Friday, January 2, 2009

இடைத்தேர்தலை தடுப்பது எப்படி ?

.


நண்டு : திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் ஜெயிக்கப்போவது யார் என்று கூற முடியுமா ?

நொரண்டு : எனக்கு யார் ஜெயிக்கிறார்கள்,யார் தோற்கிறார்கள் என்பது பற்றி கவலையில்லை .ஆனால் ,ஜனநாயகம் முற்றிலும் தோற்றுக்கொண்டிருக்கிறது என்பது மட்டும் எனக்குத் தோன்றுகிறது .

நண்டு :புரியவில்லை .......

நொரண்டு :இடைத்தேர்தல் என வந்துவிட்ட உடன் ஆளும் கட்சியும் ,எதிர்க்கட்சியும் போட்டி போட்டுக்கொண்டு சூழலுக்கு ஏற்ப அணிகள் அமைத்துக்கொண்டு் அங்கு வெற்றியை தக்கவைத்துக்கொள்ள முனைவது சரியான பாதைதான். ஆனால் ...

நண்டு : ஆனால் ..என்ன ..?


நொரண்டு : மிகப்பெரிய ஜனநாயகநாட்டில் நடக்கும் எந்தத் தேர்தலிலும் வன்முறையை கையாலும் கட்சிகள் ஜனநாயகநாட்டில்
கட்சிகளாக இருக்க தகுதியுடையவை அல்ல.
கலைஞரும் , ஜெயலலிதாவும் கட்டளையிட்டால் அவர்களின் கட்சிகளி்ல் அதன்படி மட்டுமே நடக்கும் தொண்டர்கள் மட்டுமே உண்டு . அவர்கள் எந்தப்பிரச்சனையும் வரக்கூடாது என கட்டளையிட்டால் ..இப்படியா நடக்கும் .
தாங்கள் ஜெயித்தால் மகேசன் தீ்ர்ப்பு என்றும் , தோற்றால் பணநாயகம் என்று
கூறிக்கொள்ளப்போகிறார்கள் .
அப்படியிருக்க வன்முறைக்கு காரணம் எதுவாக இருக்கும் ?
அது ஒன்று தி.மு.க அல்லது அ.தி.மு.க என மட்டுமே மக்கள் சிந்திக்க வேண்டும் .
மாறாக மூன்றாவதாக மற்ற எந்த கட்சியையும் மக்கள் ஒருபோதும்
நீனைத்துப்பார்க்கக்கூடகூடாது என்பதுவேயாகும்.
இது ஒருவகையான பாசிஸ்ட் கொள்கையாகும்.
இவற்றை மக்கள் ஒருபோதும் அங்கிகரிக்கவே கூடாது .

நண்டு : மக்களா ... சரி..வேறு ஏதாவது மாற்று ....

நொரண்டு :பொதுவாக இடைத்தேர்தலின் போது தான் இத்தகைய செயல்கள் அதிகம் நடக்கிறது.ஆனால், பொதுத்தேர்தலில் இவ்வளவு நடப்பதில்லை .எனவே பொதுத்தேர்தலில்தேர்ந்தெடுக்கும் முறையி்ல் மாற்றங்கள் கொண்டுவருவதன் முலம் இடைத்தேர்தலை தடுத்துவிடமுடியும் .

நண்டு : இடைத்தேர்தலை தடுக்க எத்தகைய மாற்றங்களை தேர்தலில் கொண்டு வரலாம் என நினைக்கின்றாய் ..ஏதாவது சில யோசனைகள் கூறலாமே.

நொரண்டு : ம்.. என்னைக்கேட்டால் ...ஒவ்வொரு கட்சியும் இரண்டு நபர்களை வேட்பாளராக நியமிக்கவேண்டும் . முதன்மை வேட்பாளராக ஒருவர் ,மற்றவர் முன்னிலை வேட்பாளர் .இருவருக்கும் ஒரேசின்னத்தில் தனித்தனியாக வாக்குச்சீட்டுகள் அளிக்கப்படவேண்டும் .இருவர் பொற்ற வாக்குகளும்
எண்ணப்படவேண்டும்.ஆனால் ,முதன்மை வேட்பாளர்கள் பொற்றவாக்குகளின் அடிப்படையில் மட்டுமே முடிவுகள் அறிவிக்கப்படவேண்டும் . முதன்மை வேட்பாளர் இறந்தாலே அல்லது அப்பதவியினின்று தன்னை விடுவித்துக்கொண்டாலோ முன்னிலை வேட்பாளர் அவருக்குப்பதில் நியமிக்கப்படவேண்டும். இப்படிமுன்னிலை வேட்பாள ர் நியமிக்கப்பட்டிருக்கும் சமயத்தில் அவர் இறந்தாலே அல்லது அப்பதவியினின்று தன்னை விடுவித்துக்கொண்டாலோ அடுத்து அதிக வாக்குகள் வாங்கிய கட்சியின்
முதன்மை வேட்பாளருக்கு அப்பதவி போய்விடவேண்டும் .
இப்படிப்பட்ட ஒரு சட்டதிருத்தத்தை தேர்தல் கமிசன் கொண்டுவருவதன் மூலம் இடைத்தேர்தலே வராமல் தடுத்துவிடமுடியும் .

நண்டு : ...இடைத்தேர்தலற்ற ---புதிய பொதுத்தேர்தலை கற்பனை செய்து பார்க்கிறேன் ...

.