Wednesday, April 1, 2009

அறிவியலும் ,இலக்கியமும் .

.


அறிவியல் என்பது
அனைவருக்கும் பொதுவானது.
மொழி, இனம், ஜாதி, மதம் என்று எதுவும் கிடையாது.
ஆனால்,
அது தோன்றும்பொழுது எங்கிருந்து தோன்றுகின்றதோ
அந்த மொழியினின்று வெளிப்படும்
பின் பொதுமைப்படும்.
அந்த மொழியும் பின் அதற்கு உரிமை கொண்டாடுவதில்லை.
இலக்கியம் அப்படியில்லை.

அறிவியல் முதலில் தோன்றியதா?
இலக்கியம் முதலில் தோன்றியதா?
என்றால்
அறிவியல்
தான்
முதலில்
தோன்றியது எனலாம்.

அறிவு வெளிப்படு
கைப்பழக்கத்திற்கு வர ஆரம்பித்ததிலிருந்து,
தனித்து இயங்க ஆரம்பித்துவிட்டது
இலக்கியம் .
அப்படி சென்ற இலக்கியம்
இன்னும்
அறிவியல் போல் பொதுமைப்படவில்லை.
காரணம்,
இலக்கியத்தில்
ஆன்மீகம் கலக்க ஆரம்பித்ததுவே.
ஆன்மீகம் தன்பால்
தன் வளர்ச்சிக்கு
இலக்கியத்தை
மிக அதிகமாக பயன்படுத்த ஆரம்பித்து,
அதன் பொதுமை குணத்தை
நாசம் செய்து
இன்று வரை அது தொடர்கிறது.

இங்குதான்
இலக்கியத்தை பாதுகாக்க
இலக்கியநடப்பு வாதிகள் என்பர்
இலக்கியம் மொழி கடந்தது ஒன்று
பொதுமையானது.
எக்காலத்திற்கும், எச்சூழலுக்கும் பொதுவானது.
ஒரு மொழி இலக்கியம்
என்று ஒன்றைக் கூறக்கூடாது.
அந்த மொழியிலுள்ள இலக்கியம் என்று கூறவேண்டும் என்று
இலக்கியபொதுவுடமை
பேச ஆரம்பித்தனர்.
ஏனெனில்
தங்களின் படைப்புகளை
பொதுமையானதாக காட்டிக்கொள்ளவே
அனைவரும் அப்படி.
ஆனால்
தாங்கள் தாங்களின் தற்சார்பு
விசயங்களை
இலக்கியம் என்னும் வடிவில் படைத்து
அதனை பொதுமைப்படுத்துவதன் மூலம்
தங்களின் தற்சார்பு கொள்கைகளை
பிரச்சாரப்படுத்தி
தங்களை மனித குலத்திற்கே
பொதுவான கர்த்தாக்களாக
எளிதில் ஆக்கிக்கொள்ளலாம்
என்ற எளிய நகர்வில்
எழுத்து வண்மையை
கைவரப்பெறும் கலையை கற்று
பின் அதில் பயணம் செய்தனர்,செய்கின்றனர் இலக்கிய வேடதாரிகள்
(பின் குறிப்பு : அப்படி பயணம் செய்து
பல ஆயிரக்கணக்கான வாசகர்களை
தங்களின் பால் ரசிகர்களாக வைத்திருந்த
எழுத்து வல்லுனர்கள்
பின் தங்களின் ரசிகர்களால்
தூக்கி எறியப்பட்ட வரலாறு
இலக்கிய உலகில் பல )

இப்படித்தான்
மொழி பெயர்ப்புகளும்,
புளகாங்கிதத்துடன்
கூடவே
மறைமுகமாக
ஆன்மீகமும் வளர .
மிகப் பெரிய கேட்டை
இலக்கிய வாதிகள் என்பவரும்
இலக்கிய கோட்பாட்டாளர்கள் என்பவரும்
இலக்கியத்திற்கு
செய்து
இன்றுவரை தொடர்ந்து நடந்து கொண்டே வருகின்றது.

இப்படி தமிழுக்கு வந்த
பிற மொழி எழுத்துக்களில்
பொதுவுடமை
புரட்சி
மற்றும்
பகுத்தறிவு எழுத்துக்கள்
தவிர்த்து
மற்றவைகள் அனைத்தும்
இலக்கியம் என்ற போர்வையில்
கட்டவிழ்ந்து விடப்பட்ட
மறைமுக ஆன்மீக பயணமே.

இலக்கியத்தைப் பார்,
படைப்பாளியைப் பார்க்காதே.
படைக்கும்வரைதான் படைத்தவன்
அதற்கு பொறுப்பு.
அது வெளிவந்த பிறகு
அவனும் வாசகனே
என்பது எல்லாம்
வெறும் தப்பிக்கும் கூச்சல்.
அறிவியலைப் போல காட்டிக்கொள்ள
அறிவியல் கோட்பாட்டினால் எழுந்தது.
விஞ்ஞானப்படைப்பைப்பார்
விஞ்ஞானியைப் பார்க்காதே
என்ற வார்த்தையினின்று
மேற்கண்ட வாதத்தையில்
புரிந்து கொள்ளலாம்.


விஞ்ஞானப் படைப்புக்கும்,
இன்றுள்ள
இலக்கியத்திற்கும் நிறைய வேறுபாடு உண்டு.
உங்களிடமுள்ள வாகனம் ,
உங்களுக்கு பயன்தரும் மருந்து,
உங்களிடம் ஆன்மீகம் பேசாது.
அதனை படைத்தவன் பேசலாம்.
அந்த படைப்பு?
ஆனால்
உங்கள் கையிலுள்ள இன்றுள்ள ஒரு இலக்கியம்
கட்டாயம் பேசும்
அல்லது
திசை திருப்பும்.
அந்த அளவிற்கு செய்துவிட்டனர் .


இலக்கியத்திலுள்ள அறிவு
என்று
அறிவியல் அறிவு போல்
அனைத்தையும் கடந்து வெளிவருகின்றதோ,
அன்று தான்
இலக்கியம்,
மொழி
ஆகியவை நலம் பெறும்.

இலக்கியத்தில் உள்ள அறிவு என்பது
அறிவியல் அறிவைப் போன்று பொதுவானது.
ஆனால்,
இலக்கியத்திற்கு மொழி வளம் தேவை.


இலக்கியத்திலிருந்து
ஆன்மீகத்தை பிரிக்க வேண்டும்.
அப்பொழுதுதான்
இலக்கியம்
பொதுமைப்படும்.
மொழி வளம் பொறும் .

அதுவரை ஒரு மொழியிலுள்ள இலக்கியம்
அந்த மொழி இலக்கியமாகவே இருக்கும்.


.