அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் தன்னையும் , தனக்கு விருப்பப்பட்டவர்களையும்
தன்னை பிரதமராகவும், தனக்கு விருப்பப்பட்டவர்களை மந்திரிகளாகவும் பணியாற்ற அனுமதிக்க
ஜனாதிபதியிடம் உரிமை கோரவேண்டும் .
அவர் அதனை பரிசீலித்து அரசியலமைப்புச்சட்டத்திற்கு உட்பட்டிருக்கும் பட்சத்தில் அதனை
ஏற்று பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும் .
இதுதான் உரிய சட்டநடைமுறை .
இப்படித்தான் அரசியலமைப்புச்சட்டமும் கூறுகிறது .

இதைத்தவிர்த்து முதலில் பிரதமரும் மற்ற மந்திரிகளும் பதவி ஏற்றுக்கொண்ட பின்னர்
மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவி ஏற்பது ஜனநாயகத்தை
கேலிசெய்வதாகும் .

என்னைக்கேட்டால்
இது மிகப்பெரிய
ஜனநாயகப்படுகொலை என்றே செல்லுவேன் .

இதை எப்படி அனுமதிக்கின்றார்கள் என்று எனக்குத்தெரியவில்லை .

தவறான நடவடிக்கை .

நொரண்டு : அதற்கு என்ன செய்யவேண்டும் ?

நண்டு: இதற்கு காரணமானவர்கள் இனி வரும் காலங்களில் இதுபோன்று நடக்காமல்
பார்த்துக்கொள்ள வேண்டும் .

நொரண்டு : யார் இதற்கு காரணமானவர்கள் ?

நண்டு: அரசியலமைப்பில் மிக உயர்ந்த பதவியில் உள்ள அனைவரும் .


கடைசியாக ,
இந்தியா ஜனநாயகத்தின் தொட்டில் .

மிகச்சிறந்த ஜனநாயக நாடாக ,
அனைவருக்கும் நல்ல முன்னுதாரணமாக விளங்கவேண்டும் .

இல்லாதுபோனால் சரித்திரம் நம்மை கேலி செய்யும் .

.

Monday, June 1, 2009

வெளிநாட்டினர் என தாக்குவது ஏன் ?

.


குடும்பம் - அரசின் அடிப்படை அலகு .
தனி மனிதன் - ஆரம்பம் .
நாடு அதன் அதிகார வரம்பெல்லை .

தற்பொழுதுள்ள அரசுகள் எதுவும்
குடும்பம் என்ற அமைப்பைப் பார்ப்பதேயில்லை.

மாறாக நிறுவனங்களையே பார்த்துக்கொண்டுள்ளன .

உலகில் இன்று ஏற்பட்டுள்ள
கொடும் பொருளாதார நெருக்கடிக்கும்
இனி ஏற்படப்போகும் கடுமையான பல நெருக்கடிகளுக்கும்
இதுவே முதல் மற்றும் முடிவான காரணமாக அமையப்போகிறது .

உலகில் குற்றவியல் மற்றும்
பிற சட்டங்கள் யாவும் பெரும்பாலும் தனி மனிதனை நோக்கி மட்டும் செயல்படும் நிலையில் ,
நிறுவனங்கள் அதனின்று தப்பி
குடும்பம் என்ற அமைப்பை சுரண்டி ,சீரழித்து
அரசு என்ற அமைப்பினை நெருக்கடிக்கு உள்ளாக்குகின்றன.
அரசுகளும் இதனை உணராமல்
நிறுவனத்தன்மையினால்
தவறான பாதையில் கண்மூடித்தனமாக
சென்றுகொண்டுள்ளன .
இவ்வாறு சென்றுகொண்டிருக்கும் நிலையில்
பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு தவிக்கும்
அல்லது
பொருளாதார நெருக்கடி கண்டு
அஞ்சும் குடும்பத்தின்
குரல்வளை இருக்கத்திற்கு
ஆளாகும் தனிமனிதர்கள்
(குறிப்பாக இளைஞர்கள் )
சமுதாயக்காற்றினால் ஒன்றிணைந்து
வெளிப்படுத்தும் சிறு எதிர்ப்பே
ஆஸ்திரேலியா
மற்றும்
பிற நாடுகளி்ல் ,மாநிலங்களில்
பிற நாட்டினர் ,இனத்தினர் ,மாநிலத்தினர்
என பாகுபாடு பார்த்து
தாக்குதல்கள் .

இப்படி உலகம் முழுவதும் தாக்குதல்கள்
அதிகரித்துவரும் நிலையில்
அரசுகள்
இப்படிப்பட்ட விசயங்களில்
அரசியல் கலக்காமல்
அணுகுவது தான்
சிறந்த நாகரிகமான நடவடிக்கையாக இருக்கும் .
அது தவிர்த்து அரசியலாக்க முயன்றால்
அப்படி முயல்பவர்கள்
மனித குலத்தை நாசம் செய்பவர்களாவார்கள் .

மேலும் ,
அரசுகள் தங்களின் தவற்றை
திருத்திக்கொள்ளாமல்
சட்ட நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் மட்டுமே
அடிப்படையான பிரச்சனை
தீர்ந்து விடுவதில்லை .
அடிப்படையான பிரச்சனையை
சரி செய்வது சற்று கடினம் தான்
எனினும்
அதனை முதலில் செய்யவேண்டும்
அதனைச்செய்யாமல் இருக்கும்
எந்த அரசும்
அதன் அதிகாரவரம்பெல்லையை
சிதைக்க தானே வழிவகுக்கும் அரசாகிவிடும் .


.

Thursday, May 21, 2009

வருந்தத்தக்க இந்த முடிவு இப்படித்தான் கிடைத்தது இவர்களுக்கு .

.

( இந்த கட்டுரை நடுநிலைமையாகவே எழுதப்பட்டது. யாரையும் ஆதாரித்தோ, எதிர்த்தோ அல்ல.
ஆகவே விருப்பு வெறுப்பற்று படிக்கவும். )


அரசியல் அறிவு பெறாதவன் மூடன் -
என நான் எவ்வளவு கூறினாலும்
தங்களுக்கு உள்ள செல்வாக்கு எதனால்
என்ற அறிவு சிறிதுகூட இல்லாமல்
கண்மூடித் தனமாக
தாங்கள் என்ன செய்தாலும்
தொடர்ந்து மக்கள் ஆதரிப்பர்
என்ற ஒரு தவறான கணிப்பில் செயல்படும்
சில, பல காரணங்களினால்
அரசியல் கட்சிகள் என்ற அங்கீகாரத்தில்,
அரசியல் கட்சிகளின் பதவிகளில்
அமர்ந்து அலங்கரித்துக்கொண்டுள்ள
இந்தியாவிலுள்ள
அரசியல் கட்சித் தலைவர்கள்
தவறாக செயல்பட்டாதால் தான்
அவர்கள் அனைவரும் மண்ணைக் கவ்வியதோடு மட்டுமல்லாமல்
அவர்களின் கட்சிகளும் மிகப்பெரிய சரிவை
ஏன்?
வீழ்ச்சியை கொடுத்துள்ளனர்.

நமக்கு ஏன் மக்கள் வாக்களிக்கின்றனர்
என்ற அறிவு சிறிது கூட இல்லாமல் தேர்தலில் ஜெயித்து விடுவோம் என்ற நப்பாசையுடன் மட்டும்
இந்தியாவிலுள்ள ஒவ்வொரு கட்சியும் போட்டியிட்டதால்தான் இவ்வளவு பெரிய சரிவை பெற்றனர்.


என்னைக் கேட்டால்
ஒரு சில தலைவர்களைத் தவிர இந்தியாவிலுள்ள பெரும்பான்மையான
ஏன் அனேகமான அனைத்து கட்சித்தலைவர்களுக்கும்
அரசியல் அறிவே கிடையாது
என்று தான் சொல்வேன்.
அதுதான் சரி என்று இந்தத் தேர்தல் உறுதிபடுத்துகிறது.

மக்களுக்கு நல்லது செய்கிறார்களோ, இல்லையோ, தங்களுக்கு வாக்களித்த மக்கள் எதற்காக
வாக்களித்தார்கள்
என்று உறுதியாக
எந்த தலைவராவது கூறினால் அவருக்கு நான்
வாழ்த்துக்கள் கூறத் தயாராக உள்ளேன்.
அப்படிப்பட்டவர்களை
நான் பாராட்டுவேன்.
எனது பாராட்டும், வாழ்த்தும் அவர்களுக்கு தேவையில்லைதான், ஏனெனில் அவர்களுக்கு வாக்களித்த
மக்களே அவர்களுக்கு தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளவர்கள் எப்படி என்னிடம் பாராட்டும்
வாழ்த்தும் பெற விரும்புவர்.

ஒவ்வொரு தேர்தலிலும்
அலை வீசுகிறது, மழை வீசுகிறது என்று மக்களை திசை திருப்ப நினைத்து தேர்தலில் நிற்கும்
யுக்தியை முதலில் கைவிட்டால் தான் அவர்களால் முழுமையாக மக்களுக்கு சேவை செய்ய முடியும்
என்று அழுத்தம் திருத்தமாக கூறிக்கொள்கிறேன்.
எந்த கட்சித் தலைவருக்குமே தொலைநோக்கு சிந்தனை இல்லையே என்ற வருத்தம் தான் எனக்கு
ஏற்படுகிறது.
தேர்தலை ஷேர் மார்க்கெட் ஆக்கிக் கொண்டு வருகின்றனர்.
ஆபத்தான பாதை.


தேர்தலில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் எதை முன்னிருத்தி ஓட்டுக் கேட்க வேண்டும்
என்ற படிப்பினையை இந்தத் தேர்தல் ஓரளவு உணர்த்தியுள்ளது.(சம்மந்தப்பட்டவர்கள் உணல்நுதார்களா
என்றால் இல்லைதான் ,
தோல்வியுற்ற கட்சிகள் கம்யூனிஸ்டுகள் உட்பட பணம் வென்றது, ஓட்டு மிசின் மோசடி எனக் கூறி
மக்களை மடையர்களாக நினைத்து பேசுவது எனக்கு ஒன்றும் புரியவில்லை.
நான் ஓட்டுப்போட்டேன்.
கேலி செய்கின்றனர் இவர்கள். இவர்கள் யாருக்கு ஓட்டுப்போட்டனர். எவ்வளவு வாங்கிக்
கொண்டு போட்டனார் என மக்கள் முணுமுணுப்பிற்கு ஆளாகி, ஓட்டுப்போட பணம் வாங்கு எனத்
தூண்டும் விதத்தில் அமையும் பேச்சுக்கள்.சரியல்ல .

ஜெ. போட்ட ஓட்டு மட்டும் இலைக்கு விழும்.
நான் இலைக்கு போட்ட ஓட்டு சூரியனுக்கு விழும் என்றால் நான் ஏன் நேரடியாகவே சூரியனுக்கு
போடக் கூடாது அடுத்த முறை என அடுத்த முறை
குறைந்த பட்ச மக்களாவது முயற்சி செய்வார்கள்
அல்லது
சூரியனுக்கு போடும் ஓட்டு இலைக்கு விழும் என்ற கணிப்பில் சூரியனுக்குப் போடப்போகிறார்கள்.
உஷார்)
அதில் அவர்அவர்கள் செய்த மிகப்பெரிய தவறுக்கு தரப்பட்ட மதிப்பெண்கள்தான் இந்த தேர்தல்
முடிவுகள்.

இங்குள்ள பெரும்பான்மையான கட்சிகள் கொள்கை கோட்பாடுகள் இல்லாமல் இருந்ததும் ,
கொள்கை கோட்பாடுகளை வைத்து வளர்ந்த கட்சிகள் அவற்றை தவறவிட்டபடியாலும்,
கூலுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்ற விதத்தில் செயல்பட்டுக் கொண்டு
ஒரு சில வசயங்களில் ஆதரவு மற்ற விசயங்களில் எதிர்ப்பு
என்ற ரீதியில
கூட்டணியோ அல்லது
ஆதரவோ தெரிவித்து தங்களின் கட்சியின் அஸ்திவாரமான நிலைப்பாட்டை காற்றில் பறக்கவிட்டதும்
தான் ஒவ்வொருவரும்
சரிவை
இல்லையில்லை
தோல்வியை சந்தித்தனர்.

என்னால் தெள்ளத்தெளிவாகவே, இந்தத் தேர்தலில்
காங்கிரஸ்
ஒரு ஸ்திரமான கட்சியாக
15வது நாடாளுமன்றத்தில் விளங்கும் எனவும் ,
பா.ஜ.க. மற்றும் இடது சாரிகள் எவ்வளவு M.P. களைப் பெறுவார்கள் என்றும்
சரியாகவே ஆணித்தரமாக கணிக்கும்படி இருந்தது .

காங்கிரஸ் + 300க்கு மேலும்
பா.ஜ.க.+ 180க்கு கீழும்
கம்யூனிஸ்ட்கள் 60க்கு கீழும் பெறுவார்கள் என மிகக் கச்சிதமாக கணிக்க முடிந்தது.

இந்த முடிவை என்னால் எப்படி எட்ட முடிந்தது.
என்னையே எடுத்துக் கொள்வோம்.
நான் இந்தத் தேர்தலில்
எனது கொள்கை கோட்பாட்டிற்கு மிக சமீபத்தில் வரும் கட்சி எது எனப்பார்த்தும்,
எங்களின் தொகுதியில் நிற்கும் நபர் அப்படி எனது கருத்துக்கும்,
எனது கொள்கை கோட்பாட்டிற்கும் அருகில் வரக்கூடிய நபரா
என்று பார்த்தும் ,
சென்ற தேர்தலில் நான் ஆதரவளித்தவர் என்ன செய்தார் நான் ஆதரித்த கட்சி என்ன நிலைப்பாட்டில்
இருந்தது
எப்படி செயல்படடது எனப்பார்த்தும் நிலையான ஆட்சி யாரால் அமைக்கமுடியும்
யார் அமைப்பதாக உறுதியாக கூறுகின்றனர்.
அவர்களின் கூற்றில் உண்மையுள்ளதா?
மக்களுக்கு நல்லது செய்வதாக யார் இருக்கின்றார்
அல்லது
செய்யவாவது முயல்பவர்கள் யார் என்றெல்லாம் பார்த்து
பின்
எனது கொள்கை கோட்பாடான பகுத்தறிவுக்கு ஆதரவு தராவிட்டலும் மதச்சார்பற்ற தன்மையுடன்
விளங்கும் கட்சிக்கே எனது வாக்கு என தீர்மானித்து
இரண்டு கட்சிகளும் மதச்சார்பற்ற தன்மையுடன் இருந்தபடியால் அவற்றில் யாருக்கு வாக்களித்தால்
மத்தியில் நிலையான ஆட்சியை ஏற்படுத்துவார்கள்
மாறாத தன்மையுடன் இருப்பார்கள் என சிந்தித்து
என் ஓட்டு வாங்கிய கட்சி,
நபர்.
தங்களின் கட்சியின் மேலிடத்து முடிவு எனக் கூறி தனது ஓட்டின் மூலம் பிறரை ஆதாரித்து
எனது கொள்கைக்கும் கோட்பாட்டிற்கும்,
நான் வாக்களித்த கருத்திற்கும் எதிராக நான் யார் கட்டாயம் வரக்கூடாது என்ற
உறுதிப்பாட்டோடு இவருக்கு வாக்களித்தேனோ அவருக்கு ஆதரவாக
டெல்லி சென்று
எமக்கு எதிராக நான் யாரை பதவிக்கு வரக்கூடாது என நினைத்தேனோ அவருக்கு ஆதரவாக
வாக்களித்து எம்மை ஏமாற்றும் நபராக இல்லாமல்,
மதவாத சக்திகளை நசுக்கும் கரமாக
,கட்சியாக
பார்த்து வாக்களித்தேன்.
நான் வாக்களிக்கும் வேட்பாளர்கள் தோற்றுப்போவார் என 100 % உறுதியாக தெரிந்தும்
வாக்களித்தேன்.


இதே போன்ற செயல்களைத்தான் இந்தியாவிலுள்ள அதிகப் பெரும்பான்மையான வாக்காளர்கள்
செய்வார்கள் என்ற அடிப்படையில் நான் ஒரு கணக்கு போட்டுப்பார்த்ததில் மேற்படி முடிவு
மிகவும் எளிதாக கிட்டியது .

அந்த கணக்கீட்டிற்கு எப்படி வந்தேன் என்ற
விஷயத்திற்கு வருகின்றேன்.
கேரளாவிற்கு இரண்டாண்டுகளுக்கு முன் டூர் சென்ற போது அங்கிருந்த காம்ரேட்
நண்பர்களிடம் நான் கேட்ட கேள்விக்கு அவர்கள் பதில் சொல்லாமல் டெல்லி மேலிடம் முடிவு
,டெல்லி மேலிடம் முடிவு என்று மட்டுமே கூறினார்கள். ஆனால் அங்குள்ள ஒவ்வொருவருக்கும்
அந்த எண்ணம் ஓடிக்கொண்டுதான் இருந்திருப்பது கேரளா மற்றும் மேற்கு வங்காள தோர்தல்
முடிவுவில் வெளிப்பட்டுள்ளது.

நான் கேட்டேன்.
இங்கு சட்டசபைத் தேர்தலாகட்டும், பாராளுமன்றத்தேர்தலாகட்டும், காங்கிரசும் கம்யூனிஸ்ட்டும்
எதிரும் புதிருமாக நின்று ஒருவரை ஒருவர் போட்டியிட்டு வெற்றி பெறுகின்றீர்கள்.
பின்
டெல்லியில்
காங்கிரஸ் ஆட்சி அமைக்க
நீங்கள் ஆதரவு தந்தால் நீங்கள் எதற்கு ஆதரவளிக்கவில்லையோ அதனை மறைமுகமாக உங்கள் கட்சி
ஆதாரிப்பது தானே உண்மை என்றேன்.
அதற்கு மதச் சார்பின்மைக்காக ஒன்றிணைந்துள்ளது மேலிடம் என்றனர்.
சட்டசபையில் என்றேன்
பதில் இல்லை.

மேலும் நீங்கள் எப்படியும் மத்தியில் ஆட்சியை இப்போது பிடிக்கப்போவது இல்லை.
அப்படியிருக்க நீங்கள் உங்கள் கட்சிக்கு ஓட்டுப்போட்டாலும் அவர்கள் மதச்சார்பின்மைக்கு ஆதரவாக
காங்கிரசுக்கு ஆதரவு தரத்தான்போகின்றனர்.
எப்படியும் காங்கிரசே மத்தியில் ஆட்சியில் அமரும் அப்படியிருக்க நீங்கள் ஏன் சுற்றி
வளைத்து உங்களை ஆள்பவர்களை தேர்ந்தெடுக்கின்றீர்கள்.
நேரடியாகவே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டியதுதானே.
நான் தேர்ந்தெடுத்த கட்சி மத்தியில் ஆள்கிறது என்று தாங்கள் சொல்லிக்கொல்லலாமே என்றேன்.
நீண்ட விவாதத்திற்கு எனது கருத்து மறுக்கப்படாமல் ஆமோதிக்கப்பட்டது.

நான் அப்போதே நினைத்தேன் இதன் பின் விளைவை கட்டாயம் ஒரு கட்டத்தில் கம்யூனிஸ்ட்
சந்திக்கும் என்று.
இந்த தேர்தலிலே அது நடந்து முடிந்து விட்டது.

இவ்வாறுதான் ஒவ்வொரு ஆதரவாளர்களும் நினைத்திருப்பார்கள்.

கேரளாவிலும்,
மேற்கு வங்காளத்திலும் கம்யூனிஸம் பின்னடைவு ஆகவில்லை.
ஆனால்
கம்யூனிஸ்ட் தலைகள் மேற்கொண்ட தவறான அணுகுமுறை தோல்வியை தந்துள்ளது.

ஒன்றை மட்டும் கட்டாயம் இங்கு கூறவேண்டும்.
ஒரு கட்சியின் உண்மையான உறுப்பினர்கள் எப்பொழுதும் உறுப்பினர்களே.
அவர்கள் ஒரு தேர்தலில் வாக்காளர்கள் என்று கூறுவதை விட வேட்பாளர்கள் போன்றவர்கள் என்று
கூறுவதே சரியானது.
ஆனால் ஆதரவாளர்களும் நடுநிலையாளர்களும் அப்படிப்பட்டவர்கள் அல்ல.
தன் கை மையில் வாக்கு வாங்குபவர்களே தங்களை ஆளவேண்டும் என்று விரும்வுகின்றவர்கள்.
மேலும் ஒரு தேர்தலில் ஒரு கட்சி பெறும் வாக்குகள் அந்த தேர்தலின் போது அவர்களுக்கு
கொடுத்த ஆதரவு மட்டுமே.
அதையே ஓட்டு வங்கியாக கணக்கிட்டுக் கொண்டிருந்தால் சரிவையே தரும்.

அப்படி இல்லை என்று கூறும் கட்சிகள்
ஏதாவது ஒரு தேர்தலில் போட்டியிடாமல்
தனது ஆதரவாளர்களையும், தொண்டர்களையும் 49 (O) விற்கு வாக்களிக்க
அறைகூவல் விடட்டும்.
அப்போது விழும் ஓட்டுக்கள் அக்கட்சிக்கு மட்டுமான ஓட்டுவங்கியாக நான் ஏற்றுக் கொள்வேன்.
அதுதானே உண்மை.
கூறிப்பாருங்கள்
உண்மை புரியும்.
உங்கள் ஓட்டு வங்கியும் தெரியும்.


பொதுவாக நடுநிலையாளர்கள் மற்றும் ஆதரவாளர்களின் பெரும்பான்மையான விருப்பம் என்னவாக
இருக்கிறதெனில் தாங்களே ஆள்பவர்கள் தாங்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்வேண்டும் என்பதுவே.
கடந்த தேர்தலில் கம்யூனிஸ்ட்டுகள் என்ன சொல்லி கேரளாவிலும், மேற்கு வங்காளத்திலும் ஓட்டு
கேட்டனர் காங்கிரசை எதிர்த்து தானே.
வெற்றி பெற்றபின் எதிர்க்கட்சியாக அமர்வது தானே முறை. அதைத்தவிர்த்து குறைந்தபட்ச
செயல்திட்டம் என்ற பெயரில் வாக்களித்தவர்களின் குரலை அலட்சியம் செய்தது.
மக்களவை சபாநாயகர் கூட கட்சியின் கொள்கைக் கோட்பாட்டை நிலைப்பாட்டை உடைந்தெரிந்தார்.
மேலும் 4 ½ ஆண்டுகள் கைகோர்த்து பின் சரியில்லை எனக்கூறி பின் மதச்சார்பற்ற கட்சிகளுக்கு
ஆதரவளிப்பதாக கூறி இப்பொழுது தேர்தலை சந்தித்தால்,
கம்யூனிஸ்டு நடுநிலையாளர்களையும், கம்யூனிஸ்டு ஆதரவாளர்களையும், மறைமுக தலைவர்களை
நேரடியாக தேர்ந்தெடுக்கும் நிலைக்கு ஆளாக்கிவிட்டார்கள்.

அங்கு வெற்றி
காங்கிரசுக்கா
கம்யூனிஸ்டுக்காக என்று இல்லை.
நேரடித் தலைவர் தேர்ந்தெடுத்தலுக்கா மறைமுகத் தலைவர் தேர்ந்தெடுத்தலுக்கா என்பதே.
இதில் நேரடித் தேர்ந்தெடுக்கும் முறையே வெற்றி பெற்றுள்ளது.


இதே நிலை தான் U.P. பீகார், A.P. மற்றும் அனைத்து மாநிலங்களிலும்

. ஏன்?

தமிழ்நாட்டில் கூட இதே தான்.
பா.ம.க. விற்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் ஓட்டு போட்டாலும் அவர்கள் வெற்றி பெற்ற பின்
காங்கிரசுக்கே தேர்தலுக்குப்பின் ஆதரவு கொடுக்கப் போகிறார்கள்.
சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மரியாதையும் மதிப்பும்
என நினைத்து மக்கள் செயல்பட்டதுதான் காரணம்.


ம.தி.மு.க. வும் அ.தி.மு.க. வும் பா.ஜ.க.விற்கே ஆதரவு கொடுக்கப் போகின்றனர்.
பா.ஜ.க. மத வாத சக்தி ,
எந்த ஒரு செயல்திட்டமும் இல்லாத நிலையற்ற போக்கு கொண்ட அதைப்பார்த்த மக்கள்
ஆதரவளிக்கவில்லை.


காங்கரசின் வெற்றிக்கு காரணமாக இருந்தது

1. பா.ஜ.க. தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளும் தேர்தலுக்குப் பின் காங்கிரசையே
ஆதாரிக்கும் என்ற பார்வையை உட்கிடையாகவோ வெளிப்படையாகவோ வெளிப்படுத்தியது.
2. மதச்சார்பற்ற தன்மையில் மற்ற கட்சிகளை விட அழுத்தம் திருத்தமாக இன்று இருக்கும் என்ற
மக்களிடையே ஏற்பட்ட நிலையான நம்பிக்கை.
3. நிலையான
நீடித்த அரசைத் தருகின்றோம் என்ற உத்திரவாதம்.
4. பிரதமர் யார் என்ற கேள்விக்கே இடமில்லாமல்
மன்மோகனை முன்னிருத்தியது.
5. மக்களின் நலனை அதிகம் கவரும்படியான செயல்பாடுகளை கொண்ட அரசாக இருந்தது.
6. காங்கிரஸ் தனது சாதனைகளை பட்டியலிட்டு பிரச்சாரம் செய்தது.
7. சோனியாவின் பதவியின் மீது ஆசையில்லாத தன்மை.
8. கடைசியாக தேசப்பாதுகாப்பிற்கு உத்தரவாதம்.


கம்யூனிஸ்டுகள் தோல்விக்கு காரணம்.
1.கொள்கை, கோட்பாடுகளை எறிந்து விட்டு மக்கள் அளித்த வாக்குகளை அவர்களுக்கு எதிராகவே
கூட்டணி தர்மம் என்ற பெயாரில் விட்டுக் கொடுத்ததுவே.
2.நீங்கள் தேர்ந்தெடுக்க இருக்கும் M.P. க்கள் தலைவரை நாங்களே தேர்ந்தெடுக்கின்றோம் என மக்கள்
நினைத்ததுவே.


பா.ம.க. வின் நிலையும் இதுதான்.


இது தவிர பதவி ஆசை ,
சலசலப்பு அரசியல்
ஆகியவற்றால்
லாலு, முலாயம், மாயாவதி போன்றவர்கள் வீழ்ந்தனர்.

இதை மறுக்கும் யாவரும்
அரசியல் அறிவு பெறாதவர்களே. மறுக்கும் கட்சிகள்
அழிவைத் தேடிக்கொள்ளும் கட்சிகளே.


முடிவாக ஒரு சில காரணங்களை மட்டுமே முன்வைத்து கூட்டணி ஏற்படுத்தியோ
அல்லது
வெளியிலிருந்தோ
ஒரு கட்சி ஆட்சியமைக்க அனுமதிக்கும்
எந்த கட்சிகளும் நாளடைவில் பலவீனப்பட்டு
ஆதரவில்லாமல்
தேய்ந்து மறைந்து போவதுடன். தங்களின் கட்சியின் கொள்கை கோட்பாடுகளை
அசிங்கப்படுத்தி
அழிந்து போகும்.
மக்கள் எதற்காக வாக்களித்தனரோ அதற்காக முழுமையாக காலத்திற்கேற்ப செயல்படும் கட்சிகளே
வளர்ச்சி பெறும். மலர்ந்து செழிக்கும்.

கம்யூனிஸ்டு தலைவர்கள் நிலைப்பாடு தான் தோற்றதே தவிர்த்து
கம்யூனிஸம் தோற்கவில்லை. கம்யூனிஸ்டுகளும் தோற்கவில்லை.


கட்சித்தலைமையின் நிலைப்பாட்டினால் கட்சிஆதவாளர்களின் மனோநிலையில் மாறுதல் ஏற்பட்டு
இவர்களுக்கு இந்த முடிவு கிடைத்தது.
இதை மறுப்பவர்களுக்கு இறுதி முடிவு கிடைக்கும்.

.

Wednesday, April 1, 2009

அறிவியலும் ,இலக்கியமும் .

.


அறிவியல் என்பது
அனைவருக்கும் பொதுவானது.
மொழி, இனம், ஜாதி, மதம் என்று எதுவும் கிடையாது.
ஆனால்,
அது தோன்றும்பொழுது எங்கிருந்து தோன்றுகின்றதோ
அந்த மொழியினின்று வெளிப்படும்
பின் பொதுமைப்படும்.
அந்த மொழியும் பின் அதற்கு உரிமை கொண்டாடுவதில்லை.
இலக்கியம் அப்படியில்லை.

அறிவியல் முதலில் தோன்றியதா?
இலக்கியம் முதலில் தோன்றியதா?
என்றால்
அறிவியல்
தான்
முதலில்
தோன்றியது எனலாம்.

அறிவு வெளிப்படு
கைப்பழக்கத்திற்கு வர ஆரம்பித்ததிலிருந்து,
தனித்து இயங்க ஆரம்பித்துவிட்டது
இலக்கியம் .
அப்படி சென்ற இலக்கியம்
இன்னும்
அறிவியல் போல் பொதுமைப்படவில்லை.
காரணம்,
இலக்கியத்தில்
ஆன்மீகம் கலக்க ஆரம்பித்ததுவே.
ஆன்மீகம் தன்பால்
தன் வளர்ச்சிக்கு
இலக்கியத்தை
மிக அதிகமாக பயன்படுத்த ஆரம்பித்து,
அதன் பொதுமை குணத்தை
நாசம் செய்து
இன்று வரை அது தொடர்கிறது.

இங்குதான்
இலக்கியத்தை பாதுகாக்க
இலக்கியநடப்பு வாதிகள் என்பர்
இலக்கியம் மொழி கடந்தது ஒன்று
பொதுமையானது.
எக்காலத்திற்கும், எச்சூழலுக்கும் பொதுவானது.
ஒரு மொழி இலக்கியம்
என்று ஒன்றைக் கூறக்கூடாது.
அந்த மொழியிலுள்ள இலக்கியம் என்று கூறவேண்டும் என்று
இலக்கியபொதுவுடமை
பேச ஆரம்பித்தனர்.
ஏனெனில்
தங்களின் படைப்புகளை
பொதுமையானதாக காட்டிக்கொள்ளவே
அனைவரும் அப்படி.
ஆனால்
தாங்கள் தாங்களின் தற்சார்பு
விசயங்களை
இலக்கியம் என்னும் வடிவில் படைத்து
அதனை பொதுமைப்படுத்துவதன் மூலம்
தங்களின் தற்சார்பு கொள்கைகளை
பிரச்சாரப்படுத்தி
தங்களை மனித குலத்திற்கே
பொதுவான கர்த்தாக்களாக
எளிதில் ஆக்கிக்கொள்ளலாம்
என்ற எளிய நகர்வில்
எழுத்து வண்மையை
கைவரப்பெறும் கலையை கற்று
பின் அதில் பயணம் செய்தனர்,செய்கின்றனர் இலக்கிய வேடதாரிகள்
(பின் குறிப்பு : அப்படி பயணம் செய்து
பல ஆயிரக்கணக்கான வாசகர்களை
தங்களின் பால் ரசிகர்களாக வைத்திருந்த
எழுத்து வல்லுனர்கள்
பின் தங்களின் ரசிகர்களால்
தூக்கி எறியப்பட்ட வரலாறு
இலக்கிய உலகில் பல )

இப்படித்தான்
மொழி பெயர்ப்புகளும்,
புளகாங்கிதத்துடன்
கூடவே
மறைமுகமாக
ஆன்மீகமும் வளர .
மிகப் பெரிய கேட்டை
இலக்கிய வாதிகள் என்பவரும்
இலக்கிய கோட்பாட்டாளர்கள் என்பவரும்
இலக்கியத்திற்கு
செய்து
இன்றுவரை தொடர்ந்து நடந்து கொண்டே வருகின்றது.

இப்படி தமிழுக்கு வந்த
பிற மொழி எழுத்துக்களில்
பொதுவுடமை
புரட்சி
மற்றும்
பகுத்தறிவு எழுத்துக்கள்
தவிர்த்து
மற்றவைகள் அனைத்தும்
இலக்கியம் என்ற போர்வையில்
கட்டவிழ்ந்து விடப்பட்ட
மறைமுக ஆன்மீக பயணமே.

இலக்கியத்தைப் பார்,
படைப்பாளியைப் பார்க்காதே.
படைக்கும்வரைதான் படைத்தவன்
அதற்கு பொறுப்பு.
அது வெளிவந்த பிறகு
அவனும் வாசகனே
என்பது எல்லாம்
வெறும் தப்பிக்கும் கூச்சல்.
அறிவியலைப் போல காட்டிக்கொள்ள
அறிவியல் கோட்பாட்டினால் எழுந்தது.
விஞ்ஞானப்படைப்பைப்பார்
விஞ்ஞானியைப் பார்க்காதே
என்ற வார்த்தையினின்று
மேற்கண்ட வாதத்தையில்
புரிந்து கொள்ளலாம்.


விஞ்ஞானப் படைப்புக்கும்,
இன்றுள்ள
இலக்கியத்திற்கும் நிறைய வேறுபாடு உண்டு.
உங்களிடமுள்ள வாகனம் ,
உங்களுக்கு பயன்தரும் மருந்து,
உங்களிடம் ஆன்மீகம் பேசாது.
அதனை படைத்தவன் பேசலாம்.
அந்த படைப்பு?
ஆனால்
உங்கள் கையிலுள்ள இன்றுள்ள ஒரு இலக்கியம்
கட்டாயம் பேசும்
அல்லது
திசை திருப்பும்.
அந்த அளவிற்கு செய்துவிட்டனர் .


இலக்கியத்திலுள்ள அறிவு
என்று
அறிவியல் அறிவு போல்
அனைத்தையும் கடந்து வெளிவருகின்றதோ,
அன்று தான்
இலக்கியம்,
மொழி
ஆகியவை நலம் பெறும்.

இலக்கியத்தில் உள்ள அறிவு என்பது
அறிவியல் அறிவைப் போன்று பொதுவானது.
ஆனால்,
இலக்கியத்திற்கு மொழி வளம் தேவை.


இலக்கியத்திலிருந்து
ஆன்மீகத்தை பிரிக்க வேண்டும்.
அப்பொழுதுதான்
இலக்கியம்
பொதுமைப்படும்.
மொழி வளம் பொறும் .

அதுவரை ஒரு மொழியிலுள்ள இலக்கியம்
அந்த மொழி இலக்கியமாகவே இருக்கும்.


.

Monday, March 30, 2009

இந்தியாவைப் பொறுத்தவரை எந்த எந்த கட்சிகள் அழிந்து போகும் கட்சிகள்?

.

"அரசியலை சாக்கடையாக்கி விட்டார்களே ஒழிய அரசியல் சாக்கடை அன்று"

நண்டு :

இந்தியாவைப் பொறுத்தவரை....


நொரண்டு :

இந்தியா என்பது மத, இன, ஜாதி, மொழி சார்பற்ற ஒரு அற்புதமான நாடு.
அந்தப் பாதையில் அது சுதந்திரமாக பயணம் செய்து ஒன்றுபட்ட மாந்தரினத்தை உருவாக்க
அது மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு நாமனைவரும் அதற்கு உறுதுணையாக, விழிப்புணர்வுடன்
இருந்து நம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் அதற்கு செய்ய வேண்டும்.
இந்தியா என்பது ஆங்கிலேயன் நமக்கு கொடுத்த பெயரல்ல.
நாம் உருவாக்கிய தேசத்திற்கு நாம் வைத்த பெயர்.
நமது பெயர்.
நாம் வாழ்ந்து வரும் காலத்திற்கு சற்று
முன் நமது தந்தையர், தாத்தாக்களின் போராட்டத்தில் சுதந்திரம் பெற்று நம்மிடம் கொடுத்துச்
சென்றுள்ள தேசம்.
நம்மிடம் விட்டுச் சென்றுள்ள மழலை.
நமது அறிவாற்றலால் அதனை முன்னிறுத்தி வளப்படுத்தவேண்டும் என்றஎண்ணத்துடன் நாட்டை வழிநடத்த
எத்தணிக்கும் தொண்டர்களை உருவாக்கும் எந்தக் கட்சியும் தேசியக் கட்சியாக பரிணாமிக்கும்.
வெற்றியும் பெறும்.

இது நமது தேசம்.
நமது காலத்தில் நமக்காக கொடுத்த சுதந்திர பூமி. அகிம்சை வழியில் நமக்கு அளிக்கப்பட்ட
மகத்தான தேசம்.
நமக்காக நாம் உருவாக்கிய அனைத்து அம்சங்களைக் கொண்ட ஒரு அரசியலமைப்பின்பால் நமது கையில்
விடப்பட்ட ஒரு அழகிய பூந்தோட்டம்
என நினைக்கும் கட்சிதான்
இந்தியா முழுதும் பிரகாசிக்க முடியும்.
அப்படி நினைக்காத எதுவும் தேசியக் கட்சியாக பரிணமிப்பது மிகவும் கடினம்.

இந்தியா என்ற ஒன்றும் கிடையாது.
ஆங்கிலேயன் தனது நிர்வாக வசதிக்காக ஏற்படுத்திய பெயர் .
பின் அவற்றை நாம் பின்பற்றி வருகின்றோம்.
இந்தியா என்பது ஒரு மாயை என கூறிக்கொண்டு
( இதற்கு முன் இப்படி ஒரு தேசம் இருந்ததில்லை என்றால் உலகில் எத்தனை தேசங்களின் பெயர்கள்
கல் தோன்றி மண் தோன்றா காலத்திலிருந்து இருந்து வந்துள்ளது என காட்ட முடியுமா? -என
வாதங்கள் புரிவேரிடம் கேட்களாமே )
மொழிவாரியாக, இனம் வாரியாக பேசிக் கொண்டு, ஆங்காங்கு செல்வாக்கு பெற்று ,பெற முயன்று
வரும் கட்சிகள் மாநிலக் கட்சியாக இருந்து கொண்டு மத்தியில் ஆட்சியில் தங்களின்
பிரதிநிதித்துவத்திற்கேற்ப சில சமயம் செல்வாக்கு பெற முடியுமே தவிர தேசத்தைப்
பொறுத்து அவைகளின் செல்வாக்கு தவிர்க்கக்கூடிய அளவிலே, பூஜியமகவே இருக்கும் .

இந்தியாவைப் பொறுத்தவரை
காந்தியம்
முதலிடம்
வகிக்கின்றது.

காந்தியக் கொள்கைகள்
உள்கட்டமைப்பில் விரிவடையும் தன்மை கொண்டன.

இந்த விசயத்தில்
காந்தியத்தை
இன்றைய காங்கிரஸ் கடைபிடிக்கின்றதோ, இல்லையோ,
அது காந்தியின் காலத்திலிருந்து
அவரின் கொள்கைகளை உள்வாங்கி
இயங்கிக் கொண்டு வந்ததால்
காந்தியத்தின் பாதையில் அது செல்வதாக அதன் அனுதாபிகள் எடுத்துக்கொள்வதால்
முதலிடம் அதற்கு தரலாம்.

மார்ச்சியம் .......
மார்ச்சியம் பின்பற்றும் கட்சிகளைப் பொறுத்தவரை இன்னும் அழுத்தம் திருத்தமான செயல்பாடுகள்
தேவை.
அவர்களின் செயல்பாடுகள் மந்தமாக இருப்பதால் முதலிடத்தில் இருக்கவேண்டிய
இவர்களுக்கு
இரண்டாமிடம் தான்.


அது தவிர்த்து மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால், மொழியின் பெயரால், தோன்றி
அதற்குள்ளே காலம் தள்ள நினைக்கும் கட்சிகள் தேசியக் கட்சிகள் போன்று தெரிந்தாலும்,
உருவானாலும், ஓட்டு வங்கிகளை வைத்திருந்தாலும் காலத்தால் நிலைத்து நிற்குமா என்பது
கேள்விக்குறியே.

அவைகள் சி்று கட்சிகளாக, மாநிலக் கட்சிகள் அந்தஸ்திலேயே தங்களின் பயணத்தை தொடர்ந்து
முடிவைத் தேடிக்கொள்ளும். அத்தகைய கட்சிகளைப்பற்றி நான் எதுவும் கூறப்போவதில்லை.

பொதுவாகவே,
எத்தகைய உயர்ந்த கொள்கைகளையும் கோட்பாடுகளையும்,
அவைகளை கையில் எடுத்துக்கொண்டு பயணப்படும் எத்தகைய பெரிய ஓட்டு வங்கிகளைக் கொண்டபெரிய
கட்சியும் தொடர்ந்து தனது அனுபவத்தினால் அவைகளின் கொள்கை மற்றும் கோட்பாட்டினை
செலுமைப்படுத்தாமல் அப்படியே பயணப்பட்டது
எனில் அக்கட்சிகள் எத்தகைய உயர்ந்த கொள்கைகளையும் கோட்பாடுகளை பின்பற்றி இருந்தாலும்
உறைந்துவிடும்.
அலெக்சாண்டர் உலகப் பேரரசை நிறுவினான். அதற்கு காரணம்
சாக்ரடீஸ்....
அரசு விரியும் தத்துவம் அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது.
இவ்வாறுதான் கருத்து வளர்ச்சியில் விரிவடையும் தேசம்.
தேச நலன்.
அவ்வாறு விரிவடையா,
செலுமைப்படுத்தா கருத்துக்களைக் கொண்ட கட்சிகள்
சுருங்கி மறைந்துவிடும்.

எது எப்படியிருந்தாலும் மக்கள் விழிப்புணர்வு பெறப்பெற அதற்க்கேற்ப
மக்களாட்சித்தத்துவமும் விரிவடைந்து உயர்ந்த தன்மை கொண்ட கருத்துள்ள கட்சிகள் தவிர்த்து மற்ற
எல்லா கட்சிகளும்
அழிந்துவிடும்.
அதற்கான காலம்
அவைகள் கொள்கை கோட்பாட்டிலே அமையும்.

நண்டு :

சரி, இந்தியாவைப் பொறுத்தவரை, தமிழகத்தைப் பொறுத்தவரை எந்த எந்த கட்சிகள் அழிந்து
போகும் கட்சிகள்?


நொரண்டு :

இந்தப் பதிவைப் படிக்கும் நீங்கள் ஏதாவது ஒரு கட்சி சார்ந்தவராக இருந்தால் அதன் கருத்தை
அறிந்துகொண்டாலே, அதன் ஆயுட்காலம் தெரிந்துவிடும் .
நடுநிலையாளராக இருப்பீர்கள் எனில் எந்த கட்சியின் கருத்து விரிவடைவதாக இருக்கிறதே
அதற்கே ஆயுட்காலம் அதிகம்
(மூடராக இல்லாத பட்சத்தில் ).


இந்தியாவைப் பொறுத்தவரை,
தமிழகத்தைப் பொறுத்தவரை
ஏன்
உலகத்தைப் பொறுத்தவரை கூட
பகுத்தறிவு கருத்துக்களும் ,
பொதுவுடமை சித்தாந்தங்களும்
கொண்டு
அஹிம்சை வழியில்
நடந்து செல்லும
மக்கள் கட்சிகளுக்கு
ஆயுட்காலம் என்பது
வரையறுக்கமுடியாத
ஒன்றாக இருக்கும் .


அழிந்து போகும் அரசியல் கட்சிகள்… எவை? எவை? ...எப்படி? எப்படி? .... முற்றும்

"அரசியல் அறிவு பெற முயலாதவன் மூடன்"


.

Saturday, March 28, 2009

அழிந்து போகும் அரசியல் கட்சிகள்… எவை? எவை? ...எப்படி? எப்படி?

.


"அரசியல் அறிவு பெற முயலாதவன் சமுதாய விலங்காவான்"


நண்டு :


தேர்தல் கூட்டணிகள் தற்பொழுது சூடு பிடித்துள்ளவைபோல் தெரிகின்றது.

நொரண்டு :

மக்களின் கைமையில் ஆட்சியைப் பிடிக்க அனைத்து யுத்திகளையம் மேற்கொள்ள வேண்டும்தானே.
அப்பொழுதுதானே கட்சி அதன் ஸ்திரத் தன்மையை நிலைநிறுத்த முடியும். அது தானே ஒவ்வொரு
கட்சித்தலைவரும் விரும்புவர்.


நண்டு :


அப்போ, மக்களை ஏமாற்றும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வார்கள்

நொரண்டு :


மக்களை ஏமாற்றுவது என்பது வேறு, ஒரு கட்சி தனது ஸ்திரத் தன்மையை நிலை நாட்டுவது
என்பது வேறு. பொதுவாகவே ஜனநாயக நாட்டில் ஒரு கட்சி மக்களை ஏமாற்றி ஓடடுகளை
வாங்குகின்றனர் என்பது பழுத்த ஜனநாயக நாட்டில் நடக்க முடியாத ஒன்றாகும். ஆனால் மக்களை,
தங்களின் வாக்காளர்களாக தங்களின் கட்சியின் தொண்டர்களாக வைத்துக்கொள்ள அனைத்துக் கட்சிகளும்
ஒவ்வொரு யுத்தியை தன்னுள்ளே வைத்திருக்கும்.
ஏமாற்றுகின்றனர், ஏமாற்றிவிட்டனர் , ஏமாற்றப்படுவது என்பதெல்லாம் பொதுவாக ஒட்டுமொத்த
மக்களின் மீது குவியும் கருத்து. ஆனால் ஒவ்வொரு கட்சியும் தங்களின் தொண்டர்களை ஏமாற்ற
விரும்புவது கிடையாது. ஏமாற்றவும் செய்யாது. சூழல் சரியில்லாமல் போகலாம்.


நண்டு :


அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு தேர்தலுக்கு தேர்தல் மாறிக் கொண்டே வருகின்றதே.


நொரண்டு :


ஜனநாயகத்தின்படி நிலை வளர்ச்சியில் இது ஒரு அத்தியாயமாகும்.

மக்களாட்சித்துவம் இன்னும் சோதனை முயற்சியாலேயே இருக்கிறது.

சாக்ரடீஸூக்கு முந்திய கால கட்டத்தில் தான் அனைவரும் .

ஆட்சி அதிகாரத்தை
மட்டும் கைப்பற்ற நினைக்கும் அரசியல் கட்சிகள்
தங்களை ஸ்திரப்படுத்திக்கொள்ள, வழப்படுத்திக்கொள்ள, நிருவனமாகிப்போவதால்
தங்களின் நிலைப்பாட்டினை அடிக்கடி மாற்றிக்கொண்டே வருகின்றது.

இன்று தற்பொழுது உள்ள அரசியல் கட்சிகள் சிறந்த நிர்வாகிகளை நாடுகின்றன.
நிருவாகிகளாக இருக்க அக்கட்சியும், அரசியல் தளத்திலிருந்து நிருவாகத்தளத்திற்கு இடம்
பெயர்கின்றது.
இப்படி நிர்வாகிகளைக் கொண்ட அரசியல் கட்சிளாக இருக்கின்றது.
எனவே,சிறந்த நிர்வாகிகள் கொண்ட அமைப்பு சிறந்த அரசியல் கட்சியாக இருக்கிறது.
நிர்வாகிகள் மேல் மட்டத்திலிருந்து அடித்தட்டு தொண்டர்வரை பல தட்டுகளில் இருக்கின்றனர்.
நிர்வாகிகளில் சிறந்த நிர்வாகி சர்வதிகாரிக்கு ஒப்பான செயல்களையே கட்சிக்குள் மேற்கொள்வார்.
இது ஒரு
சர்வாதிகார கொடுங்கோல் அரசை வீழ்த்த ஏற்பட்ட
ஜனநாயகத்திற்கு
ஏற்பட்ட
முதல் அடியாகும்.
நல்ல நிர்வாகியால் நல்ல செயல்கள் நடப்பதுபோல் தோன்றினாலும் ஜனநாயகத்திற்கு சரியான
பின்னடைவே பின்னிட்டு ஏற்படும். காரணம் இப்படிப்பட்ட நிர்வாகிகள் மூலம்தான் கட்சிகள்
தங்களின் பலத்தை நிரூபித்துக் கொண்டு வருகின்றன.
இப்படிப்பட்ட நிர்வாகிகள்தான்
தங்களின் அதிகாரத்தை பிரயோகம் செய்து தங்களின் ஸ்தானத்தை நிலைப்படுத்திக்கொள்ள
எதுவேண்டுமானாலும் செய்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் மேற்கொள்ளும் செயல்கள் தான்
அட்டூழியங்களும்,
அட்டகாசங்களும்,
சாகசங்களும்,
வித்தைகளும்,
குரங்கு மாதிரி அந்தர் பல்டிகளும், அரசியல் கலத்தில்.
சிறந்த அரசியல் தலைவர்கள்தான் சிறந்த அரசியல் கட்சிகளை நிலைநிறுத்த முடியும்.
அப்படிப்பட்டவர்களால்தான் இத்தகைய செயல்களுக்கு ஒரு முடிவு கட்ட முடியும்.


நண்டு :


சிறந்த அரசியல் தலைவர்கள் மட்டும் அரசியல் கட்சிக்கு என்றால் ...


நொரண்டு :


அரசை,
அரசியல் கட்சியை தலைவராக இருந்து ஒருவர் வழி நடத்த வேண்டும். நிர்வாகியாக இருந்து
நிர்வகிக்கக்கூடாது.
நல்ல நிர்வாகிகள் மக்களைப் பார்க்க மாட்டார்கள்.
நல்ல நிர்வாகம் சார்புடையது.

தலைவர்களிடம் சர்வாதிகாரப் போக்கு காணப்படாது.
தலைவர்கள் மக்களை மட்டுமே பார்ப்பார்கள் .

மன்மோகன்சிங் சிறந்த நிர்வாகி.


நண்டு :


புதுப்புது அரசியல் கட்சிகள் தோன்றிக்கொண்டே உள்ளதே ......

நொரண்டு :


"அரசியல் என்பது வாழும் முறை" என்றாகிவிட்ட சமூகத்தில்
அரசியல் என்பது வாழ்வாகி விடுகின்றது.
நாம் அனைவரும ஒட்டுமொத்தமாக அரசியல் அடித்தளத்தில் இருக்கின்றோம்.
தனிமனிதன் தொட்டு அனைத்தையும் அரசியல் பதம் பார்த்துக் கொண்டுள்ள நிலையில் அது தவிர்த்த
ஒரு நிலையை மனிதன் சிந்தித்துப்பார்க்கக்கூட முடியாதபடி தன்னை ஜக்கியப்படுத்திக்
கொண்டுவிட்டான்.
இப்படிப்பட்ட சூழலில் அரசியல் என்னும் மையம் மெல்லமெல்ல பற்றியபொழுது மேலும் மனிதன்
தன்னுடைய மையத்தை அரசியலின் பால் நகர்த்தி முடித்த அளவு தன்னை முன்நிறுத்தி தனது
வாழ்வை வளப்படுத்தி, நலப்படுத்தி, சுகப்படுத்திக் கொண்டு பின் தனது வம்சத்தையும், அதன்
வழியிலே அமர்த்தி தனது வாழ்வையும், வம்சத்தையம் வடம்பிடிக்க ஆரம்பித்தான்.
தன்னை முன்நிருத்த அவனுக்கு ஏதாவது ஒன்று தேவைப்பட்டது, கிடைத்தது,
பயன்படுத்திக் கொள்கின்றான்.
தான் முன்நிருத்த ஏதுவாக தனக்கு பின் பல கைகள் தேவை என்பதனையும் அவைகள்
அசையாக்கைகளாக இருக்க தன்னிடம் நிலையாக ஏதாவது ஒன்று இருக்க வேண்டும் என்பதையும்
உணர்ந்த அவன், அதனை தனது பயணத்தில் தொடர்ந்து பெற்றுக்கொண்டே வந்த அனுபவத்தின் மூலம் பெற்ற
அறிவின் துணையுடன் கண்டுகொண்டு, அதன்மூலம் ஒரு முடிச்சைப் போடுகிறான்.
அந்த முடிச்சுதான்
அவனைத் தலைவனாக்குகிறது. மற்றவர்களை அவனின் தொண்டர்களாக்குகிறது.
அந்த முடிச்சுதான் அவனின் உயிர்மூச்சாகின்றது, பேச்சாகின்றது. அவனின் கொள்கையாகிறது
அந்த கொள்கைகள் முந்நிருத்த அவனால் கட்சி ஆரம்பிக்கப்படுகிறது.
அப்படிப்பட்ட முடிச்சு யாராலும் அவிழாத்படி இருக்கும்படியும், தொடர்ந்து நீடித்துக்கொண்டே
இருக்கும்படியும், விடைகாணா தேடுதல் வேட்டையிலேயே போடும் கேள்விகளிலே திக்குமுக்காட
வைத்து தொண்டர்களை தூங்க வைத்து வேட்டையாடி வித்தைகள் பல கற்றுக் கொள்கின்றான்.
வசீகரத்திலே (அது பேச்சாக இருக்கலாம், தோற்றமாகவும் இருக்கலாம், கருத்தாகவும்
இருக்கலாம்). மயக்கி, மயங்கி விழுந்த மனிதன் தொண்டராகவே தொடரும் அவலம் தொடர தலைவன்
மட்டும் வடத்தை தனது பகுதிக்குள் இழுத்துக்கொண்டே விடை காணா முடிச்சுடன் பல மட்டங்கள்
குட்டி, குட்டி தலைவர்களை உருவாக்கிக்கொண்டே சுழல்கின்றான்.
அவன் தான்தலைவாகவும்,
மற்றவர்கள் தொண்டனாகவும் சிம்மாசன போட்டியை அடைகிறான்.
இப்படிப்பட்ட
சிம்மானச போட்டியில்தான் முடிச்சுகளின் ஆழங்கள் பார்க்கப்படுகிறது.
அப்பொழுது ஏற்படும் கருத்து மோதலின்போது வெடித்து சிதறுவதுதான் அவன் போட்ட முடிச்சு .
முடிச்சு அவிழ்ந்தால் கட்சி என்னவாகும்.
தொண்டர்கள் அவிழ்ந்து போவார்கள். அப்படியெனில் முடிச்சு எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும்.
எவ்வளவுக்களவு சிக்கல் நிறைந்ததாக இருக்கமுடியுமோ, அவ்வளவுக்கவ்வளவு சிக்கல் நிறைந்ததாக
இருக்கவேண்டும்.
எவ்வளவுக்களவு சிக்கல் நிறைந்ததாக இருக்கமுடியுமோ, அவ்வளவுக்கவ்வளவு ஆதாயம் அதிகம்.
ஆனால் தொண்டர்கள் கொள்கை கொள்கைக்காகவே வாழ வேண்டும். ஆனால் கொள்கைப் பற்றி முழு அறிவும்
பெற்றுவிடக்கூடாது.
பெற்றுவிட்டால் தலைவன் தலைவனாக இருக்கமாட்டான்.
அந்த அளவு கொள்கை இருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட நெருக்கடியில் வாழும் மனிதன் அரசியல் வாழ்வாகிவிட்ட சமுதாயத்தில் தானும்
ஏதாவது ஒரு கட்சியை அவனது சுயநலத்திற்காக பின்பற்றுவது ,அல்லது பின்பற்றுவது மாதிரி
தொடர்கின்றான்.
அவன் தொண்டனானால் தொண்டன் என்பவன் முடிச்சுக்குள் வரவேண்டும். முடிச்சே உயிர் மூச்சாக
நினைக்க வேண்டும்.
ஆனால் உயிடன் இருந்து என்ன பயன் என்ற கேள்வியை மட்டும் கேட்கக்கூடாது.
இப்படியாகத்தான் சமுதாயத்தில் அரசியல் கட்சி உருவாகிக்கொண்டே இருக்கிறது.


நண்டு :

இப்படி உருவாகும் கட்சியின் ஆயுட்காலம் எதைப்பற்றி அமையும்

நொரண்டு :


முடிச்சுக்கு ஆதாராமான கருத்தில் உள்ளது அதன் ஆயுட்காலம்.
அந்த கருத்து தொடர்ந்து அக்கட்சியை வழிநடத்தி செல்லும் .
அவையே அக்கட்சியின் ஆணிவேர் ஒரு கட்சி தொடர்ந்து, அதன் வேராகிய கருத்தை தழுவியே செல்ல
வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு கருத்து ஆழமாகவும், அகலமாகவும் இருக்கிறதே , கருத்தை
பின்பற்றுகிறதே ,அவ்வளவுக்கவ்வளவு அக்கட்சியும் வேறுன்றி பரவி செழிக்கும்.

ஆழமான ,அழுத்தமான,
மனித நேயம் கொண்ட சிறந்த கொள்கை ,கோட்பாடுகளை உள்ளடக்கி ஏற்படுத்தப்பட்ட இயக்கங்களின்
கருத்திலிருந்து தோன்றும் அரசியல் கட்சிகள்தான் நிலைத்து நிற்கும்.

சமுதாயம் என்பதில் அரசு என்ற கட்டமைப்பில் அதன் கொள்கைகளும் கோட்பாடுகளும்
சமுதாயத்தையும், அரசையும் தாண்டி இருக்கும்பட்சத்தில் அக்கட்சி அந்த சமுதாயத்தில், அரசியல்
நிலையான இடத்தினை தக்கவைத்துக் கொள்ள முடியும்.
அது தொடர்ந்து தனது ஆளுகையை செலுத்திக் கொண்டே இருக்கும்.
அதன் செயல்பாடுகள் அந்த அமைப்பைத் தாண்டி பயனளிக்கக்கூடியதாகவும் இருக்கும்.
இது விரிவடையும் விதியாகும். இவ்வாறு விரிவடையும் தன்மையுடையவைகள் காலத்தால்
தொடர்ந்து மக்களுக்கு பயனடையும் அமைப்பாக இருக்கும்.

உலகளவில் மார்க்ஸ்க்கு முதலிடம் .


நண்டு :

தமிழகத்தைப் பொறுத்தவரை


நொரண்டு :


தமிழர்கள் ஆழந்த தமிழ் உணர்வாளர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும் ஒருங்கே பெற்றவர்கள். தமிழ்
இனம் எங்கு பாதிக்கப்பட்டாலும் அவர்களால் ஒரு பொழுதும் தாங்கிக் கொள்ள முடியாது.
அடிபட்டு, அடிபட்டு, மிதிபட்டு, மிதிபட்டு சொல்லவொண்ணா துயரங்களைக் கடந்து வந்துள்ள
இனத்தினர், இனி ஒருபோதும் அத்தகைய சுழலுக்கு இடமளிக்காமல் செல்வார்கள் அல்லது செல்ல
வைக்கப்படுவார்கள்.

மேலும்,
தமிழகத்தைப் பொறுத்தவரை
தந்தைப்பெரியாரின் அடிச்சுவட்டிலிருந்து
தான் விடியலும் ,வெளிச்சமும்.
அவரின் சிந்தனைகளை பின்பற்றி
தனது பயணத்தை எந்தக்கட்சியும் தொடர்ந்தால் மிகவும் பிரகாசமான
எதிர்காலத்தை அடையும் .

இங்கு மண் பேசும் மருந்து தந்தைப்பெரியார்

............ தொடரும்

.

Tuesday, March 24, 2009

கைதிகள் சார்பாக தேர்தல் ஆணையத்திற்கு ஒரு வேண்டுகோள்.

.

எனக்குத் தெரிந்து
சிறையில்அடைக்கப்பட்டுள்ளவர்கள் எந்தத்தேர்தலிலும்
ஓட்டுப்போட்டதாகத்தெரியவில்லை. தேர்தலில்
நிற்கஅனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால்
அவர்களின்
ஜனநாயக உரிமையான ஓட்டுப்போடும் உரிமையானது இன்றுவரை கிடைக்கப்பெறவில்லை.
ஏன் இந்த பாரபட்சம் என்று தெரியவில்லை.
ஒரு வாக்கிற்காக
ஒரு வாக்குச் சாவடி அமைத்துள்ளதாக பெருமைப்பட்டுக்கொள்ளும் தேர்தல் ஆணையம்
லட்சக் கணக்கான நபர்களுக்கு ஏன் அந்த வாய்ப்பினை கொடுப்பதில்லை?
அவர்களும் பிரஜைகள் தானே. மற்றவர்களைப் போல் அவர்களுக்கும்
ஓட்டுப்போட உரிமையுள்ளதுதானே. அப்படியிருக்க
ஏன் அந்த வாய்ப்பினை
தேர்தல் ஆணையம் தருவதில்லை?

ஒவ்வொரு பிரஜையும் கட்டாயம் ஓட்டுப்போட வேண்டும். ஓட்டுப் போடாதவர்கள் மீது நடவடிக்கை
எடுக்க கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றெல்லாம் கூறும்
தேர்தல் ஆணையம்
ஓட்டுப்போடதயாராகஇருக்கும்அவர்களை ஏன் கண்டுகொள்ளவில்லை.

அனைத்து பிரஜைகளையும் வாக்காளர்களாகச்சேர்க்க
கடும் நடவடிக்கை எடுத்து வரும் தேர்தல் ஆணையம்,
எத்தனை கைதிகளை இன்றுவரை வாக்காளர்களாகச் சேர்த்துள்ளது. அதற்கு என்ன முயற்சி எடுத்துள்ளது.
அனைத்து பிரஜைகளுக்கும்
வாக்கு உத்தரவாதம்
தருவது
தேர்தல் ஆணையத்தின்
தலையான கடமையல்லவா?

வெளிநாட்டில் உள்ளவர்கள்கூட ஓட்டுப்போடும்போது,
உள் நாட்டில் இருந்து கொண்டு வேடிக்கை பார்க்க வைப்பது சரியான ஜனநாயக நெறிமுறையா?

எனவே,
இப்பதிவின் மூலம்
தேர்தல் ஆணையத்திடம்
நான் வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால்,
இந்த தேர்தலாவது
சிறையில்அடைக்கப்பட்டவர்களுக்கு, அவர்களுக்கும் உரிமை உண்டு என்பதனை கருத்தில் கொண்டு,
அவர்களுக்கும்
ஓட்டுப்போட வாய்ப்பினை ஏற்படுத்தி,
அவர்களையும்
தேர்தலில் பங்குபெற
வழி வகைகள் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

-இப்படிக்கு நண்டு.

ஒரு ஜனநாயக நாட்டில்
தேர்தல் என்பது
அனைத்து தரப்பினரின் எண்ணங்களின்
பிரதிபலிப்பாகவே
இருக்கவேண்டும்.

இம்மண்ணில்
பிறந்த
எந்த குடிமகனுக்கும்
அவனின்
ஜனநாயக உரிமைகள்
எச்சூழலிலும்,
எப்பொழுதும்,
எங்கேனும்,
எவராலும்
பாதிக்கப்பட்டாலும், மறுக்கப்பட்டாலும், சுரண்டப்பட்டாலும்,
அதற்காக
ஜனநாயக வாதிகள் ஒருமித்து குரல் கொடுப்பர்
என்பது திண்ணம்.

எனவே,
இப்பதிவினைப் படிக்கும் ஒவ்வொருவரும்
தங்களின்
ஜனநாயக குரலினை
தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிப்பீர்கள்
என்ற உறுதியில்
நண்டு.

.

Tuesday, March 17, 2009

குற்றவாளிகள் தேர்தலில் நிற்பது சரியா ?

.


ஏன் நிற்கக்கூடாது .
அரசியலமைப்பில்
கொடுக்கப்பட்ட உரிமைகள்
எதற்காகவும் ,எப்பொழுதும் ,
யாருக்கும் ,யாரும் தடுக்கக்கூடாது .
இதில் கவனிக்கப்படவேண்டியது அரசியலமைப்பை சிதைக்கும் அளவிற்கு
அவர்களின் குற்றங்கள் இருக்கிறதா என்பதுவே .
அது அரசியலமைப்பை சிதைக்கும் அளவிற்கு இருக்கக்கூடாது.
அதுதவிர்த்து
மற்ற சமுக குற்றங்களை காரணம் காட்டக்கூடாது .
ஆனால் ,
அவர் குற்றம் செய்தவர் .
சமுகத்திற்கு இவர் அச்சத்தை ஏற்படுத்தக்கூடியவர் ,
தேவையில்லாதவர் .
எனவே ,
இவரை தேர்ந்தெடுக்கக்கூடாது என்ற விழிப்புணர்வை மக்களிடையே
தேர்தல் ஆணையம் தான் ஏற்படுத்தவேண்டும் .
அது அவர்களின் கடமை.
அதைத்தவிர்த்து
குற்றப்பிண்ணனியை காரணம் காட்டி மக்களுக்கு செய்யவேண்டிய கடமையினின்று தேர்தல் ஆணையம்
தப்பித்துக்கொள்ள பார்க்கிறது.
யார்,யார் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று கூறும் தேர்தல் ஆணையம் யார்,யாருக்கு
ஓட்டுப்போடக்கூடாது என்றும் மக்களுக்கு போதிக்கவேண்டும் ,
கூற வேண்டும்.
இவர் இத்தகைய குற்றப்பிண்ணனி உடையவர் என்பதனை
வாக்குச்சீட்டிலும் ,வாக்குச்சாவடியிலும் தெரியும்படி ஏற்பாடு செய்தல் வேண்டும் .
மேலும் ஏன் ஓட்டுப்போடக்கூடாது என்றும் தெளிவாகவே தெரிவித்தால்
எந்தக்கட்சியும்
குற்றப்பிண்ணனியுள்ளவர்களை
தேர்தலில் நிறுத்தாது
தவிர்க்கும் .
இது தவிர்த்து குற்றப்பிண்ணனியுள்ளவர்களுடைய தேர்தலில் நிற்கும் ஜனநாயக உரிமையை தேர்தல்
ஆணையம் தனது கடமையினின்று தவறி ,
தடுக்கக்கூடாது .

அவர்கள் நிற்பது சரிதான் ,
அவர்களை தேர்ந்தெடுப்பதுதான்
தவறு .
தேர்ந்தெடுக்க வைப்பது தான்தவறு .


.

Friday, March 13, 2009

விஞ்ஞானிகளுக்கு தெரிந்த கடவுள்கள்

.


என்னிடம் ,
கடவுளைப்பற்றி விஞ்ஞானிகள் ஒவ்வொருவரும் என்ன என்ன கூறினார்கள் என்று விளக்கி,
நண்டு புலகாங்கிதம் கொண்டபொழுது நான் அதிர்ந்துபோனோன் .


விஞ்ஞானிகளும் ,
இந்த நச்சு சமுதாயத்தில்தானே வளர்ந்து,வாழ்ந்து வந்திருகின்றனர் .
இந்த கல்வி கட்டமைப்பிலிருந்து தானே கல்வி கற்று.
அப்படியிருக்க அவர்களிடம் எதைப்பற்றி என்ன கேள்வி கேட்டாலும் என்ன பதில் வரும் இந்த
கட்டமைப்பை தாண்டி .
அவர்களுக்கு என்று சிறப்பாக வேறு ஒன்றும் இல்லையே .


பொதுவாக விஞ்ஞானிகள் தங்களின் வாழ்க்கைப்பாதையில், இளமையிலேயே அறிவியலின்பால் அதிக
ஆர்வம்கொண்டு,
தங்களை அர்ப்பணித்ததன் காரணமாக, உலகிற்கு உன்னத கண்டுபிடிப்புகளை அளித்து ,மனிதகுலம்
வளமாகவும், நலமாகவும், ,நிறைவாகவும் வாழ தங்களால் ஆன பங்களிப்பு செய்யப்படுகிறது.
அவர்களின் குறிக்கோள் ,முழுவதும் தங்கள் எடுத்துக்கொண்ட விசயத்தை அடைவதாகவே இருக்கும் .
மற்றபடி அவர்களுக்கும் சமுதாயத்தில் புதைந்துகிடக்கும் பழக்கவழக்கங்களுக்கும் எந்தவித
தொடர்பும் இல்லை .
அது மூடத்தனம் என்றோ , புரிந்துகொள்ளமுடியாது என்றோ அவர்களால் பிரித்துணர நேரம்,
அவசியம் அவர்களுக்கு இல்லை .
நமது கல்விமுறை கற்றுக்கொடுத்த சமுதாயம் பற்றிய படிமம் அவர்களிடம் அதிகமாகவே
விரவியிருக்கிறது .
மேலும் , அவர்களிடம் கடவுளைப்பற்றி கேட்பது
எனக்கு சரியாகப்படவில்லை.


விஞ்ஞானம் என்பது
அனைவருக்கும் பொது .
அதனால் விஞ்ஞானிகள் பகுத்தறிவாதிகளுடன் ஒதுக்கப்படுகிறார்கள் ஆத்திகர்களால் பயத்துடன் .


பிரபஞ்ச ஆய்வில் ஈடுபடுபவர்கள் கூட பிரமிப்பில் தான் உள்ளனர். அவர்களுக்கு
மனிதனைப்பற்றியும் ,அவனின் அறிவின் ஆகப்பெரிய தன்மை பற்றியும் எதுவும் தெரிவதில்லை.
எளிமையாகக்கூறவேண்டுமேன்றால் சூரியனுக்கு கோடிகோடி ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள
ஒன்றைப்பற்றி கூறும் ஒரு அறிஞருக்கு கழிவுநீரால் ஏற்படும் கேடு பற்றி தெரிவதில்லை.
இதயநோய் ஆராய்ச்சியாளருக்கு பல் நோய் பற்றிய அறிவு போல் .
இது போன்றுதான் அனைத்தும்.

இங்குதான்,
சிந்தனையாளர்கள் அனைவரையும் கடந்து நிற்கின்றனர் .
இங்குதான் ,
மனித சமுதாயம் சிறக்கவும், மனிதநேயம்
பெருகவும் ,அனைவருக்கும் பொதுவான ஒரு பார்வையை வைக்கிறது
பகுத்தறிவு .
விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கின்றனர்.
பகுத்தறிவாளர்கள் பகிர்ந்தளிக்கின்றனர்.


எந்த ஒரு விஞ்ஞானப்படைப்பிலும் அந்த படைப்பினை மட்டுமே பார்க்கவேண்டும் .
அதைப்படைத்தவன் அதற்குத்தரும் விளக்கத்தை அதைப்பொருத்து அதுசம்பந்தமாக மட்டுமே
காணபெறவேண்டும் .
(அப்பொழுதுதான் அப்படைப்பை அடுத்துவரும் தலைமுறையினர் மேலும் செலுமைப்படுத்துவர்).

அது தவிர்த்து மற்றவற்றில் அவர்களின் பார்வை மங்களாகவே இருக்கும் .
பதிலும் மலுப்பலாகவே வரும். கடவுளும் அப்படித்தான் தெரிவர் .


-நொரண்டு .
...................


''கார்ல் மார்க்ஸ் கடவுளைப்பார்க்கவில்லை ,
கஷ்டப்படும் மக்களைப்பார்த்தார் ,
அவர்கள் சுரண்டப்படுவதைப்பார்த்தார் ,
மனிதகுலமேன்மைக்கு
சுரண்டலை ஒழிப்பதே சரியென தீர்மானித்தார் ....''


மார்ச் 14 - கார்ல் மார்க்ஸ் நினைவை முன்னிட்டு ....

நொரண்டு .


.

Saturday, February 28, 2009

O+ve இரத்தம் உடனடி தேவை

O+ve இரத்தம் உடனடி தேவை .
சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல் துறையினரால்
கொடூர தாக்குதலுக்கு உள்ளாகி உயிருக்கு போராடிவரும்
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள
ஒருவருக்கு அவசரமாக உயிர்காக்க
O+ve பிரிவு இரத்தம் தேவை.
மேற்கண்ட இரத்தப் பிரிவினர்
உடனடியாக தொடர்பு கொள்ளவும்.

செய்தியைப் படித்தவுடன்
O+ve பிரிவினைச் சேர்ந்தவன் என்பதால்
SMS அனுப்பிய சென்னை கோயம்பேடு
இந்தியன் மருத்துவமனைக்கு விரைந்தேன்.

IC வார்டிற்குள் அழைத்துச் சென்று படுக்க வைத்தனர். வயதானவர் உடல் முழுவதும்
கட்டுக்களுடன் மூக்கில் ஆக்ஸிஜன் ஏற, பல இணைப்புகளுக்கு மத்தியில் கிடத்தப்பட்டிருந்தார்.
டாக்டர் என்னிடம் இரத்தத்தை எடுத்தபொழுது பெரியவருக்குத்தான் தேவையாக இருக்கிறது.
தங்களின் உதவிக்கு நன்றி என கூறினார்.

பெரியவரின் தீட்சண்யமான கண்கள் என்னை மிகவும வசீகரித்தது.
அவர் என்னை சைகை செய்து அழைத்தார்.
கைகளை மெல்ல வருடி அருகில் அமர்த்தினார்.
பாரத மாதாவே என்னை தன் மடியில் அமர்த்தியது போன்ற உணர்வு.

ஐயா, நலமாக உணர்கின்றீர்களா என்றேன்.

ம் ...என்றார்.

பின், பையா நாளிதழ்களும், பிற வார இதழ்களும், பேப்பரும் பேனாவும் கொண்டு வந்து
உதவ முடியுமா என்றார்.

என்னால் மறுமொழி கூற முடியவில்லை.

எனது கை பலத்த அடிபட்டுள்ளது
நான் கூறுவதை எழுத்தர முடியுமா என்றார்.

சரியென அவரின் முன் அமர்ந்தேன்.

பையா, அதற்கு முன் இவற்றைப் படியென இரண்டு துண்டு செய்திகளைக் கொடுத்தார்.

'' நான் சுட்டேன்.
கூட்டம் சிதறிப்போகும்வரை சுட்டுக் கொண்டேயிருந்தேன். மக்களின் நெஞ்சிலே எவ்வளவு
பெருந்தாக்கம் ஏற்படுத்த வேண்டுமென்று எண்ணங்கொண்டேனோ அதன் படிக்கு அத்தனை அதிகம்
சுடவில்லை என்றுதான் நினைக்கிறேன். என்னிடம் மட்டும் இன்னும் கூடுதலாக படையாட்கள்
இருந்திருந்தால் அடிபட்டோர் மற்றும் செத்தேரின் எண்ணிக்கை இன்னும் கூடுதலாகவே
இருந்திருக்கும். நான் அங்கு போனது வெறுமே கூட்டத்தை கலைக்க மாத்திரமல்ல. மக்களின்
நெஞ்சிலே ஒரு குலை நடுக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் போனேன். அங்கு கூடினவர்கள்
நெஞ்சில் மட்டுமல்ல, பஞ்சாப் முழுதும் ஆன எல்லோருக்குமே குலை நடுக்கம தோன்ற வேண்டும்
என்றுதான் சுட்டுக் கொண்டேயிருந்தேன். அவசியத்துக்கு மேல் கடுமைகாட்டி விட்டேனோ என்ற
கேள்விக்கே இடமில்லை. -
ஜெனரல் டயர் ''

'' 1917 டிஸம்பரில் பரிட்டிஷ் அரசாங்கம் அமைத்தது ராஜத்துரோக விசாரணைக் குழுமம்
Sedition Committee ரௌலட் கமிட்டி என்ற பெயரில் பின்னர் பிரசித்தமானது. 1918
ஜூலை, இக்கமிட்டி தன் ரிப்போர்ட்டை அச்சிட்டு வெளியிட்டது. இந்த ரிப்போர்ட்டின்படி,
இந்தியாவில் நடந்து கொண்டிருந்த விடுதலைப் போராட்டம் ஒரு குண்டர்களின் கலக
ஆர்ப்பாட்டம்-குண்டர்கள் என்றால், கொள்ளை கொல்லை புரியும் தீயர்கள்! இவ்வறிக்கை மேலும் முயன்று
நிலைநாட்டப் பார்த்த கண்டுபிடிப்புகள் - இந்திய தேசபக்தர்கள் யாவரும் அராஜக வாதிகள்,
கொள்ளை, தீ வைப்பு, அடிதடி கொலை ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களால்
சமூகத்துக்கு பேராபத்து தான் விளையும், நாட்டில் அமைதி குலையுமோ என்கிற அச்சத்துக்கு
இடமுண்டு- என்பனவாம்!. இப்படிப்பட்ட குற்றவாளிப் புள்ளிகளை அடக்குவது மேன்மேலும்
கடினமாகி வருவதால் அதற்கான புதிய சட்டங்கள் செய்ய வேண்டியது அவசியம் என்றும் இந்த
ரிப்போர்ட் கூறிற்று. ''

படித்துவிட்டுப் பார்த்தேன்.

கம்பீரமான குரலில் எழுது என்றார்.


சென்னை ., 22..2.2009,

மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய எனது அன்பினிற்கினிய நண்பர் டாக்டர் அம்பேத்கார்
அவர்களுக்கு, எப்படி உள்ளீர்கள், நாம் சந்தித்து, பேசி பல நாட்கள் ஆகிவிட்டது. நலமாக
இருக்க இறைவணை பிரார்த்திக்கின்றேன்.

என் மனஅழுத்தம் காரணமாகவும், சொல்லவெண்ணா துயரத்தின் காரணமாகவும் இக்கடிதத்தை
உங்களுக்கு எழுதுகின்றேன். உங்களைத் தவிர இத்தருணத்தில் எனக்கு ஆறுதலும், ஜனநாயகத்திற்கு
பாதுகாப்புத் தரும் உரிய அறிவுரைகளும் தருபவர்கள் உலகில் வேறுயார் இருக்கின்றார்கள்.
சுதந்திர நாட்டின் குடிமக்கள் தங்களின் சீறிய அறிவின் துணை கொண்டு மேலும் நாட்டை
வளப்படுத்தி தாங்கள் உலகிலே தலைசிறந்த ஜனநாயக வாதிகளாக ஆக்கிக் கொள்வர் என்று
நினைத்தோம். ஆனால் இன்று ஜனநாயகத்தை கேள்விக்குறியதாக ஆக்கிக் கொண்டிருப்பதனைப் பார்த்தால்
மிகவும் வேதனையாக உள்ளது.

சுதந்திர இந்தியாவில் ஜனநாயகம் எப்படி இருக்கிறது, நீதிபரிபாலணம் எப்படி
நடக்கிறது. என்பதனை நேரில் கண்டுவர சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சென்றேன். அன்று மாலை
திடுதிடுவென்று எந்தவித அறிவிப்பும் கொடுக்காமல், முன்னெச்சரிக்கை எதுவும் செய்யாமல்
அங்கிருந்த வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களின் மீது கொடூர தாக்குதலை ஏற்படுத்தியதோடு
நீதிமன்றத்தின் மீது தாக்குதல்களை நடத்தினர் காக்கி உடையணிந்த கும்பல் .. எனக்கு
தூக்கிவரிப்போட்டது. யார் இவர்கள் எதற்காக இப்படிச் செய்கின்றார்கள் எனத் தெரியாமல்
திகைப்புடன் நின்று கொண்டிருந்த என்னை டே கிழவா, நீ யாருடா?, வக்கீலா ?என்றார் ஒரு
காக்கி உடையணிந்தவர். ஆம் என்றேன். எத்தனை பேர் எனறு தெரியவில்லை. சரமரியாக என்னைத்
தாக்கினர் .
என்னை கொலை செய்யும்பொழுது கூட இப்படிப்பட்ட வலியை நான் உணரவில்லை.
பின் மயங்கி விழுந்துவிட்டேன் என்றே நினைக்கிறேன். இன்று மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பத்திரிக்கைகள் மூலம் உலக நடப்பும் அதற்குப் பின்னிட்டு
நீதிமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் யாவற்றையும் தெரிந்து கொண்டேன். இதன் காரணமாகவும்
பிறவற்றிற்கும் எனக்கு சில சட்டத்திற்கு சட்ட விளக்கம் வேண்டியிருப்பதாலும், இது
சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட யார் யாருக்கு கடிதம் எழுதுவது என்பது
குறித்தும் தங்களின் மேலான ஆலோசனைக்காகவும், அறிவுறுத்தலுக்காவும் இக்கடிதத்தை
எழுதுகின்றேன். எனது கருத்தையும் தெரிவித்துள்ளேன். உரிய உயரிய பதில் கிடைக்கும் என்று
நம்புகின்றேன். ஜனநாயகம் காக்க நமது பணியை தொடர வேண்டும என நினைக்கின்றேன். தங்களின்
ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன்.


ஜனநாயக சுதந்திர நாட்டில் நாடு முழுவதும் Democratic Machine ஒரு விநாடி கூட
நின்றுவிடாமல் இயக்கிக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி நாட்டின் எப்பகுதியிலாவது ஒரு
பகுதி மக்களின் ஜனநாயக உரிமைகள் தடுக்கப்பட்டால்கூட அங்கு கொடுங்கோலாட்சி நடக்கிறது
என்பதுதானே உண்மை.


மக்கள் தங்களின் ஜனநாயக உரிமைகள் பாதிக்கப்படும்பொழுது அதற்கு அவர்கள் நிவாரணம் கேட்கும்
உரிமை உண்டு.
ஒரு வினாடி கூட அது மறுக்கப்படவோ, தடுக்கப்படவோ கூடாது.
எச்சூழலிலும் அப்படி எங்கேனும் ஒரு மூலையில் ஏதேனும் ஒரு பாமரனுக்கு
மறுக்கப்பட்டிருந்தாலும் ஜனநாயக இயந்திரம் இயங்கவில்லையென்றே பொருள் கொள்ளலாம் அல்லவா?.

நீதிமன்றங்கள் என்பது ஜனநாயக இயந்திரம் தொடர்ந்து இயங்கிக் கொண்டே வருகின்றது என்பதனை
உறுதிசெய்யும் ஒரே அமைப்பாகும். நீதிமன்றங்கள் தனது நீதிபரிபாலணத்தை தொடர்ந்து 365
நாட்களும் 24 மணி நேரமும் 60 நிமிடங்களும் 60 விநாடிகளும் இடைவிடாது செலுத்திக்
கொண்டே இருக்குமிடத்தில்தான் ஜனநாயகம் சிறப்பாக இயங்குகிறது, இருக்கிறது என்று அர்த்தம்.

ஒரு குடிமகன் தனக்கு பாதிப்பு ஏற்பட்டது குறித்து நீதிமன்றத்தில் பரிகாரம் தேடிக்
கொள்ளலாம். அந்த உரிமையை யாரும் எப்பொழுதும் மறுக்கவோ, தடுக்கவோ கூடாது என்பதுதானே
உண்மை. இது குறித்து விரிவான விளக்கம் கூறவும்.

சென்னை மாகாணம் முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன் 4 நாட்கள் குடிமக்கள்
அனைவருக்கும் அவரவர் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது குறித்து தங்களின் பார்வைக்கு
வைக்கின்றேன்.

சென்னை மாகாணம் முழுவதும் அனைத்து நீதிமன்றங்களும் தாளிட்டு இருந்ததை அறிந்து
வெட்கித் தலை குனிகின்றேன். என்னை மீண்டும் கொலை செய்ததாகவே உணர்ந்தேன். என்ன கொடுமை,
என்ன கொடுமை. வெட்கம், வெட்கம். இந்தியா ஜனநாயக நாடு தானா, இல்லை வேறு எதுவுமா?
ஜனநாயகத்தைப் பற்றி சிறிதும் அக்கறையில்லாமல் அவர் அவர்கள் வேறு எதுஎதுவோ
பேசிக்கொண்டும், விவாதித்துக் கொண்டும், விசாரணை செய்து கொண்டும் இருக்கின்றனரே.
ஜனநாயகம் என்றால் என்ன என்று ஒன்று இவர்களுக்குத் தெரியவில்லையா? அல்லது தெரிந்து
கொண்டும் யாரையோ காப்பாற்ற ஓடுகின்றார்களா?

சட்டத்தின் பாதுகாப்பு தமிழக மக்களுக்கு மறுக்கப்பட்டு உள்ளது.

கடந்த 4 நாட்கள் சென்னை மாகாணம் முழுவதும ஜனநாயக உரிமை, குடிமக்களுடைய
அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, மூடப்பட்டுள்ளது. அதனை யாரும் கண்டு கொள்ளாமல் உள்ளனர்
என்பதனை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன். 'இந்த அரசியலமைப்பில் அதிக முக்கியத்துவம்
வாய்ந்தது என ஏதாவது ஒரு குறிப்பிட்ட ஷரத்தின் பெயரைக் கூறும்படி என்னிடம்
கேட்கப்பட்டால், இச்சரத்து இல்லாமல் இருப்பின் அரசியலமைப்பே செல்லாத ஒன்றாகக் கூடிய
ஷரத்தைத் தவிர வேறு எந்த ஷரத்தையும் நான் குறிப்பிட மாட்டேன். இது அரசியலமைப்பின்
இருதயம் ஆகும். என ஷரத்து 32-யை குறிப்பிட்டீர்கள். ஷரத்து 32 மற்றும் 226 ஆகியவைகள்
இரண்டும எவ்வளவு முக்கியமான ஒன்றாகும். அரசியலமைப்பின் உத்திரவாதமளிக்கப்பட்டுள்ள
அடிப்படை உரிமைகள் மீறப்படும்பொழுது, உச்ச நீதிமன்றம் நீதிப் பேராணை வெளியிட அதிகாரம்
படைத்துள்ளது. 'அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன்" என சிறப்பாக உச்சநீதிமன்றம்
அழைக்கப்படுகிறது. அப்படியிருக்க மேற்கூறிய நான்கு நாட்கள் சென்னை மாகாணாத்தில் எந்த
ஒரு குடிமகணும் அடிப்படை உரிமைகள் மற்றுமல்லாமல் சாதாரண உரிமைகள் மீறப்பட்டதற்கும்கூட
நீதிமன்றத்தினை அணுகமுடியாதபடி அதனை அடைத்து, முடக்கி வைத்தது எச்சட்டப்படி என்று
எனக்குத் தெரியவில்லை. அப்படி நீதிமன்றங்களை முடக்கி வைக்க அதிகாரம் உண்டா? அத்தகையு
அதிகாரம் யாரிடம் உண்டு? அப்படி ஜனநாயக நாட்டில் நீதிமன்றங்களை எப்பொழுது,
எக்காரணத்திற்காக மூடி வைக்க முடியும்? மூடிவைக்க முடியுமா? அப்பொழுது Democratic
Machine இயங்கவில்லை என்றுதானே பொருள். அப்படி இயங்காதபட்சத்தில் அதற்கு பொறுப்பு யார்
ஏற்க வேண்டும். மூடுவதற்கு ஜனாதிபதி (அ) ஆளுநரின் உத்தரவு உடனே பெற வேண்டுமா
இல்லையா? நீதிமன்ற நிர்வாகத்திற்கு அத்தகைய அதிகாரம் எச்சட்டத்தின் வழி
கொடுக்கப்பட்டுள்ளது? எவ்வாறு? யாருக்கு? அப்படியே கொடுக்கப்பட்டிருந்தாலும் அது சரியா?
சட்டத்தின் பாதுகாப்பை முடக்க முடியுமா? அப்பொழுது பாதிக்கப்பட்ட நபர், ஜனநாயக உரிமை
பாதிக்கப்பட்டதற்காக இழப்பீடு பெற முடியுமா? யாரிடம் இழப்பீடு கேட்பது? யார் இழப்பீடு
கொடுக்க வேண்டும் என்பதற்கு தாங்கள்தான் சரியான பதிலையும், ஆலோசனைகளையும்,
அறிவுறுத்தலையும் தர வேண்டும்.

நான் இங்கு அழுத்தம் திருத்தமாக பதிவு செய்வது என்னவெனில் சென்னை மாகாணத்தில்
கடந்த சில நான்கு நாட்களாக நீதிபாரிபாலணம் நடைபெறவில்லை என்பதோடு, அங்கு மக்களுக்கு
நீதிமன்த்தால் நீதி மறுக்கப்பட்டுள்ளது என்பதுவே. மேலும் இதுபோன்று இனி எப்பொழுதும்
நடைபெறக்கூடாது என்பதுவும் ஆகும். இது ஒரு ஜனநாயக அசிங்கம், கேவலம், இதற்கு தார்மீகப்
பொறுப்பேற்று இந்த ஜனநாயக படுகொலைக்கு உரியவர்கள் தங்களின் பதவியினை ராஜீனாமா செய்ய
வேண்டும் என்றும், ஜனாதிபதி இது சம்பந்தமாக இதுவரை எந்த கண்டனமோ, அறிக்கையோ மற்ற
எதுவுமோ கூறாமல் மௌனம் சாதிப்பது கண்டனத்திற்குரியது. அதுபோலவே கவர்னாரின் செயலும்.
நாட்டில் ஒரு பகுதியில் ஜனநாயகம் மறுக்கப்பட்ட சூழலில் அத்றகு தார்மீகப் பொறுப்பேற்று
அவர்கள் ராஜீனாமா செய்தாலும் மகிழ்வேன். ஜனநாயகத்திற்கு அவர்கள் கொடுக்கும் மரியாதையாக
நினைத்து பெறுமைப்படுவேன்.

ஆனால் மிகவும் வருந்தத்தக்க விசயம் என்னவெனில் மிகப்பெரிய அரசியல் ஜனநாயகப்
படுகொலை நடத்திவிட்டு, வழக்கறிஞர்களின் போராட்டம் காரணமாகத்தான் இதுவெல்லாம் நடந்ததாக
ஒரு மாயையை ஏற்படுத்தி தப்பிக்கப்பார்ப்பதை என்னால் ஒத்தக்கொள்ள முடியவில்லை. இது
வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஏற்றுக்கொள்ள முடியாதது.
எனது வாழ்க்கையல் செளரி சௌரா நிகழ்ச்சியில் காவல் நிலையத்தை காவலர்களை உள்வைத்தே,
ஆங்கிலேய ஏகாதிபத்தியம் போராட்டத்தை திசை திருப்பி நெருப்பிட்டு ,அடக்கு முறையை
அப்பாவி இந்தியமக்களின் மீது போட்டதோடு நானும், எனது போராட்டத்தை விளக்கிக் கொள்ளும்படி
செய்தனர். பின்னிட்டுத்தான் காவல்துறையின் சூழ்ச்சிகளைப் புரிந்துகொண்டு செயல்பட்டேன். பிட்
நோட்டீஸ் அடிப்பது, வன்முறையை மறைமுகமாகத் தூண்டுவது போன்ற செயல்களுக்கு அவர்கள்தான்
காரணம் என.

மேலும் ஒன்றை உங்களிடம் கேட்டுக் கொள்கின்றேன். விரைவான நீதி கிடைக்கத்தானே நாம்
எவ்வளவோ சட்ட முன் வரைவுகளை வெளியிட்டோம். ஆனால் இன்று நீதிமன்றத்தில் அரசின் பேருந்துகள்
ஜப்தி செய்து வைத்துள்ளதாக எனக்கு தெரிய வருகின்றது. இது என்ன நடைமுறை கலெக்டர்
அலுவலகம் ஜப்தி, பேருந்து ஜப்தி என. ஏன் அரசிடம் நேரடியாக பெற எத்தனையோ வழிகள்
இருக்க ஏன் மக்களுக்கு தாமதமாக நீதி வழங்க வேண்டும். இது குறித்து தாங்கள், மக்கள்
விரைவாக நீதி கிடைக்க என்னென்ன வழிகள் உள்ளது, எது செய்யலாம் என்பது குறித்து தக்க
ஆலோசனைகள் கூறவும்.

மேலும், பாகிஸ்தானில் பஞ்சாப் மாநில முதல் மந்திரி ஷபாஸ் ஷொரிப்பை அந்நாட்டு
சுப்ரிம் கோர்ட் லஞ்ச ஊழலில் ஈடுபட்டதற்காக தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர் என்றும்,
முதல்வர் பதவியில் நீடித்திருப்பதற்கு தடை வித்துத்துள்ளது.

இது குறித்து எனக்கு உள்ள சந்தேகம் என்னவெனில்,
ஆங்கிலேயே நீதித்துறையைப் பற்றி எனது பார்வையை நான் கண்ட அவலத்தினின்று கூறிக்
கொள்கின்றேன். ஆங்கிலேயே ஆட்சியில் பணிபுரிந்தவர்கள் சம்பளத்திற்காகவும், பதவி
உயர்விற்காகவும் புகழிற்காகவும், அரசை மிகவும் சார்ந்து, அரசு சொல்வதை ,நினைப்பதை,
இம்மி பிசகாமல் தங்களின் நீதிபரிபாலணத்தை காட்டிவந்தனர். உயர் பதவியே குறிக்கோளாகவும்,
மிகவும் சொகுசுக்காகவும், அந்த சொகுசு நீடிக்க அரசுக்கு எது வேண்டுமானாலும் செய்து
வரும் ஏஜெண்டுகளாகவும் இருந்து வந்தனர். மொத்தத்தில் அரசு வழக்கறிஞர்களாகவே இருந்து
வந்தனர். நான் வாதாடிய வழக்குகளாகட்டும், எனது போராட்டங்களுக்கு எதிராக அவர்கள் போட்ட
வழக்காகட்டும், அவர்கள் ஒருபொழுதும் அரசின் விசுவாசத்தினின்று பிறழ்ந்ததே கிடையாது.
எனது வாழ்க்கைப் பயணத்தின் நெடுக இவ்வாறே பார்த்திருந்தேன்.நியாயமும் ,மனிதாபிமானமும்
அவர்களிடம் என்றும் நான் பார்த்தே இல்லை .

சுதந்திரத்திற்கு முன்பே நீதித்துறையில் மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வர
நினைத்தேன். அதற்கு முடியாமல் போய்விட்டது. ஏனெனில் அந்த அமைப்புகள் அப்படியே தொடர்ந்தால்
அந்த அந்த அமைப்புகளில் பதவியில் அமர்பவர்கள் அதே போன்று கட்டப்பஞ்சாயத்து மனோநிலையிலேயே
நடந்து கொள்வார்கள் என்று எனது மனதில் ஒரு நமைச்சல் இருந்து வந்தது. விரிவாக
செயல்படுத்துவதற்கு முன் என்னை படுகொலை செய்துவிட்டார்கள். நான் அப்பணியை சரியாக
செய்யாததன் காரணமாகத்தான் என்னவோ, நாம் பெற்றுத்தந்த சுதந்திர நாட்டில் இன்னும் மக்கள் அதனை
பூரணமாக அனுபவிக்க முடியாமல் அவதிப்படுகின்றார்கள் போலும்.

மேலும், அரசியல் சாசன உரிமைகள் குற்றவழக்கு பின்னணியால் எப்பொழுதும்
பாதிக்கப்பவதில்லை. அரசியல் குற்றம் என்பது வேறு, சமூக குற்றம் என்பது வேறு. இவற்றை
உணர்ந்து நீதிமன்றங்கள் செயல்படுவதாக தெரியவில்லை. சுதந்திரம் பெற்ற நாடுகளின்
நீதிபதிகள் சர்வாதிகாரிகள் போல் செயல்படக் கூடாது என்பது எனது அழுத்தம் திருத்தமான
கொள்கை. தங்களின் தீர்ப்பு தங்களுக்கு முன் வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு மட்டுமே. மேலும்
பொது நல் வழக்குகளின் தீர்ப்புகள் பொது நலத்தின் மீது மட்டுமே. மற்ற வழக்கு தீர்ப்பிற்கும்,
பொது நல வழக்கு தீர்ப்பிற்கும், அரசயில் சட்டம் குறித்த தீர்ப்பிற்கும் மிகப்பெரிய
வித்தியாசம் உண்டு என்பதை நீதிபதிகள் உணர வேண்டும்.

அரசியலமைப்பின் பாதுகாவலனாக நீதிமன்றங்கள் மட்டும் இருக்க அதில் அமர்ந்துள்ள
நீதிபதிகள் அரசியல் வாதிகளின் பாதுகாவலனாக இருப்பதால் சுதந்திரமும் ஜனநாயகமும்
கேலிக்கூத்தாகிக் கொண்டிருக்கின்றது என்பது எனது திடமான கருத்து. நாம் போராடி
சுதந்திரம் பெற்ற நாட்டில் தேர்தலில் போட்டியிடக் கூடாது என ஒரு நபருக்கு அவரின்
சமுதாயக் குற்றத்தினைக் காரணம் காட்டி ஆணையிட அதிகாரமில்லை என்பது எனது கருத்து.

ஷொரிப் எங்கு சென்று பரிகாரம் எப்படி பெறுவது என்று எனக்கு தாங்கள் சரியான
அறிவுறுத்தலும், ஆலோசனைகளையும் வழங்கவும்.


மேலும் பங்களாதேசத்தில் இராணுவப் புரட்சி மற்றும் பல புரட்சியாளரைக் காணவில்லை
என்பதை படித்து தெரிந்து கொண்டேன்.
அரசு தனி விசாரணைக்கமிஷன் அதற்கு வைக்கலாம் அல்லவா?

விசாரணையில் கமிசன் பற்றி எனது கருத்தை தங்களின் பார்வைக்கு வைக்கின்றேன். நான்
ஆப்பிரிக்காவில் இருந்தபொழுது கோலோவில் நடந்த ஒரு போராட்டத்திற்கு விசாரணைக் கமிஷன்
அமைக்க அரசு ஆணையிட்டது. அப்பொழுது அரசு தனக்கு தேவைப்பட்ட, அப்பொழுது நீதிபதியாக
இருந்த சாம்சனை அமர்த்தியது. அவர் கோடா உயர்நதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தார்.
அப்பொழுது நான் ஆங்கிலேயே அரசுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதனை தங்களின் பார்வைக்கு
வைக்கின்றேன்.

மேன்மை தாங்கிய இங்கிலாந்து பிரதமருக்கு கோலோ நிகழ்ச்சி பற்றி தாங்கள் அறிந்ததே
அது சம்பந்தமாக தற்பொழுது கோடா உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதி சால்மனை
நியமித்துள்ளீர்கள். அடிமை அரசாக எங்களை ஆளும் நீங்கள் உங்களிடம் சம்பளம் வாங்கி வரும்
ஒருவரை உங்களின் அரசு செய்த குறித்தினை விசாரணை செய்யும் தலைவராக அமர்த்துவது
தங்களுக்கு சாதகமாகவே அமையும் என்பது தங்களுக்கே தெரியும். ஆதலால் ஓய்வு பெற்ற ஒரு
நீதிபதியை அதற்கு அமர்த்துமாறும், அப்படி அமர்த்தாத பட்சத்தில் நாங்கள் அந்த அமைப்பிற்கு
ஒத்துழைக்க மாட்டோம் என்றும், ஏற்றுக் கொள்ளவும் மாட்டோம் என்றும் உறுதிபடக் கூறியதோடு,
போராட்டமும் தொடரும் என்பதனைக் கூறிக் கொள்கின்றேன். உரிய நடவடிக்கை வேண்டி ……..

நான் அக்கடிதம் 1910-ல் எழுதியது என நினைக்கின்றேன். அது நம்மை அடிமையாக ஒரு
அரசு ஆண்டபொழுது எழுதியது. ஆனால் சுதந்திரமான ஜனநாயக நாட்டில் மேற்குறிப்பிட்ட எனது
கடிதத்தில் கூறியுள்ள எனது கருத்துக்கு எதிராகவே மாறிவிடும் என்பதுவே.

அதாவது சுதந்திரமான ஜனநாயக நாட்டில் அப்பொழுது பணியிலுள்ள ஒருவரைத்தான்
விசாரணைக் கமிஷன் தலைவராக அமர்த்த வேண்டும். அப்பொழுது தான் சரியான முறையில் ஜனநாயகம்
காக்கப்படும் என்பது எனது கருத்து. இது சரிதானே. தாங்கள் இதைப் பற்றியும் கருத்து கூறவும்.

இங்கு கட்டுப்பாடற்ற சுதந்திரம் பற்றி பேச வேண்டும் என நினைகின்றேன் .

கட்டுப்பாடற்ற முழுச்சுதந்திரம் பற்றி பேச வரும்பொழுது நீதிமன்ற அவமதிப்பு பற்றி எனது
பார்வையை தங்களின் முன் சமர்ப்பிக்கின்றேன்.

நீதிமன்ற அவமதிப்பு என்பது ஆங்கிலேயர்கள் தனது நீதிபதிகளின் தீர்ப்பின் மீது அடிமை
நாடுகளின் மக்கள் எவ்விதமான கருத்தும் கூறக்கூடாது. அப்படி கருத்துக் கூறும் தகுதி
சிறிதும் அற்றவர் அவர்கள், அப்படிப்பட்டவர்களிடமிருந்து ஜனநாயகக் குரல் ஒழிக்கக்கூடாது
என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு நயவஞ்சகச் சூழ்ச்சி.

இந்தியா ஒரு மக்களாட்சி நாடு, மக்களாட்சியில் மக்களுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட
வேண்டும். இல்லாவிட்டால் அது மக்களாட்சியாகாது. மாறாக சர்வாதிகார ஆட்சியாகிவிடும்
(Tyranny) மக்களுக்கு கட்டுப்படாற்ற முழுச் சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும் . அதுதான்
நான் விரும்பிய இந்தியா. நான் சுதந்திரம் பெற போராடியது அதற்காகத்தான். 60 ஆண்டுகள்
ஓடிய பின்னும் இந்தியாமுதிர்ச்சியடையாமல் இருக்கிறது என்றால் கேவலம், வெட்கம். என்ன ஆட்சி
ஆண்டு கொண்டு வருகின்றனர். எனது பெயரைச் சொல்லிக்கொண்டு. என்னை அவமானப்படுத்துவதாகவே
நினைக்கின்றேன். நமது இந்தியா சுதந்திர இந்தியா, உலகிற்கே உதாரணமாக இருக்க வேண்டும்.
நமது மக்களின் கருத்துச் சுதந்திரம் எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாக இருக்கிறதோ,
அவ்வளவுக்கவ்வளவு இந்தியா உலக அளவில் மிகச் சிறந்த நல்லரசாக விழங்கும் என்பது எனது
கருத்து. அதை விடுத்து இந்திய மக்களின் கருத்துச் சுதந்திரத்தை தடுத்து நிறுத்துவது
சுதந்திரப் போராட்டத்தையும், எமது தியாகத்தையும், எமது கனவையும், குழி தோண்டி
புதைப்பதாகவே உணர்கின்றேன். கருத்துச் சுதந்திரத்திற்காகவே நாம் போராடினோம். சுதந்திரம்
பெற்றோம். மறுப்பவர் யாராக இருந்தாலும் தூக்கியெறியப்பட வேண்டியவர்களே. கருத்துச்
சுதந்திரம் உள்ள இடத்தில்தான் மிகச் சிறந்த சிந்தனைகளும், சீர்திருத்தங்களும் ஏற்படும். இது
சரிதானே. தங்களின் மேலான ஆலோசனைகளையும், கருத்துக்களையும் கூறவும்.

மேலும் ,இந்தியாவிற்கு மிகச்சிறந்த வெளியுறவுக்கொள்கையை வகுத்துத்தரவேண்டும் என
நினைக்கின்றேன் . தங்களின் மேலான ஆலோசனைகளையும், கருத்துக்களையும் தருமறு வேண்டுகிறேன் .

ஒன்றை நான் இப்பொழுது நினைத்துப்பார்க்கின்றேன் .
1927-ம் ஆண்டில் நான் இலங்கை சென்றிருந்தபொழுது யாழ்பாணத் தமிழர்கள் இந்தியாவைத் தங்கள்
தாய் நாடாகப் போற்றிக் கூறினர். இந்திய நாட்டின் மீது அவர்கள் கொண்டருந்த பற்றினை அறிந்து
மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.
அங்கு இப்பொழுது மிகவும் வருந்தத்தக்க சூழல் நிலவி வருவது எமக்கு வருத்தத்தை தருகிறது .

பொதுவாகவே விடுதலைக்காக போராடும் மக்களுக்கு எப்படிப்பட்ட வி்தத்தில் இந்தியா
இருக்கவேண்டும் என்பது குறித்து எமது கருத்துக்களுக்கும் தங்களின் மேலான ஆலோசனைகளையும்,
கருத்துக்களையும் கூறவும்.
எமது கருத்து ,
இது எமது கருத்து மட்டுமல்ல இந்தியாவிற்கான சுதந்திரத்திகாக போராடும் பொழுது நான்
பிற நாடுகளிடம் எப்படிப்பட்ட உதவிகளை விரும்பினேன் ,எப்படியெல்லாம் அவைகள் உதவ வேண்டும்
என நினைத்தேனே அப்பொழுது தோன்றியது இது என்பதுவே உண்மை . விடுதலைக்காக மக்கள்
போராடி வரும் நிலையில் அவர்களின் சுதந்திரத்தை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் விதத்தில்
நமது இந்தியாவின் செயல்பாடு இருக்க வேண்டும். எமது நாட்டிடமிருந்து எந்த ஒரு
நாட்டிற்கும் விடுதலை இயக்கத்தையும், ஒடுக்குவதற்கு ஆலோசனைகளையோ, ஆயுதங்களையோ தருவதை
நான் ஒருபொழுதும் ஒத்துக்கொள்ள மாட்டேன். ஏனெனில் நான் அப்படிப்பட்ட போராட்டத்தால்
சுதந்திரம் வாங்கவில்லை. மேலும் ஒரு நாட்டின் சுதந்திரத்தை எவ்வழியில் அடைவது என்பதை
அதற்காகக் போராடும் மக்களே தீர்மானித்க் கொள்ள வேண்டும். அதை மீறி யாரும மாற்று வழி
கூறுவதை எம்மால் ஒத்துக்கொள்ள முடியாது. அது சரியானதும் அல்ல. யாரையும் நிர்பந்திக்கும்
அரசாக எமது சுதந்திர ஜனநாயக இந்தியா இருப்பதை நான் விரும்பவில்லை. அதற்காக நான்
சுதந்திரம் வேண்டி போராடவில்லை. சுதந்திரம் எங்கு தோன்ற எத்தணித்தாலும் அதற்கு முழு
ஆதரவும் கொடுக்கவே யாம் விருப்பமுற்றுள்ளோம். அவர்கள் யாராக இருந்தாலும் எப்படி
இருந்தாலும ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்களாக அவர்கள் இருக்கும்பட்சத்தில் எனது
ஆதரவு அவர்களுக்கு.
இது சரிதானே.

தடைசெய்யப்பட்ட இயக்கங்கள் பற்றி எனக்கு சில விளக்கங்கள் தேவை.

எவைகளை தடை செய்யப்பட்ட இயக்கங்கள் என்று கூறலாம் என்பது பற்றி எனக்கு விரிவான
விளக்கம் தரவும்.

எனது கருத்தை தங்களின் முன் பதிவு செய்கிறேன்.
ஒரு சுதந்திர ஜனநாயக நாட்டில் நாடு என்ற அமைப்பிற்கே அச்சுறுத்தும் வகையில்,
பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன்,பிரிவினையை துண்டவேண்டும் என்ற
கருத்துடன் தேசத்திற்கே அச்சுறுத்தல்கள் ஏற்படுத்தும் தேசமக்களின் பாதுகாப்பிற்கும், உயிர்
,உடமைகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் செயல்களை தொடர்ந்து அடிக்கடி பல்வேறு பெயர்ககளில்
பல்வேறு இயக்கங்களாக பரிந்தோ, அல்லது ஒரே கோரிக்கையை பல்வேறாக பிரிந்தோ செய்யும் ஒரு
இயக்கத்தை மட்டுமே தடை செய்யப்பட வேண்டும்.
அந்த இயக்கத்தின் செயல் தொடர்ந்து, பல்வேறு வழிகளில், நீடித்துக் கொண்டே பலரால்
நடைமுறைப்படுத்திக் கொண்டே பின்பற்றிக்கொண்டே, ஆதரவளித்துக் கொண்டே வரும் வேலைகளில், அது
தொடர் நிகழ்வாகிக் கொண்டிருக்கும்பட்சத்தில் அவ்வியக்கத்தைப் பற்றி பேசவோ, எழுதவோ ,அதற்கு
உதவவே தடை விதிக்கப்படலாம்.
இது தவிர்த்து ஏதோ ஓர் நிகழ்வினை மட்டும் காரணம் காட்டி ஒன்றை அல்லது ஒரு இயக்கத்தை
தடை செய்வது கூடாது என்று நினைக்கிறேன்.


மேலும் , நீதிமன்ற வளாகத்திற்குள் காவல்நிலையங்கள் மற்றும் மதசம்பந்தமான நிறுவனங்கள்
ஆகியவைகள் இருக்கலாமா என்பது குறித்து தங்களின் மேலான ஆலோசனைகளையும்,
கருத்துக்களையும் தருமறு வேண்டுகிறேன் .
.
எனது கருத்து,
நீதிமன்றம் என்பது அனைவருக்கும் பொதுவானது அங்கு ஜாதி, இனம், மதம், மொழி, பால் என
எந்தவித வேறுபாடும் பாராட்டக்கூடாது. அங்கு மக்களுக்கான மனித நோயத்துடுன் மக்களின்
நலத்தை மையமாக வைத்தே நீதி பரிபாலணம் மேற்கொள்ளப்பட வேண்டும். சுய விருப்பு,
வெறுப்பற்று நடு நிலைமையுடன் நீதி கூறுபவரே அங்கு இருக்க வேண்டும். உயர்வு, தாழ்வின்றி
அனைத்து குடிமக்களுக்கும் சமமான உரிமை, இடம், வாய்ப்புஅளித்து நீதி பரிபாலணங்கள்
மேற்கொள்ளப்பட வேண்டும். சட்டத்தின் ஆட்சி நடைபெற 100% உத்திரவாதம் தரப்பட வேண்டும்.
ஜனநாயகம் சிறிது குறைந்தாலும், அதற்கு பொறுப்பேற்று தங்களின் பதவியை துறப்பதற்கும்,
அதற்கான தண்டனைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமானவர்கள் அங்கு இருக்க வேண்டும். நீதிமன்ற
வளாகத்திற்குள்ளும், நீதிமன்றத்திற்குள்ளும் எந்தவிதமான மதச் சின்னங்களோ, அடையாளங்களோ,
விளம்பரங்களோ, கோவில்களோ அது சம்பந்தமானவைகள் காட்சிப் பொருளாகவோ, நிலைபெற்ற
அமைப்பாகவொ எவையுமே இருக்கக் கூடாது. மேலும் அரசியல் சார்புடைய சங்கங்களோ,
அமைப்புகளோ, கொடிமரங்களோ, பேனர்கள் போன்றவையோ மற்றும் அவற்றை பிரதிபலிக்கும் எவையும்
நீதிமன்றத்திற்குள்ளும், நீதிமன்ற வளாகத்திற்குள்ளும் அனுமதித்தல் கூடாது. ஒரு
நீதிமன்றத்திற்குள் நீதி பாரிபாலண அவை, நீதிபதிகள் அறை, நீதிமன்ற பணியாளர்கள் அறை,
நீதிமன்ற அலுவலகம், வழக்கறிஞர் கூடம் மற்றும் வழக்கிற்கு பயன்படும் பொருட்கள் விற்பனை
அங்காடி, மற்றும் வழக்கறிஞர்கள் ஓய்வு அறை மற்றும் வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் ஓய்வு அறை
மற்றும் வழக்கறிஞர் சங்கம் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம், வங்கிகள், கேண்டீன்கள் இது
தவிர்த்து வேறு எதுவும் இருக்கக் கூடாது. மேலும் அவற்றில் அரசியல் தலைவர்களின்
போட்டோக்கள், மதச் சம்பந்தமான போட்டோக்கள் ,விளம்பரம் தாங்கிய காலண்டர்கள் ஆகியவை
இருக்கக்கூடாது.
இப்படித்தான் ஜனநாயக நீதிமன்றம் இருக்க வேண்டும்.

இறுதியாக,
நீதிமன்றத்திற்குள் புகுந்து நிராயுத பாணியாக இருந்த எம்மை ஒரு ஜனநாயக நாட்டில்,
நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட ஒரு அமைப்பின் ஊழியர்கள், நீதியை நிலைநாட்ட
நீதிபாரிபாலணம் செய்யும் உயாரிய இடத்திற்குள் புகுந்து நீதியின் பாதுகாவலர்களான
ஜனநாயகவாதிகளான வழக்கறிஞர்களை காட்டுமிராண்டிகள்போல் தாக்கியதோடு மட்டுமல்லாமல்,
நீதிமன்றத்தில் உள்ள வாகனங்களையும், நீதிமன்றக் கட்டிடத்தையும் வெறிகொண்டு தாக்குதல்
நடத்தியது குறித்து தங்களின் மேலான கருத்தையும் ஆலோசனையையும் கூறவும். நான் இங்கு
அழுத்தம் திருத்தமுமாக பதிவு செய்வது என்னவென்றால், மேற்கண்ட சம்பவம் வழக்கறிஞர்கள் மீது
நடந்த தாக்குதல்களாக நான் கருதவில்லை. ஜனநாயகத்தின் மீது நடந்த நேரடித்தாக்குதலாகவே
கருதுகிறேன் அரைவேக்காட்டு, தகுதியில்லாத உயர்பதவியில் உள்ளவர்களின் கைலாகாத
தனத்தினால் ஜனநாயகத்தைப் பற்றி எந்த அறிவுமற்ற ஆணையினால்தான் நடந்த தாக்குதல் என்றே
சொல்லுவேன். சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் குழிதோண்டி புதைத்துவிட்டு கொக்கரிக்கும்
செயலாகவே கருதுகிறேன். எமது நாட்டில் இப்படிப்பட்டவர்களை எமது மக்கள் எப்பொழுதும்
ஏற்றுக்கொள்ளக் கூடாது. அவர்களின் செயல்களுக்கு மக்கள்தான் வழக்கறிஞர்களுடன் ஒன்றினைந்து
அவர்களுக்கு ஆதரவு தந்து ஜனநாயகத்தைக் காப்பதுடன், ஜனநாயக முறையில் சரியான பாடம்
புகட்ட வேண்டும்.

சுதந்திரம் பெற்று அயோக்கியர்களின் கைகளில் நாடு செல்லும் என நான்
நினைக்கவேயில்லை. அப்படி நினைத்திருந்தால் அது நடைபெறாத வகையில் முன்பே வரைவுத்
திட்டத்தை தயாரித்திருப்பேன். அதில் ஒன்றாக காவல்துறை முழுவதையும் நீதித்துறையின்
முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வகையில் சட்டத்தினை வரைந்திருப்பேன். அப்பொழுதுதான்
அரசியல்வாதிகளின் அபிலாசைகளுக்கு காவல்துறையினர் காவு ஆகாமல் காப்பாற்றுவதுடன்
உண்மையான சட்டத்தின் ஆட்சி நடக்க ஏதுவாக இருக்கும். ஏனெனில் நீதிபதிகள் த ங்களது
பாதுகாப்பினை அரசிடமிருந்தே பெறுவதால் அவர்கள் நேரடியாகவே ,மறைமுகமாகவே
நிர்பந்தப்படுத்தப்படலாம்.

ஏற்கனவே காவல்துறையினர் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லாது வாழ்க்கையை ஓட்டி
வருகின்றனர். அப்படி நாட்டை நாத்தமடித்து வைத்துள்ளனர் அரசியல்வாதிகள். இப்பொழுது
காவல்துறையினர் இந்த அராஜகத்தைப் பார்க்கும் மக்கள் காவல்துறை கடுமையான அமைப்பு. அதனால்
நாம் அவர்களின் அட்டூழியங்களுக்கும், அராஜகங்களுக்கும் வாயடைத்து, கண்மூடி செல்ல வேண்டும்.
நீதிமன்றத்தையே இவர்கள் என்ன அட்டூழியம் செய்தாலும் கேட்பதற்கு ஆள் இல்லை. ஆதலால்
ஜனநாயகத்தில் உரிமைகளை அவர்களிடம் அடமானம் வைத்து நடைபிணமாக அவர்கள் வாழ
வேண்டியதுதான் என்று முடிவுக்கு சென்று விடுவார்கள் . இந்த லட்சணத்தில் அரசியல்
அயோக்கியத்தை மேலும் அரங்கேற்ற புதிய சட்டத்தின் மூலம் அதிக அதிகாரம் காவல்துறைக்கு
கொடுக்கின்றனர் போலும். எம் பெயரில் ஆட்சி செய்யும் அறிவாளிகள். இப்பொழுதே
காவல்துறையினர் இப்படியெனில், புதிய சட்டம் வந்த பிறகு நாடே கொடுங்கோலாட்சிக்கு உடனே
சென்றுவிடும் என நினைக்கின்றேன். அப்படி ஒரு ஐடியா இருந்ததன் காரணமாகத்தான் என்னவோ
அதனை எதிர்த்து போராடிய வழக்கறிஞர்களைத் தாக்க ஆரம்பித்து விட்டனர் போலும். அப்படித்தான்
நினைக்கின்றேன். இனி நீதிமன்றங்களே தேவையில்லை என்ற முடிவுக்கு வந்ததன் காரணமாகத்தான்
அவர்கள் உயர் நீதிமன்றத்திற்குள் புகுந்து வழக்கறிஞரைத் தாக்க ஆரம்பித்தனர் போலும்.
இப்படிப்பட்ட அராஜக செயலை அரங்கேற்றியவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது என்று எனக்குத்
தெரியவில்லை. இனிமேல் வரலாற்றில் இதுபோல் என்றும் எந்தத்தவறும் நடைபெறாமல் ஏதாவது
செய்ய வேண்டும். தண்டனை கொடுக்கவேண்டும் என்பது எனது நிலைப்பாடல்ல .அவரவர் செயல்களுக்கு
மனிதாபிமானத்துடன் அவரவர்களே பொறுப்பேற்று அவரவர்கள் ஜனநாயகம் காக்க சட்டப்படி
நடந்துகொள்வதுதான் ஜனநாயக மாண்பு .
அப்படிச்செய்வதுதானே சரி .
இதற்கு தங்களின் மேலான ஆலோசனைகளையும், கருத்துக்களையும் கூறவும்.
இந்தியா முழுவதும் உங்களின் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் எதிர்பார்த்தே
காத்திருக்கின்றோம் .
தங்களின் மேலான பதிலை எதிர்பார்ப்பு .

......
என எழுதி முடித்த நான் அவரிடமிருந்து அடுத்த வார்த்தை வராததால் அவரை பார்த்தேன் .

சரி இன்னொரு கடிதம் எழுதவும் என்றார் .

ஒபாமா அவர்களுக்கு
முதலில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆம். உங்களின் மூதாதையர் பட்ட கஷ்டத்தை நேரில் பார்த்தவன் நான்.
மிக்க மகிழ்ச்சி ஒபாமா, மிக்க மகிழ்ச்சி!.
ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்து மிகப் பெரிய உயரத்திற்கு உங்களை கொண்டு சென்றுள்ளது
மனிதாபிமானம்தான் .
அதனால்தான் அமெரிக்கா, அமெரிக்காவாக இருக்கிறது. எமது இந்தியாவோ சுரண்டல்
சமூகத்தினரால் சிக்கித் தவிக்கிறது.
எப்படித்தான் உயரப் போகிறதோ தெரியவில்லை.
நல்ல தலைமை இல்லாமல் ஜனநாயகப் படுகொலையைக்கூட வேடிக்கைப் பார்த்துக்கொண்டு தேசம்
நாசம்மாகிக் கொண்டிருக்கிறது.
தங்களைப் போன்ற வழக்கறிஞரின் தலைமை தேவையாக உள்ளது இப்போது .
இப்போது தான் O+ve ரத்தம் (ஒற்றுமையுடன் சேரும் பண்பு) அதிகமாக பாய்ந்துள்ளது
ஜனநாயகத்திற்கு, வழக்கறிஞர்களால்.
மேலும் மேலும் O+ve ரத்தம் சேர்ந்து ஒரு நல்ல தலைமையை உருவாக்கி நாட்டை நல்வழிக்கு
கொண்டு செல்வார்கள் என எண்ணுகிறேன்.
இங்கு இப்பொழுது வழக்கறிஞர் சமுதாயத்தால் தான் ஒரு நல்ல தலைமையை உருவாக்க முடியும்.
அவர்கள்தான் இனி நாட்டை நல்வழிக்கு கொண்டு செல்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.
அதற்கு தங்களின் ஆதரவு உறுதியாக கிடைக்கும் என நம்புகிறேன்.
ஆதரவளிக்க வேண்டுகிறேன் .

தாங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்,
வணக்கம்.

பையா இந்த இரண்டையும் போஸ்ட் செய்துவிடு என்றார்.


ஐயா, தாங்கள் கையெழுத்து செய்யவில்லை என்றேன்.

இரண்டு கடிதத்தையும் வாங்கி

இப்படிக்கு
M.K.காந்தி

என கையெழுத்திட்டார்.

ஐயா,
நீங்களா !!!
மகாத்மாவா !!!
உங்களுக்கா !!!
நான் இரத்தம் ……!!!!…..

மெல்ல என்னை அருகில் அழைத்தார் .

பொற்கைகளால் அணைத்தார் .

அவருள் நான் கரைந்தேன் .


எனது செல்போன் ஒலி கேட்டு அதிர்ந்து படுக்கையிலிருந்து எழுந்தேன்.
எனது வழக்கறிஞர் மறுமுனையில் .
சார் இன்றா வாய்தா ? என்றேன்.
ஆம் கோர்ட்டிற்கு வந்துவிடுங்கள் என்றார்.

ஓ இதுவரை நான் கண்ட அனைத்தும் கனவா.... ?...

நீதிமன்றம் சென்றேன்

மகாத்மா சிரித்தார்.

.

O+VE இரத்தம் உடனடி தேவை-சிறுகதை

...
...... '' பொதுவாக நண்டு@நெரண்டு இப்படிப்பட்ட சிறுகதைகள் எழுதுவதில்லை .
எழுத தோன்றியது எழுதினேன் ....
....மகாத்மா காந்திக்கு ஜே' .......
.....''அன்னை கஸ்தூரிபாய் நினைவை முன்னிட்டு இக்கதையை அவருக்கு
காணிக்கையாக்குகின்றேன் ''.....


...