Saturday, January 10, 2009

உலகிற்கு உடனடியான தேவை -புதிய பொருளாதாரக்கொள்கைகளும்,கோட்பாடும்.

.

நண்டு :நேத்து 6 மணி நேரம் நின்னும் பெட்ரோல் கிடைக்கல ...

நொரண்டு :அது தான் இன்னைக்கு சரியாயிருச்சில்ல ....

நண்டு : ஆ...மா...ம்.... ,பெட்ரோலியத்துறை ஊழியர்கள் போராட்டம் அறிவித்த உடனே இப்ப
செய்த மாதிரி ,அப்பவே.. உடனே இராணுவத்தை பணியில் ஈடு்படுத்தியிருத்தால் ...நல்லா
இருந்துதிருக்கும் ..ஏன் மக்களை கஷ்டப்படுத்தராங்க ....

நொரண்டு :எந்த போராட்டமும் நியாயமான முறையில் ,நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து
உறுதியான கொள்கைபிடிப்புடன் சரியான நேரத்தில் சரியான பாதையில் சரியாக
ஆரம்பிக்கப்படவேண்டும் .ஒரு குழுவினர் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக
போராடிக்கொண்டிருக்கும் போது ,அதுவும் பொதுநலனை கருத்தில் கொண்டு போராட்டகளத்தில்
இருக்கும் பொழுது தங்களின் சுயநலத்திற்காக பொதுநலப் போராட்டத்துடன் சேர்வது போல்
தோற்றத்தை ஏற்படுத்தி தங்களின் சுயநலத்தை மேம்படுத்திக்கொள்ள முற்படும் எத்தகைய
போராட்டமும் தோல்வியைத் தழுவும் .போராட்டங்கள் பொதுமக்களின் நன்மைக்காக எனி்ல் பொதுமக்களே
முன்வந்து அதனால் ஏற்படும் இன்னல்களை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வர் .ஆனால்
.சுயநலப்போராட்டத்தினால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவதை ஒரு போதும்
ஏற்றுக்கொள்ளமுடியாது. அப்படிப்பட்டது ஜனநாயக குற்றமாகும் .

நண்டு : ஜனநாயகம் , ஜனநாயகம் என்கின்றாயே ..ஜனநாயக நாடுகளில் ஏற்பட்டு்ள்ள
பொருளாதாரச்சிக்கல்களுக்கு காரணம் என்ன ?

நொரண்டு :என்னைக்கேட்டால் ...தற்போதுள்ள பொருளாதாரக்கொள்கைகளும்,கோட்பாடுகளும்
காலாவதியாகிவிட்டது என்பதுவே . முற்றிலும் செயலிழந்துவிட்ட
பொருளாதாரக்கொள்கைகளையும்,கோட்பாடடு்களையும் வைத்துக்கொண்டு ஒப்பேத்தப்பார்க்கின்றோம்
.இன்றைய காலகட்டத்திற்கு உகந்த ஒரு சரியான பொருளாதாரக்கொள்கையும்,கோட்பாடும் இல்லை
என்பதுவே உண்மை. ஏன் ..அது பற்றிய சிறு விழிப்புணர்வு துளி கூட நம்மிடம் இல்லாமல்
இருப்பதுதான் மிகவும் கவலையாக உள்ளது . அதனால் தான் உலகில் பல நாடுகள் பல்வேறு
இன்னல்களையும் ,சிக்கல்களையும் ,மிகப்பெரிய பாதிப்புகளையும் சந்தித்து வருகின்றது .இது
வருந்தத்தக்க ஒன்றாகும் .இன்றுள்ள பொருளாதாரக்கொள்கைகள்,கோட்பாடுகள் அனைத்தையும்
குப்பையில் போட்டு விட்டு புதிய பொருளாதாரக்கோட்பாட்டை ஏற்படுத்தி அதன் வழியில் புதிய
பொருளாதாரக்கொள்கைகள் வகுத்து அதன்படி செயல்படலே உலகிற்கு நன்மை பயக்கும் .

நண்டு : அப்படியெனில் ...

நொரண்டு :தோல்வியடைந்த எதுவும் புதிய பயணத்திற்கு அடித்தளமிடமுடியாது .பாதைபோல்
தெரியும் ,பயணிக்க முடியாது .இங்கு தோல்வியடைந்ததை பழுதடைந்ததாக நினைத்து
அதையே ஏதோ செய்து முன் செல்வதுபோல் செல்வதால் மீண்டும் , மீண்டும் தோல்வியடைந்தே
வீழ்கிறேம் .உலக பொருளாதாரத்தில் மாற்றங்கள் ஏற்படவேண்டும் என்றால் ,ஏதோ இருப்பதில்
மாற்றத்தை ஏற்படுத்தி சரிசெய்ய நினைப்பது தவறு .அபத்தமானது . மீண்டும் , மீண்டும்
தோல்வியே பரிசாக கிடைக்கும் . உண்மையில் உலக பொருளாதார ஏற்றத்திற்கு புதிய
பொருளாதாரக்கொள்கைகளும்,கோட்பாடுமே தற்பொழுது உடனடியான தேவையாக உள்ளது .


நண்டு : ....புதிய பொருளாதாரக்கோட்பாட்டையும் ,அதன் வழி ஏற்படும் புதிய
பொருளாதாரக்கொள்கையையும் ,அதனால் உலகில் மனிதகுலத்திற்கு ஏற்படும் உயர்வையும்
....புதிய பொருளாதார உலகையும் .. நினைத்து ...

.