மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா,
தனது ஈடேற்றம் கடவுளின் பெயரால்,
மதத்தின் பெயரால் தடைபடுவது கண்டு தவிக்கின்றது.
உலக அரங்கில் ,இந்தியா தனது உள்நாட்டில் ஏற்பட்டுள்ள சமயப் பூசலுக்கு தீர்வுகாண முடியாமல்
வெட்கித் தலைகுனிகிறது.
அனைத்து சமுதாய ஈடேற்றத்திற்கும் முட்டுக்கட்டையாக இருக்கும்
ஒரே பிரச்சனை தற்பொழுது அயோத்தி என்று சொன்னால் அது மிகையாகாது.
மதத் தலைவர்களும்,
சமய நிறுவனத் தலைவர்களும் மற்றும் அரசியல் தலைவர்களும் தாங்கள் மட்டுமே ஒட்டுமொத்த
மதத்திற்கும் பிரதிநீதிகளாக காட்டிக் கொள்ளும் செயலானது கேலிக்குரியதாக உள்ளது.
தற்பொழுது ,இவர்கள் யார்?
எங்கிருந்தது வந்தார்கள்?
இத்தனை நாள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? மதத்தில் இவர்களின் பங்கு என்ன? மதத்திற்காண
இவர்களின் முன் அர்ப்பணிப்பு வரலாறு யாது?
தேசத்திற்கான இவர்களின் அர்ப்பணிப்பு என்ன? என்பதை நோக்க வேண்டியது ஒவ்வொரு இந்தியார்களின்
கட்டாயக் கடமையாக உள்ளது.
காரணம், சிலரின் செயலால்
ஒட்டு மொத்த இந்தியர்கள் அனைவரும் அச்சத்தில் தற்பொழுது வாழ்ந்து கொண்டும்,
நடைபிணங்களாய் ,பேசாமடந்தைகளாய், மடையர்களாய், முட்டாள்களாய் ஆகவேண்டியுள்ளது.
ஒட்டு மொத்த இந்தியர்களின் மனிதப் பண்பும், மனிதாபிமானமும் அயோத்திப் பிரச்சனையால்
மதத்தின் கோரப்பிடியினில் சிக்கி அமிழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இதே நிலை நீடித்தால்
சமூக சமய நல்லிணக்க ஆர்வளர்கள்,
சமூக சேவகர்கள், மதச் சார்பற்றோர்
ஆகியோர் தாங்கள் ஏதாவது ஒன்றை சார்ந்து போய் வாழ வேண்டிய (ஏதாவது ஒரு பக்கம் என்ற
நிலை) சுழலுக்கு ஆட்பட்டு விடவேண்டிய காலச்சூழ்நிலை உருவாகிக் கொண்டு வருவதால்
இக்கட்டுரையை எழுத வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகின்றது.
அயோத்தி
இராமர்
மட்டுமே பிரச்சனையாக இருந்தால்
அது உடனே தீர்க்கப்பட்டு விடமுடியும்
அது மிக எளிது.
ஆனால்,
உண்மை அப்படியில்லை
என்பதனால் தான் அது விசுபரூபம் கொண்டு பல உயிர்களை
காவு கொண்டதுடன்
மேலும் பலவற்றை கேட்கின்றது.
ஆதலால் இப்பிரச்சனையை வரலாற்றுரீதியில் அணுகுவதோடு,
உளவியல்ரீதியிலும் சரிசெய்யப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.
அயோத்தி பிரச்சனையை அணுகும் பொழுது
தொடர்ந்து வந்த வரலாற்று நிகழ்வுகளினால் மதங்களிடையே ஏற்பட்ட வெறுப்புகள் என்ன? அதன்
எதிரொலி யாது? தற்பொழுது அதற்கும், இப்பொழுது நடப்பதற்கும் என்ன தொடர்பு?
இப்பிரச்சனையின் தொடக்கம் என்ன? இப்பிரச்சனையின் தொடக்கம் எது?
இது யாரால் ஆரம்பிக்கப்பட்டது?
இதனால் ஆதாயம் அடையப் போகும் தரப்பினர்கள் யார், யார்?
எத்தகைய ஆதாயத்தை அவர்கள் அடைவார்கள்?
அந்த ஆதாயத்தினால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன?
நாட்டிற்கும் , மதத்திற்கும் ஏற்படப் போதும் நன்மைகள் என்ன?
போன்ற கேள்விகளுக்கு பதில் காண வேண்டியது அவசியம்.
அதன் மீதே சரியான முடிவு எட்டும் என்பதுவே திண்ணம்.
இல்லாமல் போனால் எடுக்கும் எந்த முடிவையும் யாரேனும் ஒரு தரப்பினர் மீறிக்கொண்டே இருப்பர்.
அதனால் மேலும் மேலும் அமைதியின்மையை இந்தியா நிரந்தரமாக சந்தித்துக் கொண்டே இருக்கும்.
தற்பொழுது
இந்துக்களும் சரி, முஸ்ஸீம்களும் சரி, இந்தப்பிரச்சனையால் சளிப்புற்றுள்ளார்கள்.
மேலும் மிகுபக்தி கொண்டவர்கள் தவிர
ஒட்டு மொத்த இந்தியர் அனைவரும் இப்பிரச்சனையால் வெறுப்புற்றே இருக்கின்றனர்.
சரியாகக் கூறப்பட வேண்டுமென்றால் இப்படிப்பட்ட ஒரு பிரச்சனையை
இந்தியா மறக்கவே விரும்புகின்றது.
வரலாற்றை நோக்க, வடமேற்கு ஆசியாவிலிருந்த ,குழுக்கள் குழுக்களாக பதவியாசை,
மண்ணாசை பிடித்த மக்கள், துரத்தியடிக்கப்பட்டனர். அப்படிக் துரத்தப் பட்டவர்களில் ஒரு
பிரிவினர் மேற்கே ஐரோப்பா நோக்கி நகர்ந்தனர் அவர்கள் அங்கே ஆதிக்கம் செலுத்தினர் அங்கு
அவர்களால் ஐரோப்பாவில் இருந்து மிகச்சிறிந்த நாகரிகங்கள் அழிக்கப்பட்டது. அதன் உச்சகட்டம்
தான் ஹிட்லர் .
அதுபோலவே கிழக்கு நோக்கி நகர்ந்த குழு கணவாய்கள் வழியாக இந்தியா வருகின்றது.
இங்குள்ள மேம்பட்ட, சிறந்த நல்நாகரிகமான திராவிட குடிகளுடன் போரிட்டு, போரிட்டு
திராவிட நாகரிகத்தை பாழ்படுத்தியது. ஆட்சி ,மாற்றம் ,ஆட்சி ,மாற்றம் , என ஆட்சி
மாற்றத்தில் அடிக்கடி உழன்று கஷ்டப்பட்டு கடைசியில் யார் ஆண்டாளும் அவர்களின்
அடிவருடிகளாக இரண்டாம் ஸ்தானத்தைப்பெற்று அதுவே வாழ்வு என்ற நிலையில்
நிலைத்துவிட்டது.அதனால் அவ்வப்போது ஏற்படும் ஆட்சிமாற்றம் அதனை ஒன்றும் செய்யவில்லை எனவே
அங்கு நிம்மதியாக வாழ்ந்து ஆரம்பித்தது அக்குழு.
அங்கு அக்குழுவின் வேலையெல்லாம் ஆள்பவனை துதித்தல், துதிபாடுதல், அவனை மகிழ்வித்தல்,
அவனின் எதிரிகளை பழித்தல், அவற்றை பரப்புதல்,சதிசெய்தல்,கொலைசெய்தல், வரலாற்றை
திருத்துதல் ஆகியவையே தவிர வேறு ஒன்றும் கிடையாது.
இதன் காரணமாக அக்குழு மிகப்பெரிய நன்மைகளையும், ஆதாயங்களையும் ஆள்பவனிடமிருந்து
பெற்றுக் கொண்டே இருந்தனர்.
ஆதலால், அவர்கள் ஆள்பவன் மற்றும் அவனை சார்ந்தவர்களின் வாழ்வியலோடும், கடவுள்,சொர்க்கம்,
மறுபிறப்பு போன்ற இன்ன பிற சடங்கு முறைகளைக் கொண்ட சமயத்தை உருவாக்குகின்றனர்.அதனால்
இந்தியாவில் பல்வேறு சமயங்கள் தோன்றின.
இந்தியாவில் பல்வேறு சமயங்கள் பழக்கத்தில் வந்தாலும் ஒரு நிலையான கோட்பாடான சொர்க்கம்,
மறுபிறப்பு, போன்ற இன்ன பிற மீயியற்கை ஆற்றலை அடிப்படையாகக் கொண்டே அனைத்தும் இயங்குவதன்
காரணமாக இரண்டாம் ஸ்தானத்தைப் பெற்று வாழ்ந்து வருபவர்கள் பாதிக்கப்படுவதில்லை.
வந்தேரிகளின் அதிகப்படியான மனித உரிமை மீறல்களினால்
பௌத்தம், சமணம் ஆகியவை தோன்றியது. அதன் காரணமாக அச்சப்பட்ட வந்தேரிகள் அதனை அழிக்கும்
முயற்சியில் முழு மூச்சுடன் தங்களின் சமயங்களை இணைப்புச்சமாதனத்துடன் அரசபீடம் இழந்த
குறுநில மன்னர்கள், அரசாசை கொண்டவர்கள் ஆகியோ்ரின் உதவியினால் பௌத்த, சமண
துறவிகளையும், அருளாளர்களையும் படுகொலை செய்தனர் .இது ஹிட்லரின் இனப்படுகொலைக்கு
ஒப்பான ஒன்றாகும். அமைதியையும், நிர்வாணத்தையும் போதித்து உணர்ந்தவர்களினால்
இனப்படுகொலைகளை புரிந்து கொள்ள முடியவில்லை அவர்கள் கொல்லப்பட்டனர். வந்தேரிகளினாலும்
இனப்படுகொலைகள் அதிகம் என்பது வரலாற்று உண்மை .
உலகம் அவர்களைப்பார்த்தே கற்றுக்கொண்டது எனலாம்.
சமணத்தையும், பௌத்தத்தையும் கொன்றுவிட்டு நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர் வந்தேரிகள்.
கணவாய் வழியாக வந்து சில சிறிய சிறிய நிலங்களை கைப்பற்றி சிலகாலம் ஆண்டவந்தேரிகள்
கங்கை சமவெளியில் சற்றே இளைப்பாறினர். பிறகு அங்கிருந்த மண்ணின் மைந்தர்களின் வீரதீர
செயல்களினால் வந்தேரிகளின் அரசாளும் ஆசை குழிதோண்டி புதைக்கப்பட்டதால் மண்ணுலகை
அரசால்வதை விட்டுவிட்டு விண்ணுலகை ஆள்வதற்கு தயார் படுத்துவதாகவும், தாங்கள் அதற்கு
வழிவைத்துள்ளதாகவும் கூறி பக்தி என்பதனை தங்களின் கைகளில் எடுத்துக்கொண்டனர்.
( பக்தியைப்பற்றி இங்கு கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும்.
பக்தி என்பது ஒருவகை பயம்.
மனிதனுக்கு ஆரம்பகாலம் தொட்டே இருந்த ,இருக்கும் பயம்.
மனிதன் தன் அறிவுக்கு எட்டா விசயங்களில்
தனக்கு ஆபத்தானவைகள்
எவையெவை? என்று
தெரிவதில் தோன்றிய பயம்.
ஆரம்ப மனிதன்,
தன் அடுத்த மனிதனிடமே பயந்தான். மனிதன் தான் பயந்த ,
புரியாத எதிரியிடம் அடிபணியக்கற்றான். அடிபணிந்த பின் பயம் சிறிது சிறிதாக நீங்கியது
அந்த எதிரியிடமிருந்து, அடிபணிந்ததினால்.
பயத்தின் மீது நம்பிக்கை வேரூன்றியது. நம்பிக்கை பக்தியானது.
பக்தி மூடத் தனத்தில் ஆழ்த்தியது.
பயம் தொலைத்து வெகுதூரம் மனிதனால் பயணிக்க முடியவில்லை.
மீண்டும், மீண்டும் பக்தியே அவனை ஆட்கொண்டது.
பக்தியை தங்களின் கைகளால் எடுத்தவர்கள் பயத்தை வேறு ரூபத்தில் கையாள்பவர்கள் ஆனார்கள்.
சமுதாயத்தில் மனிதன் தனது இயல்பு நிலையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஏதோ
ஒன்று கூடுகின்றது அல்லது ஒன்று குறைகின்றது.
அதற்கு தனது செயல்தான் காரணம் என்று அவனால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. ஒத்துக்கொள்ள
மறுக்கின்றான்.
காரணம் சமுதாயத்தில் அது ஏற்றுக் கொள்ளக் கூடிய அம்சமாக இல்லாத அளவிற்கு, அவனின்
உழைப்பு, முயற்சியின் மீது ஒத்துக்கொள்ளக் கூடிய காரணங்களை ஏற்றுக்கொள்ளாத அளவிற்கு
மாற்றப் பட்டிருக்கின்றது.
அதனால் அவன் செய்யும் செயல்அனைத்திலும் நன்மை , தீமைகளைப் பார்க்கின்றான் .
அதுதான் காரணம் என்று
சமுதாயத்தில் கற்பிக்கப்பட்டுள்ளதால், அதுதான் காரணம் என்றும், அதற்கு தனக்கு மேற்பட்ட
சக்தியின் செயல் என்றும் முடிவு செய்து,
இல்லாத ஒன்றை நோக்கி குவிகின்றான். அதை சமுதாயம் ஏற்பதால் நிகழ்கின்றது. அப்படி
குவியும்பொழுது ஒரு மார்க்கத்தை சார்ந்து ஒழுகும்படி சமுதாயம் சில மார்க்கங்களை தன்னுள்
வைத்துக்கொண்டு அழைக்கின்றது.
அந்த மார்க்கத்தின் மீது தனது செயல்பாட்டின் நிலையைப் பொறுத்து மிகுபக்தி கொள்கின்றான்.
அந்த மிகு பக்தி கடைசியில் உயிர்கொலையாக அமைந்தாலும்
ஆன்மா ஈடேற்றத்திற்காக வீடுபேறு பெறவேண்டும் என்ற எண்ணத்தில் தனது அனைத்தையும் இழக்கின்றான்.
தான் சார்ந்த மார்க்கம் சமயமாகி பின் நிறுவனமாகிய பின் அந்த நிறுவனத்தின் கட்டமைப்பில்
ஆழ்ந்து விடுகின்றான். சமூகத்தில் பூசல் மற்றும் மொத்த சமூக அமைப்பில் ஒரு சிந்தனை அழிவு
அல்லது புதிய சிந்தனை வரவு அந்த நிறுவனத்தை பாதிப்பதாக இருக்கும்பொழுது நிறுவனம்
தன்னை வளார்த்துக்கொள்ள அனைத்து வகையான மனித மூடத்தனங்கினையும் தனது வளர்ச்சிக்காக
பயன்படுத்திக்கொள்கின்றது.
இப்படிப்பட்ட காவுகள்தான் இப்பொழுது நடக்கின்றன.
மனிதன் தான் பக்திக்கும் அடிமையாகியுள்ளோம் என்று உணர்ந்தும் இன்னும் அப்படியே உள்ளான்.)
இப்படியாக பக்தியைக் கையில் எடுத்தவர்கள் அரசர்களுக்கு அடிவருடி பிழைப்பு நடத்தினர்.
தங்களின் பிழைப்புக்காக சமயத்தில் பலவற்றை தோற்றிவித்து அதன் மூலம் நிறுவனத்திற்கு
மிகப்பெரிய சொத்தினைப் பெறவைத்து அதில் கிடைக்கும் வருவாயில் வாழ்க்கையை ஓட்டினர்
வந்தெரிகள்.
அப்படி நிறுவிய நிறுவனங்களின் சொத்துக்கள் கஜினியால் கொள்ளையடிக்கப்படவே அரசுகள் போல்,
சமய நிறுவனமும் ஆட்டம் கண்டது. அதனை சரிகட்டுவதற்குள் கோரி
ஆனால், கோரியினால் கஜினியின் கொள்ளையடிப்பை விட மிகப்பொpய தாக்குதல் சமய
நிறுவனங்களின் மீது விழுந்தது.
அது கோரி இஸ்லாத்தின் அரசை நிறுவியது.
அரசாளும் ஆசை கொண்டு, மிகப்பெரும் நிலப்பரப்பை ஆளும் எண்ணத்தில் வடமேற்கு
ஆசியாவிலிருந்து வந்தவர்கள் முதலில் இந்த மண்ணின்மைந்தர்களிடமும்,
பௌத்த சமண மதத்தினாலும் அரச பதவியை இழந்தனர்.
கஜினியால் பொருளாதார நெருக்கடிக்கு உட்பட்டவர்கள்
கோரியினால் தங்களின் மொத்த சமூக அமைப்பிலும் தாக்குதல் ஏற்படுத்தப்பட்ட பொழுது தங்களின்
வாழ்வதற்கான அனைத்து உரிமைகளையும் இழந்து மீண்டும்
நாடோடி வாழ்க்கை வாழும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
கோரியின் ஆட்சி சில காலம்தான் அவனும் கொள்ளையடித்து சென்றுவிடுவான் என்ற நினைப்பில்
தங்களின் நிறுவனத்தின் சொத்துக்களைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தினர். காரணம்
நிறுவனம் சொத்திழந்ததால் தாங்கள் சோறிலக்க வேண்டிவரும் என்று அவர்கள் நன்றாக
உணர்ந்திருந்தனர். இஸ்லாத்தை மக்கள் பின்பற்ற வைக்கப்பட்ட பொழுது இவர்கள் நிலை மேலும்
மோசமானது. இந்த சூழ்நிலையில் இஸ்லாம் இங்கிருந்த மதத்திற்கு முற்றிலும் வேறாக
இருந்தபட்சத்தில் மக்கள் அப்பொழுது சரியாக இரண்டு பிரிவாக பிரிந்துநின்றனர்.
ஒரு வகையினர்
இஸ்லாத்தை பின்பற்றுபவர்கள், பிறிதொரு வகையினர் இஸ்லாத்தை பின்பற்றாதவர்கள் .வந்தேரிகள்
இஸ்லாத்தை பின்பற்றாதவர்களின் பின்னாள் தங்களின் நிறுவனச் சொத்துடன் ஒளிந்து கொண்டனர்கள்.
(நான் மேலே குறிப்பிட்ட மக்கள் மேல்தட்டு -எஜமானர்கள் )
வந்தேரிகள் மண்ணின் மைந்தார்களுடன் இக்கால கட்டத்தில்தான் அதிகப்படியான சமாதானத்தை
ஏற்படுத்திக் கொண்டனர் எனலாம். பிறகு இஸ்லாத்தின் ஆட்சி ஆங்கிலேயார் இந்தியாவை ஆளும் வரை
நீண்டது.
ஆங்கிலேயாரின் ஆட்சி இந்தியாவில் ஏற்பட்டது.
அப்பொழுது வந்தேரிகளின் மார்க்கமும் சரி, இஸ்லாத்தும் சரி, கிறிஸ்துவின் வரவால் தங்களின்
மார்க்கங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் கொண்டனார்.
வந்தேரிகள் வரவிலிருந்து ஏன் அதற்கு முன்பிருந்து இன்று வரை நம் மண்ணின் மைந்தர்கள்
தங்களின் தனி மார்க்கத்தில் அமைதியாக வாழ்ந்து வந்தனர், வருகின்றனர் . வந்தேரிகள்
அரசில் அதிக செல்வாக்கு பெற்றிருப்பதால் சமுதாயத்தில் வந்தேரிகள் எண்ணங்களும்,
தேவைகளுமே மிகுதியாக பிரதிபலித்ததே தவிர வேறு எதுவும் அதில் இருப்பதாக இல்லை.
இதனை இந்த நூற்றாண்டில்தான் அனைவரும் உணர்ந்தனர். இன்று வீதிக்கு ஒரு கோவில், வீட்டுக்கு
ஒரு கோவில் என்ற நிலை ஏற்பட்டதற்கான காரணம் வந்தேரிகளின் நிறுவனங்களிலும்,
கோவில்களிலும் அவர்களின் அட்டூழியங்களை தாங்க முடியாத இந்த மண்ணின்மைந்தர்கள் தங்களின்
தேவைக்கேற்ப கோவில்களை அமைத்துக்கொண்டதாலேயே ஒழிய வேறு ஒரு காரணமும் கிடையாது.
வந்தேரிகளின் அட்டூழியம் இல்லையெனில் ஊருக்கு ஒரு கோவில்தான் இருந்திருக்கும் இது ஒரு
வகையான வந்தேரிகளின் மீதான எதிர்ப்பேயாகும். அதிலும் தற்போது தங்களின் ஆதிக்கத்தை
நிலைநாட்டி விட்டனர் என்பதுதான் கோடுமை.
நமது மண்ணின் மைந்தார்களின் அறியாமை.
இந்தியா சுதந்திரத்திற்காக தன்னை பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுத்திக் கொண்டிருந்தது.
வந்தேரிகளில் பெரும்பான்மையோர் சுதந்திர எண்ணம் இல்லாதவர்கள். வந்தேரிகளில் மற்றவர்கள்
சுதந்திரத்தை வெறுத்தவர்கள் .
ஆங்கிலேயே அரசுகளிலும், இரண்டாம் தர அடிமை அரசுகளின் துணையுடன் வாழ ஆரம்பித்தனர்
ஆங்கிலேயர்களின் அணுகுமுறையை அறிய முடியாதவர்களாய். செல்வாக்கும் பெற்றிருந்தனர் சிலர்.
வந்தேரிகள் அரைகுறை மனத்துடன் தான் சுதந்திரப் போராட்டத்தை பார்த்தனர்.
ஆனால், வீரதீரபராக்கிரமங்கொண்ட
நம் மண்ணின் மைந்தர்களின் உதவியுடன் சுதந்திரத்திற்காக அல்லும் பகலும் கடைசியாக
கடுமையாகப் போராடினர் இந்தியாவின் இருதவப் புதல்வார்கள்.
ஒருவர்
மாமனிதர் மகாத்மா காந்தியடிகள் .
இவர்கள் இல்லையேல் இந்தியா எப்படிப்பட்ட மோசமான நிலைக்கு வந்தேரிகளினால்
தள்ளப்பட்டிருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவேமுடியவில்லை.
...உண்மை ...முடிவை நோக்கி ...தொடரும் .......