Tuesday, February 23, 2010

திராவிட நூலென்பதால் ... ...

.
திருக்குறளின் பேரால் திராவிட மக்களின் பெருமையை,திராவிடரல்லாத மக்களுக்கு உணரச்செய்ய
முடிகிறது ...
எவ்வளவோ ஆபாசமான நூல்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பெருமையில் 100ல் 1 பங்கு பெருமைகூட
நமது திருக்குறளுக்குக் கொடுப்பதில்லை ...
திருக்குறளுக்கு அத்தகைய பெருமையில்லாமல் போனதற்குக் காரணம் .இது ஓர் திராவிட நூல்
என்பது தான் ...
இன்ன காரியங்களால் இன்ன வாஸ்துக்கு இன்ன குணம் ஏற்படும் என்று கூறுவதுதான் விஞ்ஞானம்
.விஞ்ஞானத்திற்கு ஏற்ற கருத்து தான் பிரத்யக்ஷ அனுபவத்திற்கும் பின்விளைவுக்கும் ஏற்றதாக
அமையக்கூடியது .தத்துவார்த்தம் கூறத்தேவையில்லாத கருத்துத்தான் விஞ்ஞானத்திற்கேற்ற
கருத்தாகும் .தத்துவார்த்தம் பேசுவதெல்லாம் பெரிதும் தம்முடைய
சாமர்த்தியத்தைக்காட்டிக்கொள்ளச் சிலர் செய்யும் பித்தலாட்டம் என்றுதான் நான்
கூறுவேன்.திருக்குறளில் அத்தகைய த்த்துவார்த்தப் பித்தலாட்டத்திற்கு இடமேயில்லை...
அதில் கூறப்பட்டுள்ள கொள்கைகளை நாம் பொது நெறியாகக் கொள்வது அவசியம் ...
நமக்கு வேண்டிய முழு அறிவையும் கொடுக்கக்கூடியதாக ஒரு நூல் வேண்டுமானால் அது
திருக்குறள் தான் என்பதை நீங்கள் தெளிவாக உணருங்கள் .உணர்வது மட்டும்மல்ல,நன்றாக மனத்தில்
பதிய வையுங்கள் ...
திருக்குறள் நூல் ஒன்றே போதும் இந்நாட்டு மக்களுக்கெல்லாம் அறிவை உண்டாக்க ...
100 ரூபாய்க்கும் ,200 ரூபாய்க்கும் 'டெக்ஸ்ட்' புத்தகங்கள் வாங்கிப் படித்து
மடையர்களாவதைவிட 3 அணாவுக்கு திருக்குறள் வாங்கிப் படித்து அறிவாளியாவது மேல்
என்றுதான் கூறுவேன் .திருக்குறள் ஒன்றே போதும் .உனக்கு அறிவு உண்டாக்க ;ஒழுக்கத்தைக்
கற்பித்துக் கொடுக்க;உலகஞானம் மேற்பட.அப்படிப்பட்ட குறளைத்தான் நாம் இதுவரை
அலட்சியப்படுத்தி வந்திருக்கின்றோம்...
அனைவரும் திருக்குறளைப்படித்து அறிவுள்ள மக்களாகி இன்புற்று வாழவேண்டும் என்பது தான்
எனது ஆசை.
..........
சென்னை மயிலாப்பூரில் திருவள்ளுவர் கழகம் சார்பில் 14.3.48-ல் நடைபெற்ற 3வது
திருவள்ளுவர் மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அருமைவாய்ந்த சொற்பொழிவிலிருந்து
... சில துளிகள் ... அவ்வளவே.



.



.


.